Latest News
புத்தகம் எழுதுவதும் சினிமாவும் ஒன்றல்ல! – இயக்குனர் பாரதிராஜா
கோலிவுட் சினிமாவில் இயக்குனர்களின் இமயம் என அழைக்கப்படுபவர் பாரதிராஜா. தமிழ் திரையுலகில் பல ஹிட் படங்கள் கொடுத்தவர் பாரதிராஜா என சொல்லலாம்.
தற்சமயம் தொடர்ந்து பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இறுதியாக திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் தனுஷிற்கு தாத்தாவாக நடித்திருந்தார்.
தற்சமயம் தங்கர் பச்சன் இயக்கும் கருமேகங்கள் கலைகின்றன என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்றுக்கொண்டுள்ளன. இதுக்குறித்து பாரதி ராஜா கூறும்போது எதார்த்தமான வாழ்க்கையை சிறப்பாக படமாக்ககூடியவர் தங்கபச்சன்.
எழுதுவது என்பது வேறு, திரைப்படம் என்பது வேறு ஆனால் இரண்டையுமே சிறப்பாக செய்யக்கூடியவர் தங்கர்பச்சன் என தங்கர்பச்சனை புகழ்ந்து கூறியுள்ளார்.
மேலும் இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என பத்திரிக்கையாளர்களிடம் பாரதிராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.