அந்த விஷயம் எல்லாம் அப்பா பண்ணி படத்துலதான் பாத்துருக்கேன்.. தந்தை குறித்து பேசிய ராதா ரவி.!

நடிகர் ராதா ரவி தமிழ் சினிமாவில் உள்ள வில்லன் நடிகர்களில் மிக முக்கியமானவர். சரத்குமார், விஜயகாந்த், ரஜினிகாந்த், கமல்ஹாசன், கார்த்தி என பல நடிகர்களும் தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்ட காலக்கட்டம் ஒன்று இருந்தது.

அந்த காலக்கட்டத்தில் இந்த அனைத்து நடிகர்களுக்கும் வில்லன் நடிகராக நடித்தவர் நடிகர் ராதா ரவி. எம்.ஆர் ராதாவின் மகனான ராதாரவி அவரை விடவும் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வந்தார். இப்போதும் கூட திரைப்படங்களில் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் இவர் நடித்துக்கொண்டுதான் இருந்து வருகிறார்.

விஜய் நடித்த சர்கார் திரைப்படத்தில் கூட இவரது நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. இந்த நிலையில் தனது தந்தை குறித்து ராதா ரவி ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அதில் அவரிடம் உங்கள் தந்தை உங்களை கொஞ்சியது உண்டா என கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த ராதா ரவி இல்லை எனது தந்தை என்னை கொஞ்சியதே இல்லை. எப்போதும் அவர் எங்களிடம் இடைவெளியுடன் தான் இருப்பார். அவர் கொஞ்சியதை எல்லாம் நான் திரைப்படங்களில்தான் பார்த்துள்ளேன். ஆனால் வீட்டில் உள்ள பெண் பிள்ளைகளிடம் மிகுந்த பாசமாக இருப்பார்.

எனது தங்கையிடம் நல்ல பாசமாக இருப்பார். வீட்டில் கடைக்குட்டி என்பதால் நாந்தான் மிகவும் செல்லமான ஆளாக இருந்தேன். ஆனால் எனது தங்கை பிறந்த பிறகு எனக்கு இருந்த மார்க்கெட் என்பது குறைந்துவிட்டது என கூறியுள்ளார் ராதா ரவி.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version