Tag Archives: என்.எஸ் கிருஷ்ணன்

அவ்வளவு திமிரா போச்சா!.. என்.எஸ் கிருஷ்ணனை சுடுவதற்கு துப்பாக்கி வாங்கிய எம்.ஆர் ராதா!.. என்.எஸ் கிருஷ்ணன் பண்ணுனதுதான் சம்பவம்!.

தமிழில் பிரபலமான வில்லன் நடிகர்களில் முக்கியமானவர் எம்.ஆர் ராதா. திரைப்படங்களில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் கூட பலரும் அவரை வில்லனாகதான் பார்த்து வந்தனர். நாடகங்களில் இருந்து சினிமாவிற்கு வந்த பல திரைக்கலைஞர்களில் எம்.ஆர் ராதாவும் முக்கியமானவர்.

எம்.ஜி.ஆரை திரைத்துறையில் பெயர் சொல்லி அழைக்கும் ஒரு சில பிரபலங்களில் எம்.ஆர் ராதாவும் ஒருவர். ஆனால் அவருக்கு மூத்த கலைஞர்களை மரியாதையுடன் தான் நடத்துவார் எம்.ஆர் ராதா. அப்படிப்பட்ட எம்.ஆர் ராதா என்.எஸ் கிருஷ்ணனை கொலை செய்ய துப்பாக்கி வாங்கிய சம்பவமும் நடந்தது.

என்.எஸ் கிருஷ்ணன் அப்போது தமிழ் சினிமாவில் மிக பிரபலமாக இருந்து வந்தார். அந்த காலக்கட்டத்தில் எம்.ஆர் ராதா சினிமாவிற்கு வரவில்லை. மாறாக நாடகங்களில் விழிப்புணர்வு நாடகங்களாக எடுத்து வந்தார். இந்த நிலையில் அவரை ஒரு நாள் சந்தித்த என்.எஸ் கிருஷ்ணன் நான் சினிமாவில் இருக்கும் வரை நீ சினிமாவிற்கு வராதே என கூறினார்.

mr-radha-3

ஏன் என கேட்கும்போது இருவருமே பகுத்தறிவு கருத்துக்களைதான் பேசுகிறோம். அதனால் ஒருவருக்கு போட்டியாக இன்னொருவர் இருந்திட கூடாது என்றார் என்.எஸ் கிருஷ்ணன். அதனால் எம்.ஆர் ராதாவும் சினிமா பக்கம் வராமல் இருந்தார்.

ஆனால் இந்த நிலையில் எம்.ஆர் ராதாவின் நாடகம் ஒன்றை அவரிடம் கேட்காமல் படமாக்கினார் என்.எஸ் கிருஷ்ணன். இதனால் கடுப்பான எம்.ஆர் ராதா என்.எஸ் கிருஷ்ணனை சுடுவதற்கு ஒரு துப்பாக்கி வாங்கி வைத்திருப்பதாக பலரிடமும் கூறியிருக்கிறார்.

இதை கேள்விப்பட்டதும் நேராக எம்.ஆர் ராதாவை சந்தித்த என்.எஸ் கிருஷ்ணன் ஏதோ என்னை சுட துப்பாக்கி வாங்கி வச்சிருக்கியாம் எங்க சுடு என நின்றுள்ளார். பிறகு அவரை சமாதானப்படுத்தியுள்ளார் எம்.ஆர் ராதா. இந்த நிகழ்வை நடிகர் ராதா ரவி ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

உனக்காக ஒண்ணும் பாட்டு பாட வரலை நான்!.. பாட்டு பாடாமல் சென்ற என்.எஸ் கிருஷ்ணன்!.. தயாரிப்பாளர் செஞ்சதுதான் சம்பவம்!.

எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசனுக்கு முன்பு தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகர்களில் முக்கியமானவர் என்.எஸ் கிருஷ்ணன். திரைப்படங்களில் நடிக்கும் அதே நேரத்தில் சினிமாவில் பாடல்களும் பாடி வந்தார் என்.எஸ் கிருஷ்ணன்.

இந்த நிலையில் 1948 ஆம் ஆண்டு எஸ்.எஸ் வாசன் இயக்கி தயாரித்த திரைப்படம் சந்திரலேகா. இந்த படத்தில் ஒரு பாடலை பாடுவதற்காக என்.எஸ் கிருஷ்ணனை அவர் அழைத்திருந்தார். ஏனெனில் அப்போதைய காலக்கட்டங்களில் என்.எஸ் கிருஷ்ணன் பாடும் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

எனவே பாடுவதற்கு வந்த என்.எஸ் கிருஷ்ணன் முதலில் அந்த பாடலை பாடினார். அதை கேட்ட எஸ்.எஸ் வாசனுக்கு அது அவ்வளவு திருப்தியாக இருப்பதாக தெரியவில்லை. எனவே மீண்டும் அந்த பாடலை பாடுமாறு அவர் என்.எஸ் கிருஷ்ணனை கேட்டுக்கொண்டார்.

என்.எஸ் கிருஷ்ணனும் மீண்டும் பாடினார். ஆனால் அப்போதும் எஸ்.எஸ் வாசனுக்கு அந்த பாடல் பிடிக்கவில்லை. இதனால் கடுப்பான என்.எஸ் கிருஷ்ணன் நான் உனக்கு ஒன்னும் பாட்டு பாடலை. மக்களுக்குதான் பாட்டு பாடுறேன் என கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

இதனை பார்த்து அங்கிருந்த படக்குழுவே ஆடிப்போய்விட்டது. ஏனெனில் எஸ்.எஸ் வாசனை யாரும் முகத்துக்கு நேரே கடுமையாக பேசிவிட முடியாது. அந்த அளவிற்கு அவருக்கு சினிமாவில் செல்வாக்கு உண்டு. அவ்வளவு செல்வாக்கு இருந்தும் அந்த பாடலை மீண்டும் கேட்ட எஸ்.எஸ் வாசன் என்.எஸ் கிருஷ்ணனுக்கு போன் செய்தார்.

நீங்கள் சொன்னது சரிதான் இந்த பாடல் ரசிகர்களுக்கு பிடித்த பாடலாக இருக்கும் என கூறியிருக்கிறார்.

அறிஞர் அண்ணாவிடம் சண்டையை கிளப்பிய என்.எஸ் கிருஷ்ணன்.. விடிய விடிய நடந்த பிரச்சனை!.. எல்லாம் அந்த ட்ரைவருக்காகதான்!.

Aringar Anna and NS Krishnan : எம்.ஜி.ஆர் சிவாஜிக்கு முன்பு தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த சினிமா நடிகர்கள் என்றால் அது தியாகராஜ பாகவதரும் என்.எஸ் கிருஷ்ணனும் தான் இவர்கள் இருவருமே அப்பொழுது தமிழ் சினிமாவில் பெரும் உயரத்தை தொட்டு இருந்தனர்.

அதில் என்.எஸ் கிருஷ்ணனை பொறுத்த வரை அவர் அரசியல் சார்ந்து நிறைய அறிவை பெற்றவராக இருந்ததால் அரசியல் கட்சிகளிலும் அவர் ஈடுபாடு காட்டி வந்தார். அப்பொழுது அறிஞர் அண்ணாவைப் பொறுத்தவரை சினிமா மூலமாக அரசியலை எளிதாக விளம்பரப்படுத்த முடியும் என்பது அண்ணாவின் பார்வையாக இருந்தது.

எனவே தொடர்ந்து அவரது கட்சியில் திரை பிரபலங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்து கொண்டிருந்தார். அந்த வகையில் என்.எஸ் கிருஷ்ணன் அண்ணாவின் நண்பராக இருந்து வந்ததால் அவருக்கு தொடர்ந்து ஆதரவளித்து வந்தார் என்.எஸ் கிருஷ்ணன் இந்த நிலையில் ஒருநாள் வெளியூரிலிருந்து என்.எஸ் கிருஷ்ணனை முக்கியமான ஒரு வேலைக்காக அழைத்து வருவதற்காக அண்ணா காரில் சென்றிருந்தார்.

அங்கு சென்று என்.எஸ் கிருஷ்ணனை அழைத்து மறுநாள் காலையில் போக வேண்டிய இடத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. ஆனால் ஓட்டுனர் வருவதற்கு மறுத்துவிட்டார். நாளை காலை வரை தொடர்ந்து கார் ஓட்டினால் தூக்கம் வந்துவிடும் அதனால் விபத்துகள் நேர வாய்ப்பு இருக்கின்றன எனவே நாம் அதிகாலையில் கிளம்பலாம் என்று கூறி இருக்கிறார் ஓட்டுநர்.

 இதை கேட்ட என்.எஸ் கிருஷ்ணன் விபத்து நடக்காமல் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று உத்தரவாதம் அளித்து அவர்களோடு காரில் ஏறி இருக்கிறார். ஏறிய உடனே அறிஞர் அண்ணாவிடம் சிலப்பதிகாரத்தில் அவருக்கு இருக்கும் ஒரு விமர்சனத்தை முன் வைத்தார் என்.எஸ் கிருஷ்ணன் இதனால் என்.எஸ் கிருஷ்ணனுக்கும் அண்ணாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அந்த வாக்குவாதம் இரவு தொடங்கி மறுநாள் காலை வரை நடந்து கொண்டிருந்தது. பிறகு காரை விட்டு இறங்கிய என்.எஸ் கிருஷ்ணன் ஓட்டுனரிடம் பேசும் பொழுது இரவு உங்களுக்கு தூக்கம் ஏதாவது வந்ததா? என கேட்டார். அதற்கு பதில் அளித்த ஓட்டுனர் நீங்கள் சண்டை போட்டதிலேயே எனக்கு தூக்கம் வரவில்லை என்று கூறி இருக்கிறார் . உங்களுக்கு தூக்கம் வரக்கூடாது என்று தான் அந்த சண்டையையே போட்டோம் என்று அதற்கு விளையாட்டாக பதில் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார் என்.எஸ் கிருஷ்ணன்.

பத்திரிக்கையாளரின் சாவுக்கு சம்பந்தப்பட்ட நடிகர்கள்.. இது விஜய் அஜித் பஞ்சாயத்தை விட பெரும் பஞ்சாயத்து போல!..

Tamil cinema old Actors : மக்களிடம் செய்திகளை சொல்வதில் பத்திரிகைகள் என்பவை பெரும் பங்கு வகிக்கின்றன. பிரபலங்கள் அரசியல்வாதிகள் பற்றிய செய்திகளை மக்களுக்கு சொல்லும் ஒரு பாலமாக பத்திரிகைகள் இருக்கின்றன.

இவற்றில் சினிமா தொடர்பான பத்திரிகையாளர்கள் தமிழ் சினிமாவில் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டம் முதலே இருந்து வருகின்றனர் இவர்கள்  சினிமா தொடர்பான ஆட்களுடன் பழக்கத்தில் இருப்பதால் தொடர்ந்து சினிமா தொடர்பான பல அப்டேட்களை வழங்கி வருவதை பார்க்க முடியும்.

இப்படி தியாகராஜ பாகவதர் காலகட்டத்தில் பிரபலமாக இருந்தவர்தான் லட்சுமி கந்தன் என்னும் பத்திரிக்கையாளர். இந்த பத்திரிகையாளர் தொடர்ந்து சினிமா குறித்த விஷயங்களை அப்போது எழுதி வந்தார். அதில் முக்கியமாக பிரபலங்கள் குறித்த அந்தரங்க விஷயங்களை எழுதுவதில் இவர் முக்கியமான பத்திரிக்கையாளராக இருந்தார்.

ஆனால் பத்திரிகையில் எழுதும் பொழுது பெரும் பெரும் பிரபலங்களை எல்லாம் சுட்டிக்காட்டி அவர் எழுதிய கட்டுரைகள் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தின. முக்கியமாக எம் கே பாகவதர் மற்றும் என் எஸ் கிருஷ்ணன் பற்றியெல்லாம் நிறைய கட்டுரைகளை எழுதி இருக்கிறார் பத்திரிகையாளர் லட்சுமி கந்தன்.

அவர் எழுதிய கட்டுரை அவர்கள் இருவருக்கும் இடையே சண்டையை ஏற்படுத்தியது. அதனால் அவர்கள் இருவரும் பிரிந்தனர் இந்த நிலையில் ஒருநாள் லட்சுமி கந்தன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார் அந்த கொலைக்கு யார் காரணம் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

இருந்தாலும் எம்.கே பாகவதர் மற்றும் என்.எஸ் கிருஷ்ணனுக்கு அதற்காக அப்பொழுது சிறை தண்டனைகள் வரை வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ் சினிமாவிலேயே பத்திரிகையாளர் குறித்து இவ்வளவு சர்ச்சைகள் எழுந்தது என் எஸ் கிருஷ்ணன் மற்றும் எம் கே பாகவதர்க்கு தான் 

அந்த ஒரு பாட்டு முன்னாடி திருக்குறளே நிக்க முடியாது!.. என்.எஸ்.கேவே பார்த்து வியந்துபோன பாடல்!..

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டங்களில் நாடகங்களை பின்பற்றியே சினிமாவும் எடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட நாடகங்களை அப்படியே படம் பிடித்து அவற்றை திரைப்படமாக வெளியிட்டு வந்தார்கள் என்று கூறலாம். அப்பொழுது நாடகங்களில் பெரும்பாலும் கருத்து பாடல்கள்தான் பாடல்களாக இருக்கும்.

மக்களுக்கு நல்ல நல்ல செய்திகளை கூறக்கூடிய பாடல்களைதான் அதில் பாடுவார்கள். எனவே அதையும் சினிமாவிற்கு அப்படியே கடத்தினார்கள் சினிமாவில் அனைத்து படங்களிலும் அப்போது அதிகமாக கருத்து பாடல்களை நாம் பார்க்க முடியும்.

அதுவும் கலைவாணன் என் எஸ் கிருஷ்ணன் காலகட்டங்களில் சினிமாவின் துவக்க காலம் என்று கூறலாம். எனவே அப்போது இன்னுமுமே அதிகமாக இந்த கருத்து பாடல்கள் இருந்தன. அப்போது ஒரு கருத்து பாடலை கேட்ட என் எஸ் கிருஷ்ணன் இந்த பாடல் 1330 திருக்குறளை விட சிறந்தது என்று கூறினார்.

வாலி கண்ணதாசன் போன்ற கவிஞர்களுக்கு எல்லாம் முன்னோடியாக இருந்த தஞ்சாவூர் ராமையாதாஸ் என்பவர் எழுதிய பாடல்தான் அது ஒரு சான் வயிறு இல்லாட்டா இந்த உலகில் என்ன கலாட்டா, என்கிற அந்த பாடலில் சமகாலத்தில் இருந்த பட்டினி சாவு குறித்து சிறப்பாக எழுதி இருந்தாராம் ராமையா தாஸ் எனவே அதை அவ்வாறு புகழ்ந்திருந்தார் என் எஸ் கிருஷ்ணன்.