நடிகர் விஜய் நடித்த திரைப்படங்களில் அதிக வரவேற்பை பெற்ற ஒரு திரைப்படம் பூவே உனக்காக. அதுவரை சினிமாவில் தொடர்ந்து ப்ளே பாய் மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜய்யை ஒரு காதல் கதாநாயகனாக மாற்றிய திரைப்படம் பூவே உனக்காக.
மேலும் இப்போது வரை பூவே உனக்காக திரைப்படத்திற்கு என்று தனிப்பட்ட ரசிகப்பட்டாளம் இருக்கவே செய்கிறது. நடிகை சங்கீதா பூவே உனக்காக திரைப்படத்தில் முக்கிய பங்காற்றியுள்ளார். நடிகை சங்கீதா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த கூடிய நடிகை ஆவார்.
அவர் நடிக்கும் திரைப்படங்களில் எல்லாம் பெரும்பாலும் கதாநாயகனுக்கு இருக்கும் அதே முக்கியத்தும் இவரது கதாபாத்திரத்திற்கும் இருக்கும். இந்த நிலையில் பூவே உனக்காக திரைப்படத்திலும் கூட மிக முக்கியமான கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார்.
இந்த நிலையில் அதற்கு பிறகு அவர் நடித்த பொங்கலோ பொங்கல் மாதிரியான நிறைய திரைப்படங்கள் வழியாக வரவேற்பை பெற்றார் நடிகை சங்கீதா. ஆனால் திருமணத்திற்கு பிறகு அவராகவே சினிமாவில் இருந்து விலகி விட்டார். இந்த நிலையில் 25 வருடங்கள் கழித்து மீண்டும் சினிமாவிற்கு ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார் நடிகை சங்கீதா.
நடிகர் பரத் போலீஸாக நடிக்கும் காளிதாஸ் 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் எண்ட்ரி ஆகிறார் சங்கீதா. இது வரவேற்பை ஏற்படுத்தும் ஒரு விஷயமாக அமைந்துள்ளது.