Connect with us

உன் மூஞ்சிக்கெல்லாம் அதுக்கு ஆசைப்படாத!.. பாரதிராஜாவை நேரடியாக பேசிய பிரபலம்!.

bhrathiraja

Cinema History

உன் மூஞ்சிக்கெல்லாம் அதுக்கு ஆசைப்படாத!.. பாரதிராஜாவை நேரடியாக பேசிய பிரபலம்!.

Social Media Bar

தமிழ் சினிமாவில் உள்ள இயக்குனர்களுக்கெல்லாம் குருவாக இருப்பவர் இயக்குனர் பாரதிராஜா. பெரும்பாலும் பாரதிராஜா இயக்கும் திரைப்படங்கள் எல்லாம் கிராமபுறங்களில் நடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டுதான் இருக்கும்.

ஆனால் அவற்றை பாரதிராஜா எவ்வளவு சுவாரஸ்யமாக காட்டுகிறார் என்பதை வைத்துதான் அந்த படத்தின் வெற்றியே அமையும். ஆரம்பத்தில் சினிமாவில் வாய்ப்புகள் தேடிய காலக்கட்டங்களில் பாரதிராஜா ஒரு ஆண்கள் விடுதியில் தங்கிதான் வாய்ப்பு தேடி வந்து கொண்டிருந்தார்.

அந்த காலத்தில்தான் இளையராஜாவும் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்திருந்தார். பொதுவாகவே சினிமாவில் வாய்ப்பு தேடுபவர்களுக்கு இடையே நட்பு ஏற்படும் என்பதால் இளையராஜாவுடன் பாரதிராஜாவிற்கு நட்பு உண்டானது.

தங்க இடம் இல்லாமல் இருந்த இளையராஜாவிற்கு தான் தங்கியிருந்த ஹாஸ்டலில் இடம் கொடுத்தார் பாரதிராஜா. இந்த நிலையில் இவர்கள் இருவரது வாழ்க்கையிலும் பாஸ்கரன் என்பவர்தான் பெரும் மாற்றத்தை செய்ததாக கங்கை அமரன் கூறுகிறார்.

ஆரம்பத்தில் கதாநாயகனாக வேண்டும் என்பதுதான் பாரதிராஜாவின் கனவாக இருந்தது. ஆனால் அவரிடம் பேசிய பாஸ்கர் உன் மூஞ்சுக்கு எல்லாம் நீ கதாநாயகனாக ஆக முடியாது. நிறையை இளைஞர்கள் வரிசையாக கதாநாயகர்களாக நடித்து கொண்டு வருகின்றனர்.

எனவே நீ இயக்குனராவதற்கு முயற்சி செய் என கூறி அப்போது தெலுங்கு இயக்குனராக இருந்த சுப்பண்ணாவிடம் சேர்த்துவிட்டார். அதன் பிறகு அதுவே பாரதிராஜா திரைத்துறையில் பெரும் இடத்தை பிடிக்க உதவியது என்கிறார் கங்கை அமரன்.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
biggboss
To Top