இறுதி சுற்று திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரித்திஹா சிங். அதுவரை பாக்சிங்கில் ஆர்வம் காட்டி வந்த ரித்திஹா சிங்கிற்கு அதற்கு பிறகு சினிமா மீது ஆர்வம் ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது. தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகளை பெற்று நடித்து வருகிறார் ரித்திஹா சிங்.
ஓ மை கடவுளே திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. சமீபத்தில் வேட்டையன் திரைப்படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரித்திஹா சிங்.