Tag Archives: மணிரத்னம்

எல்லாத்துக்கும் சேர்த்து அழ விட்டுட்டார்.. கமல்ஹாசனை கண் கலங்க வைத்த இயக்குனர்.!

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்கள் என்று வரிசைப்படுத்தினால் அதில் முக்கியமான இடத்தை பிடித்தவராக நடிகர் கமல்ஹாசன் இருப்பார். நடிகர் கமல்ஹாசன் நடித்த பல்வேறு திரைப்படங்கள் உலக அளவில் பிரபலமானவை என்று கூறலாம்.

அவர் நடித்த ஹேராம் ஆளவந்தான் மாதிரியான திரைப்படங்கள் எல்லாமே இந்திய அளவிலேயே பெரிய பெரிய நடிகர்களை வாய் பிழக்க வைக்கும் திரைப்படங்கள் என்று கூறலாம்.

அப்படியான வரிசையில் நாயகன் திரைப்படம் மிக முக்கியமான ஒரு திரைப்படம் ஆகும். நாயகன் திரைப்படம் வெளியான காலகட்டத்தில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் கூட இயக்குனர் மணிரத்தினத்திற்கும் கமல்ஹாசனுக்கும் மிகப்பெரிய அடையாளத்தை பெற்று கொடுத்த திரைப்படமாக அது இருக்கிறது.

இந்த நிலையில் அந்த திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து கமல்ஹாசன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். கமல்ஹாசனின் மகன் இறக்கும் காட்சி ஒன்று நாயகன் திரைப்படத்தில் வரும்.

அந்த காட்சியில் நன்றாக அழ வேண்டும் என்பதற்காக தயாராக இருந்தாலும் கமலஹாசன் அந்த சமயத்தில் ஃபிலிம் ரோல் தீர்ந்துவிட்டது என்று கூறி படப்பிடிப்பை நிறுத்தி இருக்கின்றனர்.

இது கமல்ஹாசனுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த காட்சிக்காக கண்ணீர் விட்டு அழ தயாரான பிறகு படப்பிடிப்பை எப்படி நிறுத்தலாம் என்று கூறி என்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து பிலிம் ரோலை கொண்டு வந்து அன்றைய காட்சியை படமாக்கினேன்.

அப்பொழுது என்னுடைய அழுகை மிகத் தத்ரூபமாக இருப்பதை பார்த்து மணிரத்தினம் என்னிடம் கேட்டார். அப்பொழுது நான் இந்த படப்பிடிப்பில் நடந்த கூத்துகளுக்கும் சேர்த்து தான் கண்ணீர் விட்டு அழுது இருக்கிறேன் என்று கூறினேன் என்று அந்த நிகழ்வை பகிர்ந்து இருக்கிறார் கமல்ஹாசன்.

10 வயசுல எனக்கு வந்த ஆசை… ஒரு தடவையாவது வாழ்நாளில் பண்ணிடனும்.. சாய் பல்லவியின் அந்த ஆசை என்ன தெரியுமா?

தமிழில் அதிக வரவேற்பை பெற்று வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சாய் பல்லவி. முதன்முதலாக மலையாளத்தில் பிரேமம் என்கிற திரைப்படம் மூலமாக சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை சாய் பல்லவி.

அதனை தொடர்ந்து சாய் பல்லவிக்கு தென்னிந்திய சினிமாவில் வாய்ப்புகளும் வரவேற்புகளும் அதிகரிக்க துவங்கின. பிறகு தெலுங்கு சினிமாவில் அதிகமாக வாய்ப்புகளைப் பெற்று வந்த சாய் பல்லவி தொடர்ந்து தமிழிலும் வாய்ப்புகளைப் பெற்று வருகிறார்.

தமிழில் மாநாடு 2 கார்கி மாதிரியான திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக அவருக்கு வரவேற்புகள் அதிகமாக கிடைத்தது. தற்சமயம் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அமரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார் சாய் பல்லவி.

சாய் பல்லவியின் ஆசை:

இந்த நிலையில் சாய்பல்லவி சமீபத்தில் அமரன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஷயங்கள் வைரலாகி வருகிறது. அதில் பேசிய சாய் பல்லவி கூறும் பொழுது எனக்கு சிறுவயதிலிருந்தே மணிரத்தினம் சாரை மிகவும் பிடிக்கும்.

எனக்கு பத்து வயதாக இருக்கும் பொழுது மணிரத்தினம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தை பார்த்தேன். அந்த திரைப்படம் எனக்குள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அப்பொழுது இந்த மாதிரி நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்துதான் படங்களில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

அந்த பத்து வயதிலேயே எனக்கு மணிரத்னம் சார் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்தது. இப்போது வரை அது எனது வாழ்நாள் கனவாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார். கண்டிப்பாக இதை பார்க்கும் மணிரத்தினம் அடுத்த படங்களில் சாய் பல்லவிக்கு வாய்ப்பு கொடுப்பார் என்று இது குறித்து ரசிகர்கள் பதிலளித்து வருகின்றனர்.

படமே எடுக்க தெரியாமதான் நாயகன் எடுத்தாரா மணி சார்!.. கிழித்து தொங்கவிடும் தயாரிப்பாளர்…

தமிழ் சினிமா இயக்குனர்களில் மணிரத்னத்திற்கு தனியான இடம் உண்டு. சினிமாவில் காட்சி படுத்தும் விதம் என்பது அனைத்து இயக்குனருக்கும் சரியாக வந்துவிடாது. ஆனால் மணிரத்னம் அதனை சிறப்பாக செய்வார். ரோஜா, நாயகன், தளபதி போன்ற பல படங்களில் அவரது காட்சி அமைப்புகள் சிறப்பாக அமைந்திருப்பதை பார்க்க முடியும்.

இதனால் மணிரத்னத்திற்கு ஒரு பெரும் ரசிக வட்டாரமே உண்டு என கூறலாம். ஆனால் அப்படிப்பட்ட மணிரத்னத்தை இயக்குனர் முக்தா ஸ்ரீனிவாசனின் மகன் பங்கம் செய்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார். முக்தா ஸ்ரீனிவாசன்தான் நாயகன் படத்தின் தயாரிப்பாளர் ஆவார்.

இவர் இந்த நாயகன் படத்தின் உருவாக்கம் குறித்து சில செய்திகளை பகிர்ந்துள்ளார். நாயகன் திரைப்படத்தில் கமலுக்கு சம்பளமாக 20 லட்சம் முடிவு செய்ப்பட்டது. அப்போதைய காலக்கட்டத்தில் கதாநாயகனுக்கு 20 லட்சம் செலவு செய்தால் படம் ஒரு கோடிக்கு ஓட வேண்டும். அப்படி ஓடினால்தான் படம் ஹிட் என அர்த்தம்.

ஆனால் நாயகன் திரைப்படம் படு தோல்வியை கண்டது. மேலும் படப்பிடிப்பை 30 நாட்களில் முடிப்பதாக கூறிய மணிரத்னம் கிட்டத்தட்ட 100 நாட்களுக்கும் அதிகமாக நாட்களை எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் அதிக நடிகர்களை படத்தில் இறக்கி அனைவருக்கும் சம்பளம் கொடுத்து படத்தின் தயாரிப்பு செலவையும் அதிகரித்துவிட்டுள்ளார்.

மொத்தத்தில் படப்பிடிப்பு குறித்து பெரிதாக எதுவுமே தெரியாமல்தான் நாயகன் படத்தை அவர் இயக்கினார் என கூறப்படுகிறது. ஆனால் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை அவரும் தயாரிக்கிறார் என்றவுடன் அதை மட்டும் குறைந்த செலவில் எடுத்து முடித்து விட்டார் என மணிரத்னம் குறித்து கூறியிருந்தார் முக்தா ரவி.

உருளை கிழங்கால் பொன்னியில் செல்வன் படப்பிடிப்பில் நடந்த சண்டை… சுவாரஸ்யமா இருக்கே?

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக கனவாக இருந்த ஒரு திரைப்படத்தை நினைவாக்கியுள்ளார் மணிரத்தினம். தற்சமயம் வெளியாகி மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்படும் பொன்னியின் செல்வன் திரைப்படம் தான் அந்த கனவு.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மணிரத்தினத்தை தவிர வேறு எந்த இயக்குனர் எடுத்திருந்தாலும் இவ்வளவு சிறப்பாக வந்திருக்காது என்கிற பேச்சு சினிமா ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. அதேபோல இந்த படத்திற்கு சில எதிர்மறையான விமர்சனங்களும் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.

ஆனால் அதையெல்லாம் தாண்டி இந்த திரைப்படம் ஆயிரம் ஆண்டுகள் பழைய கதை எனும் போது, அதற்காக மணிரத்தினம் செய்த ஆய்வுகள் வேலைகள் மிகவும் சிறப்பானவை என கூறப்படுகின்றன. முக்கியமாக அந்த காலகட்டங்களில் பெண்கள் ஜாக்கெட் என்கிற ஆடையை அணிய மாட்டார்கள், அதை மிகவும் நுட்பமாக கையாண்டிருப்பார் மணிரத்தினம்.

 இதற்கு முன்பு வந்த ராஜா காலத்து படங்கள் அனைத்திலும் பெண்கள் ஜாக்கெட் போன்ற உடையை அணிந்திருப்பதை பார்க்க முடியும், ஆனால் இந்த படத்தில் த்ரிஷாவோ அல்லது மற்ற பெண்களோ அந்த மாதிரியான ஆடை இல்லாமலே நடித்து இருப்பதை பார்க்க முடியும்.

ஆனால் அதையெல்லாம் தாண்டி உணவு விஷயத்தில் கூட மிகவும் நுட்பமாக கையாண்டு உள்ளார் மணிரத்தினம். இது குறித்து ஜெயம் ரவி ஒரு பேட்டியில் கூறும்போது ஒரு காட்சியில் அவர்கள் சாப்பிடும் உணவில் உருளைக்கிழங்கு வைக்கப்பட்டிருந்தது. அதை பார்த்த மணிரத்னம் கோபமாகியுள்ளார்.

 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு உருளைக்கிழங்கு தமிழ்நாட்டில் இல்லவே இல்லை. பிறகு அதை எப்படி நீங்கள் சாப்பாட்டில் வைக்கலாம் இது பெரிய பிரச்சனையாக ஆகாதா? எனக் கூறி சண்டையிட்டுள்ளார் அதன் பிறகு உருளைக்கிழங்கு இல்லாமல் சாப்பாடு சமைக்கப்பட்டுள்ளது.

அதாவது ராஜராஜ சோழன் சாப்பிடும் சாப்பாடு கூட ஆயிரம் வருடம் முன்பு எந்த உணவுகள் இருந்ததோ அதை வைத்து செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் என்கிற வரை நுட்பமாக கவனித்துள்ளார் இயக்குனர் மணிரத்தினம்.

மணி சார் படமா இருக்கலாம்… அதுக்காகவெல்லாம் கேப்டனை மிஞ்சிட முடியாது!… படப்பிடிப்பில் கெத்து காட்டிய விஜயகாந்த்!..

எவ்வளவோ காலங்கள் ஆன பிறகும் தமிழ் சினிமாவில் மாறாமல் இருக்கிற விஷயம் என்றால் அது ஊழியர்களுக்கு நடுவே இருக்கும் ஏற்ற இறக்க பிரச்சனைகள் தான்.

தமிழ் சினிமாவில் உணவு கூட பெரும் நடிகர்களுக்கு நல்ல உணவும், சின்ன சின்ன ஊழியர்களுக்கு சாதாரண உணவும் கொடுக்கும் பழக்கம் இப்போது வரை தமிழ் சினிமாவில் உண்டு

ஆனால் அதை மாற்றி அமைக்க நினைத்த ஒரே நடிகர் என்றால் அது நடிகர் விஜயகாந்த்தான். விஜயகாந்த் அவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் ஊழியர்கள் என்ன சாப்பிடுகிறார்களோ அதைதான் விஜயகாந்த்தும் சாப்பிடுவார் விஜயகாந்திற்கு என்று தனி உணவு வராது.

அவருக்கு ஒரு ஜூஸ் கொடுத்தால் கூட அதை மற்ற ஊழியர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்கிற நிலை விஜயகாந்த் திரைப்படத்தில் இருக்கும். இதற்காக ஒவ்வொரு படத்திலும் அவரது சம்பளத்திலிருந்து 10 லட்ச ரூபாயை உணவுக்காக கொடுத்துவிடுவார்.

இந்த நிலையில் மணிரத்தினம் இயக்கிய நாயகன் திரைப்படத்தின் படப்பிடிப்பு அப்பொழுது ஒரு செட்டில் நடந்து கொண்டிருந்தது. அதற்கு பக்கத்து செட்டில் விஜயகாந்த் நடித்த உழவன் மகன் என்கிற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது. உழவன் மகன் திரைப்படம் ஒரு சின்ன பட்ஜெட் திரைப்படம்.

ஆனால் நாயகன் படப்பிடிப்பு நடந்த செட்டில் ஊழியர்களுக்கு தக்காளி சாதமும், புளி சாதமும் உணவாக வழங்கப்பட்டு கொண்டு வந்தது. ஆனால் விஜயகாந்த் நடித்த உழவன் மகன் படத்தின் செட்டில் அனைவருக்கும் கறி சாப்பாடு வழங்கப்பட்டு வந்தது. என்னதான் கமல் பெரிய நாயகன் என்றாலும் விஜயகாந்துக்கு இருந்த அந்த பெரிய மனது பெரிய நடிகர்களுக்கு கூட இல்லை என அப்போதே அந்த நிகழ்வு விமர்சனத்திற்கு உள்ளானது. 

ரஜினிக்கு போட்ட பாட்டு! பிடிக்கலைனு மணி சார்ட்ட கொடுத்துட்டேன்! – நல்ல பாட்டை தவறவிட்ட ரஜினி பட இயக்குனர்!

தமிழ் சினிமாவில் நல்ல நல்ல பாடல்களை இயக்குனர்கள் தவறால் இழக்கும் சம்பவங்கள் பல நடந்திருக்கின்றன. ஒவ்வொரு படத்திற்கும் படத்திற்கான மொத்த இசையை இசையமைப்பாளர்கள்தான் இசைப்பார்கள். அப்போது அவர்களுக்கு பிடித்த மாதிரி சில இசைகளையும் அதில் அவர்கள் சேர்ப்பார்கள்.

ஆனால் இயக்குனர்களுக்கு அது பிடிக்கவில்லை எனில் அதை இசையமைப்பாளர்கள் மாற்ற வேண்டி இருக்கும். அந்த மாதிரி இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானுக்கும் கூட ஒரு சம்பவம் நடந்தது. 2014 ஆம் ஆண்டு இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து லிங்கா படம் வெளியானது.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். அந்த படத்தில் காதல் காட்சிகளுக்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கும்போது அவருக்கு பிடித்த வகையிலான பாடல் ஒன்றை இசையமைத்திருந்தார். ரஜினியின் ப்ளாஷ்பாக் கதையில் இந்த இசை பயன்படுத்த இருந்தது.

ஆனால் இந்த இசை கே.எஸ் ரவிக்குமாருக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. இதற்கு மாற்றாக வேறு எதேனும் இசையை போட்டு தாருங்கள் என வேறு இசையை வாங்கி சென்றார். அதற்கு பிறகு மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி திரைப்படத்திற்கு இசையமைப்பதற்கான வாய்ப்பு ஏ.ஆர் ரகுமானுக்கு வந்தது.

இந்த சமயத்தை பயன்படுத்திக்கொண்ட ஏ.ஆர் ரகுமான் அவரிடம் இந்த இசையை போட்டுக்காட்டியுள்ளார். அந்த இசை கேட்ட உடனே மணிரத்னத்திற்கு பிடித்துவிட்டது. உடனே அந்த படத்தில் அது சின்னஞ்சிறு ரகசியமே என்னும் பாடலாக அதை மாற்றி அமைத்தனர். ஓ.கே கண்மணி படம் வெளியான பிறகு அந்த இசை மிகவும் பிரபலமானது.

பேன் இந்தியா லெவலில் தயாராகும் கமல் படம்! – மொத்தம் 8 ஹீரோவாம்!

விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல் வரிசையாக பெரும் பட்ஜெட் படங்களில் நடிக்க இருக்கிறார். தற்சமயம் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து கொண்டுள்ளார்.

விக்ரம் படத்தின் இரண்டாம் பாகம் வருவதற்கு இன்னும் கொஞ்சம் நாட்கள் ஆகும் என்பதால் அதற்கு ஓரிரு படங்களில் நடித்துவிடலாம் என யோசித்து வருகிறார் கமல். இந்த நிலையில் தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித், ஹெச்.வினோத், வெற்றி மாறன் போன்ற இயக்குனர்களிடம் படம் நடிப்பது பற்றி பேசி வருகிறார்.

இதற்கு நடுவே இயக்குனர் மணிரத்னம் திரைப்படத்தில் வேறு கமல் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ஒரு பேன் இந்தியா படமாக எடுக்க திட்டமிட்டுள்ளாராம் மணிரத்னம். அதனால் மொத்தமாக இந்த படத்தில் 8 பேர் கதாநாயகனாக நடிக்கிறார்களாம்.

ஒவ்வொரு மாநிலத்திலும் பெரும் நட்சத்திரமாக இருக்கும் நடிகர்களை ஒன்று திரட்டி இந்த படத்தை மணிரத்னம் இயக்க போவதாக கூறப்படுகிறது. அதற்கான முதல் கட்டமாக ஹிந்தியில் இருந்து ஷாருக்கானை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்து ஷாருக்கானிடம் பேச்சு வார்த்தை போய்க்கொண்டுள்ளதாம்.

தமிழில் இதுவரை எந்த படமும் 1000 கோடி ரூபாய் வசூல் சாதனை படைக்கவே இல்லை. ஒருவேளை மணிரத்னம் அதற்கான ஒரு முயற்சியாக இதை செய்கிறாரோ என சினி வட்டாரத்தில் பேச்சுக்கள் உள்ளன.

பொன்னியின் செல்வன் அடுத்த பாகம் அப்டேட்! – சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு!

ரசிகர்களால் வெகு காலமாக எதிர்பார்க்கப்பட்டு தமிழின் பெரும் பெரும் இயக்குனர்களே இயக்க நினைத்தும் வெகு காலமாக படமாக்கப்படாமல் ஆசையாகவே இருந்த படம் பொன்னியின் செல்வன்.

வெகு காலத்திற்கு பிறகு இந்த ஆண்டு அதன் முதல் பாகம் வெளியானது. கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம்,ஐஸ்வர்யா ராய், த்ரிஷா போன்ற பெரும் பிரபலங்கள் பலரும் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

இயக்குனர் மணிரத்னம் இந்த படத்தை இயக்கியிருந்தார். படப்பிடிப்பு நடக்கும்போதே இரண்டு படங்களையும் சேர்த்து எடுத்துவிட்டார் மணிரத்னம். முதல் பாகம் இந்த வருடம் வந்த நிலையில் அடுத்த பாகம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரலில் வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் படத்திற்கான டப்பிங் மற்றும் கிராபிக் வேலைகள் இன்னும் முடியவில்லை. இந்த நிலையில் படத்திற்கான அடுத்த அப்டேட் குறித்த போஸ்டரை லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதாவது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான அப்டேட் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் என நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இன்று அடுத்த பாகத்தின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது. அதன்படி படத்தின் வெளியீட்டு தேதியும் அதில் வெளியாகியுள்ளது. 28.ஏப்ரல் 2023 அன்று பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வருவதாக கூறப்பட்டுள்ளது.

டீசர் வீடியோவை காண இங்கு க்ளிக் செய்யவும்

ரொம்ப பொறுமையா வேலை பாக்குறீங்க? – ரஹ்மான் மீது வைரமுத்து வைத்த குற்றச்சாட்டு!

சினிமாவிற்கு ஏ.ஆர் ரகுமான் வந்த ஆரம்பக்காலம் முதலே வைரமுத்து அவருடன் நல்ல நட்பில் இருந்துள்ளார். இருவரும் கிட்டத்தட்ட 22 வருடங்களுக்கு மேலாக நட்பில் இருந்து வருகின்றனர்.

சினிமாவிற்கு வந்த சமயத்தில் ஏ.ஆர் ரகுமானுக்கு அதிகமாக வாய்ப்புகள் கொடுத்தவர் இயக்குனர் மணிரத்னம். ரோஜா திரைப்படத்திற்கு பிறகு ஏ.ஆர் ரகுமானின் புகழ் இந்திய சினிமா முழுவதும் பரவியது.

ஆனால் அதற்கு பிறகு இசையமைத்த படங்களுக்கு எல்லாம் மிகவும் தாமதமாக இசையமைத்து கொடுத்தார் ஏ.ஆர் ரகுமான். அப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் ஒரு வாரத்திலேயே படத்திற்கான இசையை போட்டு தந்துவிடுவார்கள்.

ஆனால் ஏ.ஆர் ரகுமான் மட்டும் மாதக்கணக்கில் நாட்கள் எடுத்துக்கொண்டு இசையமைத்துக்கொண்டிருந்தார். அந்த சமயங்களில் வைரமுத்து அவருக்கு நல்ல பழக்கத்தில் இருந்தார்!. இப்படி ஏ.ஆர் ரகுமான் தாமதமாக இசையமைப்பது குறித்து பல சர்ச்சைகள் வரவே இதுக்குறித்து ரகுமானிடம் பேசினார் வைரமுத்து.

அப்போது வைரமுத்து “ரகுமான் நீங்கள் மிகவும் தாமதமாக இசையமைத்து தருகிறீர்கள். அனைத்து படத்திற்கும் சற்று சீக்கிரம் இசையமைத்து தந்தால் நன்றாக இருக்கும்” என கூறியுள்ளார்.

அதற்கு ஏ.ஆர் ரகுமான் கூறியதாவது, “சார் நான் ஒரு பாடலுக்கு ஒரு மணி நேரத்தில் கூட இசையமைத்து தந்துவிடுவேன். ஆனால் நான் இசையமைக்கும் அனைத்து பாடல்களுமே தனித்துவமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். எனவேதான் அதற்காக இவ்வளவு நாட்களை எடுத்துக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

மணிரத்னமும் கூட சிறந்த இசை வேண்டும் என்பதால் நாட்கள் அதிகம் ஆனாலும் பரவாயில்லை என்று ஏ.ஆர் ரகுமானுக்கு ஆதரவாகவே இருந்துள்ளார். அதனால்தான் இப்போதும் கூட அந்த பாடல்கள் அனைத்தும் ஒரு புதிய இசையாகவே நமக்கு தெரிகிறது.

நான் ஊர்ல இல்லாத சமயமா பார்த்து இப்படி செஞ்சிட்டாங்க – மணிரத்னம் ஏ.ஆர் ரகுமான் குறித்து வைரமுத்து குற்றச்சாட்டு!

ஏ.ஆர் ரகுமான், மணிரத்னம், வைரமுத்து காம்போ என்பது 25 வருடங்களுக்கும் அதிகமாக நீடித்து வரும் ஒரு கூட்டணி ஆகும். ரோஜாவில் துவங்கி பல படங்கள் இவர்கள் மூவரும் ஒன்றாகவே பயணித்தனர்.

இறுதியாக வந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு மட்டும் பாடலாசிரியரை மாற்றியிருந்தனர்.  இவர்கள் கூட்டணியில் 2015 ஆம் ஆண்டு வந்த திரைப்படம்தான் ஓ காதல் கண்மணி.

ஓ காதல் கண்மணி திரைப்படத்தில் அனைத்து பாடல்களுமே ஹிட் அடித்தன. அந்த படத்தில் மெண்டால் மனதில் என்ற பாடலுக்கு மட்டும் ஏ.ஆர் ரகுமானும், மணிரத்னமும் சேர்ந்து பாடல் வரிகளை எழுதி இருந்தனர்.

இதுக்குறித்து ஒரு பேட்டியில் வைரமுத்துவிடம் கேட்கப்பட்டது. அப்போது வைரமுத்து கூறும்போது நான் விடுமுறை எடுத்துக்கொண்டு அப்போது வெளிநாட்டிற்கு சென்றிருந்தேன். அந்த சமயம் பார்த்து இவர்களே பாடல் வரிகளை எழுதிவிட்டனர்.

இதன் மூலம் தெரிந்துக்கொண்ட விஷயம் என்னவென்றால் இனி பாடல் எழுதுகிற காலத்தில் நான் வெளியூருக்கு செல்ல கூடாது” என நகைச்சுவையாக பதிலளித்துள்ளார் வைரமுத்து.

வைரமுத்து பாடல் வரிகள் எழுதவில்லை என்றாலும் அந்த பாடலும் நல்ல ஹிட் கொடுத்தது.

என்னையவா டிஸ்டர்ப் பண்றிங்க? – போலீஸ்க்கு போன் போட்ட மணி சார்!

தமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் மீது மக்களுக்கு தனி மரியாதை உண்டு. சினிமா துறையில் அவர்களது திறமையை கண்டு பலரும் அவர்களுக்கு ரசிகர்களாக ஆவது உண்டு.

அதே போல தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் பலரும்  மணிரத்னத்திற்கு மிகப்பெரிய ரசிகர்களாக இருந்து வருகின்றனர். ஆனால் சில நாட்களுக்கு முன்பு மணிரத்னத்துடன் மன கசப்பு ஏற்படும் வகையில் ஒரு இயக்குனருக்கு சில சம்பவங்கள் நடந்ததாக கூறப்படுகிறது.

தமிழில் சில படங்கள் மட்டும் எடுத்துள்ள இயக்குனர்தான் சாந்தக்குமார், இவர் மெளனகுரு மாதிரியான படங்களை இயக்கியுள்ளார். தற்சமயம் கூட ஒரு படம் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்தது.

அதே கொடைக்கானலில் இவர்களுக்கு படப்பிடிப்பு தளத்திற்கு சிறிது தொலைவில் இயக்குனர் மணிரத்னத்தின் கெஸ்ட் ஹவுஸ் உள்ளது. படப்பிடிப்பு சமயத்தில் மணிரத்னம் அங்கு தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அது மணிரத்னத்தின் கெஸ்ட் ஹவுஸ் என்பது படப்பிடிப்பு குழுவிற்கு தெரியாது. இந்நிலையில் படப்பிடிப்பின்போது தவறுதலாக லைட் மணிரத்னத்தின் வீட்டின் மேல் அடித்துள்ளது.

இதனால் கோபமான மணிரத்னம் போலீஸ்க்கு போன் செய்துள்ளார். அவர்கள் வந்து இதுக்குறித்து படக்குழுவிடம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து படக்குழு மனம் வருந்தியதாக கூறப்படுகிறது.

சின்ன மணிரத்னம்தான் நம்ம ஏ.ஆர் முருகதாஸ் – பேட்டியில் பேசிய எஸ்.ஜே சூர்யா

தமிழின் மிகப்பெரும் இயக்குனர்களில் முக்கியமானவர் மணிரத்னம். தமிழில் ஒரு சில இயக்குனர்களுக்குதான் தனியாக ஒரு ரசிகர் வட்டம் இருக்கும். அப்படி ஒரு ரசிக வட்டாரத்தை கொண்டவர் மணிரத்னம்.

இந்நிலையில் உறுமி திரைப்படம் வெளியான சமயத்தில் அதன் இசை வெளியீட்டு விழாவிற்கு சென்றுள்ளார் எஸ்.ஜே சூர்யா. அந்த விழாவில் உறுமி படம் குறித்து அவர் பேசியுள்ளார்.

அப்போது அந்த விழாவில் விஜய் மற்றும் ஏ.ஆர் முருகதாஸ் இருவருமே இருந்தனர். அப்போதுதான் துப்பாக்கி திரைப்படத்திற்கான பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்ததாம். அந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

அப்போது அந்த மேடையில் துப்பாக்கி குறித்து பேசிய எஸ்.ஜே சூர்யா, “இயக்குனர் மணிரத்னம் ரஜினியை வைத்து தளபதி படத்தை இயக்கியபோது அவர்கள் இருவருக்கும் இடையே நல் உறவை உருவாக்கி ஒரு தூணாக இருந்தவர் சந்தோஷ் சிவன். தற்சமயம் நமது சின்ன மணிரத்னமான ஏ.ஆர் முருகதாஸ் இயக்கி விஜய் நடிக்கும் துப்பாக்கிக்கும் ஒரு தூணாக இருப்பார் என நம்புகிறேன்” என கூறியுள்ளார்.

ஏற்கனவே அப்போது விமர்சனத்தில் இருந்தார் ஏ.ஆர் முருகதாஸ். அவரை இயக்குனர் மணிரத்னத்தோடு ஒப்பிட்டு பேசியதை அப்போது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என கூறப்படுகிறது.