சிவக்குமாரை பார்த்து பொறாமை பட்ட ரஜினி – இந்த கதை தெரியுமா உங்களுக்கு?

இப்போது தமிழ் சினிமாவில் அதிகப்பட்ச சம்பளம் வாங்கும் நடிகர் யார் என கேட்டால் அனைவருக்குமே தெரியும். அது சூப்பர் ஸ்டார் ரஜினிக்காந்த்தான் என்று, ஆனால் ஒரு காலத்தில் நடிகர் ரஜினிகாந்த் சில ஆயிரங்கள் மட்டும் வாங்கி கொண்டு நடித்த நாட்களும் உண்டு. 

ஆமாம் நடிகர் சிவக்குமார் அப்போது ரஜினிகாந்திற்கு சீனியராக இருந்தார். 1970 களில் ரஜினியும், சிவக்குமாரும் இணைந்து கவிக்குயில் என்கிற படத்தில் நடித்துக்கொண்டிருந்தனர். அந்த சமயம் ரஜினிக்கு சினிமா புதிது. 

ஆனால் சிவக்குமாரோ ஏற்கனவே சினிமாவிற்கு வந்தவர் என்பதால் அவர் 10 வருட அனுபவம் வாய்ந்தவராக இருந்தார்.

அப்போது கர்நாடக முதலமைச்சர் கவிஞர் கண்ணதாசனுக்காக விழா ஒன்றை எடுப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தார். எனவே அனைத்து பிரபலங்களும் அந்த விழாவிற்கு சென்றனர்.

அப்போது சிவக்குமார் ரஜினியை தனது காரில் விழாவிற்கு அழைத்து சென்றார். செல்லும் வழியில் சினிமா குறித்து பல விஷயங்களை ரஜினியிடம் பேசியப்படி வந்துக்கொண்டிருந்தாராம். 

பிறகு விழாவிற்கு வந்த பிறகு சிவக்குமாரை மேடையில் பேச அழைத்தபோது 15 நிமிடங்கள் மிகவும் சுறு சுறுப்பாக பேசிவிட்டு கீழே இறங்கினார் சிவக்குமார்.

இதை கண்ட ரஜினி “எங்க ஊரில் வந்து இத்தனை ஆயிரம் மக்கள் மத்தியில் கைத்தட்டல் வாங்கிறீர்களே. உங்களை பார்த்தால் பொறாமையாக இருக்கு” என கூறியுள்ளார்.

அதற்கு சிவக்குமார் “நீங்கள் அண்ணா, கலைஞர் பேச்சை எல்லாம் கேட்டது இல்லைனு நினைக்கிறேன்” என கூறியுள்ளார்.

இப்படியாக ஆரம்ப காலத்தில் அனைவரிடமும் பொறுமையாக சினிமாவை கற்ற ஒரு மனிதராக ரஜினிகாந்த் இருக்கிறார்.

Refresh