Cinema History
அந்த படத்துல நான் நடிச்சிருக்க கூடாதோன்னு நினைக்கிறேன்!.. மனம் வருந்தி பேசிய சிவகார்த்திகேயன்!..
Sivakarthikeyan: வாரிசுகளின் பிள்ளைகள் தமிழ் சினிமாவை ஆக்கிரமித்து வரும்போது கூட சில நடிகர்கள் தங்கள் திறமைகளை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தி தங்களுக்கான இடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளனர். அப்படியான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
காமெடி நடிகராக தமிழ் சினிமாவிற்கு வந்த சிவகார்த்திகேயன் பிறகு கதாநாயகனாக நடிக்க துவங்கினார். தொடர்ந்து காமெடி கதாநாயகனாக நடித்து வந்த சிவகார்த்திகேயன் தற்சமயம் சீரியஸ் கதாநாயகனாக உருவெடுக்க இருக்கிறார் என கூறப்படுகிறது.
அரசியலுக்கு செல்வதால் தொடர்ந்து படம் நடிக்க போவதில்லை என்று கூறிவிட்டார் நடிகர் விஜய். அதேபோல நடிகர் அஜித்தும் தொடர்ந்து நடிக்க போவதாக தெரியவில்லை. எனவே இந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு திட்டமிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.

இந்த நிலையில் டான் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படங்களிலேயே பெரிதும் வரவேற்பை பெறாமல் போன திரைப்படம் பிரின்ஸ். இந்த திரைப்படம் குறித்து சிவகார்த்திகேயன் சில விஷயங்களை கூறியுள்ளார்.
அதில் கூறும்போது ப்ரின்ஸ் நான் நடித்திருக்க வேண்டிய திரைப்படம் கிடையாது, அந்த திரைப்படத்தில் புதிதாக அறிமுகமாகி வளர்ந்து வரும் யாராவது கதாநாயகனாக நடித்தால் நன்றாக இருந்திருக்கும். நான் நடிக்கும்போது காமெடி என்பதை தாண்டி மக்கள் எதிர்பார்க்கும் ஏதோ ஒரு விஷயம் படத்தில் இல்லாமல் போய்விட்டதோ என தோன்றுகிறது.
மேலும் இயக்குனருக்கும் எனக்கும் மொழி புரியாததில் இருந்த சிக்கல்கள் அந்த படத்தை பாதித்துவிட்டதோ என யோசிக்கிறேன என கூறியுள்ளார் சிவகார்த்திகேயன்.
