நேதாஜி மரணத்தில் உள்ள மர்மம்.. பொய் சொன்னதா ஜப்பான்?. உண்மையை உடைத்த சீனா?.

200 வருடங்களுக்கு மேலாக இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர் ஆங்கிலேயர்கள். ஆனால் இரண்டாம் உலகப்போர் துவங்கியப்போது கதை மாறியது. பிரிட்டனால் இந்தியாவை தொடர்ந்து அடிமைப்படுத்தி வைத்திருக்க முடியவில்லை.

மக்களும் தொடர்ந்து விடுதலைக்காக போராட துவங்கியிருந்தனர். அப்போது மக்களுக்கு சரியான பாதையை காட்டும் பல தலைவர்கள் உருவானார்கள். அதில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸும் முக்கியமானவர். ஆரம்பத்தில் காந்தியின் கொள்கைகள் மீது ஈடுபாடு கொண்டு ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்தார் சுபாஷ் சந்திர போஸ்.

ஆனால் நாளாடைவில் சண்டையிட்டுதான் சுதந்திரத்தை பெற முடியும் என நினைத்தார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அதற்காக இந்திய தேசிய ராணுவம் என்கிற ராணுவத்தையும் உருவாக்கினார். டெல்லியை நோக்கி படையெடுத்து வந்த குழு பிரிட்டிஷ் ராணுவத்தால் தோற்கடிக்கப்பட்டது.

நேதாஜியின் மரணம்:

ஆனால் அதற்கு பிறகு சுபாஷ் சந்திரப்போஸ் என்னவானார் என்பது யாருக்குமே தெரியாத விஷயமாக இருக்கிறது. அவர் போர் வீரர்களோடு இல்லை அப்படி என்றால அவர் எங்கே இருந்தார் என்பது கேள்வியாக இருந்தது. அந்த சமயத்தில் ஜப்பான் தைவானில் நடந்த விமான விபத்தில் சுபாஷ் சந்திர போஸ் இறந்துவிட்டதாக  அறிவித்தது.

ஆனால் அந்த கூற்றின் மீது அனைவருக்கும் நம்பிக்கை இல்லை. இந்த நிலையில் சீனாவில் இரண்டாம் உலக போரை ஆய்வு செய்த குழு ஒன்று ஜப்பான் சொன்னது பொய் என அறிவித்துள்ளனர். ஜப்பான் ராணுவ அதிகாரியான ஜெனரல் ஷிடேயுடன் பயணம் செய்தப்போது இறந்ததாக ஜப்பான் அறிவித்திருந்தது.

ஆனால் உண்மையில் ஜெனரல் ஷிடேய் அந்த விபத்தில் இறக்கவில்லை என்றும் சுபாஷ் சந்திரபோஸ் ரஷ்யாவுக்கு தப்பி சென்றதை மறைக்கவே ஜப்பான் அப்படி அறிவித்தது என்றும் கூறுகின்றனர் சீன ஆய்வாளர்கள்.

எது எப்படி இருந்தாலும் சுபாஷ் சந்திரபோஸ் இந்தியர்களின் மனதில் இன்னமும் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறார்.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version