மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாம் திருமணம்.. இணையத்தில் வலம் வரும் திடுக்கிடும் செய்தி..!

தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவராக இருந்து வருபவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் பிரபலங்களின் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு கேட்டரிங் ஆர்டர்களை எடுத்து செய்து வந்தார். இந்த நிலையில் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் தமிழில் மெஹந்தி சர்க்கஸ் என்கிற திரைப்படத்தில் நடித்தார்.

அந்த திரைப்படம் ஓரளவு வரவேற்பை பெற்று கொடுத்தது என்றாலும் கூட அதற்கு பிறகு அவர் பெரிதாக திரைப்படங்களில் நடிக்கவில்லை. இந்த நிலையில் அவருக்கு மீண்டும் வரவேற்பை பெற்று கொடுத்த விஷயமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது.

குக் வித் கோமாளியில் சட்ச்சாக வந்தார் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் ஸ்ருதி என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த நிலையில் தற்சமயம் அவர் வேறு ஒரு பெண்ணோடு தொடர்பில் இருப்பதாக செய்திகள் வலம் வந்த வண்ணம் உள்ளன.

தமிழ் சினிமாவில் பிரபலமான ஸ்டைலிஸ்ட்டாக இருந்து வருபவர் ஜாய் கிரிஸில்டா. இவர்தான் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் ஸ்டைலிஸ்ட்டாக இருந்து வருகிறார். இந்த நிலையில் இவரும் மாதம்பட்டி ரங்கராஜும் திருமணம் செய்துக்கொண்டதாக ஒரு செய்தி வலம் வந்து கொண்டுள்ளது.

ஏற்கனவே ஒருமுறை திருமணமாகி டைவர்ஸ் ஆனவர் ஜாய் கிரிஸில்டா. இவர் தொடர்ந்து மாதம்பட்டியுடன் சேர்ந்து புகைப்படங்களை வெளியிடுவதும் அவரை மை மேன் என அழைப்பதுமாக இருந்து வந்தது. இந்த நிலையில் அவர் தற்சமயம் அவர் வெளியிடும் புகைப்படங்களில் அவர் தாலியுடன் இருப்பதை பார்க்க முடிகிறது.

இதனை பார்க்கும் ரசிகர்கள் அவர் மாதம்பட்டியை திருமணம் செய்துவிட்டார் என கூறி வந்தனர். ஆனால் இதுக்குறித்து மாதம்பட்டியின் மனைவி கூறும்போது அது உண்மையில்லை என தெரிவித்துள்ளார்.