தற்சமயம் தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் கட்சிகளில் முக்கிய கட்சியாக தமிழக வெற்றி கழகம் இருந்து வருகிறது. யாருமே எதிர்பார்க்காத வளர்ச்சியை கடந்த ஒரு வருடத்தில் அடைந்துள்ளது தமிழக வெற்றி கழகம். நடிகர் விஜய் கட்சி துவங்கியப்போது இந்த அளவிற்கு அந்த கட்சிக்கு வரவேற்பு கிடைக்கும் என்று பலரும் நினைக்கவில்லை என்றுதான் கூற வேண்டும்.
இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் விஜய் எந்த தொகுதியில் போட்டி இடுகிறாரோ அந்த தொகுதியில் நானும் போட்டியிடுவேன் என கூறியிருந்தார். இதனை தொடர்ந்து மதுரை த.வெ.க நிர்வாகி பவர் ஸ்டாருக்கு போன் செய்துள்ளார்.
அவர் பவர் ஸ்டாரிடம் பேசும்போது ஏன் சார் இப்படி செய்கிறீர்கள். திமுக மாதிரியான பெரிய கட்சியை எதிர்த்து திரைத்துறையை சேர்ந்த ஒருவர் போட்டியிடுகிறார் எனும்போது நீங்கள் அவருக்கு ஆதரவாகதானே இருக்க வேண்டும் என கேட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த பவர் ஸ்டார் சீனிவாசன் தேர்தல்னா போட்டி இருக்கணும் தம்பி. நான் நின்னாலும் கூட நடிகர் விஜய்தான் ஜெயிப்பார். இதை பெருசா எடுத்துக்காதீங்க என அறிவுரை வழங்கியுள்ளார்.
அந்த ஆடியோ இப்போது பிரபலமாகி வருகிறது.