Tag Archives: இயக்குனர் அமீர்

குழந்தைக்கு அப்பாவாக எல்லாம் நடிக்கணுமா!.. வாய்ப்பில்ல ராஜா!.. அமீர் படத்தை மறுத்த விஜய்!.

சினிமாவை பொறுத்தவரை மாறுப்பட்ட கதை அமைப்புகளும் கதாபாத்திரங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும். ஆனால் அனைத்து கதாபாத்திரங்களிலும் நடிப்பதற்கான முதிர்ச்சி என்பது அனைவருக்குமே வந்துவிடாது.

உதாரணமாக நடிகை மீனா என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் நடிக்கும்போது அவருக்கு 16 வயதுதான் ஆகியிருந்தது. ஆனால் ஒரு திருமணமான கர்ப்பிணி பெண்ணுக்குடைய அறிவு முதிர்ச்சியுடன் நடித்திருப்பார்.

பெண்களால் இப்படி எளிதாக நடிக்க முடியும். ஆனால் ஆண்களுக்கு அது கஷ்டம். விஜய் திருப்பாச்சி மாதிரியான படங்களில் நடித்துக்கொண்டிருந்தப்போதே அவருக்கு அமீர் இரண்டு கதைகளை கூறினார். அதில் ஒன்று ஆதிபகவான் திரைப்படத்தின் கதை. அந்த கதையில் விஜய் நடிக்காமல் பிறகு ஜெயம் ரவி அந்த கதையில் நடித்தார்.

இரண்டாவதாக சொன்ன கதை கண்ணபிரான் என்கிற கதையாகும். அந்த கதையை கேட்டவுடனே விஜய்க்கு பிடித்துவிட்டது. ஆனால் படத்தில் அவருக்கு நெருடலாக இருந்த விஷயம் ஒரு 5 வயது குழந்தைக்கு அவர் அப்பாவாக நடிக்க வேண்டும் என்பதுதான்.

ஏனெனில் அதுவரை அவர் குழந்தைக்கு தந்தையாக நடிக்கவில்லை. இந்த நிலையில் அந்த கதையில் அந்த ஒரு விஷயம் காரணமாக அவர் நடிக்கவில்லை. ஆனால் தற்சமயம் தெறி,லியோ என பல படங்களில் குழந்தைகளுக்கு தந்தையாக நடிக்கிறார்.

இப்போதுதான் விஜய்க்கு அந்த முதிர்ச்சி வந்துள்ளது. ஆனால் அப்போதே அந்த படத்தில் நடித்திருந்தால் நல்ல வெற்றி படமாக அமைந்திருக்கும் என்கிறார் அமீர்.

விஜய்யை நம்பி தலையில் துண்டு போட்ட இயக்குனர்… சோதனை மேல் சோதனை போதுமடா சாமி!…

Vijay and Ameer : தமிழ் சினிமாவின் இளைய தளபதியாக இருந்து இன்று தளபதியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய். அவர் படம் நடிக்க ஆரம்பித்ததில் இருந்தே அவர் மீதான் எதிர்பார்ப்புகள் மக்களுக்கு அதிகம் காரணம் அவர் தந்தை SAC ஒரு பிரபலமான இயக்குனர்.

நடிகர் விஜய்க்கு முதல் அடி எடுத்துவைக்க உறுதுணையாக இருந்தவரும் அவர்தான். அதன்பிறகு தன்னுடைய அயராது உழைப்பால் பல வெற்றிப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார்.

2007-2008 ஆண்டில் மிகவும் பிசியாக தமிழ் சினிமாவை வலம் வந்தபோது அவரை சந்தித்து இரண்டு படங்களின் கதைகளை கூறுயிருக்கிறார் இயக்குனர் அமீர்.

அவர் கூறிய கதையில் ஒன்று ஆதிபகவன் மற்றொன்று கண்ணபிரான். அந்த இரண்டு கதைகளுமே விஜய்க்கு பிடித்துப்போக அந்த இரண்டில் ஒரு கதையை நடிக்க ஆவலாக இருப்பதாக அமீரிடம் தெரிவித்திருக்கிறார்.

அமீரும் அவருக்கு ஆதிபகவன் கதையைவிட கண்ணபிரான் கதை தான் சரியான கதாப்பாத்திரம் என்று கூறியிருக்கிறார். அந்த படத்தில் விஜய் 6வயது குழந்தைக்கு தந்தையாக நடிக்க வேண்டும் என்று கூற அதற்கும் சரி என்று கூறிவிட்டார்.

அதன்பின்பு விஜய்க்காக காத்திருந்தார் அமீர் இடையில் ஆதிபகவன் கதையை நடிகர் ஜெயம் ரவியை வைத்து முடித்து படத்தையும் வெளியிட்டுவிட்டார். ஆனால் விஜய்யிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

ஏன் விஜய் இப்படி செய்தார் என்று தெரியவில்லை ஆனால் 2007 ல் அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியான பருத்திவீரன் படம் நல்ல ஹிட் கொடுத்தாலும் இயக்குனர், தயாரிப்பாளருக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு வழக்கு பதியப்பட்டு இன்றும் அந்த வழக்கு முடிந்தபாடில்லை.

ஒருவேளை விஜய் அமீருடன் படம் பண்ண தயங்கியதற்கு இதுவும் காரணமாக இருக்குமோ என்று திரையுலக வட்டாரங்கள் சந்தேகிக்கின்றன.

உங்க திமீர் பேச்சு ரொம்ப வக்கிரமா இருக்கு!.. கடுப்பான அடுத்த நடிகர். அமீர் விஷயத்தில் க்ரைம் ரேட் ஏறிகிட்டேயிருக்கு!..

Ameer and Gnanavel raja Issue : கடந்த சில நாட்களாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கொடுத்த ஒரு பேட்டியானது மொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பில் கார்த்தியின் நடிப்பில் அமீர் இயக்கத்தில் உருவான திரைப்படம் பருத்திவீரன்.

இந்த திரைப்படம் அப்போது பெரும் வரவேற்பு பெற்ற ஒரு திரைப்படமாகும் ஆனால் அந்த திரைப்படத்தின் பொழுது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கும் இயக்குனர் அமீருக்கும் இடையே சில பிரச்சனைகள் ஏற்பட்டது இதனை அடுத்து அவர்கள் நிரந்தரமாக பிரிந்து விட்டனr.

இப்போது வரை அவர்கள் ஒன்று சேரவே இல்லை. இந்த நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒரு பேட்டியில் பேசும் பொழுது அமீரை மிகவும் தரகுறைவாக பேசி இருந்தார். அவருக்கு படம் எடுக்கவே தெரியாது என்கிற ரீதியில் அவர் அமீரை குற்றம் சாட்டியிருந்தார். மேலும் அவரை திருடர் என்றெல்லாம் இவர் பேசியிருந்தார்.

ameer

தயாரிப்பு செலவுகளை சரியாக கணக்கு காட்டவில்லை என்று அமீர் மீது பழி போட்டு இருந்தார். இந்த நிலையில் அமீருக்கு ஆதரவாக குரல்கள் வர துவங்கின. நடிகர் சசிகுமார் இது குறித்து கூறும் பொழுது படத்தை எடுப்பதற்கான முழு தொகையையும் முதலில் ஞானவேல் ராஜா கொடுக்கவில்லை.

என்னிடம் கொஞ்சம் கடன் வாங்கித்தான் அமீர் படத்தையே முடித்தார். என்று கூறியிருந்தார் சசிகுமார். அதேபோலவே சமுத்திரகனியும் தனது எக்ஸ் பக்கத்தில் கூறும் பொழுது கடைசியில் படப்பிடிப்பை முடிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டார் அமீர். அதற்காக அவர் நிறைய இடங்களில் கடன் வாங்கினார். என்று கூறியிருந்தார். இந்த நிலையில் பருத்திவீரன் திரைப்படத்தில் நடித்த நடிகர் பொன்வண்ணனும் தன்னுடைய பங்கிற்கு சில விஷயங்களை கூறியிருக்கிறார்.

அமீர் எவ்வளவு கஷ்டப்பட்டார் எவ்வளவு செலவு செய்தார் என்பதை கண்கூடாக பார்த்திருக்கிறேன். எனவே உங்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக அவரை திருடன், வேலை தெரியாதவர் என கொச்சைப்படுத்துவது ஏற்புடையது அல்ல, உங்களது உடல் மொழியும் பேச்சுத் திமிரும் அந்த பேட்டியில் வக்கிரமாக இருந்ததை என்னால் பார்க்க முடிந்தது.

தங்கள் தயாரிப்பில் வந்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தை போன்று பருத்தி வீரனையும் அதனுடைய படைப்பாளியையும் எடை போட்டு விட்டீர்களா என்று பேசி இருந்தார் பொன்வண்ணன். மேலும் இனியும் இந்த பிரச்சனையை பற்றி பேசுவதாக இருந்தால் அதை நேர்மையான முறையில் அணுகுங்கள் என்று கூறியிருக்கிறார் பொன்வண்ணன். இந்த நிலையில் இந்த பிரச்சனை இன்னும் சூடு பிடித்துள்ளது ஆனால் அதிகபட்சம் அமீருக்குதான் இந்த படம் குறித்து அதிக ஆதரவுகள் வந்துள்ளன.

என் மகனுக்கும் எனக்கும் எந்த சம்பந்தம் இல்லை… பொதுவெளியில் போட்டுடைத்த பிரபல தயாரிப்பாளர்…!

Jeeva and Ameer : ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் 90களில் புகழ் பெற்ற தயாரிப்பு நிறுவனம். அந்த கால கட்டத்தில் மிகப்பெரிய தயாரிப்பாளர் மேலும் அவர் தயாரித்து வெளியான பெரும்பாலான படங்கள் விருது பெற்ற படங்கள்.

தந்தை எவ்வளவு தான் பெரிய ஆளாக இருந்தாலும் அவருடைய மகன்கள் இருவர் (ஜீவா மற்றும் ஜித்தன் ரமேஷ்) திரையுலகில் சொல்லும் அளவிற்கு பெரிய அளவில் உருவாக முடியவில்லை.

நடிகர் ஜீவா ஆரம்பத்தில் சாக்லேட் பாயாக திரை உலகில் அறிமுகம் ஆனாலும் பல பரிமாண தோற்றத்தில் அவர் நடித்துவிட்டார் ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி நடிகராக வலம் வரமுடியவில்லை.

இவர்கள் இருவரையும் திரையுலகிற்கு கொண்டு வர ஆர்.பி.சௌத்ரி பெரும் பாடுபட்டார். ஜீவாவின் முதல் படம் “ஆசை ஆசையாய்” அதனை தொடர்ந்து “தித்திக்குதே” போன்ற குடும்பப்பாங்கான படங்கள் நடித்தாலும் எதிர்பார்த்த அளவிற்கு உயர முடியவில்லை.

மூன்றாவதாக ஜீவாவை தேடி வந்த ஒரு இயக்குனர் தான் அமீர். அமீரின் இயக்கத்தில் ஜீவாவின் மூன்றாவது படமான “ராம்” படம் உருவானது. இந்த படத்திற்கு பேச்சுவார்த்தைக்கு ஜீவாவை தேடி அவரது வீட்டிற்கு சென்றார் அப்போது இயக்குனர் அமீரை சந்தித்த ஆர்.பி. சௌத்ரி முதல் இரண்டு படங்களுக்கு பிறகு சரிவர யாரும் வெளியே செல்வதில்லை, அவனுக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதா? இல்லையா? என்றும் புரியவில்லை என்று கூறியிருக்கிறார்.

அதனை தொடர்ந்து ஜீவா “ராம்” படத்தில் நடித்து படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்க தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி “ராம்” படத்தை பார்க்க தியேட்டருக்குச் செல்கிறார்.

படம் இடைவேளை வரை சென்றதுமே ஆர்.பி.சௌத்ரியை அங்கிருந்தவர்கள் பாராட்டவும் செய்து, தூக்கிக் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். படம் முடிந்து வெளிவந்த பிறகு ஆர்.பி.சௌத்ரி இயக்குனர் அமீருக்கு போன் செய்து இந்த படத்தில் இருக்கும் ஜீவாவின் வெற்றிக்கும் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை ஆனால் ஏன் மக்கள் என்னை பாராட்டுகிறார்கள்? ஏன் என்னை கொண்டாடுகிறார்கள்? என்று புரியாமல் ஆனந்தத்தில் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

இதை கேட்ட அமீர் இனி ஜீவாவின் வெற்றிப்பயணம் தொடரும் என்று கூறியிருக்கிறார். ஜீவாவை போன்ற ஒரு சில நடிகர்களுக்கு ஆரம்ப காலத்தில் வெற்றிக்கணக்கை தொடங்கிய இயக்குனர் அமீர்.

அந்த தயாரிப்பாளர் சொன்னது பொய்… இயக்குனர் அமீர் மீது விழுந்த பழியை துடைத்த சசிகுமார்…!

Ameer, Sasikumar and Gnanavelraja: இயக்குனர் அமீர் மற்றும் ஞானவேல்ராஜாவிற்கு இருக்கும் மோதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. பருத்திவீரன் படம் எடுத்த போது நடந்த பிரச்சனையில் ஞானவேல் ராஜா மீது இயக்குனர் அமீர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கு இத்தனை ஆண்டுகள் கடந்தும் முடிவுக்கு வரவில்லை. தற்போது நடிகர் கார்த்திக்கின் 25ஆவது படம் மற்றும் ஜப்பான் படம் பிரமோசனில் கார்த்திக்கை இயக்கிய அனைத்து இயக்குனர்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது ஆனால் இயக்குனர் அமீர் மட்டும் கலந்து கொள்ளவில்லை.

அதற்கான காரணம் பருத்திவீரன் படப்பிரச்சனைதான் என்பதை இயக்குனர் அமீர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். இது ஒரு புறம் இருக்க கடந்த சில நாட்களாக அமீர் மற்றும் ஞானவேல்ராஜா இருவரும் மாறி மாறி தங்கள் பக்கம் இருக்கும் வாதத்தை மீடியாவில் கூறிக்கொண்டிருந்தார்கள்.

இவர்களுக்கிடையேயான பிரச்சனையில் நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி மற்றும் நடிகர் சிவக்குமார் சம்பந்தப்பட்டள்ளதாக இயக்குனர் அமீர் குற்றம்சாட்டியிருந்தார்.

ஞானவேல்ராஜாவும் தன் பங்கிற்கு அமீர் பொய்கணக்கு காண்பித்து பணம் பெற்றதாக வெளிப்படையாக கூறியிருந்தார்.

இதற்கிடையே இயக்குனரும், நடிகருமான சசிக்குமார் அமீருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு ஞானவேல் ராஜாவால் தான் பாதியில் நின்றது, அதன்பிறகு நான் தான் அமீர் அண்ணனுக்கு பணம் கொடுத்து இப்படத்தை முழுமையாக முடிக்க உதவி செய்தேன். ஞானவேல் ராஜா அமீர் பற்றி கூறிய குற்றச்சாட்டில் உண்மை இல்லை அதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

அமீர் மற்றும் ஞானவேல் ராஜா இருவரும் மாறி மாறி எதிர்தரப்பு தவறை சுட்டிக்காட்டிக்கொண்டிருக்க இந்த பிரச்சனைக்கான முடிவு நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கு முடிவுக்கு வந்தால் மட்டுமே கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆளா விடுங்க சாமி!.. கௌதம் மேனன் கதையை கேட்க முடியாமல் ஓடிய அமீர்!..

Tamil Director Ameer : மௌனம் பேசியதே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் அமீ. அதற்கு முன்பு பாலாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த அமீர் பிறகு பாலாவுடன் ஏற்பட்ட சில சண்டைகள் காரணமாக தனியாக படம் எடுக்க வேண்டும் என வெளிவந்தார்.

அமீரின் முதல் படமான மௌனம் பேசியதே திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றுக் கொடுக்கவில்லை என்றாலும் சூர்யாவிற்கு அது ஒரு முக்கியமாக படமாக அமைந்தது. அதற்கு பிறகுதான் சூர்யாவிற்கு அதிகமான வித்தியாசமான கதாபாத்திரம் கொண்ட பட வாய்ப்புகள் வந்தன.

அதனைத் தொடர்ந்து ராம் பருத்திவீரன் போன்ற படங்களை இயக்கினார் பருத்திவீரன் திரைப்படம் தமிழில் அமீர் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படம். அதனை தொடர்ந்து இயக்குனராக இருந்து வந்த அமீர் பிறகு நடிகராக மாறினார். வடசென்னை படத்தில் அவர் நடித்த ராஜன் கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

ameer

அதனை தொடர்ந்து தற்சமயம் கதாநாயகனாகவும் நடிக்க தொடங்கியுள்ளார். அவர் நடித்த மாயவலை திரைப்படம் சீக்கிரத்தில் சினிமாவிற்கு வர இருக்கிறது. பாலாவை விட்டு பிரிந்த இடைக்காலத்தில் அமீர் பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக சேர்வதற்கு முயற்சி செய்தார்.

அந்த நிலையில் நடிகர் விக்ரம் அமீரின் மீது கொண்ட அன்பினால் அவரைக் கூட வைத்துக் கொண்டார். விக்ரம் நடிக்கும் படத்திற்கான கதையை தேர்ந்தெடுக்கும் வேலையை அமீருக்கு கொடுத்திருந்தார் விக்ரம். அதன்படி ஒரு நாள் காக்க காக்க படத்தின் கதையை சொல்வதற்காக கௌதம் மேனன் விக்ரமை பார்க்க வந்திருந்தார்.

அமீரும் அவருடன் அமர்ந்திருந்தார் அப்பொழுது கௌதம் மேனன் கதையை சொல்ல துவங்கினார். ஆனால் முழுக்க முழுக்க கதையை ஆங்கிலத்திலேயே கூறினார் கௌதம் மேனன். அமீருக்கு ஆங்கிலம் சுத்தமாக தெரியாது எனவே அவர் என்ன சொல்கிறார் என்பதே அமீருக்கு புரியவில்லை.

இதனால் ஒரு அளவுக்கு மேல் கடுப்பாகி வெளியே எழுந்து சென்று விட்டார் அமீர். அதன் பிறகு அவருக்கு போன் செய்த விக்ரம் ஏன் வெளியே சென்றீர்கள் என கேட்ட பொழுது எனக்கு சுத்தமாக ஆங்கிலமே தெரியாது சார் என கூறியுள்ளார். இதே போல கௌதம் மேனன் விஜய்க்கும் ஒரு கதையை ஆங்கிலத்திலேயே கூறியதால் விஜய் அந்த கதை வேண்டாம் என்று கூறிய சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது.