Tag Archives: ஞானவேல் ராஜா

கங்குவா படத்துக்கு வந்த சோதனை.. வழக்கில் சிக்கிய தயாரிப்பாளர்..! படம் ரிலீசில் வந்த பிரச்சனை.!

தற்சமயம் தமிழ்நாட்டில் மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் திரைப்படமாக கங்குவா திரைப்படம் இருந்து வருகிறது. கங்குவா திரைப்படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருக்கிறார். நவம்பர் மாதம் இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. ஏற்கனவே இந்த படம் அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வர இருந்தது.

கங்குவா படத்துக்கு வந்த சோதனை

ஆனால் அன்றைய தினம் வேட்டையன் திரைப்படம் வெளியான காரணத்தினால் இந்த படத்தின் வெளியீட்டு தேதி மாற்றி வைக்கப்பட்டது இந்த நிலையில் கங்குவா எப்படி இருக்கும் என்பது ரசிகர்கள் மத்தியில் சர்ப்ரைஸாக இருந்து வருகிறது.

அதே சமயம் இந்த படம் வெளியாகுமா? என்பதே இப்பொழுது சந்தேகத்திற்கு உள்ளாகி இருக்கிறது. ஆமாம் கங்குவா திரைப்படத்தை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாதான் தயாரித்து இருந்தார். இவர் ஏற்கனவே ரிலையன்ஸ் நிறுவனத்திடம் 99 கோடி கடன் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

படம் ரிலீசில் வந்த பிரச்சனை

டெடி மற்றும் தங்கலான் திரைப்படத்திற்காக இந்த கடனை வாங்கி இருக்கிறார் ஞானவேல் ராஜா. ஆனால் அதில் 40 கோடி ரூபாய் தான் அவர் திரும்ப கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் தற்சமயம் ரிலையன்ஸ் நிறுவனம் ஞானவேல் ராஜாவின் மீது வழக்கு தொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கு ஏழாம் தேதி நீதிமன்றத்திற்கு வருகிறது இந்த வழக்கு முடியும் வரையில் கங்குவா படம் வெளியாவது சந்தேகமாக இருக்கும் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. ஆனால் ஞானவேல் ராஜா ரிலையன்ஸ் நிறுவனத்திடம் சமரசமாக போகும் நிலையில் குறிப்பிட்ட தேதியில் படம் வெளியாகும் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன.

பொன்னியின் செல்வன் வரலாறு… கங்குவா கற்பனை!.. வாயை விட்டு மாட்டிக்கொண்ட தயாரிப்பாளர்!..

Kanguva movie : தமிழில் சில மாதங்களுக்கு முன்பு அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளானவர் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பருத்திவீரன் திரைப்படத்திற்கு தயாரிப்பு செலவுகளில் அமீருடன் நடந்த பிரச்சனை தொடர்பாகதான் கடந்த சில மாதங்களாக பேச்சுக்கள் இருந்து வந்தன.

அதில் அமீருக்கு ஆதரவாகதான் அதிக குரல்கள் எழுந்தன. அதனை தொடர்ந்து அமைதியாகிவிட்டார் ஞானவேல் ராஜா. தற்சமயம் ஞானவேல் ராஜா கங்குவா என்கிற திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் சூர்யா நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்த திரைப்படம் தொடர்பாக பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறார் ஞானவேல் ராஜா. மேலும் இந்த திரைப்படம் பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்படும் ஒரு திரைப்படமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இது குறித்து பேசும் பொழுது சில தவறான தகவல்களை பேசியதால் ஞானவேல் ராஜா தற்சமயம் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார்.

அவர் தனது பேட்டியில் கூறும் பொழுது பொன்னியின் செல்வன் திரைப்படம் ஒரு வரலாறு அதை வந்து நாம் மாற்றி எடுக்க முடியாது. அதன் கதை இருக்கிறதோ அப்படியாக தான் எடுக்க வேண்டும் ஆனால் கங்குவா அப்படி கிடையாது. எனவே அது நமக்கு எப்படி தோன்றுகிறதோ அப்படியே படமாக்கிக் கொள்ளலாம் என்று கூறி இருக்கிறார் ஞானவேல் ராஜா.

ஆனால் உண்மையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரலாறுடன் திரித்த கற்பனை என்பதுதான் உண்மை. அதில் நடந்து மொத்த கதையும் வரலாற்றில் நடந்த கதை கிடையாது. அதில் உள்ள கதாபாத்திரங்கள் பலவும் கூட செயற்கையாக அதில் சேர்க்கப்பட்ட கதாபாத்திரங்கள் தான் என்கின்றனர் பொன்னியின் செல்வன் ரசிகர்கள்.

அப்படி இருக்கும் பொழுது அது கூட தெரியாமல் ஒரு தயாரிப்பாளர் அதை வரலாறு என்று கூறுகிறாரே என்று அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

ஒழுங்கா மன்னிப்பு கேக்கலைனா அவ்வளவுதான்!.. ஞானவேல்ராஜாவிற்கு வார்னிங் விட்ட பாரதிராஜா.. சிங்கம் களம் இறங்கிடுச்சு!..

Gnanavel raja and bharathi raja : கடந்த ஒரு வாரமாக சமூக வலைத்தளங்களில் அதிக சர்ச்சைக்குள்ளாகி வரும் விஷயமாக தயாரிப்பாளர் ஞானவேலின் பேட்டி இருந்து வருகிறது. சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்த ஞாவேல்ராஜா பருத்திவீரன் திரைப்படம் குறித்தும் இயக்குனர் அமீர் குறித்தும் கடுமையாக பேசியிருந்தார்.

அதாவது இயக்குனர் அமீருக்கு படமே எடுக்க தெரியாது என்பது போல இருந்தது அவரது பேச்சு. மேலும் படத்தில் சரியான கணக்கு காட்டப்படவில்லை என்றும் கூறப்பட்டது. இந்த விவாதம் துவங்கியது முதலே அமீருக்கு அதிகமான வரவேற்புகள் வந்த வண்ணம் உள்ளன.

இதில் முதலில் கையை உயர்த்தியது இயக்குனர் சசிக்குமார், அதற்கு அடுத்து அவருக்கு ஆதரவாக இயக்குனர் சமுத்திரக்கனி ஒரு பதிவை வெளியிட்டிருந்தார், மேலும் அந்த படத்தில் நடித்திருந்த நடிகர் பொன்வன்னனும் ஞானவேல்ராஜாவிற்கு எதிராக பேசியிருந்தார்.

இந்த நிலையில் தமிழின் மூத்த இயக்குனரான பாரதிராஜாவும் தற்சமயம் அமீருக்கு ஆதரவு பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறும்போது ”பருத்திவீரன் திரைப்படம் சார்ந்து உங்களுக்குள் இருப்பது பொருளாதார பிரச்சனை மட்டுமே. ஆனால் நீங்கள் தந்த பேட்டியில் படைப்பாளியின் புகழுக்கும், பெயருக்கும், படைப்பிற்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.

நீங்கள் மிகப்பெரும் தயாரிப்பாளராக உருவானதில் அமீருன் பங்களிப்பு மிகப்பெரியது. உங்கள் படம் இயக்குவதற்கு முன்பே அவர் இரண்டு படங்களை இயக்கிவிட்டார். அவர் படைப்புகளையும் நேர்மையையும் இழிவுப்படுத்தியதற்காக வருத்தம் தெரிவித்து இந்த பிரச்சனையை சுமூகமாக முடிப்பதே சரி என கூறியுள்ளார் பாரதிராஜா.

இதனையடுத்து இந்த பிரச்சனை மீண்டும் சூடுப்பிடித்துள்ளது.

உங்க திமீர் பேச்சு ரொம்ப வக்கிரமா இருக்கு!.. கடுப்பான அடுத்த நடிகர். அமீர் விஷயத்தில் க்ரைம் ரேட் ஏறிகிட்டேயிருக்கு!..

Ameer and Gnanavel raja Issue : கடந்த சில நாட்களாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கொடுத்த ஒரு பேட்டியானது மொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பில் கார்த்தியின் நடிப்பில் அமீர் இயக்கத்தில் உருவான திரைப்படம் பருத்திவீரன்.

இந்த திரைப்படம் அப்போது பெரும் வரவேற்பு பெற்ற ஒரு திரைப்படமாகும் ஆனால் அந்த திரைப்படத்தின் பொழுது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கும் இயக்குனர் அமீருக்கும் இடையே சில பிரச்சனைகள் ஏற்பட்டது இதனை அடுத்து அவர்கள் நிரந்தரமாக பிரிந்து விட்டனr.

இப்போது வரை அவர்கள் ஒன்று சேரவே இல்லை. இந்த நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒரு பேட்டியில் பேசும் பொழுது அமீரை மிகவும் தரகுறைவாக பேசி இருந்தார். அவருக்கு படம் எடுக்கவே தெரியாது என்கிற ரீதியில் அவர் அமீரை குற்றம் சாட்டியிருந்தார். மேலும் அவரை திருடர் என்றெல்லாம் இவர் பேசியிருந்தார்.

ameer

தயாரிப்பு செலவுகளை சரியாக கணக்கு காட்டவில்லை என்று அமீர் மீது பழி போட்டு இருந்தார். இந்த நிலையில் அமீருக்கு ஆதரவாக குரல்கள் வர துவங்கின. நடிகர் சசிகுமார் இது குறித்து கூறும் பொழுது படத்தை எடுப்பதற்கான முழு தொகையையும் முதலில் ஞானவேல் ராஜா கொடுக்கவில்லை.

என்னிடம் கொஞ்சம் கடன் வாங்கித்தான் அமீர் படத்தையே முடித்தார். என்று கூறியிருந்தார் சசிகுமார். அதேபோலவே சமுத்திரகனியும் தனது எக்ஸ் பக்கத்தில் கூறும் பொழுது கடைசியில் படப்பிடிப்பை முடிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டார் அமீர். அதற்காக அவர் நிறைய இடங்களில் கடன் வாங்கினார். என்று கூறியிருந்தார். இந்த நிலையில் பருத்திவீரன் திரைப்படத்தில் நடித்த நடிகர் பொன்வண்ணனும் தன்னுடைய பங்கிற்கு சில விஷயங்களை கூறியிருக்கிறார்.

அமீர் எவ்வளவு கஷ்டப்பட்டார் எவ்வளவு செலவு செய்தார் என்பதை கண்கூடாக பார்த்திருக்கிறேன். எனவே உங்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக அவரை திருடன், வேலை தெரியாதவர் என கொச்சைப்படுத்துவது ஏற்புடையது அல்ல, உங்களது உடல் மொழியும் பேச்சுத் திமிரும் அந்த பேட்டியில் வக்கிரமாக இருந்ததை என்னால் பார்க்க முடிந்தது.

தங்கள் தயாரிப்பில் வந்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தை போன்று பருத்தி வீரனையும் அதனுடைய படைப்பாளியையும் எடை போட்டு விட்டீர்களா என்று பேசி இருந்தார் பொன்வண்ணன். மேலும் இனியும் இந்த பிரச்சனையை பற்றி பேசுவதாக இருந்தால் அதை நேர்மையான முறையில் அணுகுங்கள் என்று கூறியிருக்கிறார் பொன்வண்ணன். இந்த நிலையில் இந்த பிரச்சனை இன்னும் சூடு பிடித்துள்ளது ஆனால் அதிகபட்சம் அமீருக்குதான் இந்த படம் குறித்து அதிக ஆதரவுகள் வந்துள்ளன.

சிவகார்த்திகேயன் வாழ்க்கையை காலி பண்ண பார்த்ததும் அதே தயாரிப்பாளர்தானா!.. வரிசையாக வெளிவரும் உண்மைகள்!..

Actor Sivakarthikeyan : தமிழில் வரிசையாக வெற்றி படங்கள் கொடுத்து சூர்யா மாதிரியான நடிகர்களுக்கு நிகரான நடிகராக வளர்ந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக போராடி தமிழ் சினிமாவில் நடிகராவதற்கான வாய்ப்பை பெற்றார்.

தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியப்போது காமெடி கதாநாயகனாக அறிமுகமானாலும் நாட்கள் செல்ல செல்ல தன்னை ஒரு கமர்ஷியல் கதாநாயகனாக வெளிப்படுத்திக்கொண்டார் சிவகார்த்திகேயன். இந்த நிலையில் ரெமோ படம் வெளியான சமயத்தில் அதன் வெற்றி விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் உணர்ச்சி வசப்பட்டு சில விஷயங்களை பேசியிருந்தார்.

அதில் அவர் கூறும்போது ஒரு தயாரிப்பாளர் தன்னை வைத்து படம் இயக்க போவதாக கூறி அக்ரிமெண்ட் போட்டு கையெழுத்து வாங்கினார். அதற்கான அட்வான்ஸ் தொகையையும் கொடுத்த பிறகு படப்பிடிப்பை மட்டும் துவங்காமலேயே இருந்தார் தயாரிப்பாளர்.

அதே சமயம் வேறு திரைப்படங்களிலும் சிவகார்த்திகேயனை கமிட் ஆக விடாமல் செய்துள்ளார். இதனை அந்த மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் அந்த தயாரிப்பாளர் யார் என்கிற விவரத்தை மட்டும் கூறவில்லை. ஆனால் அவர் கூறும்போது நான் யாரை கூறுகிறேன் என சம்பந்தப்பட்ட ஆளுக்கு தெரியும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாதான் அந்த தயாரிப்பாளர் என சமூக வலைத்தளங்களில் ஒரு புது செய்தி பரவி வருகிறது. ஏற்கனவே அமீர் விஷயத்தில் ஞானவேல்ராஜாவிற்கு எதிராக அதிகமான குற்றசாட்டுகள் உருவாகி வரும் நிலையில் ஒரு புது குற்றச்சாட்டாக இதுவும் உருவாகியுள்ளது. ஆனால் சிவகார்த்திகேயனே கூறும் வரை எதுவும் வெளிப்படையாக தெரிய வாய்ப்பில்லை.

தாத்தா காலத்து வெற்றியை இன்னமும் சொல்லிட்டு இருக்க முடியுமா!.. அமீரை ஓப்பனாக நக்கல் செய்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா..

Director Ameer : இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்து சினிமாவில் இயக்குனராக உயர்ந்தவர் அமீர். அமீர் படங்களுக்கு ஆரம்பத்தில் அதிக வரவேற்பு இருந்து வந்தது. அவர் இயக்கிய மௌனம் பேசியதே, பருத்தி வீரன், ராம் மாதிரியான திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து தமிழின் முக்கியமான இயக்குனராக அமீர் மாறினார். தற்சமயம் சில படங்களில் நடித்து வருகிறார். வட சென்னை படத்தில் இவர் நடித்த ராஜன் கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதனை தொடர்ந்து தற்சமயம் மாயவலை திரைப்படத்திலும் நடித்துள்ளார். கடந்த சில காலங்களாக கார்த்தி மற்றும் அமீருக்கு இடையே இருக்கும் மோதல் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. பருத்தி வீரன் திரைப்படத்தின் போதுதான் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக பேச்சுக்கள் இருந்தன.

இந்த நிலையில் இதுக்குறித்து அந்த படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறும்போது இன்னமும் பருத்திவீரன் திரைப்படம் மூலமாக கார்த்திக்கு ஹிட் கொடுத்ததையே அமீர் பேசிக்கொண்டிருக்கிறார். பருத்திவீரன் வந்து எத்தனையோ வருடங்களாகிவிட்டன.

முதல் படம் ஹிட் கொடுத்து இரண்டாவது படம் ஓடவில்லை என்றாலே மக்கள் கண்டுக்கொள்வதில்லை. இதில் எப்போதோ எடுத்த படத்தை இன்னமும் அவர் பேசி கொண்டிருப்பது எப்படி நியாயமாகும் என கேள்வி எழுப்பியுள்ளார் ஞானவேல் ராஜா.

அமீர் பண்ணுன சம்பவத்தால்தான் கார்த்தி அவரை மதிக்கலை … ஓப்பன் டாக் கொடுத்த ஞானவேல் ராஜா.

தமிழ் சினிமாவில் மிகவும் தாமதமாக வந்து சீக்கிரமே கதாநாயகன் ஆனவர் நடிகர் கார்த்தி. விஜய் அஜித் சூர்யா மாதிரியான நடிகர்கள் 20களின் ஆரம்பங்களிலேயே தமிழ் சினிமாவில் கதாநாயகர்களாக நடிக்க துவங்கினர்.

ஆனால் கார்த்தி தனது 27வது வயதில்தான் முதல் படமான பருத்திவீரன் திரைப்படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவரை சினிமாவில் நாயகனாக அறிமுகம் செய்தவர் இயக்குனர் அமீர்தான்.

ஆனால் சில காரணங்களால் அமீருக்கும் கார்த்திக்கும் பேச்சு வார்த்தை இல்லாமல் போனது. இந்த நிலையில் கார்த்தி 25 திரைப்படங்களில் நடித்ததை கொண்டாடும் விதமாக கார்த்தி 25 எனும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை கார்த்தியோடு பணிப்புரிந்த பலரும் கலந்துக்கொண்டனர்.

ஆனால் இயக்குனர் அமீர் மட்டும் அதில் இல்லை. இருந்தாலும் தன்னை அறிமுகப்படுத்தியதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்திருந்தார் கார்த்தி. இந்த நிலையில் ஒரு பேட்டியில் பேசிய அமீர் கார்த்தி தன்னை அழைக்கவே இல்லை. அதனால்தான் அந்த விழாவிற்கு செல்லவில்லை என கூறினார்.

இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக பருத்திவீரன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் பேட்டி ஒன்றில் பேசியிருந்தார், உண்மையில் கார்த்தி அமீரை அழைப்பதற்கு ஆள் அனுப்பியிருக்கிறார். ஆனால் இவ்வளவு நாள் என்னை கண்டுக்கொள்ளாமல் இப்போது மட்டும் நீங்கள் அழைத்ததும் நான் வரவேண்டுமா என சத்தமிட்டுள்ளார்.

மேலும் அந்த விழாவிற்கு வரமுடியாது என கூறினார். எனவேதான் அவரை மீண்டும் அவரை அழைக்கவில்லை என விளக்கமளித்துள்ளார் ஞானவேல் ராஜா.