ஆங்கிலேயர்களின் நாகரிக வளர்ச்சிக்கு பிறகு பல தேசங்களை ஆங்கிலேயர்கள் காலணியாதிக்கத்திற்குள் கொண்டு வந்தனர். அதன் மூலம்தான் ஆங்கிலம் உலகம் முழுக்க பிரபலமான ஒரு மொழியாக மாறியது.
நாகரிகமும் உலகம் முழுக்க பரவியது. ஆனால் இவ்வளவு நாகரிக தொழில்நுட்ப வளர்ச்சியிலும் கூட இன்னமும் ஆதிவாசியாக வாழ்ந்து வரும் மக்கள் கூட்டமும் இருந்துதான் வருகின்றனர். அமேசான் காடுகள் மாதிரியான பல பகுதிகளில் இப்படியான பழங்குடிகள் இருக்கின்றனர்.
அப்படியாக இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதியான செண்டினல் என்கிற தீவிலும் கூட ஆதிவாசி மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த தீவானது அந்தமான் தீவுகளுக்கு அருகில் உள்ளது.
கிட்டத்தட்ட 60,000 ஆண்டுகளாக இந்த தீவு இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த தீவுக்கு ஏற்கனவே சுற்றுலா சென்ற சிலர் கொல்லப்பட்டுள்ளனர். எனவே ஒன்றிய அரசே சுற்றுலாவுக்கு அந்த தீவுக்கு செல்ல தடை செய்துள்ளது.
ஆனாலும் சிலர் சட்ட விரோதமாக அந்த தீவுக்கு செல்வதை செய்து வருகின்றனர். சமீபத்தில் அமெரிக்கர் ஒருவர் அந்த தீவுக்கு சென்றது மட்டுமில்லாமல் அங்கு வீடியோவும் எடுத்துக்கொண்டு வந்துள்ளார்.
சமூக வலைத்தளம் அதிகம் வளர்ந்துள்ள இந்த காலக்கட்டத்தில் இந்த வீடியோ அதிக வைரலாகியுள்ளது. இதனால் பலரும் சட்ட விரோதமாக அந்த தீவுக்கு செல்ல வாய்ப்புள்ளது. அது அவர்களது உயிருக்கு ஆபத்தாக முடியலாம் என்பதே இப்போது கவலை அளிக்கும் விஷயமாக இருக்கிறது.