நடிகை ரவீனா விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருகிறார்.
ரவீனா தகா பல வருடங்களாகவே தமிழ் சினிமாவில் முயற்சி செய்து வருகிறார் ஜில்லா ராட்சசன் மாதிரியான நிறைய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் ரவீனா.
ரவீனாவிற்கு சிறப்பாக நடனமாட தெரியும் என்பதால் சின்ன திரையில் உள்ள நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதன் மூலமாக அவருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றார் ரவீனா. அதற்குப் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் மக்கள் மத்தியில் இன்னும் அதிகமாக பிரபலம் அடைந்தார் ரவீனா.
இதற்கு நடுவே தற்சமயம் ரவீனா குறித்த சர்ச்சையான செய்தி ஒன்று பரவி வருகிறது. சிந்து பைரவி என்கிற சீரியல் ஒன்றில் நடிப்பதற்கு ரவீனா ஒப்புக்கொண்டிருந்தார். அந்த சீரியலில் இரண்டு தோழிகளுக்கு இடையிலான கதை அம்சத்தை அடிப்படையாகக் கொண்டு அந்த சீரியல் செல்லும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் திடீரென்று அதிலிருந்து விலகினார் ரவீனா. இதனால் அவருக்கு திரைத்துறையிலிருந்து ரெட் கார்டு வழங்கப்பட்டதாகவும் இனி இவர் நடிக்க முடியாது என்றும் செய்திகள் பரவி வந்தன. தற்சமயம் இவற்றிற்கு பதில் அளித்திருக்கிறார் ரவீனா.
அது குறித்து அவர் கூறும் பொழுது என்னுடைய சொந்த பிரச்சினைகள் காரணமாக நான் அந்த சீரியலில் இருந்து விலகினேன் மற்றபடி ரெட் கார்டு என்று எதுவும் எனக்கு தரவில்லை நான் மற்ற நிகழ்ச்சிகளில் நடிப்பதற்கு எனக்கு எந்த தடையும் இல்லை என்று கூறி இருக்கிறார் ரவீனா.