வாரிசு படத்தின் வசூல் 120 கோடிதான்.. உண்மையை உடைத்த தயாரிப்பாளர்.!

விஜய் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கு என்று தனிப்பட்ட வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் அடுத்து விஜய் நடிப்பில் வரும் திரைப்படத்திற்காகதான் விஜய் ரசிகர்களே அதிகமாக காத்துகொண்டுள்ளனர். ஏனெனில் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் கடைசி படமாக தளபதி 69 திரைப்படம் இருக்கும் என கூறப்படுகிறது.

இதற்கு நடுவே தெலுங்கு ரசிகர்களுக்காக விஜய் முன்பு நடித்த திரைப்படம்தான் வாரிசு. குடும்ப பின்னணியை கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் முழுக்க முழுக்க தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதற்காகவே எடுக்கப்பட்டது.

இந்த படம் வெளியானப்போது படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்து வந்தன. ஆனாலும் வசூலை பொறுத்தவரை நல்ல வசூல்சாதனை செய்திருந்தது வாரிசு திரைப்படம். அந்த வகையில் படம் 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜ் அறிவித்திருந்தார்.

மேலும் அந்த படத்திற்காக விஜய்க்கு சம்பளம் மட்டும் 150 கோடி ரூபாய் கொடுத்ததாக அவர்கள் கூறினர். இந்த நிலையில்  சமீபத்தில் தில்ராஜ் வீட்டில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர். அவர்களிடம் பதிலளித்த தில்ராஜ் வாரிசு திரைப்படம் 120 கோடிதான் வசூல் செய்தது என கூறியதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

மேலும் விஜய்க்கு சம்பளமே 40 கோடிதான் வழங்கப்பட்டது என்றும் கூறப்படுகிறதாம். உண்மை நிலை இப்படியிருக்கும்போது அஜித்தின் துணிவு படத்திற்கு போட்டியாக வெளியானதால் இந்த மாதிரியான பொய் வசூல் நிலவரத்தை காட்டி இருகிறாரா தயாரிப்பாளர் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்ப துவங்கியுள்ளனர்.