ரசிகர்களால் வெகு காலமாக எதிர்பார்க்கப்பட்டு தமிழின் பெரும் பெரும் இயக்குனர்களே இயக்க நினைத்தும் வெகு காலமாக படமாக்கப்படாமல் ஆசையாகவே இருந்த படம் பொன்னியின் செல்வன்.

வெகு காலத்திற்கு பிறகு இந்த ஆண்டு அதன் முதல் பாகம் வெளியானது. கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம்,ஐஸ்வர்யா ராய், த்ரிஷா போன்ற பெரும் பிரபலங்கள் பலரும் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
இயக்குனர் மணிரத்னம் இந்த படத்தை இயக்கியிருந்தார். படப்பிடிப்பு நடக்கும்போதே இரண்டு படங்களையும் சேர்த்து எடுத்துவிட்டார் மணிரத்னம். முதல் பாகம் இந்த வருடம் வந்த நிலையில் அடுத்த பாகம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரலில் வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் படத்திற்கான டப்பிங் மற்றும் கிராபிக் வேலைகள் இன்னும் முடியவில்லை. இந்த நிலையில் படத்திற்கான அடுத்த அப்டேட் குறித்த போஸ்டரை லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதாவது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான அப்டேட் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் என நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இன்று அடுத்த பாகத்தின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது. அதன்படி படத்தின் வெளியீட்டு தேதியும் அதில் வெளியாகியுள்ளது. 28.ஏப்ரல் 2023 அன்று பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வருவதாக கூறப்பட்டுள்ளது.
டீசர் வீடியோவை காண இங்கு க்ளிக் செய்யவும்