குக் வித் கோமாளியில் இருந்து விலகிய சௌந்தர்யா? இதுதான் காரணம்.!

பிக் பாஸ் மூலமாக பிரபலமடைந்து தற்சமயம் குக் வித் கோமாளியில் பங்கேற்று வருகிறார் நடிகை சௌந்தர்யா. நடிகை சௌந்தர்யா வெகு காலங்களாகவே தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

தமிழ் படம் மாதிரியான திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் சௌந்தர்யாவை பார்க்க முடியும். அதற்குப் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது இவருக்கு வரவேற்பு அதிகமானது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவரை அந்த வீட்டில் இருந்த ஒரு போட்டியாளராக சௌந்தர்யா இருந்தார். அதனை தொடர்ந்து இப்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று வருகிறார் சௌந்தர்யா.

இந்த நிலையில் கடந்த வாரம் நடந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சௌந்தர்யா பங்கு பெறவில்லை. இதனை தொடர்ந்து சௌந்தர்யாவிற்கும் குக் வித் கோமாளி குழுவிற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. எனவே சௌந்தர்யா இதிலிருந்து விலகிவிட்டார் என்று ஒரு பக்கம் வதந்திகள் கிளம்பி வந்தன.

soundarya
soundarya

இது சௌந்தர்யாவின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது இந்த நிலையில் சௌந்தர்யா அமெரிக்காவில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதாவது சௌந்தர்யாவின் அக்கா அமெரிக்காவில் தான் இருக்கிறாராம் அவரை பார்க்க சௌந்தர்யா அமெரிக்கா சென்றிருக்கும் காரணத்தினால் தான் அவர் குக் வித் கோமாளில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version