Cinema History
அப்போதெல்லாம் யாரையாவது அடிச்சிட்டா பெருமைப்பட்டுக்குவேன்!.. சூனியத்தில் சிக்கிய ரஜினிகாந்த்!..
Rajinikanth: தமிழில் உள்ள டாப் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்களுக்கு எப்போதுமே அதிக வரவேற்பு இருந்து வருகிறது. பலரும் ரஜினிகாந்த் குறித்து பேசும்போது தமிழ் சினிமாவில் அதிகமாக சர்ச்சைகளுக்குள் சிக்காதவர் ரஜினிகாந்த் என்று கூறியுள்ளனர்.
ஆனால் அதில் உண்மை கிடையாது. உண்மையில் ரஜினிகாந்த் கமலைவிடவும் அதிகமாக சர்ச்சைக்குள்ளான ஒரு நடிகர் ஆவார். புகழின் உச்சத்தை தொட்ட சில காலங்களில் முரணான பல விஷயங்களை செய்திருந்தார் ரஜினிகாந்த்.
அவையெல்லாம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் அதற்கு பிறகு அவருக்கு மனநல கோளாறு ஏற்பட்டதன் காரணமாக அதையெல்லாம் செய்ததாக கூறப்படுகிறது. இதுக்குறித்து ஒரு சமயம் பாரதிராஜாவிடம் பேசியிருக்கிறார் ரஜினிகாந்த்.
அதில் தனது மனநிலை சரியில்லாதப்போது நடந்த நிகழ்வுகளை பகிரும் ரஜினிகாந்த் கூறும்போது அந்த சமயத்தில் என் கூட நடித்தவர்கள் கூட பணிப்புரிந்தவர்கள் எல்லாம் என் நிலை புரிந்து நடந்துக்கிட்டாங்க. அதில் சில பேர் மூஞ்சியில் காரி துப்பியிருக்கேன். இப்ப நினைச்சா எனக்கே என்னவோ போல இருக்கு.
அந்த சமயத்தில் நான் பம்பாய் போயிருந்தேன். அப்போதெல்லாம் ஒரு மணி வரைக்கும் குடிப்பேன். அதற்கு பிறகும் தூக்கம் வராது. அப்புறம் மூன்று நான்கு மணி வரைக்கும் பம்பாயின் பல இடங்களில் சுற்றி கொண்டிருப்பேன். அதற்கு பிறகுதான் கொஞ்சமாக தூக்கம் வருவது போல இருக்கும்.
ஐந்து மணிக்குதான் தூங்க போவேன். ஆறு மணிக்கு படப்பிடிப்புக்கு கார் வந்திடும். அதனால் தூங்காமலே சுற்றி கொண்டிருந்தேன். இது இல்லாமல் அப்போ ஜரிதா பீடா வேறு போடுவேன். அந்த சமயத்தில்தான் சோழா ஓட்டல், தியேட்டர் என பல இடங்களில் பிரச்சனை செய்திருக்கேன். அப்போதெல்லாம் ஒருத்தரை அடிச்சிட்டா அதற்காக வருத்தப்பட மாட்டேன். அதுக்காக பெருமைப்பட்டுக்குவேன் என பாரதிராஜாவிடம் கூறியுள்ளார் ரஜினிகாந்த்.