படுக்க அழைத்த பிரபலம்?.. உண்மையை உடைத்த சமந்தா.. வெடித்த சர்ச்சை.!

தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் வளர்ந்து வந்த ஒரு பிரபலமாக இருப்பவர் நடிகை சமந்தா. தமிழ் பெண்ணான சமந்தா சினிமாவில் நிறைய ஏற்ற இறக்கங்களை பார்த்திருக்கிறார்.

சினிமாவில் அறிமுகமான காலகட்டங்களில் சமந்தாவிற்கு பெரிதாக வரவேற்புகள் கிடைக்கவில்லை. அதற்கு பிறகு தொடர்ந்து சினிமாவில் முயற்சித்ததன் மூலம் தற்சமயம் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கிறார் சமத்தா.

இந்த நிலையில் திருமண வாழ்க்கையை பொருத்தவரை சமந்தாவிற்கு அவ்வளவு சுமூகமான திருமண வாழ்க்கை என்பது அமையவில்லை இருந்தாலும் கூட திருமணத்திற்கு பிறகும் நடிப்பின் மீது இவர் கவனம் செலுத்தி வந்தார்.

samantha

படுக்க அழைத்த பிரபலம்?

இந்த நிலையில் அவருக்கும் அவரது கணவர் நாகசைதன்யாவிற்கும் இடையே விவாகரத்து ஆனது. தற்சமயம் மயோசிட்டிஸ் என்கிற அரிய வகை நோயால் அவதிப்பட்டு வரும் சமந்தா தொடர்ந்து அதிலிருந்து மீண்டு திரைப்படங்களில் நடிப்பதற்கு முயற்சி செய்து வருகிறார்.

இந்த நிலையில் ஆந்திராவை சேர்ந்த அமைச்சரான கொண்டா சுரேகா சமந்தாவை குறித்து சர்ச்சையான பேச்சு ஒன்றை கொடுத்திருக்கிறார். அதில் கே.டி இராமராவ் என்கிற அரசியல்வாதிக்கு அடிபணியாததினால்தான் சமந்தாவின் விவாகரத்து நடந்தது என்று கூறியிருக்கிறார்.

நாகார்ஜுனாவின் சொத்தை முடக்காமல் இருக்க வேண்டும் என்றால் சமந்தாவை ஒரு இரவுக்கு அனுப்ப வேண்டும் என்று கே டி இராமாராவ் கேட்டதாகவும் அதற்காக நாகார்ஜுனா சமந்தா விடம் பேசியதாகவும் கூறி இருக்கிறார் அமைச்சர் கொண்டா சுரேகா.

ஆனால் அதற்கு ஒப்புக் கொள்ளாத சமந்தா விவாகரத்து பெற்றுவிட்டதாக அவர் கூறியிருக்கிறார். இந்த செய்தி அதிக வைரலாக துவங்கியது இந்த நிலையில் இதற்கு பதிலளித்த சமந்தா கூறும்பொழுது இந்த ஒரு நிலையை எட்டுவதற்கு நான் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன்.

அதை கொச்சைப்படுத்தி விடாதீர்கள் நீங்கள் ஒரு அமைச்சர் என்னும்பொழுது நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் மதிப்பு உண்டு என்பதை அறிந்து பேசுங்கள் தேவையில்லாமல் பேசாதீர்கள் என்று பதில் அளித்து இருந்தார். மேலும் நாகார்ஜுனா மற்றும் அவரது மனைவி அமலா ஆகியோரும் இந்த அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர்.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version