விஜய்க்கிட்ட துப்பாக்கியை வாங்கினதும் எஸ்.கே செலக்‌ஷன் எல்லாம் வேற மாதிரி.. முருகதாஸ்க்கு பிறகும் விஜய் பட இயக்குனரோடு கூட்டணி..!

Sivakarthikeyan is next Act in AR Murugadoss’s film. And Sivakarthikeyan has been selecting films from good directors in a row

இதுவரை தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்களால் காமெடி நடிகராக பார்க்கப்பட்டு வந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் தொடர்ந்து அவரது திரைப்படங்களில் சண்டை காட்சிகள் வைத்து நடித்தாலும் கூட முழுக்க முழுக்க சீரியஸ் ஆன கதைக்களங்களை அவ்வளவாக தேர்ந்தெடுத்து நடித்தது கிடையாது.

இப்போது விஜய் அஜித் மாதிரியான நடிகர்கள் சினிமாவில் இருந்து விலக இருப்பதால் அந்த இடங்கள் தமிழ் சினிமாவில் காலியிடங்களாக மாற வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே அந்த இடத்தை நிரப்புவதற்கு நிறைய நடிகர்கள் போட்டி போட்டு வருகின்றனர்.

தற்சமயம் அந்த போட்டியில் சிவகார்த்திகேயனும் இறங்கி இருக்கிறார் அதனை தொடர்ந்துதான் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான அமரன் திரைப்படத்தில் முழுக்க முழுக்க சீரியஸ் ஆன ஒரு கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார்.

அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படம்:

sivakarthikeyan

அந்த திரைப்படமும் எதிர்பார்த்ததை விடவும் பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது. அதனை தொடர்ந்து அடுத்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இந்த படமும் முழுக்க முழுக்க ஒரு கமர்சியல் திரைப்படம் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அடுத்து ஏ.ஆர் முருகதாஸ் படத்திற்கு பிறகு இயக்குனர் ஹெச்.வினோத் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கோட் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் விஜய்யிடமிருந்து துப்பாக்கியை வாங்குவது போன்ற ஒரு காட்சி இருக்கும். அந்த காட்சியில் நடித்த பிறகு சிவகார்த்திகேயனுக்கு பொறுப்புகள் அதிகரித்து இருக்கின்றன என்று ரசிகர்கள் இதுகுறித்து கூறுகின்றனர். அதனால்தான் ஏ.ஆர். முருகதாஸ் வினோத் என்று விஜய் அஜித்தை வைத்து இயக்கிய இயக்குனர்களுடன் தொடர்ந்து கூட்டணி போட்டு வருகிறார் சிவகார்த்திகேயன் என்று கூறப்படுகிறது.