Tag Archives: அறிஞர் அண்ணா

அறிஞர் அண்ணாவிடம் சண்டையை கிளப்பிய என்.எஸ் கிருஷ்ணன்.. விடிய விடிய நடந்த பிரச்சனை!.. எல்லாம் அந்த ட்ரைவருக்காகதான்!.

Aringar Anna and NS Krishnan : எம்.ஜி.ஆர் சிவாஜிக்கு முன்பு தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த சினிமா நடிகர்கள் என்றால் அது தியாகராஜ பாகவதரும் என்.எஸ் கிருஷ்ணனும் தான் இவர்கள் இருவருமே அப்பொழுது தமிழ் சினிமாவில் பெரும் உயரத்தை தொட்டு இருந்தனர்.

அதில் என்.எஸ் கிருஷ்ணனை பொறுத்த வரை அவர் அரசியல் சார்ந்து நிறைய அறிவை பெற்றவராக இருந்ததால் அரசியல் கட்சிகளிலும் அவர் ஈடுபாடு காட்டி வந்தார். அப்பொழுது அறிஞர் அண்ணாவைப் பொறுத்தவரை சினிமா மூலமாக அரசியலை எளிதாக விளம்பரப்படுத்த முடியும் என்பது அண்ணாவின் பார்வையாக இருந்தது.

எனவே தொடர்ந்து அவரது கட்சியில் திரை பிரபலங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்து கொண்டிருந்தார். அந்த வகையில் என்.எஸ் கிருஷ்ணன் அண்ணாவின் நண்பராக இருந்து வந்ததால் அவருக்கு தொடர்ந்து ஆதரவளித்து வந்தார் என்.எஸ் கிருஷ்ணன் இந்த நிலையில் ஒருநாள் வெளியூரிலிருந்து என்.எஸ் கிருஷ்ணனை முக்கியமான ஒரு வேலைக்காக அழைத்து வருவதற்காக அண்ணா காரில் சென்றிருந்தார்.

அங்கு சென்று என்.எஸ் கிருஷ்ணனை அழைத்து மறுநாள் காலையில் போக வேண்டிய இடத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. ஆனால் ஓட்டுனர் வருவதற்கு மறுத்துவிட்டார். நாளை காலை வரை தொடர்ந்து கார் ஓட்டினால் தூக்கம் வந்துவிடும் அதனால் விபத்துகள் நேர வாய்ப்பு இருக்கின்றன எனவே நாம் அதிகாலையில் கிளம்பலாம் என்று கூறி இருக்கிறார் ஓட்டுநர்.

 இதை கேட்ட என்.எஸ் கிருஷ்ணன் விபத்து நடக்காமல் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று உத்தரவாதம் அளித்து அவர்களோடு காரில் ஏறி இருக்கிறார். ஏறிய உடனே அறிஞர் அண்ணாவிடம் சிலப்பதிகாரத்தில் அவருக்கு இருக்கும் ஒரு விமர்சனத்தை முன் வைத்தார் என்.எஸ் கிருஷ்ணன் இதனால் என்.எஸ் கிருஷ்ணனுக்கும் அண்ணாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அந்த வாக்குவாதம் இரவு தொடங்கி மறுநாள் காலை வரை நடந்து கொண்டிருந்தது. பிறகு காரை விட்டு இறங்கிய என்.எஸ் கிருஷ்ணன் ஓட்டுனரிடம் பேசும் பொழுது இரவு உங்களுக்கு தூக்கம் ஏதாவது வந்ததா? என கேட்டார். அதற்கு பதில் அளித்த ஓட்டுனர் நீங்கள் சண்டை போட்டதிலேயே எனக்கு தூக்கம் வரவில்லை என்று கூறி இருக்கிறார் . உங்களுக்கு தூக்கம் வரக்கூடாது என்று தான் அந்த சண்டையையே போட்டோம் என்று அதற்கு விளையாட்டாக பதில் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார் என்.எஸ் கிருஷ்ணன்.