Jayam Ravi: சமீபத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் திரைப்படங்கள் எல்லாம் பெரிதாக வெற்றியை அடையவில்லை. அவர் நடித்த திரைப்படங்களில் பொன்னியின் செல்வன் திரைப்படம் மட்டுமே ஓரளவு பேசப்படும் திரைப்படமாக இருந்தது.
அதற்கு முன்பு நடித்த பூமி, இறைவன், அகிலன் தற்சமயம் நடித்த சைரன் என எந்த ஒரு திரைப்படமும் வெற்றி பெறவில்லை. ஜெயம் ரவி கதைகளை தேர்ந்தெடுப்பதில் பெரிதாக கவனம் செலுத்தாதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இத்தனைக்கும் இதற்கு முன்பு சந்தோஷ் சுப்ரமணியம், சம்திங் சம்திங், தில்லாலங்கடி என்று வரிசையாக வெற்றி படங்களாக நடித்தவர் நடிகர் ஜெயம் ரவி. அப்படி இருந்தும் கூட இப்பொழுது அவருக்கு ஏன் வாய்ப்புகள் வருவதில்லை என கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் படம் தேர்ந்தெடுப்பது குறித்து ஜெயம் ரவி ஒரு பேட்டியில் கூறும் பொழுது சில விஷயங்களை பகிர்ந்து இருந்தார். அதில் அவர் கூறும் பொழுது ஒரு திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும் என்று தெரியாமல் நீங்கள் தவறவிட்ட கதைகள் எத்தனை என்று கேட்ட பொழுது தெரிந்தே நான் தவறவிட்ட கதைகளே உண்டு.
ஜெயம் ரவியின் விதிமுறை:
ஏனெனில் திரைப்படங்களை தேர்ந்தெடுப்பதில் எனக்கு சில விதிமுறைகள் உண்டு என்று கூறுகிறார் ஜெயம் ரவி. அதன்படி ஏற்கனவே ஒரு கதாநாயகர்களிடம் சொன்ன கதை என்னிடம் திரும்ப வந்தால் அதை தேர்ந்தெடுக்க மாட்டேன்.
அப்படியே என்னிடம் ஒரு கதை வந்தது. அந்த கதையை கேட்ட பொழுது எனக்கு தெரிந்து விட்டது அது மிகப்பெரும் வெற்றியை கொடுக்கக்கூடிய கதை என்று. ஆனால் ஏன் அந்த இயக்குனர் வேறு கதாநாயகனை விட்டு என்னிடம் இந்த கதையை கூறுகிறார் என்று கேட்ட பொழுது.
jayam-ravi
அந்த கதையை அவர் முன்பே ஒரு கதாநாயகனிடம் கூறியதும் பிறகு அவருக்கும் கதாநாயகனுக்கு ஈகோ பிரச்சனை ஆனதும் பிறகுதான் ஜெயம் ரவிக்கு தெரிந்துள்ளது. எனவே திரும்ப அந்த கதாநாயகனிடமே பேசி அவர் நடிப்பதுதான் சரி என்று கூறியிருக்கிறார் ஜெயம் ரவி.
எனவே அந்த படத்தின் வாய்ப்பை நானாகவே விட்டுக் கொடுத்து விட்டேன் என்று கூறுகிறார் ஜெயம் ரவி. எனவே எவ்வளவு பெரிய வெற்றி படமாக இருந்தாலும் வேறு கதாநாயகனிடம் கூறிவிட்டு என்னிடம் கொண்டு வந்தால் தகுந்த காரணம் இல்லாத பட்சத்தில் அதில் நான் நடிக்க மாட்டேன் என்று கூறுகிறார் ஜெயம் ரவி.
Kanguva movie : தமிழில் சில மாதங்களுக்கு முன்பு அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளானவர் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பருத்திவீரன் திரைப்படத்திற்கு தயாரிப்பு செலவுகளில் அமீருடன் நடந்த பிரச்சனை தொடர்பாகதான் கடந்த சில மாதங்களாக பேச்சுக்கள் இருந்து வந்தன.
அதில் அமீருக்கு ஆதரவாகதான் அதிக குரல்கள் எழுந்தன. அதனை தொடர்ந்து அமைதியாகிவிட்டார் ஞானவேல் ராஜா. தற்சமயம் ஞானவேல் ராஜா கங்குவா என்கிற திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் சூர்யா நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.
இந்த திரைப்படம் தொடர்பாக பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறார் ஞானவேல் ராஜா. மேலும் இந்த திரைப்படம் பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்படும் ஒரு திரைப்படமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இது குறித்து பேசும் பொழுது சில தவறான தகவல்களை பேசியதால் ஞானவேல் ராஜா தற்சமயம் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார்.
அவர் தனது பேட்டியில் கூறும் பொழுது பொன்னியின் செல்வன் திரைப்படம் ஒரு வரலாறு அதை வந்து நாம் மாற்றி எடுக்க முடியாது. அதன் கதை இருக்கிறதோ அப்படியாக தான் எடுக்க வேண்டும் ஆனால் கங்குவா அப்படி கிடையாது. எனவே அது நமக்கு எப்படி தோன்றுகிறதோ அப்படியே படமாக்கிக் கொள்ளலாம் என்று கூறி இருக்கிறார் ஞானவேல் ராஜா.
ஆனால் உண்மையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரலாறுடன் திரித்த கற்பனை என்பதுதான் உண்மை. அதில் நடந்து மொத்த கதையும் வரலாற்றில் நடந்த கதை கிடையாது. அதில் உள்ள கதாபாத்திரங்கள் பலவும் கூட செயற்கையாக அதில் சேர்க்கப்பட்ட கதாபாத்திரங்கள் தான் என்கின்றனர் பொன்னியின் செல்வன் ரசிகர்கள்.
அப்படி இருக்கும் பொழுது அது கூட தெரியாமல் ஒரு தயாரிப்பாளர் அதை வரலாறு என்று கூறுகிறாரே என்று அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.
Ilayaraja : இளையராஜா தமிழில் பல விதமான பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். பல பாடல்களை பாடியும் இருக்கிறார். இளையராஜா சிறப்பாக பாட கூடியவர். அவர் பாடிய பல பாடல்கள் மிக பிரபலமானவை.
குயில் பாட்டு பாடலில் துவங்கி விடுதலை படத்தில் பாடிய காட்டுமல்லி பாடல் வரை இளையராஜா பாடினாலே அந்த பாடல் ஹிட்டுதான் என கூறலாம். இப்படியெல்லாம் இளையராஜா காதல் வருணனைகளை கொண்டு பாடல் இசையமைப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது பொன்னியின் செல்வன் நாவல்தான் என்கிறார் இளையராஜா.
இளையராஜா இளம் வயதில் அவரது குடும்பத்தாருடன் சென்று பொன்னியின் செல்வன் நாவலை படிப்பார். அப்போதெல்லாம் டிவி மாதிரியான பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாத காரணத்தால் இருக்கும் ஒரே பொழுதுப்போக்கு புத்தக வாசிப்பு மட்டுமே.
எனவே பலமுறை பொன்னியின் செல்வன் புத்தகத்தை படித்திருக்கிறார் இளையராஜா. அதில் உள்ள காதல் நகைச்சுவைதான் அவரது பாடல்களில் அவற்றை சேர்க்க உதவியாக இருந்தது என இளையராஜா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
director maniratnam : தமிழில் வித்தியாசமான திரைப்படங்கள் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் மணிரத்தினம். மனிரத்தினத்தைப் பொறுத்தவரை அவரது திரைப்படத்தில் உள்ள வசனங்களும் ஒளிப்பதிவும் மற்ற இயக்குனர்களின் திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு காணப்படும்.
இதனாலேயே மணிரத்தினம் திரைப்படத்திற்கு ஆரம்ப காலகட்டம் முதலே வரவேற்பு இருந்து வந்தது. சொல்ல போனால் தமிழ் சினிமாவில் இவ்வளவு வருடங்களாக தொடர்ந்து தன்னை இயக்குனராகவே தக்க வைத்துக் கொண்டு தனக்கான மார்க்கெட்டும் குறையாமல் பார்த்துக் கொண்டவர் இயக்குனர் மணிரத்தினம் தான் என்று கூற வேண்டும்.
எப்போதும் பெரிய கதாநாயகர்களை வைத்து படம் எடுக்கும் பொழுது மணிரத்தினத்திற்கு அது கடினமான காரியமாகவே இருந்திருக்கிறது ஏனெனில் அவருக்கு பிடித்தார் போல அந்த நடிகர்கள் நடிக்க வைப்பதில் அவருக்கு பிரச்சனைகள் இருந்துள்ளன. அதனால்தான் கமல் ரஜினி மாதிரியான பெரிய நடிகர்களை வைத்து கூட ஒரு முறைதான் படம் எடுத்தார் மணிரத்தினம்.
இந்த நிலையில் இராவணன் திரைப்படம் வெளியான காலகட்டத்தில் நடிகர் கிருஷ்ணன் மணிரத்தினம் கேட்கும் பொழுது என்ன சார் பெரும் பட்ஜெட் கிடைத்திருக்கிறது. விக்ரம் ஐஸ்வர்யா ராய் போன்ற பெரும் நடிகர்களும் கிடைத்திருக்கிறார்கள் நீங்கள் இன்னமும் இந்த படத்தை சிறப்பாக எடுத்திருக்கலாமே என்று கேட்ட பொழுது மணிரத்தினம் ஒரு விஷயம் கூறியுள்ளார்.
இனி ஒரு முறை விக்ரம் ஐஸ்வர்யாராய் வைத்து படம் எடுக்க வேண்டும் என்ற ஒரு பெரிய தொகையை கொடுத்தால் அதை கடற்கரை ஓரத்திலேயே வைத்துவிட்டு தண்ணீரில் குதித்து விடுவேன் என்று கூறி இருக்கிறார் .ஏன் என்று கேட்கும் பொழுது பெரும் நடிகர்களை வைத்து எடுக்கும் பொழுது அதற்கான கற்பனைகளும் எனக்கு பெரிதாக உருவாகிறது.
எனவே அந்த நடிகர்களை வைத்து படம் எடுக்கும் பொழுது மிகவும் அது குறித்து யோசிக்கிறேன் அதுவே அந்த திரைப்படங்களுக்கு பிரச்சனையாகி விடுகிறது என்று கூறி இருக்கிறார் மணிரத்தினம் .ஆனால் அதே மணிரத்தினம் இன்னும் அதிக பெரிய ஹீரோக்களை வைத்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தை சிறப்பாக இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரைப்படங்களை பொறுத்தவரை ஒரு படத்தை இயக்குவதில் துவங்கி பல்வேறு நிலைகளில் அந்த படத்திற்கு பிரச்சனை வந்துக்கொண்டே இருக்கும். அதில் இறுதிகட்ட பிரச்சனை என்றால் அது படத்தை வெளியிடுவதில் இருக்கும் பிரச்சனைதான்.
ஒரு படத்தை ஏற்கனவே இந்த தேதியில் வெளியிடலாம் என திட்டமிட்டு வைத்திருக்கும்போது அதே தேதியில் பெரிய ஹீரோ படம் ஒன்று வெளியாக இருந்தால் என்ன செய்ய முடியும். அப்போது சின்ன படங்கள் தங்கள் தேதியை மாற்றி வைக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
இப்படியான நிலையை தமிழில் அனைத்து தயாரிப்பாளர்களும் சந்தித்திருப்பார்கள். தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவும் இந்த மாதிரியான பிரச்சனைகளை சந்தித்துள்ளார். ஆனால் அவர் மற்ற தயாரிப்பாளர்கள் போல தேதியை மாற்றாமல் பெரும் படங்களோடு போட்டி போட்டுள்ளார்.
இதுக்குறித்து அவர் கூறும்போது தளபதி வெளியாகவிருக்கும் அதே நாளில் என்னுடைய திரைப்படமான வண்ண வண்ண பூக்கள் வெளியானது. ஆனாலும் நல்ல வசூலை கொடுத்தது வண்ண வண்ண பூக்கள். அதே போல சந்திரமுகி வெளியான போது அதற்கு எதிராக சச்சின் திரைப்படத்தை வெளியிட்டேன். இப்போது பொன்னியின் செல்வன் வெளியானபோது கூட நானே வருவேன் திரைப்படத்தை வெளியிட்டேன்.
இவ்வளவு பெரிய படங்களோடு போட்டியிட்டும் என் படங்கள் நல்ல வசூலையே கொடுத்தன என கூறுகிறார் கலைப்புலி எஸ் தாணு.
தமிழ் சினிமாவில் உள்ள மிக முக்கியமான நடிகர்களில் ஜெயம் ரவிக்கும் முக்கிய இடம் உண்டு அதுவும் அவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் நடித்த பிறகு அவருக்கான மார்க்கெட் என்பது தமிழ் சினிமாவில் கொஞ்சம் அதிகரித்துள்ளது என்று கூறலாம்.
ஆனால் சமீபத்தில் வெளியான அகிலன் திரைப்படம் அவருக்கு எதிர்பார்த்த அளவிலான வெற்றியை கொடுக்கவில்லை. இருந்தாலும் அதை ஈடு கட்டும் விதமாக பொன்னியின் செல்வன் 2 ஒரு வெற்றியை கொடுத்துள்ளது. இயல்பு வாழ்க்கையில் மிகவும் ஜாலியான ஒரு மனிதனாக ஜெயம் ரவி இருக்கிறார்.
பல பேட்டிகளில் படப்பிடிப்பு தளங்களில் அவரது வீடியோக்களை பார்க்கும் பொழுது அதில் மிகவும் மகிழ்ச்சியாக ஜாலியாக அவர் இருப்பதை பார்க்க முடியும்.
இதனால் பொதுவாக ரசிகர்களை அதிகமாக சந்திப்பார் ஜெயம் ரவி. ஜெயம் ரவியின் மனைவி ஆடை அலங்காரம் குறித்த துறையில் பணிபுரிகிறார் அவரது சமூக வலைதளங்களில் தொடர்ந்து அது தொடர்பான பதிவுகளை போட்டு வருகிறார். பலருக்கும் தெரியாத விஷயம் மாடலிங் துறையில் உள்ள பலரும் ஜெயம் ரவியின் மனைவியை அறிவர்.
இது குறித்து ஜெயம் ரவி ஒரு பேட்டியில் கூறும்போது நான் சில பட படிப்பு தளங்களுக்கு போய்விட்டு வரும்பொழுது ரசிகர்கள் என்னை கூப்பிட்டு அண்ணா ரவின்னா நான் உங்கள் மனைவியை பாலோ செய்கிறேன் என கூறுவார்கள் என்று நகைச்சுவையாக கூறியிருந்தார்.
தமிழ் சினிமாவில் பல வருடங்களாக கனவாக இருந்த ஒரு திரைப்படத்தை நினைவாக்கியுள்ளார் மணிரத்தினம். தற்சமயம் வெளியாகி மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்படும் பொன்னியின் செல்வன் திரைப்படம் தான் அந்த கனவு.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மணிரத்தினத்தை தவிர வேறு எந்த இயக்குனர் எடுத்திருந்தாலும் இவ்வளவு சிறப்பாக வந்திருக்காது என்கிற பேச்சு சினிமா ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. அதேபோல இந்த படத்திற்கு சில எதிர்மறையான விமர்சனங்களும் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.
ஆனால் அதையெல்லாம் தாண்டி இந்த திரைப்படம் ஆயிரம் ஆண்டுகள் பழைய கதை எனும் போது, அதற்காக மணிரத்தினம் செய்த ஆய்வுகள் வேலைகள் மிகவும் சிறப்பானவை என கூறப்படுகின்றன. முக்கியமாக அந்த காலகட்டங்களில் பெண்கள் ஜாக்கெட் என்கிற ஆடையை அணிய மாட்டார்கள், அதை மிகவும் நுட்பமாக கையாண்டிருப்பார் மணிரத்தினம்.
இதற்கு முன்பு வந்த ராஜா காலத்து படங்கள் அனைத்திலும் பெண்கள் ஜாக்கெட் போன்ற உடையை அணிந்திருப்பதை பார்க்க முடியும், ஆனால் இந்த படத்தில் த்ரிஷாவோ அல்லது மற்ற பெண்களோ அந்த மாதிரியான ஆடை இல்லாமலே நடித்து இருப்பதை பார்க்க முடியும்.
ஆனால் அதையெல்லாம் தாண்டி உணவு விஷயத்தில் கூட மிகவும் நுட்பமாக கையாண்டு உள்ளார் மணிரத்தினம். இது குறித்து ஜெயம் ரவி ஒரு பேட்டியில் கூறும்போது ஒரு காட்சியில் அவர்கள் சாப்பிடும் உணவில் உருளைக்கிழங்கு வைக்கப்பட்டிருந்தது. அதை பார்த்த மணிரத்னம் கோபமாகியுள்ளார்.
ஆயிரம் வருடங்களுக்கு முன்பு உருளைக்கிழங்கு தமிழ்நாட்டில் இல்லவே இல்லை. பிறகு அதை எப்படி நீங்கள் சாப்பாட்டில் வைக்கலாம் இது பெரிய பிரச்சனையாக ஆகாதா? எனக் கூறி சண்டையிட்டுள்ளார் அதன் பிறகு உருளைக்கிழங்கு இல்லாமல் சாப்பாடு சமைக்கப்பட்டுள்ளது.
அதாவது ராஜராஜ சோழன் சாப்பிடும் சாப்பாடு கூட ஆயிரம் வருடம் முன்பு எந்த உணவுகள் இருந்ததோ அதை வைத்து செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் என்கிற வரை நுட்பமாக கவனித்துள்ளார் இயக்குனர் மணிரத்தினம்.
தற்சமயம் தமிழ் சினிமாவில் பெரும் பேசுபொருளாக இருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த கதையை கல்கி எழுதிய காலம் முதலே பலரும் திரைப்படமாக்க விரும்பினர்.
எம்.ஜி.ஆரும் கூட விரும்பினார். ஆனால் யாராலும் அதை படமாக்க முடியவில்லை. இறுதியாக இயக்குனர் மணிரத்னம்தான் இந்த கதையை படமாக்கியுள்ளார்.
இந்த படத்தை இளையராஜாவின் தம்பியான கங்கை அமரனும் கூட திரைப்படமாக்க ஆசைப்பட்டார். அதற்கு பிறகு தனது மகன் வெங்கட்பிரபுவை வைத்து அதை படமாக்க வேண்டும் என ஆசைப்பட்டார்.
எனவே பொன்னியின் செல்வன் புத்தகத்தை வாங்கி வெங்கட் பிரபுவிடம் கொடுத்த கங்கை அமரன் “இந்த கதையை முழுசா படி. இதை நீ படமாக்கணும்” எனக் கூறியுள்ளார். ஆனால் அதை இறுதிவரை வெங்கட்பிரபு படிக்கவே இல்லை.
அதன் பிறகு விஜய், அஜித்தை சந்தித்த கங்கை அமரன் அவர்களிடமும் கூட இந்த கதையை கூறியுள்ளார். பிறகு என் மகன் வெங்கட்பிரபு இந்த கதையை படமாக்கினால் அதில் நடிப்பீர்களா? என கேட்டுள்ளார்.
அதற்கு விஜய், அஜித்தும் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். ஆனால் வெங்கட்பிரபு அதில் பெரிதாக அபிப்ராயம் காட்டாத காரணத்தால் அதை இறுதிவரை அவரால் படமாக்க முடியவில்லை.
ஒருவேளை அப்போதே வெங்கட் பிரபு பொன்னியின் செல்வனை திரைப்படமாக்கியிருந்தால் அதில் இரண்டு மாஸ் ஹீரோக்களை சேர்த்து பார்த்திருக்க முடியும்.
விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் லியோ. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்பதாலேயே இந்த படத்திற்கு வரவேற்பு அதிகரித்துவிட்டது. மேலும் இந்த படம் கமல் நடித்த விக்ரம் திரைப்படத்தோடு கனெக்ட் ஆகும் என கூறப்படுகிறது.
இந்த வருடம் அக்டோபர் மாதம் இந்த படம் திரைக்கு வரவிருக்கிறது. இந்த நிலையில் இதற்கு போட்டியாக மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளிவந்த நிலையில் அதன் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் பலரும் எதிர்பார்ப்போடு காத்துக்கொண்டுள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தை விஜய் நடிக்கும் லியோவோடு வெளியிட்டால் அது லியோவின் வசூலை பாதிக்கும்.
எனவே லியோ படத்தோடு பொன்னியின் செல்வனை வெளியிடுவது சரியாக இருக்காது என தளபதி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வருடம் ஏப்ரல் மாதமே வெளியாக இருந்த பொன்னியின் செல்வன் திடீரென அக்டோபர் மாதத்திற்கு தள்ளி சென்றிருப்பதும் புரியாத விஷயமாகவே உள்ளது.
மலையாள சினிமாவில் முதன் முதலாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி. செகண்ட் ஹேண்ட் லவ்வர் என்கிற திரைப்படத்தில் 2015 ஆம் ஆண்டு கதாநாயகியாக அறிமுகமானார்.
அதன் பிறகு தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வந்தவர் 2019 ஆம் ஆண்டு ஆக்ஷன் திரைப்படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பதிவாகவில்லை.
ஆனால் பிறகு 2021 ஆம் ஆண்டு வந்த ஜகமே தந்திரம் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் தமிழ் சினிமாவில் இவர் வளர்வதற்கு முக்கிய படமாக அமைந்தது.
அதன் பிறகு பல படங்களுக்கு பிறகு போன வருடம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பூங்குழலி கதாபாத்திரம் மக்கள் மத்தியில் வெகுவாக பேசப்பட்டதை அடுத்து ஐஸ்வர்யா லெட்சுமி பிரபலமாக பேசப்பட்டார்.
அதற்கு பிறகு தற்சமயம் திரையில் சக்கை போடு போட்ட கட்டா குஸ்தி திரைப்படம் அவரது வாழ்க்கையின் முக்கிய படம் என கூறலாம். அதை தொடர்ந்து பல பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் ஐஸ்வர்யா.
இந்த நிலையில் சில அழகிய புகைப்படங்களை இவர் வெளியிட்டுள்ளார்.
ரசிகர்களால் வெகு காலமாக எதிர்பார்க்கப்பட்டு தமிழின் பெரும் பெரும் இயக்குனர்களே இயக்க நினைத்தும் வெகு காலமாக படமாக்கப்படாமல் ஆசையாகவே இருந்த படம் பொன்னியின் செல்வன்.
வெகு காலத்திற்கு பிறகு இந்த ஆண்டு அதன் முதல் பாகம் வெளியானது. கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம்,ஐஸ்வர்யா ராய், த்ரிஷா போன்ற பெரும் பிரபலங்கள் பலரும் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
இயக்குனர் மணிரத்னம் இந்த படத்தை இயக்கியிருந்தார். படப்பிடிப்பு நடக்கும்போதே இரண்டு படங்களையும் சேர்த்து எடுத்துவிட்டார் மணிரத்னம். முதல் பாகம் இந்த வருடம் வந்த நிலையில் அடுத்த பாகம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரலில் வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் படத்திற்கான டப்பிங் மற்றும் கிராபிக் வேலைகள் இன்னும் முடியவில்லை. இந்த நிலையில் படத்திற்கான அடுத்த அப்டேட் குறித்த போஸ்டரை லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதாவது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான அப்டேட் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் என நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இன்று அடுத்த பாகத்தின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது. அதன்படி படத்தின் வெளியீட்டு தேதியும் அதில் வெளியாகியுள்ளது. 28.ஏப்ரல் 2023 அன்று பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வருவதாக கூறப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் ஒரு கதாநாயகனின் சம்பளம் துவங்கி, இயக்குனரின் சம்பளம் வரை அனைத்தும் படத்தின் வசூலை வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது.
எனவே படத்தின் பாக்ஸ் ஆபிஸ் என்பது திரையுலகில் முக்கியமான விஷயமாக உள்ளது.
இந்த வருடம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் செய்த டாப் 10 திரைப்படங்களை இப்போது பார்க்கலாம்.
10.விருமன்
2டி எண்டர்டெயின்மெண்ட் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து வெளியான திரைப்படம் விருமன். இந்த படத்தில் நடிகர் கார்த்தி மற்றும் நடிகை அதிதி சங்கர் எடுத்திருந்தனர். இயக்குனர் முத்தையா இந்த படத்தை இயக்கியிருந்தார்.
குடும்பத்திற்குள் இருக்கும் பிரச்சனைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 60 கோடி ரூபாய் வசூல் செய்தது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்றாலும் நல்ல பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்த படமாக விருமன் உள்ளது.
09.லவ் டுடே
இந்த வருடம் மிகவும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு அதிக லாபம் பார்த்த திரைப்படம் லவ் டுடே. இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் அவரே இயக்கி அவரே நடித்திருந்த படமாக லவ் டுடே உள்ளது.
படத்தின் கதைப்படி இரு காதலர்கள் ஒரு நாளைக்கு இருவரது மொபைல் போன்களையும் மாற்றி கொள்கின்றனர். அதனால் அவர்களுக்குள் ஏற்படும் விரிசல்களை மையமாக வைத்து கதை செல்கிறது.
ஐந்து கோடிக்கு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 80 கோடிக்கு ஓடி வசூல் சாதனை படைத்தது.
08.வெந்து தணிந்தது காடு
இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவான திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தில் நடிகர் சிம்பு நடித்திருந்தார். ஜெயமோகனின் சிறுகதையை அடிப்படையாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது.
மும்பைக்கு கூலி வேலைக்கு செல்லும் கதாநாயகன் எப்படி அங்கு கேங்ஸ்டர் ஆகிறான் என்பதாக கதை செல்கிறது. இந்த படம் 80 கோடிக்கு ஓடி வசூல் சாதனை செய்தது.
07.சர்தார்
தமிழில் வித்தியாசமான கதைகளத்தை கொண்டு திரைப்படமெடுக்கும் இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சர்தார். இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிகர் கார்த்தி நடித்திருந்தார்.
சர்தார் என்னும் உளவாளி நாட்டிற்காக ஒரு உளவு வேலைக்கு செல்கிறார். அதில் தண்ணீர் தொடர்பான கார்பரேட் சதியை கண்டறியும் சர்தார் பிறகு அதை எப்படி தடுக்கிறார் என கதை செல்கிறது.
இந்த படம் 90 கோடி வசூல் சாதனை படைத்தது.
06.டான் மற்றும் மாநாடு
இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் தயாரான திரைப்படம் டான். இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருந்தார்.
ஒரு கல்லூரி மாணவனின் வாழ்க்கையை நகைச்சுவையாக கூறும் திரைப்படம் டான்.
மாநாடு திரைப்படம் இயக்குனர் வெங்கட் பிரபுவால் எடுக்கப்பட்ட முதல் தமிழ் டைம் லூப் திரைப்படமாகும். ஒரு மாநாட்டில் பெரிய மத கலவரம் நடக்க இருக்கும், அதை டைம் லூப் சக்தியை பயன்படுத்தி கதாநாயகன் எப்படி தடுக்கிறார் என்பதே கதை.
இந்த இரண்டு படங்களுமே 100 கோடி வசூல் செய்த படங்களாக உள்ளன.
05.திருச்சிற்றம்பலம்
நடிகர் தனுஷ் சிம்பிளான டெலிவரி பாயாக நடித்த படம் திருச்சிற்றம்பலம், படத்தில் ஒரு சண்டை காட்சிகள் கூட கிடையாது என்றாலும் எதார்த்த மனிதர்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாய் படம் இருந்ததால் நல்ல வரவேற்பை பெற்றது.
thiruchitrambalam poster
காதலிக்க ஒரு பெண்ணை தேடி வரும் கதாநாயகன், அதே சமயம் சிறு வயது முதல் அவருக்கு தோழியாக இருக்கும் கதாநாயகி, இவர்களின் வாழ்க்கையை வைத்து திரைப்படம் செல்கிறது.
இந்த படம் 90 முதல் 100 கோடி ஹிட் அடித்ததாக கூறப்படுகிறது.
04.வலிமை
இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான திரைப்படம் வலிமை. பல காலங்களாக ரசிகர்கள் காத்திருப்புக்கு பிறகு இந்த படம் வெளியானது.
படத்தின் கதைப்படி ஊருக்குள் திருட்டை செய்வதற்கு ஒரு பைக்கர் கும்பல் கிளம்பியுள்ளது. அந்த கும்பலை பிடிப்பதற்கு ஐ.பி.எஸ் அதிகாரியான கதாநாயகன் முயற்சிப்பதே கதை.
இந்த படம் கிட்டத்தட்ட 163 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்தது.
03.பீஸ்ட்
தளபதி விஜய் நடித்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவான திரைப்படம் பீஸ்ட்.
தீவிரவாதிகளால் சூழப்படும் சூப்பர் மார்க்கெட், அங்கு மாட்டிக்கொண்டு இருப்பவர்களில் ராணுவ வீரரான கதாநாயகனும் மாட்டிக்கொள்கிறார். அவர் அனைவரையும் காப்பாற்றுவதே படக்கதை
மொத்தம் 227 கோடிக்கு ஓடியுள்ளது பீஸ்ட்
02. விக்ரம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வெளியான திரைப்படம் விக்ரம். கைதி படத்தின் அடுத்த பாகமாக விக்ரம் எடுக்கப்பட்டது.
போதை பொருள் கடத்து கும்பலை எதிர்த்து நிற்கும் ஏஜெண்ட் விக்ரம் மற்றும் அவரது அணியை வைத்து கதை செல்கிறது. கமல்ஹாசன் எதிர்பார்த்ததை விடவும் இந்த படம் நல்ல வசூல் தந்தது.
மொத்தமாக 420 கோடி வசூல் செய்தது விக்ரம்.
01.பொன்னியின் செல்வன்
இந்த வருடம் வெளியான திரைப்படங்களிலேயே அதிக வசூல் சாதனை செய்த தமிழ் திரைப்படம் பொன்னியின் செல்வன். ராஜ ராஜ சோழன் குறித்து கல்கி எழுதிய புனைவு நாவலான பொன்னியின் செல்வனை அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது.
சோழர்களை வீழ்த்துவதற்கு நடக்கும் சூழ்ச்சி. அதனை கண்டறிந்து சோழர்களிடம் சொல்ல பயணப்படும் வந்தியதேவன். ஆகிய விஷயங்களை கொண்டு இந்த படம் செல்கிறது.
கிட்டத்தட்ட 500 கோடி வசூல் செய்தது பொன்னியின் செல்வன் திரைப்படம்.
Tamil Cinema News Today – Latest Updates, Reviews,Gossips