Connect with us

புலியையே கொண்டு வந்து வாசல்ல கட்டியும் எம்.ஜி.ஆரால் சிவாஜியை தோற்கடிக்க முடியலை!. போட்டினா இப்படி இருக்கணும்!.

MGR sivaji ganesan

Cinema History

புலியையே கொண்டு வந்து வாசல்ல கட்டியும் எம்.ஜி.ஆரால் சிவாஜியை தோற்கடிக்க முடியலை!. போட்டினா இப்படி இருக்கணும்!.

cinepettai.com cinepettai.com

தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கிடையே போட்டி என்பதை முதலில் ஆரம்பித்து வைத்தவர்கள் நடிகர் எம்.ஜி.ஆரும், சிவாஜி கணேசனும்தான் என கூறலாம். இப்போது இருக்கும் விஜய் அஜித் ரசிகர்களை விடவும் உக்கிரமான ரசிகர்களாக இருந்தவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி ரசிகர்கள்.

அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர், சிவாஜி படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது என்றாலே இரு ரசிகர்களுக்கும் இடையில் பெரும் மோதல் இருக்கும். இருந்தாலும் அப்படி வெளியாகும்போதுதான் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதால் தயாரிப்பாளர்கள் அப்படி மோதல் உள்ளபோதும் கூட இருவரது திரைப்படங்களையும் சேர்த்தே வெளியிட்டனர்.

இந்த நிலையில் மாபெரும் பொருட் செலவில் உருவான திரைப்படம் கர்ணன். கர்ணன் திரைப்படத்திற்கு தமிழ்நாடு அளவில் அதிக வரவேற்பு இருந்தது. ஆனால் அந்த படத்திற்கு போட்டியாக நடிகர் எம்.ஜி.ஆரின் திரைப்படமான வேட்டைக்காரன் திரைப்படமும் தயாராகி வந்தது.

இந்த நிலையில் கர்ணன் மற்றும் வேட்டைக்காரன் வெளியாகும் நாளில் சிவாஜி கணேசன் ரசிகர்கள் உண்மையான தேர் ஒன்றை எடுத்து வந்து திரையரங்க வாசலில் நிறுத்தினர். இதனை பார்த்த எம்.ஜி.ஆர் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா?

அவர்கள் எம்.ஜி.ஆரின் வேட்டைக்காரன் திரைப்படத்தை முன்னிட்டு உண்மையான புலியை கொண்டு வந்து திரையரங்கின் வாசலில் கட்டினார்கள். ஆரம்பத்தில் வேட்டைக்காரன் திரைப்படத்திற்குதான் அதிக வரவேற்பு இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல கர்ணன் திரைப்படத்தில் சிவாஜி கணேசனின் நடிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதனை தொடர்ந்து வேட்டைக்காரனை மிஞ்சி பெரும் வெற்றியை கொடுத்தது கர்ணன் திரைப்படம்.

To Top