goat sk

விஜய் துப்பாக்கி சீனுக்காக அதை செய்த எஸ்.கே… அமரன் படத்தில் நடந்த நிகழ்வு..!

தற்சமயம் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் திரையரங்கில் வெளியாகியிருக்கும் திரைப்படம் அமரன். அமரன் திரைப்படத்தை பொருத்தவரை இதற்கு எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள் ஏற்கனவே இருந்து வந்தன.

இதுவரை வெளிவந்த ராணுவம் தொடர்பான திரைப்படங்களிலேயே அமரன் திரைப்படம் ஒரு வித்தியாசமான திரைப்படமாக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

அதே மாதிரி இந்த படத்தின் இயக்குனரான ராஜ்குமார் பெரியசாமி உண்மையிலேயே ராணுவ தளவாடங்கள் பலவற்றிற்கு சென்று படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார். அதேபோல ராணுவத்தில் பயன்படுத்தப்படும் நிஜத் துப்பாக்கிகள் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

amaran

ரசிகர் சொன்ன விஷயம்:

இதற்கு முன்பு வரை தமிழ் சினிமாவில் எந்த ஒரு ராணுவம் தொடர்பான திரைப்படத்திலும் இவ்வளவு முயற்சிகள் செய்து இராணுவத்தை காட்டியது கிடையாது. இந்த நிலையில் அமரன் திரைப்படம் நல்லவகையான எதிர்பார்ப்பு பெற்று வருகிறது.

படத்தை பார்த்து வரும் பலரும் நேர்மறையான விமர்சனங்களை அளித்து வருகின்றனர். இது குறித்து சிவகார்த்திகேயனின் ரசிகர் ஒருவர் கூறும்பொழுது கோட் திரைப்படத்தில் விஜய் தன்னுடைய துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் கொடுப்பதாக காட்சிகள் வரும்.

அந்த தகுதிக்கு ஏற்றார் போல விஜய்க்கு பெருமை சேர்க்கும் விதமாக அமரன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன் என்று அந்த ரசிகர் கூறி இருப்பது இப்பொழுது வைரல் ஆகி வருகிறது.