சின்ன பிள்ளைல ரொம்ப க்யூட் –  சாயிஷாவின் சிறு வயது போட்டோக்களை பார்த்துள்ளீர்களா?

வனமகன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தனது தனிப்பட்ட நடன திறனால் பிரபலமானவர் நடிகை சாயிஷா.

சாயிஷாவின் நடனத்திற்காகவே ஒரு தனிக்கூட்டம் அவரை பின்பற்றுகிறது. இதனால் வனமகன் திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைத்தன. 

அடுத்து வரிசையாக கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த் என வரிசையாக திரைப்படங்கள் நடித்தார்.

வனமகன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் ஆர்யா, சாயிஷாவை திருமணம் செய்துக்கொள்ள விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். திருமணத்திற்கு பிறகு காப்பான் திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்தார். அதன் பிறகு டெடி படத்தில் நடித்தார். இன்னும் சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் சாயிஷா அவரது குழந்தை புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். வெள்ளை உடையில் பார்க்கவே மிகவும் அழகாக இருந்தார் சாயிஷா.

Follow @ Google News: சினிபேட்டையில் வரும் அனைத்து சினிமா அப்டேட்களையும் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிபேட்டை தளத்தை ஃபாலோ செய்யவும்.

Refresh