Tag Archives: ராதா ரவி

கமலை விட அதிக சம்பளம் வாங்குறவன் எல்லாம் கமல் ஆகிட முடியாது.. ராதா ரவி ஓப்பன் டாக்.!

சிவாஜி கணேசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிப்புக்காக போற்றப்படும் ஒரு நடிகராக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். சினிமாவில் சிறு வயதில் இருந்தே நடித்து வரும் கமல்ஹாசன் செய்த சாதனைகள் எக்கச்சக்கம்.

சினிமாவில் உள்ள அனைத்து துறைகளை குறித்தும் முழுதாக அறிந்தவர் கமல்ஹாசன். இப்போதும் தமிழ் சினிமாவில் அடுத்த தலைமுறை நடிகர்களாக இருக்கும் மணிகண்டன், லோகேஷ் கனகராஜ் மாதிரியான பிரபலங்களுக்கு பிடித்த நடிகராக கமல்ஹாசன் தான் இருந்து வருகிறார்.

அதே போல தமிழ் சினிமாவில் நிறைய புது முயற்சிகளை செய்து வருகிறார் கமல்ஹாசன். தற்சமயம் கூட ஏ.ஐ தொழில்நுட்பம் குறித்து கற்றுக்கொள்வதற்காக வெளிநாட்டிற்கு சென்றிருந்தார் கமல்ஹாசன். அந்த அளவிற்கு அடுத்தடுத்து வரும் தொழில்நுட்பத்தை அவர் கற்றுக்கொண்டே இருக்கிறார்.

kamalhaasan

இந்த நிலையில் இதுக்குறித்து நடிகர் ராதா ரவி ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார். அதில் அவர் கூறும்போது கமல்ஹாசனை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பலர் தமிழ் சினிமாவில் இப்போது இருக்கலாம். ஆனால் அவர்கள் எல்லாம் கமல்ஹாசன் அளவிற்கு சினிமாவை அறிந்தவர்களா என்பது சந்தேகம்தான்.

அவருக்கு சினிமாவில் உள்ள எல்லா துறைகளை குறித்தும் தெரியும். இப்போதுவரை சினிமாவை கற்றுக்கொண்டே இருப்பவர் கமல்ஹாசன் என கூறியுள்ளார் ராதா ரவி.

அந்த விஷயம் எல்லாம் அப்பா பண்ணி படத்துலதான் பாத்துருக்கேன்.. தந்தை குறித்து பேசிய ராதா ரவி.!

நடிகர் ராதா ரவி தமிழ் சினிமாவில் உள்ள வில்லன் நடிகர்களில் மிக முக்கியமானவர். சரத்குமார், விஜயகாந்த், ரஜினிகாந்த், கமல்ஹாசன், கார்த்தி என பல நடிகர்களும் தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்ட காலக்கட்டம் ஒன்று இருந்தது.

அந்த காலக்கட்டத்தில் இந்த அனைத்து நடிகர்களுக்கும் வில்லன் நடிகராக நடித்தவர் நடிகர் ராதா ரவி. எம்.ஆர் ராதாவின் மகனான ராதாரவி அவரை விடவும் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வந்தார். இப்போதும் கூட திரைப்படங்களில் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் இவர் நடித்துக்கொண்டுதான் இருந்து வருகிறார்.

விஜய் நடித்த சர்கார் திரைப்படத்தில் கூட இவரது நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. இந்த நிலையில் தனது தந்தை குறித்து ராதா ரவி ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அதில் அவரிடம் உங்கள் தந்தை உங்களை கொஞ்சியது உண்டா என கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த ராதா ரவி இல்லை எனது தந்தை என்னை கொஞ்சியதே இல்லை. எப்போதும் அவர் எங்களிடம் இடைவெளியுடன் தான் இருப்பார். அவர் கொஞ்சியதை எல்லாம் நான் திரைப்படங்களில்தான் பார்த்துள்ளேன். ஆனால் வீட்டில் உள்ள பெண் பிள்ளைகளிடம் மிகுந்த பாசமாக இருப்பார்.

எனது தங்கையிடம் நல்ல பாசமாக இருப்பார். வீட்டில் கடைக்குட்டி என்பதால் நாந்தான் மிகவும் செல்லமான ஆளாக இருந்தேன். ஆனால் எனது தங்கை பிறந்த பிறகு எனக்கு இருந்த மார்க்கெட் என்பது குறைந்துவிட்டது என கூறியுள்ளார் ராதா ரவி.

தமிழனை விட அறிவாளி ஒருத்தன் இருக்கானா அது அவந்தான்.. ராதா ரவி புகழ்ந்து பேசிய நபர்.. யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருந்தவர் நடிகர் எம்.ஆர் ராதா அவரின் மகனான ராதா ரவிக்கும் அவருக்கு கிடைத்த அந்தஸ்து சினிமாவில் கிடைத்தது.

ராதாரவியும் தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அப்போதைய சமயங்களில் தமிழ் சினிமாவில் பெரிய பிரபலங்களாக இருந்த பல நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார் ராதாரவி.

அதே போல அரசியலிலும் அதிக ஈடுபாடு கொண்டவராக ராதாரவி இருந்தார். தொடர்ந்து நிறைய அரசியல் சார்ந்த விஷயங்களை அவர் பேட்டிகளில் பேசுவதை பார்க்க முடியும்.

radha ravi

ராதா ரவி கொடுத்த பதில்:

இப்படியாக சமீபத்தில் அவர் பேசிய விஷயம் ஒன்று அதிக வைரலாகி வருகிறது. ஒரு பேட்டியில் அவர் பேசும்பொழுது உலகிலேயே அதிக அறிவுள்ள ஒரு மக்கள் என்றால் அது இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் தான்.

இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் எந்த ஒரு தேசத்துக்கு போனாலும் அதை தங்கள் சொந்த தேசம் போல் பார்ப்பவர்கள். பல நாடுகளுக்கு அவர்கள் சென்று இருக்கின்றனர். இலங்கை தமிழர்கள் இல்லாத நாடுகளே உலகத்தில் கிடையாது.

ஆனால் எங்கு சென்றாலும் அங்கு அந்த நாட்டையே மாற்றும் அளவிற்கு சக்தி படைத்தவர்களாக அவர்கள் இருப்பார்கள். அவர்கள் கைகளில் இருக்கும் 10 விரல்கள் தான் அவர்களுக்கு ஆயுதம் என்று கூறியிருந்தால் ராதாரவி.

ரஜினி சாரை அப்படி கூப்பிடாதீங்க ப்ளீஸ்!.. ராதா ரவியிடம் உபதேசம் பண்ணி சிக்கிய உதவி இயக்குனர்!.

ராதா ரவி பல காலங்களாகவே தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக இருந்து வருகிறார். ரஜினிகாந்தோடு பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இந்த நிலையில் முத்து படத்தில் நடித்தப்போது அவருக்கு நடந்த நிகழ்வை ஒரு பேட்டியில் கூறியுள்ள்ளார்.

அதில் கூறும்போது, ”முத்து திரைப்படம் படமாக்கப்பட்டப்போது முதல் காட்சியாக என்னுடைய காட்சிகள்தான் படமாக்கப்பட்டது. அப்போது படப்பிடிப்பில் எனக்கு ஜமீன் மாதிரி மேக்கப் எல்லாம் போட்டு அழைத்து வந்ததும் எனக்கே அது பார்ப்பதற்கு பிரமிப்பாக இருந்தது.

இதைதான் நான் எதிர்பார்த்தேன் என்பதாக எனக்கு இருந்தது. ஆனால் அங்கு எனக்கென்று ஒரு உதவி இயக்குனர் வந்து சேர்ந்தான்” என்கிறார் ராதா ரவி. படப்பிடிப்பில் முத்து கதாபாத்திரத்தை ராதா ரவி டேய் முத்து என்றுதான் அழைப்பார். ஏனெனில் கதைப்படி முத்துவை விட வயதான திமிரான ஜமீனாக ராதா ரவி இருந்தார்.

இந்த நிலையில் அங்கு வந்த உதவி இயக்குனர் ராதா ரவியிடம் வந்து சார் ரஜினி சாரை டேய் என்றெல்லாம் அழைக்காதீர்கள் சார் என கூறியுள்ளார். அப்படியென்றால் அவரை சார் என அழைக்கவா என ராதா ரவி கேட்க அப்படியில்லை. அவரை வா போ என்று மட்டும் அழையுங்கள் என கூறியுள்ளார் உதவி இயக்குனர்.

உடனே ரஜினிகாந்திடம் சென்று சார் உங்களை போடா வாடான்னு அழைப்பதில் உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா என ராதா ரவி கேட்டுள்ளார். அதெல்லாம் ஒன்னும் இல்லை சார், யார் உங்கக்கிட்ட அப்படி சொன்னது என கேட்டு சத்தம் போட்டுள்ளார் ரஜினிகாந்த். இந்த நிகழ்வை பேட்டியில் பகிர்ந்துள்ளார் ராதா ரவி.

எங்கப்பா பல பெண்களை வச்சிருந்தப்பையும் கூட அதை சரியா செஞ்சுடுவார்!.. ஒப்பன் டாக் கொடுத்த ராதா ரவி!.

ரஜினி, கமல் மாதிரியான முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் நடிகர் ராதாரவி. ஒரு காலத்தில் வில்லனாக நடித்த நடிகர்கள் பலரும் தற்சமயம் காமெடியாக நடித்து வருகின்றனர். ஆனால் வில்லனாக நடித்த சமயத்திலேயே படங்களில் காமெடி செய்து வரும் நபராக ராதா ரவி இருந்துள்ளார்.

எம்.ஆர் ராதாவின் மகன் என்பதால் எளிதாகவே இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. ராதாரவி பேட்டிகளில் பேசும்போது பல விஷயங்களை மிகவும் வெளிப்படையாக பேசிவிடுவார். அப்படியாக தனது தந்தை குறித்தும் அவர் பேசியிருந்தார்.

mr-radha

அதில் அவர் பேசும்போது என் வீட்டை பொறுத்தவரை அதை மொத்தமாக கட்டி காத்தவர் என்னுடைய தாய்தான். என் தாய் இல்லையென்றால் எம்.ஆர் ராதாவிற்கு நல்ல பெயரே கிடையாது. எம்.ஆர் ராதா அப்போது நிறைய பெண்களுடன் தொடர்பில் இருந்தார்.

ஆனால் அவரை பொறுத்தவரை தொடர்பில் இருக்கும் யாரையும் கைவிட மாட்டார். அவர்களுக்கு வீடெல்லாம் வாங்கி கொடுத்து செட்டில் செய்து விடுவார். அவர்களது பிள்ளைகளும் எங்களோடுதான் வளர்ந்தனர். ராதிகா, நீரோசா எல்லாம் எங்கள் வீட்டில் சிறு வயதில் தங்கியிருந்தனர் என கூறுகிறார் ராதா ரவி.

அவ்வளவு திமிரா போச்சா!.. என்.எஸ் கிருஷ்ணனை சுடுவதற்கு துப்பாக்கி வாங்கிய எம்.ஆர் ராதா!.. என்.எஸ் கிருஷ்ணன் பண்ணுனதுதான் சம்பவம்!.

தமிழில் பிரபலமான வில்லன் நடிகர்களில் முக்கியமானவர் எம்.ஆர் ராதா. திரைப்படங்களில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் கூட பலரும் அவரை வில்லனாகதான் பார்த்து வந்தனர். நாடகங்களில் இருந்து சினிமாவிற்கு வந்த பல திரைக்கலைஞர்களில் எம்.ஆர் ராதாவும் முக்கியமானவர்.

எம்.ஜி.ஆரை திரைத்துறையில் பெயர் சொல்லி அழைக்கும் ஒரு சில பிரபலங்களில் எம்.ஆர் ராதாவும் ஒருவர். ஆனால் அவருக்கு மூத்த கலைஞர்களை மரியாதையுடன் தான் நடத்துவார் எம்.ஆர் ராதா. அப்படிப்பட்ட எம்.ஆர் ராதா என்.எஸ் கிருஷ்ணனை கொலை செய்ய துப்பாக்கி வாங்கிய சம்பவமும் நடந்தது.

என்.எஸ் கிருஷ்ணன் அப்போது தமிழ் சினிமாவில் மிக பிரபலமாக இருந்து வந்தார். அந்த காலக்கட்டத்தில் எம்.ஆர் ராதா சினிமாவிற்கு வரவில்லை. மாறாக நாடகங்களில் விழிப்புணர்வு நாடகங்களாக எடுத்து வந்தார். இந்த நிலையில் அவரை ஒரு நாள் சந்தித்த என்.எஸ் கிருஷ்ணன் நான் சினிமாவில் இருக்கும் வரை நீ சினிமாவிற்கு வராதே என கூறினார்.

mr-radha-3

ஏன் என கேட்கும்போது இருவருமே பகுத்தறிவு கருத்துக்களைதான் பேசுகிறோம். அதனால் ஒருவருக்கு போட்டியாக இன்னொருவர் இருந்திட கூடாது என்றார் என்.எஸ் கிருஷ்ணன். அதனால் எம்.ஆர் ராதாவும் சினிமா பக்கம் வராமல் இருந்தார்.

ஆனால் இந்த நிலையில் எம்.ஆர் ராதாவின் நாடகம் ஒன்றை அவரிடம் கேட்காமல் படமாக்கினார் என்.எஸ் கிருஷ்ணன். இதனால் கடுப்பான எம்.ஆர் ராதா என்.எஸ் கிருஷ்ணனை சுடுவதற்கு ஒரு துப்பாக்கி வாங்கி வைத்திருப்பதாக பலரிடமும் கூறியிருக்கிறார்.

இதை கேள்விப்பட்டதும் நேராக எம்.ஆர் ராதாவை சந்தித்த என்.எஸ் கிருஷ்ணன் ஏதோ என்னை சுட துப்பாக்கி வாங்கி வச்சிருக்கியாம் எங்க சுடு என நின்றுள்ளார். பிறகு அவரை சமாதானப்படுத்தியுள்ளார் எம்.ஆர் ராதா. இந்த நிகழ்வை நடிகர் ராதா ரவி ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

ராதா ரவியை அப்படி பேசியிருக்க கூடாது!.. சின்மயி பகிரங்கமா அவங்க மன்னிப்பு கேட்கணும்!.. கடுப்பான டப்பிங் யூனியன்!.

Chinmayi: கோலிவுட்டில் பாடகியாக வாய்ப்பு பெற்று வந்தவர் சின்மயி. சின்மயிக்கு சிறப்பான குரல் வளம் உண்டு. தமிழில் அவர் பாடும் பெரும்பாலான பாடல்கள் நல்ல வெற்றியை கொடுக்க கூடியதாகதான் இருந்து வந்துள்ளன.

96 படத்தில் வரும் காதலே காதலே தனிபெருஞ்சுமையே, ஆதவன் படத்தில் வரும் வாராயோ வாராயோ காதல் கொள்ள ஆகியவை இவர் பாடிய பாடல்களே. இடையில் திரைத்துறையில் மீ2 விவகாரம் வெடித்தப்போது அது தொடர்பாக கவிஞர் வைரமுத்து மீது கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்தார் சின்மயி.

இருந்தாலும் கூட அந்த பிரச்சனை திரைத்துறையினரால் பெரிதாக கண்டுக்கொள்ளப்படவில்லை என்றே கூறவேண்டும். பாடகி என்பதையும் தாண்டி சில படங்களில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் இருந்திருக்கிறார் சின்மயி. இந்த நிலையில் சில வருடங்களுக்கு பிறகு இவரை டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சங்கத்தில் இருந்து நீக்கினர்.

சின்மயி பேசியது தவறு:

இந்த சங்கத்தில் உறுப்பினராக இருந்தால் மட்டுமே திரைப்படங்களுக்கு டப்பிங் செய்ய முடியும். இதனை தொடர்ந்து சின்மயி வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் திடீரென தன்னை சங்கத்தில் இருந்து நீக்கிவிட்டதாக டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சங்க தலைவரான ராதா ரவி மீது குற்றம் சாட்டினார். மேலும் அங்கு பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றும் கூறினார்.

இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சங்க உறுப்பினர்கள் கூறும்போது சங்கத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும் என்றால் வருடா வருடம் சந்தா கட்ட வேண்டும். ஆனால் இரண்டு வருடங்கள் ஆன பிறகும் கூட சின்மயி எந்த ஒரு சந்தாவும் கட்டாத நிலையில்தான் நாங்கள் அவரை நீக்கினோம்.

அவர் கூறியது எல்லாமே பொய்.. இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். திரும்ப டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சங்கத்திற்கு வந்தாலும் அவர் ராதாரவியை பற்றி பேசியது இல்லாமல் போய்விடுமா. என கேள்வி கேட்டு வருகின்றனர்.

விஜயகாந்த் அரசியலுக்கு வந்திருக்கவே கூடாது!.. என்ன பார்க்கவும் விட மாட்டிங்கிறாங்க!.. கண் கலங்கிய ராதா ரவி!..

Actor Vijayakanth: தமிழில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருந்து வந்த விஜயகாந்த் கடந்த சில காலங்களாக உடல் நிலை பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகிறார். அதிமாக அவர் மது அருந்தியதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் ஏற்கனவே சிகிச்சை பெற்ற விஜயகாந்தின் புகைப்படம் வெளியாகி அது மிகவும் விமர்சனத்துக்குள்ளானது.

அதனை தொடர்ந்து தற்சமயம் விஜயகாந்தின் முகத்தையே அவரது குடும்பம் எங்கும் காட்டுவதில்லை. சமீபத்தில் சளி காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டு சுவாசிக்கவே கஷ்டப்பட்டார் கேப்டன். இந்த நிலையில் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் விஜயகாந்த்.

vijayakanth-4

அங்கு சிகிச்சை பெற்ற அவருக்கு நுரையீரல் தொடர்பான சிகிச்சை வழங்கப்பட்டது. இந்த நிலையில் கேப்டன் உடல்நிலை தேறி வருவதாக கூறப்பட்டது. மருத்துவமனையில் இருந்து கேப்டன் வீட்டிற்கு வந்ததுமே அவசர அவசரமாக பொதுக்கூட்டம் நடத்தி கட்சியின் தலைமை பணியை அவரது மனைவி பிரேமலதா பெற்றுக்கொண்டார்.

அந்த பொதுக்கூட்டத்தில் உடல் முடியாமல் இருக்கும் கேப்டனை பார்த்து அனைவரும் கண்ணீர் வடித்து வருகின்றனர். உடல் முடியாத நபரை எதற்கு இப்படி வதைக்கிறீர்கள் என கேள்வி கேட்டு வருகின்றனர். நடிகர் ராதாரவி விஜயகாந்தின் வெகு நாள் நண்பராவார்.

விஜயகாந்தை பார்க்க அவரை கூட அனுமதிப்பதில்லை என கூறி அவரும் மிகவும் மனம் வருந்துகிறார். இவ்வளவு பேருக்கு நல்லது செய்த மனிதனுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்க கூடாது. நேர்மையா இருக்குறவன் அரசியலுக்கு வர கூடாது. அதற்கு விஜயகாந்தே உதாரணம் என அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

வில்லன் காலில் விழுந்த ரஜினி, சூப்பர் ஸ்டாருக்கே இந்த நிலையா…அப்படி என்ன தப்பு பண்ணிட்டாரு?…

Rajini and Raatharavi: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தமிழ் மட்டுமல்ல இந்திய சினிமாவிலே மிகவும் முக்கியமான நடிகர். தமிழகத்தில் இவருக்கென்று ரசிகர்கள் ஏராளம் ஆறிலிருந்து அறுபது வரையிலும் இவரை பிடிக்காதவர் யாரும் இருக்க முடியாது.

இவர் நடிக்க ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இருந்த எதிர்பார்ப்பு அப்படியே இருக்கிறது. எந்த படம் எடுத்தாலும் தனக்கென தனி திறமை, ஸ்டைல், நடிப்பு என்று தன்னை மற்றவர்களுடன் வேறுபடுத்தி காட்டிக்கொள்வார் அது தான் இவருடைய தனிச்சிறப்பு.

அப்படி ஒரு மிகப்பெரிய நடிகர் வில்லன் காலில் விழுந்திருக்கிறார் என்றால் என்ன காரணமாக இருக்கும்.

ஆம் ரஜினி நடிகராக ஜொலித்த காலத்தில் வில்லனாக வலம் வந்தவர் ராதாரவி. ரஜினியுடன் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.

அவர் ஒரு முறை நிருபர்கள் சந்திப்பில்தான் யாரும் அறியாத இந்த உண்மையை கூறியிருக்கிறார். அதாவது ஒரு நாள் ரஜினியிடம் இருந்து போன் வந்தது நேரில் வாருங்கள் பேசலாம் என்றார் உடனே ராதாரவியும் ரஜினி இல்லத்திற்கு சென்றிருக்கிறார்.

காலை 8 மணி ராதாரவியை பார்த்தது ரஜினி காலில் விழுந்துள்ளார் பதிலுக்கு ராதாரவியும் ரஜினி காலில் விழுந்துள்ளார். இருவரும் இப்படித்தான் பாசத்தை பறிமாறிக் கொள்வார்களாம்.

உடனே இருவரும் மது அருந்த ஆரம்பித்துவிட்டு அடுத்த படம் பற்றிய பேச்சுவார்த்தையை முடித்துவிட்டோம் என்று பேட்டி ஒன்றில் ராதாரவி தெறிவித்துள்ளார்.

மேலும் ராதரவி ரஜினிக்கு மிகவும் பிடித்தமான நண்பரும் கூட.ஆரம்ப கட்டத்திலிருந்து பல படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றியிருப்பதால் சொந்த விஷங்களை பறிமாறிக்கொள்ளும் அளவிற்கு நெருக்கமானவர்கள்.

காலைல எட்டு மணிக்கேவா!.. ராதாரவிக்கு ஷாக் கொடுத்து ரஜினி செய்த காரியம்!..

ராதா ரவி தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி வளர்ந்து வந்த அதே காலகட்டத்தில்தான் நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடித்து வந்தார். இந்த நிலையில் இருவரும் ஒரே காலகட்டத்தில் வளர்ந்து வந்ததால் அதிகமாக ரஜினி திரைப்படத்தில் ராதாரவி வில்லனாக நடித்து வந்தார்.

இதனால் ரஜினிக்கும் ராதாரவிக்கும் இடையே நல்ல நட்பு உருவானது எப்போது வேண்டுமானாலும் ராதா ரவி ரஜினிகாந்தை நேரில் சந்திப்பாராம் ரஜினியும் அப்படியேதான் எப்போது வேண்டுமானாலும் ராதாரவியை சந்திப்பார்.

இந்த நிலையில் ஒருநாள் வெளியூருக்கு செல்ல இருந்த ராதாரவி ரஜினியை நேரில் சந்தித்து விட்டு செல்லலாம் என்று ரஜினி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ரஜினி அவரை கூப்பிட்டு பேசிக்கொண்டே காலையிலேயே மது பாட்டிலை எடுத்து திறந்து உள்ளார்.

பிறகு ராதாரவியை பார்த்து நீங்கள் எத்தனை மணிக்கு மது அருந்துவீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த ராதாரவி காலையில் எழுந்தவுடன் வேலை ஏதும் இல்லை என்றால் மது அருந்துவேன். வேலை இருந்தால் குடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

உடனே ரஜினி இப்போது ஏதும் வேலை இருக்கிறதா என்று கேட்டிருக்கிறார் அதற்கு ராதாரவி ரஜினியுடன் குடிக்க வேண்டும் என்பதற்காக இல்லை என்று கூறியிருக்கிறார். சரி என்று பாட்டிலை திறந்து காலை 8 மணிக்கு இருவரும் குடிக்க துவங்கியுள்ளனர்.

2 மணி நேரம் ஐஸ்ல நின்னாரு!.. ராதா ரவியை பாடாய் படுத்திய மிஸ்கின்!.

தமிழில் தனித்துவமான திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் மிஸ்கின். அவர் இயக்கும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு உண்டு.

தமிழில் சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் மிஸ்கின். அந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் கூட அதற்கு அடுத்து வந்த அஞ்சாதே யுத்தம் செய் போன்ற திரைப்படங்கள் மிஸ்கினுக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தன.

அதனை தொடர்ந்து மிஸ்கின் இயக்கிய திரைப்படம் பிசாசு. பொதுவாக பேய் படம் என்றாலே அந்த பேய்கள் பழி வாங்க வருவதாகவே கதை இருக்கும். ஆனால் பிசாசு திரைப்படத்தில் ஹீரோவை காப்பாற்றுவதற்காக அந்த பேய் வரும்.

அதில் தந்தை கதாபாத்திரத்தில் நடித்த ராதாரவி மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதுக்குறித்து மிஸ்கின் தனது பேட்டியில் கூறும்போது ஆரம்பத்தில் ராதாரவிக்கு வசனமே கொடுக்கவில்லை. இதனால் அவர் விரக்தியில் இருந்தார். அதே போல படப்பிடிப்பு நடந்த சமயத்தில் ராதா ரவியை ஒரு காட்சியை எடுப்பதற்காக 2 மணி நேரம் ஐஸ்ஸில் அமர வைத்திருந்தேன் என கூறினார் மிஸ்கின்.

இந்தியாவோட பிரதமர் யாருன்னு அப்பவே சொன்னவர் சரத்குமார்!.. என்னப்பா சொல்றீங்க!..

தமிழ் நடிகர்களில் ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்தவர் நடிகர் சரத்குமார். சூர்ய வம்சம், சிம்ம ராசி, நாட்டாமை போன்ற திரைப்படங்கள் வந்த காலத்தில் சரத்குமாருக்கு அதிக வரவேற்பு இருந்து வந்தது.

சரத்குமார் குறித்து ராதா ரவி ஒரு பேட்டியில் கூறும்போது தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களிலேயே மிகவும் புத்திசாலி சரத்குமார்தான். அவர் கட்சி ஆரம்பித்தது மட்டும்தான் அவர் வாழ்க்கையிலேயே தவறான செயல்.

அமெரிக்காவில் ஒபாமா ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அவர் என்னிடம் கூறினார் ஒபாமாதான் அமெரிக்காவின் அடுத்த அதிபர் என்று, அதே போல மோடி குஜராத்திற்கு முதலமைச்சர் ஆனப்போதே அவர் இந்தியாவின் பிரதமர் ஆவார் என சரத்குமார் கூறினார் என சரத்குமார் குறித்து ராதா ரவி கூறியுள்ளார்.