பாலாவோட ஒரு போன் காலுக்காக காத்து கிடக்கிறேன்!.. மனம் வருந்திய சாட்டை நடிகர்!..
Director Bala: பொதுவாகவே சின்ன நடிகர்களுக்கு தமிழ் சினிமாவில் ஒரு நம்பிக்கை உண்டு. ஒரு சில பிரபலமான இயக்குனர்களின் திரைப்படத்தில் நடித்து விட்டால் அவர்கள் சினிமாவில் பெரிய இடத்தை பிடித்துவிட முடியும் பெரிய வரவேற்பை பெற்று விட முடியும் என்று நம்புகிறார்கள்.
அதனால்தான் கார்த்தியின் மகனான கௌதம் கார்த்திக் முதன்முதலாக மணிரத்தினம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு ஆறுமுகமானார். அதேபோல நடிகர் அதர்வாவிற்கும் பாலா இயக்கத்தில் பரதேசி திரைப்படத்தில் நடித்த பிறகுதான் சினிமாவில் மார்க்கெட் அதிகமானது.
நடிகர் கார்த்திக்கும் கூட மெட்ராஸ் ஒரு முக்கியமான திரைப்படமாக இருந்தது. இப்படி வெற்றிமாறன், பா.ரஞ்சித், இயக்குனர் பாலா போன்ற ஒரு சில இயக்குனர்களின் திரைப்படத்தில் நடித்தால் தங்களுடைய மார்க்கெட் உயரும் என்பது நடிகர்களின் மனநிலையாக இருக்கிறது. இதனால்தான் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு கூட குறைந்த சம்பளத்திற்கு நடிகர்கள் நடித்து கொடுத்தனர்.
காத்துக்கொண்டிருக்கும் நடிகர் யுவன்:
இந்த நிலையில் சாட்டை படத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர் யுவன் தனது பேட்டியில் கூறும் பொழுது சாட்டை திரைப்படத்திற்கு பிறகு பாலா தன்னை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கப் போவதாக கூறி இருந்ததாக கூறுகிறார்.
ஆனால் அதற்கு பிறகு பாலா நிறைய திரைப்படங்களில் பிஸியாகிவிட்டதால் அந்த திரைப்படம் எடுக்கப்படவில்லை. ஆனால் அந்த திரைப்படத்திற்கான முன் தயாரிப்புகள் முதலில் நடந்தன. அப்பொழுது பாலாவிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் அவையே திரும்ப வேறு படங்களில் நடிப்பதற்கு எனக்கு உதவியாக இருக்கின்றன என்று கூறுகிறார்.
மேலும் இப்போதும் பாலாவின் ஒரு போன் காலுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் அது மட்டும் வந்துவிட்டால் இப்பொழுதும் அவரது திரைப்படத்திற்கு நடிக்க சென்று விடுவேன் என்று கூறுகிறார் யுவன்.