விஜய் சேதுபதி மகனின் பீனிக்ஸ்.. படம் எப்படி இருக்கு.. விமர்சனம்.!

விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதியின் நடிப்பில் இன்று வெளியான திரைப்படம் பீனிக்ஸ். இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அதிக விமர்சனத்துக்கு உள்ளானார் சூர்யா சேதுபதி.

பேட்டிகளில் அவர் பேசிய விஷயங்கள் என பலவும் அவருக்கு எதிரான விமர்சனங்களை உருவாக்கியது. அனல் அரசு என்கிற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு இப்போது கொஞ்சம் கலவையான விமர்சனங்கள் வர துவங்கியுள்ளன. படத்தின் கதைப்படி ஒரு ஆளும்கட்சி அரசியல் வாதியால் பாதிக்கப்பட்ட சூர்யா சேதுபதி அவரை கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு செல்கிறார்.

இதனை தொடர்ந்து அதை வைத்து கதை நகர்கிறது. படம் முழுக்க அதிகமாக சண்டை காட்சிகள்தான் இருக்கின்றன. அதே போல முதல் பாதி முழுக்கவும் சூர்யாவிற்கு வசனங்களே அதிகமாக இல்லை. இதெல்லாம் படத்தில் ஒரு குறையாகவே பார்க்கப்படுகிறது.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version