விஜய் சேதுபதி தமிழில் வளர்ச்சி பெற்று வரும் நடிகர்களில் முக்கியமானவராக இருந்து வருகிறார். அவரது 50 ஆவது திரைப்படமான மகாராஜா திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வரவேற்பை பெற்றது. பெரும்பாலும் ஒவ்வொரு நடிகருக்குமே 50 ஆவது திரைப்படம் என்பது மிக முக்கியமானதாக இருக்கிறது.
50 ஆவது திரைப்படம் மட்டும் தோல்வியடைந்தால் அது நடிகர்களுக்கு மிகுந்த வருத்ததை ஏற்படுத்தும். பெரும்பாலும் பெரிய நடிகர்கள் தங்களது 50 ஆவது திரைப்படத்தை பெரிய பட்ஜெட்டில்தான் எடுக்க நினைப்பார்கள். ஆனால் மகாராஜா குறைந்த பட்ஜெட் படமாகும்.
இந்த நிலையில் அந்த படத்தில் வில்லனாக நடித்த சிங்கம் புலி இதுக்குறித்து பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர் கூறும்போது விஜய் சேதுபதிக்கு உள்ள மார்க்கெட்டுக்கு பெரிய பட்ஜெட்டில் 50 ஆவது படத்தை பண்ணியிருக்கலாம். நான் ரெண்டு செட்டு சட்டை வேஷ்டியை போட்டுக்கொண்டு ஒரு வயதான கதாபாத்திரத்தில் நடித்தார்.
படத்தில் கதாநாயகி கிடையாது. வெளிநாட்டு பாடல்கள் கிடையாது. எந்த பெரிய நடிகராவது இவ்வளவு குறைவான பட்ஜெட்டில் 50 ஆவது படத்தில் நடிப்பார்களா? நான் எல்லாம் இப்படி 50 ஆவது படம் நடித்தேன் என்றால் என் ஆட்டம் அதிகமாக இருக்கும்.
ஆனால் விஜய் சேதுபதி அப்படி கிடையாது. அவர் எளிமையான ஆள் மேலும் கதைக்குதான் அவர் முக்கியத்துவம் கொடுக்கிறார் என கூறியுள்ளார் சிங்கம் புலி.