அவருக்கு ரொம்ப பில்டப் வேணாம்! – எஸ்.ஜே.சூர்யாவை கண்டு புகையும் சி.கா!?

தமிழகத்தில் இன்று கொடிகட்டி பறக்கும் நடிகர் சிவகார்த்திகேயன். தொலைக்காட்சியில் தன் வாழ்க்கையை துவக்கி இன்று திரையுலகில் மிகப்பெரும் நடிகராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன்.

அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா மோகன், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, சிவாங்கி நடிக்கும் டான் திரைப்படம் லைகா தயாரிப்பில் உருவாகியுள்ளது.

இத்திரைப்படம் மே 13 அன்று வெளி வருகிறது. டான் திரைப்படத்திற்கான விளம்பரங்கள் பரபரப்பாக அனைத்து மீடியாக்களிலும் வந்துக் கொண்டிருக்கின்றன. ஆச்சரியமாக பல விளம்பரங்களில் டான் திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் புகைப்படமோ, வீடியோக்களோ இல்லை.

இதுக்குறித்து சினிமா வட்டாரங்களில் பல தகவல்கள் கிசு கிசுக்கப்படுகிறது. டான் திரைப்படத்திற்காக வைக்கப்பட்டிருந்த மிகப்பெரும் பிளக்ஸ் ஒன்றில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு அமர்ந்திருப்பதுபோலவும், சிவகார்த்திகேயன் அவருக்கு பின்னால் நிற்பதுபோலவும் வைக்கபட்டது சிவகார்த்திகேயனின் ஈகோவை சீண்டிவிட்டதாக சொல்லப்படுகிறது.

இதனால்தான் டான் விளம்பரங்களில் எஸ்.ஜே.சூர்யாவின் இடம் குறைக்கப்பட்டுள்ளது என சொல்கிறார்கள். இது மட்டுமின்றி சிவகார்த்திகேயன் மிகப்பெரும் நடிகராக இருந்தாலும், எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்போடு ஒப்பிடும்பொழுது சிவகார்த்திகேயன் இன்னும் நிறையவே வளர வேண்டியுள்ளது.

இது டான் திரைப்படத்திலும் எதிரொலித்திருக்கலாம். அதுவும்கூட சிவகார்த்திகேயனின் ஈகோவிற்கான காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இதே பிரச்சனை தமிழ் திரையுலகில் பல தருணங்களில் நடந்துள்ளது.

மாஸ்டர் வெளிவந்தபோதுக்கூட விஜய் சேதுபதியின் பல காட்சிகள் நீக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. இன்னும் பல படங்கள் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளன. ஆனால் ஒரு உண்மை உள்ளது. அது என்னவெனில் வில்லன் பலமாக இருந்தால்தான் அது ஹீரோவிற்கு மரியாதை. புரிந்துக் கொள்வார்களா நாயகர்கள்??

Refresh