கார் ரேஸில் எனக்கு என்ன வேணும்னாலும் ஆகலாம்… அதிர்ச்சி கொடுத்த அஜித்… படம் நடிப்பது குறித்து ஏ.கே கொடுத்த அப்டேட்.!

தமிழில் மக்கள் மத்தியில் எப்போதுமே பிரபலமாக இருக்கும் ஒரு நடிகராக அஜித் பார்க்கப்படுகிறார். தனக்கென தனி ரசிகர் மன்றம் வைத்து கொள்ளவில்லை என்றாலும் கூட லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டவராக அஜித் இருக்கிறார்.

அதே சமயம் தொடர்ந்து அவர் இசை வெளியீட்டு விழா, விருது வழங்கும் விழாக்கள் போன்ற எதற்குமே வராதது ஒரு அவமதிப்பாகவும் பார்க்கப்படுகிறது. ரஜினி, கமல் மாதிரியான பெரிய பெரிய நடிகர்களே ரசிகர்கள் முன்பு தோன்றும்போது அஜித் ஏன் அதை செய்வதில்லை என்றும் சிலர் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர்.

இவற்றிற்கு நடுவே அஜித்தின் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை கொடுத்து வருகின்றன. ஆனால் துணிவு திரைப்படத்திற்கு பிறகு அஜித்தின் நடிப்பில் திரைப்படங்களே வெளி வராமல் இருக்கிறது.

ajith
ajith

ஆனால் அதற்கு பிறகு அஜித் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்துவிட்டார். இதற்கு நடுவே அஜித் கார் ரேஸில் கலந்துக்கொள்ளும் ஆர்வத்தில் இருந்தார். ஆனாலும் கார் ரேஸில் கலந்துக்கொள்ளாமலே இந்த திரைப்படங்களை முதலில் நடித்து கொடுத்தார்.

பிறகு அதுக்குறித்து அவர் மகிழ் திருமேனியிடம் சில விஷயங்களை கூறியுள்ளார். என்னை நம்பி தயாரிப்பாளர்கள் காசு போட்டுள்ளனர். ரசிகர்கள் காத்திருக்கின்றனர். நான் ரேஸுக்கு போகும்போது எனக்கு என்ன வேண்டுமானாலும் ஆகலாம்.

எனவே அதற்கு முன்பே படத்தை முடிக்க வேண்டும். கார் ரேஸில் நான் 100 சதவீதம் ஆக்ஸிலேட்டரை அழுத்த வேண்டும். 2 படம் இருக்கிறது என நினைத்து 90 சதவீதம் மட்டுமே அழுத்தினேன் என்றால் நான் ரேஸிற்கு உண்மையாக இல்லை என ஆகிவிடும் என்று கூறியுள்ளார் அஜித். இந்த விஷயத்தை மகிழ் திருமேனி ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version