Tag Archives: ஆர்.பி செளத்ரி

என் மகனுக்கும் எனக்கும் எந்த சம்பந்தம் இல்லை… பொதுவெளியில் போட்டுடைத்த பிரபல தயாரிப்பாளர்…!

Jeeva and Ameer : ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் 90களில் புகழ் பெற்ற தயாரிப்பு நிறுவனம். அந்த கால கட்டத்தில் மிகப்பெரிய தயாரிப்பாளர் மேலும் அவர் தயாரித்து வெளியான பெரும்பாலான படங்கள் விருது பெற்ற படங்கள்.

தந்தை எவ்வளவு தான் பெரிய ஆளாக இருந்தாலும் அவருடைய மகன்கள் இருவர் (ஜீவா மற்றும் ஜித்தன் ரமேஷ்) திரையுலகில் சொல்லும் அளவிற்கு பெரிய அளவில் உருவாக முடியவில்லை.

நடிகர் ஜீவா ஆரம்பத்தில் சாக்லேட் பாயாக திரை உலகில் அறிமுகம் ஆனாலும் பல பரிமாண தோற்றத்தில் அவர் நடித்துவிட்டார் ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி நடிகராக வலம் வரமுடியவில்லை.

இவர்கள் இருவரையும் திரையுலகிற்கு கொண்டு வர ஆர்.பி.சௌத்ரி பெரும் பாடுபட்டார். ஜீவாவின் முதல் படம் “ஆசை ஆசையாய்” அதனை தொடர்ந்து “தித்திக்குதே” போன்ற குடும்பப்பாங்கான படங்கள் நடித்தாலும் எதிர்பார்த்த அளவிற்கு உயர முடியவில்லை.

மூன்றாவதாக ஜீவாவை தேடி வந்த ஒரு இயக்குனர் தான் அமீர். அமீரின் இயக்கத்தில் ஜீவாவின் மூன்றாவது படமான “ராம்” படம் உருவானது. இந்த படத்திற்கு பேச்சுவார்த்தைக்கு ஜீவாவை தேடி அவரது வீட்டிற்கு சென்றார் அப்போது இயக்குனர் அமீரை சந்தித்த ஆர்.பி. சௌத்ரி முதல் இரண்டு படங்களுக்கு பிறகு சரிவர யாரும் வெளியே செல்வதில்லை, அவனுக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதா? இல்லையா? என்றும் புரியவில்லை என்று கூறியிருக்கிறார்.

அதனை தொடர்ந்து ஜீவா “ராம்” படத்தில் நடித்து படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்க தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி “ராம்” படத்தை பார்க்க தியேட்டருக்குச் செல்கிறார்.

படம் இடைவேளை வரை சென்றதுமே ஆர்.பி.சௌத்ரியை அங்கிருந்தவர்கள் பாராட்டவும் செய்து, தூக்கிக் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். படம் முடிந்து வெளிவந்த பிறகு ஆர்.பி.சௌத்ரி இயக்குனர் அமீருக்கு போன் செய்து இந்த படத்தில் இருக்கும் ஜீவாவின் வெற்றிக்கும் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை ஆனால் ஏன் மக்கள் என்னை பாராட்டுகிறார்கள்? ஏன் என்னை கொண்டாடுகிறார்கள்? என்று புரியாமல் ஆனந்தத்தில் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

இதை கேட்ட அமீர் இனி ஜீவாவின் வெற்றிப்பயணம் தொடரும் என்று கூறியிருக்கிறார். ஜீவாவை போன்ற ஒரு சில நடிகர்களுக்கு ஆரம்ப காலத்தில் வெற்றிக்கணக்கை தொடங்கிய இயக்குனர் அமீர்.

இதை எழுதிட்டின்னா உனக்கு பட சான்ஸ் தரேன்! –கே.எஸ் ரவிக்குமார் முதல் பட வாய்ப்பை எப்படி பெற்றார் தெரியுமா?

தமிழில் பல ஹிட் படங்கள் கொடுத்த முக்கியமான இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார். கமல் ரஜினி என தமிழின் பெரும் இயக்குனர்கள் பலரையும் வைத்து ஹிட் கொடுத்துள்ளார் கே.எஸ் ரவிக்குமார்.

இப்போது இயக்குனர்களாக இருக்கும் பலரும் தங்கள் கடந்த காலங்களில் முதல் வாய்ப்பை பெறுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டிருப்பார்கள். கே.எஸ் ரவிக்குமாரும் அப்படிதான் பல படங்களில் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்தார்.

அந்த சமயத்தில் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் உரிமையாளரான ஆர்.பி செளத்ரியுடன் கே.எஸ் ரவிக்குமாருக்கு பழக்கமானது. கே.எஸ் ரவிக்குமாரின் திறமையை கண்ட ஆர்.பி செளத்திரி எதாவது ஒரு படத்தில் கே.எஸ் ரவிக்குமாருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என முடிவெடுத்தார். அதே சமயம் அந்த படம் குறைந்த பட்ஜெட்டிலும் இருக்க வேண்டும்.

அப்போது ஹிந்தியில் தண்ட் என்கிற ஒரு த்ரில்லர் திரைப்படம் வெளிவந்தது. அந்த படத்தை பார்க்குமாறு கே.எஸ் ரவிக்குமாரிடம் ஆர்.பி செளத்ரி கூறினார். கே.எஸ் ரவிக்குமாரும் அந்த படத்தை பார்த்தார். இந்த படம் எப்படி இருக்கு? என கேட்டார் ஆர்.பி செளத்ரி. படம் நல்லா இருக்கு. ஆனா கதை ஓட்டம் போர் அடிக்குது என கே.எஸ் ரவிக்குமார் கூறியுள்ளார்.

அப்படினா இதே கதைக்கு சுவாரஸ்யமான திரைக்கதை எழுதி கொண்டுவா என கூறியுள்ளார் ஆர்.பி செளத்ரி. அப்போதெல்லாம் உதவி இயக்குனர்களுக்கு இந்த மாதிரி வேலைகள் கொடுப்பது சகஜம். எனவே மூன்றே நாளில் அந்த படத்தின் கதையை எழுதி கொண்டு வந்து கொடுத்தார் கே.எஸ் ரவிக்குமார்.

அதை படித்து பார்த்த ஆர்.பி செளத்ரி படக்கதை நல்லா இருக்கு. நீயே இந்த படத்தை பண்ணிடு என கூறியுள்ளார். கே.எஸ் ரவிக்குமாருக்கு ஒரே அதிர்ச்சி. ஏனெனில் அவருக்கு கிடைத்திருக்கும் முதல் திரைப்பட வாய்ப்பு அது. ஆனால் முடிந்தவரை படத்தை சீக்கிரம் குறைந்த பட்ஜெட்டில் முடிக்க வேண்டும் என ஆர்.பி செளத்ரி கூறியுள்ளார்.

புரியாத புதிர் என்னும் அந்த படத்தை 30 நாட்களில் எடுத்து முடித்தார் கே.எஸ் ரவிக்குமார். படத்திற்கு ஆன மொத்த செலவு 29 லட்சம் மட்டுமே. 1990 இல் வெளியான இந்த படமே கே.எஸ் ரவிக்குமார் திரை வாழ்வில் அடியெடுத்து வைக்க உதவிய திரைப்படமாகும்.