Tag Archives: எஸ்.எஸ் வாசன்

உனக்காக ஒண்ணும் பாட்டு பாட வரலை நான்!.. பாட்டு பாடாமல் சென்ற என்.எஸ் கிருஷ்ணன்!.. தயாரிப்பாளர் செஞ்சதுதான் சம்பவம்!.

எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசனுக்கு முன்பு தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகர்களில் முக்கியமானவர் என்.எஸ் கிருஷ்ணன். திரைப்படங்களில் நடிக்கும் அதே நேரத்தில் சினிமாவில் பாடல்களும் பாடி வந்தார் என்.எஸ் கிருஷ்ணன்.

இந்த நிலையில் 1948 ஆம் ஆண்டு எஸ்.எஸ் வாசன் இயக்கி தயாரித்த திரைப்படம் சந்திரலேகா. இந்த படத்தில் ஒரு பாடலை பாடுவதற்காக என்.எஸ் கிருஷ்ணனை அவர் அழைத்திருந்தார். ஏனெனில் அப்போதைய காலக்கட்டங்களில் என்.எஸ் கிருஷ்ணன் பாடும் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

எனவே பாடுவதற்கு வந்த என்.எஸ் கிருஷ்ணன் முதலில் அந்த பாடலை பாடினார். அதை கேட்ட எஸ்.எஸ் வாசனுக்கு அது அவ்வளவு திருப்தியாக இருப்பதாக தெரியவில்லை. எனவே மீண்டும் அந்த பாடலை பாடுமாறு அவர் என்.எஸ் கிருஷ்ணனை கேட்டுக்கொண்டார்.

என்.எஸ் கிருஷ்ணனும் மீண்டும் பாடினார். ஆனால் அப்போதும் எஸ்.எஸ் வாசனுக்கு அந்த பாடல் பிடிக்கவில்லை. இதனால் கடுப்பான என்.எஸ் கிருஷ்ணன் நான் உனக்கு ஒன்னும் பாட்டு பாடலை. மக்களுக்குதான் பாட்டு பாடுறேன் என கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

இதனை பார்த்து அங்கிருந்த படக்குழுவே ஆடிப்போய்விட்டது. ஏனெனில் எஸ்.எஸ் வாசனை யாரும் முகத்துக்கு நேரே கடுமையாக பேசிவிட முடியாது. அந்த அளவிற்கு அவருக்கு சினிமாவில் செல்வாக்கு உண்டு. அவ்வளவு செல்வாக்கு இருந்தும் அந்த பாடலை மீண்டும் கேட்ட எஸ்.எஸ் வாசன் என்.எஸ் கிருஷ்ணனுக்கு போன் செய்தார்.

நீங்கள் சொன்னது சரிதான் இந்த பாடல் ரசிகர்களுக்கு பிடித்த பாடலாக இருக்கும் என கூறியிருக்கிறார்.

நான் யாருன்னே தெரியாமல் எதுக்கு அதை செய்யுறீங்க… சிவாஜி படத்தின்போது அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர்!. இதுதான் விஷயமா?

Sivaji Ganesan: தமிழில் சிவாஜி கணேசனை வைத்து படம் எடுப்பதற்கு என்றே சில இயக்குனர்கள் உண்டு. இவர்கள் எல்லாம் அதிகப்பட்சம் எப்போதும் சிவாஜி கணேசனை வைத்துதான் திரைப்படம் இயக்குவார்கள். அப்படி சிவாஜி கணேசனை வைத்து நிறைய வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனரும் தயாரிப்பாளருமான கே.எஸ் கோபாலகிருஷ்ணன்.

அதே போல இவர் நடிகர் ஜெமினி கணேசனுக்கும் கூட நிறைய வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். அதில் கற்பகம், குறத்தி மகன் போன்ற திரைப்படங்கள் முக்கியமானவை. ஆனால் கே.எஸ் கோபாலகிருஷ்ணன் எம்.ஜி.ஆரை வைத்து மட்டும் பெரிதாக திரைப்படங்களே இயக்கவில்லை. பொதுவாக எம்.ஜி.ஆர் திரைக்கதையில் மாற்றம் செய்யக்கூடியவர் என்பதால் அவர் நிராகரித்திருக்கலாம்.

sivaji-ganesan

சிவாஜி கணேசன் நடிப்பில் கே.எஸ் கோபாலக்கிருஷ்ணன் இயக்கி, தயாரித்து வெளியான திரைப்படம் பேசும் தெய்வம். இந்த திரைப்படத்தில் பல பிரபலங்களுக்கு கே.எஸ் கோபாலகிருஷ்ணன் வாய்ப்பளித்திருந்தார். இதனால் படப்பிடிப்பிற்கு அதிக செல்வானது. இந்த செலவுகள் அதிகமாகவே அவர் யாரிடமாவது கடன் வாங்கலாம் என முடிவு செய்தார்.

அப்போது இந்த விஷயத்தை அறிந்த தயாரிப்பாளர் எஸ்.எஸ் வாசன் அவருக்கு உதவுவதற்கு முன் வந்தார். ஆனால் அதற்கு முன்பு வரை கே.எஸ் கோபாலக்கிருஷ்ணன் எஸ்.எஸ் வாசனை நேரில் சந்தித்ததே கிடையாது. யார் என்றே தெரியாத நபர் ஒருவர் இப்படி கடன் கொடுக்க முன் வருகிறாரே என அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.

இந்த நிலையில் எஸ்.எஸ் வாசனை நேரில் சென்று சந்தித்தார் கே.எஸ் கோபாலகிருஷ்ணன். அவரை பார்த்ததும் அமர வைத்த எஸ்.எஸ் வாசன் உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என கேட்க 2 லட்சம் வேண்டும் என கூறியுள்ளார் கே.எஸ் கோபாலக்கிருஷ்ணன்.

அதை தயங்காமல் எடுத்து கொடுத்த எஸ்.எஸ் வாசன் எனக்கு உங்கள் திரைப்படங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது என்று மட்டும் கூறியுள்ளார். அதே போல பிறகு வெளியான பேசும் தெய்வம் திரைப்படம் அவருக்கு நல்ல வெற்றியை பெற்று கொடுத்தது.

நல்லப்படியாக நான் பாடல் வரிகள் எழுத இதுதான் காரணம்!.. வாலிக்கு சீக்ரெட்டை சொல்லி கொடுத்த எஸ்.எஸ் வாசன்!..

Poet Vaali : தமிழ் சினிமாவில் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் துவங்கி 2 கே கிட்ஸ் காலகட்டம் வரையிலும் சினிமாவில் பாடல் வரிகளை எழுதியவர் கவிஞர் வாலி மட்டும்தான்.

வாலி எழுதிய பாடல் வரிகளுக்கு எல்லா காலங்களிலுமே வரவேற்பு இருந்து வந்தது. பழைய காலகட்டங்களில் அப்போது இருந்த மக்களுக்கு பிடிக்கும் வகையில் பாடல் வரிகளை எழுதினார் வாலி. ஆனால் அதே வாலி கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளுக்கு பிடிக்கும் வகையில் திரும்பத் திரும்ப பாடல் வரிகளை எழுதி வந்தது பெரிய விஷயம் என்று கூறலாம்.

எப்படி இப்படி ஒரு சிறப்பான திறன் வாலி இருக்கிறது என கேட்கும் பொழுது அதற்கு ஒரு சிறப்பான பாதிலை வாலி கொடுத்து இருந்தார். ஆனந்த விகடன் பத்திரிகையின் சொந்தக்காரரான எஸ்.எஸ் வாசன் வாலியுடன் பேசும்பொழுது ஒரு விஷயத்தை கூறியிருக்கிறார்.

அப்போது எஸ்.எஸ். வாசனின் திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுத்து வந்தன. இது குறித்து வாலி ஒரு முறை எஸ் எஸ் வாசனிடம் கேட்ட பொழுது நான் ஒவ்வொரு திரைப்படத்தையும் எனது முதல் திரைப்படம் போலவே பணியாற்றுவேன்.

எப்போதும் நமது முதல் திரைப்படத்தில் முழு ஈடுபாட்டோடு நாம் வேலை பார்ப்போம். அப்படியாகதான் எனது ஒவ்வொரு திரைப்படத்தையும் இயக்குகிறேன். அதுதான் எனது படத்தின் வெற்றிக்கு காரணம் என்று கூறியிருக்கிறார்.

தன் பிறகு வாலியும் கூட தன்னுடைய ஒவ்வொரு திரைப்படத்தையும் தனது முதல் திரைப்படமாக நினைத்து பணியாற்ற துவங்கியிருக்கிறார். அப்போது வாலி மிகவும் பிரபலம் என்பதால் அவர் எப்படி பாடல் வரிகள் எழுதிக் கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்வார்கள். ஆனாலும் அவர்களுக்கு சிறப்பான பாடல் வரிகளை ஒவ்வொரு படத்திலும் எழுதி கொடுத்திருக்கிறார் வாலி. அதற்கு எஸ் எஸ் வாசன் சொன்ன இந்த சீக்ரெட்தான் காரணம் என்று கூறுகிறார் வாலி.

பொன்னியின் செல்வனுக்கு முன்பே பெரும் போராட்டத்தில் படமான நாவல்… ஆனால் நடிச்சது சிவாஜி கணேசன்!.. எந்த படம் தெரியுமா?.

தமிழ் சினிமாவில் நாவல்கள் படமாவது என்பது ஒன்றும் புதிய விஷயமல்ல. உலகம் முழுக்க பல நாவல்கள் படமாகியுள்ளன. ஆனால் பொன்னியின் செல்வன் நாவல் மட்டும் எம்.ஜி.ஆர் காலம் முதலே படமாக்க வேண்டும் என பலரும் நினைத்து கைவிட்டு இறுதியாக இயக்குனர் மணிரத்தினத்தால் படமாக்கப்பட்டது.

ஆனால் அதே போல ஒரு பழம் பெரும் திரைப்படத்தையும் சிரமப்பட்டு படமாக்கியுள்ளனர். தமிழ் சினிமாவில் படங்களை இயக்குதல், வசனம் எழுதுதல் என பல துறைகளில் இருந்து வந்தவர் கொத்தமங்கலம் சுப்பு (kothamangalam subbu). அவருக்கு அருமையாக கதை சொல்ல தெரியும்.

இந்த நிலையில் ஆனந்த விகடனின் உரிமையாளரும், பட தயாரிப்பாளருமான எஸ்.எஸ் வாசனுடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டது. இவர் கூறும் விஷயங்கள் எல்லாம் எஸ்.எஸ் வாசனுக்கு மிகவும் பிடிக்கும். அப்படி சுப்பு ஒருமுறை பேசிக்கொண்டிருக்கும்போது தஞ்சாவூரின் சிறப்புகளை பற்றி கூறிக்கொண்டிருந்தார்.

kothamangalam-subbu

அப்போது தஞ்சாவூரில் இறங்கியதுமே அங்கு நாதஸ்வரத்தின் சத்தமும், பூக்களின் மணமும் வீசும். கொஞ்ச தூரம் சென்றால் பழமையான சிற்பங்களையும் பரதநாட்டியம் ஆடும் பெண்களையும் பார்க்க முடியும் என விவரித்து கொண்டிருந்தார்.

இதை கேட்டதும் எஸ்.எஸ் வாசன், (SS Vasan) ஆனந்த விகடனுக்கு இப்படி தஞ்சாவூரை அடிப்படையாக கொண்டு தொடர்கதை ஒன்றை எழுதி கொடுங்களேன் என கூறினார். சுப்புவும் அதற்கு ஒப்புக்கொண்டு ஒரு சுவாரஸ்யமான கதையை எழுதினார். தில்லானா மோகனாம்பாள் என்னும் அந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இதனை படமாக்கலாம் என முடிவெடுத்தார் எஸ்.எஸ் வாசன். அதே சமயம் இயக்குனர் ஏ.பி நாகராஜனும் இந்த கதையின் மீது ஈடுபாடாக இருந்தார். எனவே எஸ்.எஸ் வாசன் அந்த கதையை ஏ.பி நாகராஜன் இயக்கத்தில் தயாரிக்க முடிவெடுத்தார்.

ஆனால் ஏ.பி நாகராஜன் (AP Nagarajan) அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அவரே அந்த படத்தை தயாரித்து இயக்க திட்டமிட்டார். ஏனெனில் அந்த படம் கண்டிப்பாக நிறைய வசூல் செய்யும் என அவர் நம்பினார். இதனாலேயே அந்த படம் 10 வருடங்களாக கிடப்பில் கிடந்தது. அதன் பிறகு விட்டுக்கொடுத்த எஸ்.எஸ் வாசன் அந்த படத்தின் கதையை வெறும் 10,000 ரூபாய்க்கு ஏ.பி நாகராஜனுக்கு கொடுத்தார். பிறகுதான் அது தில்லானா மோகனாம்பாள் என்ற பெயரிலேயே படமாக்கப்பட்டது.

அந்த 10,000 ரூபாயையும் அந்த கதையை எழுதிய எழுத்தாளர் கொத்தமங்கலம் சுப்புவிடம் கொடுத்தார் எஸ்.எஸ் வாசன்.