Connect with us

பாரதிராஜா படத்தை விடவும் படிப்புதான் முக்கியம்!..வந்த வாய்ப்பை வேண்டாம் என்ற நடிகை!.

bharathiraja actress shobana

Cinema History

பாரதிராஜா படத்தை விடவும் படிப்புதான் முக்கியம்!..வந்த வாய்ப்பை வேண்டாம் என்ற நடிகை!.

Social Media Bar

Bharathiraja : தமிழில் உள்ள இயக்குனர்களில் இயக்குனர்களின் இமையம் என அனைவராலும் அழைக்கப்படுபவர் இயக்குனர் பாரதிராஜா. தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஒரே மாதிரியான கதைகளை கொண்ட திரைப்படங்கள் வந்துக்கொண்டிருந்தப்போது அதில் இருந்து மாற்று சினிமாவிற்கு ரசிகர்களை கொண்டு சென்றவர் இயக்குனர் பாரதிராஜா.

பாரதிராஜா முதன் முதலில் இயக்கிய திரைப்படம் 16 வயதினிலே. இந்த திரைப்படத்தை இயக்கும்போதே பல வித விமர்சனங்களுக்கு உள்ளானார் பாரதிராஜா. ஏனெனில் அப்போதே அனைவரும் கமல்ஹாசனை ஒரு கமர்ஷியல் கதாநாயகனாக காட்டி கொண்டிருந்தப்போது பாரதிராஜா அவருக்கு கோவணம் கட்டி அடி வாங்கும் கதாபாத்திரமாக காட்டியிருந்தார்.

bharathiraja
bharathiraja

ஆனாலும் 16 வயதினிலே திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பாரதிராஜா படங்களில் நடிக்க அதிக நடிகர்கள் விருப்பம் தெரிவித்தனர். இந்த நிலையில்தான் அவர் மண்வாசனை திரைப்படத்திற்காக நடிப்பதற்கு ஆள் தேடி கொண்டிருந்தார்.

மண்வாசனை திரைப்படத்தை பொறுத்தவரை அதில் நடிக்கும் கதாநாயகன் கதாநாயகி இருவருமே புதிய முகங்களாக இருக்க வேண்டும் என்பது பாரதிராஜாவின் ஆசையாக இருந்தது. இந்த நிலையில் கதாநாயகியாக யாரை நடிக்க வைக்கலாம் என யோசித்தப்போது நடிகை பத்மினியின் சகோதரர் மகள் ஒருவர் இருக்கிறார்.

அவரும் மிக சிறப்பாக நடனமாடுவார் என கேள்விப்பட்டார் பாரதிராஜா. இந்த நிலையில் நேரில் சென்று அவரை சந்தித்தார் பாரதிராஜா. பார்த்த உடனேயே அவர்தான் தனது படத்தின் கதாநாயகி என முடிவு செய்தார் பாரதிராஜா. அது வேறு யாருமல்ல நடிகை ஷோபனாதான் அது.

ஷோபனாவின் தந்தையிடம் அனுமதி வாங்கி இந்த செய்தியை செய்திதாள்களில் வெளியிட்டனர். ஆனால் அதற்கு பிறகு இந்த படத்தில் நடிக்க முடியாது என கூறிவிட்டார் ஷோபா. ஏன் அப்படி சொன்னார் என கேட்டப்பொழுது. “நான் இப்போதுதான் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறேன். எனது பள்ளி படிப்பை முடித்துவிட்டுதான் நடிக்க வர முடியும் என கூறிவிட்டார் ஷோபனா.

அதற்கு பிறகுதான் அந்த படத்தில் நடிகை ரேவதியை கதாநாயகியாக அறிமுகப்படுத்தினர். அந்த படத்தில் நடிக்கும்போது ரேவதி 10 ஆவதுதான் படித்துக்கொண்டிருந்தார்.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
biggboss
To Top