சமுத்திரகனியை அடிக்க வந்த கும்பல்… உள்ளே புகுந்து மாஸ் காட்டிய கன்னட சூப்பர் ஸ்டார்.. கெத்துதான்!..

இந்தியா என்பது ஒரு நாடாக இருந்தாலும் கூட மாநில வாரியாக தகராறு என்பது இங்கே இருந்து கொண்டேதான் இருக்கும். முக்கியமாக தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும்மான சண்டை என்பது எப்போதுமே இருந்து கொண்டிருக்கும்.

அதற்கு காரணம் காவேரி நீர், காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு வழங்குவதில் உள்ள பிரச்சனைகள் எப்போதும் இந்த இரு மாநிலங்களுக்கு இடையே தகராறை ஏற்படுத்தி வரும். இது படப்பிடிப்பிற்கு செல்பவர்களை அதிகமாக பாதிக்கும்.

இடையில் கூட நடிகர் சித்தார் திரைப்பட ப்ரமோஷனிற்காக கர்நாடகா சென்று அங்கிருந்து விரட்டப்பட்டு திரும்ப வந்தார். அதே போல ஒரு சம்பவம் இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனிக்கும் நடந்திருக்கிறது. போராளி என்கிற திரைப்படத்தை சமுத்திரக்கனி இயக்கி வந்த பொழுது அதில் சில காட்சிகளை கர்நாடகாவில் இயக்கி வந்தார்.

அப்போது காவிரி நதிநீர் பிரச்சனை ஆரம்பித்ததனால் ஒரு 100 பேர் கொண்ட கும்பல். சமுத்திரகனியை தாக்குவதற்காக கூட்டமாக வந்து கொண்டிருந்தனர். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் உடனடியாக சமுத்திரகனியின் படப்பிடிப்பு தளத்திற்கு கிளம்பி வந்தார்.

அப்போதுதான் அந்த 100 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து கொண்டிருந்தது. அவர்கள் புனித் ராஜ்குமாரை பார்த்தவுடன் அப்படியே நின்று விட்டனர். பிறகு புனித் ராஜ்குமார் சமுத்திரகனியின் தோளில் தனது கையை போட்டார். அதனை பார்த்த பிறகு அந்த கூட்டம் அப்படியே பின்வாங்கி விட்டது. இந்த விஷயத்தை சமுத்திரகனி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.