Tag Archives: பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் வரலாறு… கங்குவா கற்பனை!.. வாயை விட்டு மாட்டிக்கொண்ட தயாரிப்பாளர்!..

Kanguva movie : தமிழில் சில மாதங்களுக்கு முன்பு அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளானவர் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பருத்திவீரன் திரைப்படத்திற்கு தயாரிப்பு செலவுகளில் அமீருடன் நடந்த பிரச்சனை தொடர்பாகதான் கடந்த சில மாதங்களாக பேச்சுக்கள் இருந்து வந்தன.

அதில் அமீருக்கு ஆதரவாகதான் அதிக குரல்கள் எழுந்தன. அதனை தொடர்ந்து அமைதியாகிவிட்டார் ஞானவேல் ராஜா. தற்சமயம் ஞானவேல் ராஜா கங்குவா என்கிற திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் சூர்யா நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்த திரைப்படம் தொடர்பாக பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறார் ஞானவேல் ராஜா. மேலும் இந்த திரைப்படம் பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்படும் ஒரு திரைப்படமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இது குறித்து பேசும் பொழுது சில தவறான தகவல்களை பேசியதால் ஞானவேல் ராஜா தற்சமயம் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார்.

அவர் தனது பேட்டியில் கூறும் பொழுது பொன்னியின் செல்வன் திரைப்படம் ஒரு வரலாறு அதை வந்து நாம் மாற்றி எடுக்க முடியாது. அதன் கதை இருக்கிறதோ அப்படியாக தான் எடுக்க வேண்டும் ஆனால் கங்குவா அப்படி கிடையாது. எனவே அது நமக்கு எப்படி தோன்றுகிறதோ அப்படியே படமாக்கிக் கொள்ளலாம் என்று கூறி இருக்கிறார் ஞானவேல் ராஜா.

ஆனால் உண்மையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரலாறுடன் திரித்த கற்பனை என்பதுதான் உண்மை. அதில் நடந்து மொத்த கதையும் வரலாற்றில் நடந்த கதை கிடையாது. அதில் உள்ள கதாபாத்திரங்கள் பலவும் கூட செயற்கையாக அதில் சேர்க்கப்பட்ட கதாபாத்திரங்கள் தான் என்கின்றனர் பொன்னியின் செல்வன் ரசிகர்கள்.

அப்படி இருக்கும் பொழுது அது கூட தெரியாமல் ஒரு தயாரிப்பாளர் அதை வரலாறு என்று கூறுகிறாரே என்று அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

விக்ரமையும் ஐஸ்வர்யாராயையும் வச்சி படம் எடுக்க சொன்னா தண்ணீல குதிச்சிருவேன்… மணிரத்தினம் அப்படி சொன்னதுக்கு இதுதான் காரணம்!..

director maniratnam : தமிழில் வித்தியாசமான திரைப்படங்கள் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் மணிரத்தினம். மனிரத்தினத்தைப் பொறுத்தவரை அவரது திரைப்படத்தில் உள்ள வசனங்களும் ஒளிப்பதிவும் மற்ற இயக்குனர்களின் திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு காணப்படும்.

இதனாலேயே மணிரத்தினம் திரைப்படத்திற்கு ஆரம்ப காலகட்டம் முதலே வரவேற்பு இருந்து வந்தது. சொல்ல போனால் தமிழ் சினிமாவில் இவ்வளவு வருடங்களாக தொடர்ந்து தன்னை இயக்குனராகவே தக்க வைத்துக் கொண்டு தனக்கான மார்க்கெட்டும் குறையாமல் பார்த்துக் கொண்டவர் இயக்குனர் மணிரத்தினம் தான் என்று கூற வேண்டும்.

எப்போதும் பெரிய கதாநாயகர்களை வைத்து படம் எடுக்கும் பொழுது மணிரத்தினத்திற்கு அது கடினமான காரியமாகவே இருந்திருக்கிறது ஏனெனில் அவருக்கு பிடித்தார் போல அந்த நடிகர்கள் நடிக்க வைப்பதில் அவருக்கு பிரச்சனைகள் இருந்துள்ளன. அதனால்தான் கமல் ரஜினி மாதிரியான பெரிய நடிகர்களை வைத்து கூட ஒரு முறைதான் படம் எடுத்தார் மணிரத்தினம்.

இந்த நிலையில் இராவணன் திரைப்படம் வெளியான காலகட்டத்தில் நடிகர் கிருஷ்ணன் மணிரத்தினம் கேட்கும் பொழுது என்ன சார் பெரும் பட்ஜெட் கிடைத்திருக்கிறது. விக்ரம் ஐஸ்வர்யா ராய் போன்ற பெரும் நடிகர்களும் கிடைத்திருக்கிறார்கள் நீங்கள் இன்னமும் இந்த படத்தை சிறப்பாக எடுத்திருக்கலாமே என்று கேட்ட பொழுது மணிரத்தினம் ஒரு விஷயம் கூறியுள்ளார்.

இனி ஒரு முறை விக்ரம் ஐஸ்வர்யாராய் வைத்து படம் எடுக்க வேண்டும் என்ற ஒரு பெரிய தொகையை கொடுத்தால் அதை கடற்கரை ஓரத்திலேயே வைத்துவிட்டு தண்ணீரில் குதித்து விடுவேன் என்று கூறி இருக்கிறார் .ஏன் என்று கேட்கும் பொழுது பெரும் நடிகர்களை வைத்து எடுக்கும் பொழுது அதற்கான கற்பனைகளும் எனக்கு பெரிதாக உருவாகிறது.

எனவே அந்த நடிகர்களை வைத்து படம் எடுக்கும் பொழுது மிகவும் அது குறித்து யோசிக்கிறேன் அதுவே அந்த திரைப்படங்களுக்கு பிரச்சனையாகி விடுகிறது என்று கூறி இருக்கிறார் மணிரத்தினம் .ஆனால் அதே மணிரத்தினம் இன்னும் அதிக பெரிய ஹீரோக்களை வைத்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தை சிறப்பாக இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொன்னியின் செல்வன் மட்டும் இல்ல!. ரஜினி கூட எல்லாம் போட்டி போட்டுருக்கேன்!.. மாஸ் காட்டிய பிரபல தயாரிப்பாளர்!..

திரைப்படங்களை பொறுத்தவரை ஒரு படத்தை இயக்குவதில் துவங்கி பல்வேறு நிலைகளில் அந்த படத்திற்கு பிரச்சனை வந்துக்கொண்டே இருக்கும். அதில் இறுதிகட்ட பிரச்சனை என்றால் அது படத்தை வெளியிடுவதில் இருக்கும் பிரச்சனைதான்.

ஒரு படத்தை ஏற்கனவே இந்த தேதியில் வெளியிடலாம் என திட்டமிட்டு வைத்திருக்கும்போது அதே தேதியில் பெரிய ஹீரோ படம் ஒன்று வெளியாக இருந்தால் என்ன செய்ய முடியும். அப்போது சின்ன படங்கள் தங்கள் தேதியை மாற்றி வைக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

இப்படியான நிலையை தமிழில் அனைத்து தயாரிப்பாளர்களும் சந்தித்திருப்பார்கள். தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவும் இந்த மாதிரியான பிரச்சனைகளை சந்தித்துள்ளார். ஆனால் அவர் மற்ற தயாரிப்பாளர்கள் போல தேதியை மாற்றாமல் பெரும் படங்களோடு போட்டி போட்டுள்ளார்.

இதுக்குறித்து அவர் கூறும்போது தளபதி வெளியாகவிருக்கும் அதே நாளில் என்னுடைய திரைப்படமான வண்ண வண்ண பூக்கள் வெளியானது. ஆனாலும் நல்ல வசூலை கொடுத்தது வண்ண வண்ண பூக்கள். அதே போல சந்திரமுகி வெளியான போது அதற்கு எதிராக சச்சின் திரைப்படத்தை வெளியிட்டேன். இப்போது பொன்னியின் செல்வன் வெளியானபோது கூட நானே வருவேன் திரைப்படத்தை வெளியிட்டேன்.

இவ்வளவு பெரிய படங்களோடு போட்டியிட்டும் என் படங்கள் நல்ல வசூலையே கொடுத்தன என கூறுகிறார் கலைப்புலி எஸ் தாணு.

ரவின்னா உங்க பொண்டாட்டிய நாங்க ஃபாலோ பண்றோம்.. ஜெயம் ரவிக்கிட்டயேவா! ரசிகர்கள் செய்த வேலை!..

தமிழ் சினிமாவில் உள்ள மிக முக்கியமான நடிகர்களில் ஜெயம் ரவிக்கும் முக்கிய இடம் உண்டு அதுவும் அவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் நடித்த பிறகு அவருக்கான மார்க்கெட் என்பது தமிழ் சினிமாவில் கொஞ்சம் அதிகரித்துள்ளது என்று கூறலாம்.

ஆனால் சமீபத்தில் வெளியான அகிலன் திரைப்படம் அவருக்கு எதிர்பார்த்த அளவிலான வெற்றியை கொடுக்கவில்லை. இருந்தாலும் அதை ஈடு கட்டும் விதமாக பொன்னியின் செல்வன் 2 ஒரு வெற்றியை கொடுத்துள்ளது. இயல்பு வாழ்க்கையில் மிகவும் ஜாலியான ஒரு மனிதனாக ஜெயம் ரவி இருக்கிறார்.

 பல பேட்டிகளில் படப்பிடிப்பு தளங்களில் அவரது வீடியோக்களை பார்க்கும் பொழுது அதில் மிகவும் மகிழ்ச்சியாக ஜாலியாக அவர் இருப்பதை பார்க்க முடியும்.

இதனால் பொதுவாக ரசிகர்களை அதிகமாக சந்திப்பார் ஜெயம் ரவி. ஜெயம் ரவியின் மனைவி ஆடை அலங்காரம் குறித்த துறையில் பணிபுரிகிறார் அவரது சமூக வலைதளங்களில் தொடர்ந்து அது தொடர்பான பதிவுகளை போட்டு வருகிறார். பலருக்கும் தெரியாத விஷயம் மாடலிங் துறையில் உள்ள பலரும் ஜெயம் ரவியின் மனைவியை அறிவர்.

இது குறித்து ஜெயம் ரவி ஒரு பேட்டியில் கூறும்போது நான் சில பட படிப்பு தளங்களுக்கு போய்விட்டு வரும்பொழுது ரசிகர்கள் என்னை கூப்பிட்டு அண்ணா ரவின்னா நான் உங்கள் மனைவியை பாலோ செய்கிறேன் என கூறுவார்கள் என்று நகைச்சுவையாக கூறியிருந்தார்.

உருளை கிழங்கால் பொன்னியில் செல்வன் படப்பிடிப்பில் நடந்த சண்டை… சுவாரஸ்யமா இருக்கே?

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக கனவாக இருந்த ஒரு திரைப்படத்தை நினைவாக்கியுள்ளார் மணிரத்தினம். தற்சமயம் வெளியாகி மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்படும் பொன்னியின் செல்வன் திரைப்படம் தான் அந்த கனவு.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மணிரத்தினத்தை தவிர வேறு எந்த இயக்குனர் எடுத்திருந்தாலும் இவ்வளவு சிறப்பாக வந்திருக்காது என்கிற பேச்சு சினிமா ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. அதேபோல இந்த படத்திற்கு சில எதிர்மறையான விமர்சனங்களும் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.

ஆனால் அதையெல்லாம் தாண்டி இந்த திரைப்படம் ஆயிரம் ஆண்டுகள் பழைய கதை எனும் போது, அதற்காக மணிரத்தினம் செய்த ஆய்வுகள் வேலைகள் மிகவும் சிறப்பானவை என கூறப்படுகின்றன. முக்கியமாக அந்த காலகட்டங்களில் பெண்கள் ஜாக்கெட் என்கிற ஆடையை அணிய மாட்டார்கள், அதை மிகவும் நுட்பமாக கையாண்டிருப்பார் மணிரத்தினம்.

 இதற்கு முன்பு வந்த ராஜா காலத்து படங்கள் அனைத்திலும் பெண்கள் ஜாக்கெட் போன்ற உடையை அணிந்திருப்பதை பார்க்க முடியும், ஆனால் இந்த படத்தில் த்ரிஷாவோ அல்லது மற்ற பெண்களோ அந்த மாதிரியான ஆடை இல்லாமலே நடித்து இருப்பதை பார்க்க முடியும்.

ஆனால் அதையெல்லாம் தாண்டி உணவு விஷயத்தில் கூட மிகவும் நுட்பமாக கையாண்டு உள்ளார் மணிரத்தினம். இது குறித்து ஜெயம் ரவி ஒரு பேட்டியில் கூறும்போது ஒரு காட்சியில் அவர்கள் சாப்பிடும் உணவில் உருளைக்கிழங்கு வைக்கப்பட்டிருந்தது. அதை பார்த்த மணிரத்னம் கோபமாகியுள்ளார்.

 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு உருளைக்கிழங்கு தமிழ்நாட்டில் இல்லவே இல்லை. பிறகு அதை எப்படி நீங்கள் சாப்பாட்டில் வைக்கலாம் இது பெரிய பிரச்சனையாக ஆகாதா? எனக் கூறி சண்டையிட்டுள்ளார் அதன் பிறகு உருளைக்கிழங்கு இல்லாமல் சாப்பாடு சமைக்கப்பட்டுள்ளது.

அதாவது ராஜராஜ சோழன் சாப்பிடும் சாப்பாடு கூட ஆயிரம் வருடம் முன்பு எந்த உணவுகள் இருந்ததோ அதை வைத்து செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் என்கிற வரை நுட்பமாக கவனித்துள்ளார் இயக்குனர் மணிரத்தினம்.

பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க சிவாஜி போட்ட ப்ளான்… ஷாக்கான கமல் ரஜினி!.. இப்படியெல்லாம் நடந்துச்சா.!

திரையரங்குகளில் இரண்டு பாகங்களாக வந்து பெரும் ஹிட் கொடுத்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன். அமரர் கல்கி எழுதி நாவலாக வெளியாகி அப்போதே அதிகமாக விற்று இப்பொழுது படமாகவும் பெரும் ஹிட் கொடுத்துள்ளது பொன்னியின் செல்வன்.

பொன்னியின் செல்வனின் சிறப்பம்சமே இத்தனை வருட சினிமா துறையில் பலரும் பொன்னியின் செல்வனை திரைப்படமாக்க ஆசைப்பட்டனர். ஆனால் பொன்னியின் செல்வன் திரைப்படமாக்குவதில் உள்ள பெரும் பிரச்சனை அதில் பெரும் நடிகர்களை வைத்து படமாக்க வேண்டும் மொத்தமாக இவ்வளவு பெரிய கதையை படமாக்குவது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயம்.

ஆனால் யாரும் அதை இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிடவில்லை. எம்.ஜி.ஆர் அவர் வந்தியத்தேவனாக நடித்து இந்த படத்தை எடுக்க ஆசைப்பட்டார். அதற்குப் பிறகு சிவாஜி பொன்னியின் செல்வன் குறித்து ஒரு பிளான் வைத்திருந்தார்.

அதைக் குறித்து அந்த காலகட்டங்களிலேயே கமலிடம் பேசியுள்ளார். அப்போது கமல் பிரபலமான ஒரு நடிகராக இருந்தார். அவரிடம் பேசிய சிவாஜி பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாகலாம் ,அதில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை ரஜினிக்கு கொடுக்கலாம். என கூறியுள்ளார்.

ஆனால் வந்தியத்தேவன் மாதிரியான கதாபாத்திரத்திற்கு கமல்தான் அப்போது நன்றாக ஒத்துப் போகக் கூடிய ஆள் அதுவும் இல்லாமல் கமல் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்பட்டார். எனவே அவர் ஐயா நான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன் என சிவாஜியிடம் கூறினார்.

அதற்கு சிவாஜி நீ ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்தால் சரியாக இருக்கும் என அப்பொழுதே பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து ஒரு மாஸ் பிளான் போட்டுள்ளார் சிவாஜி கணேசன். அது திரைப்படமாகவில்லை ஒரு வேலை அப்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் ஆகியிருந்தால் இப்போதை விட பெரிய ஹிட் கொடுத்திருக்கலாம்.

லியோவுடன் போட்டி போடும் பொன்னியின் செல்வன்! –  அவருக்கும் எனக்கும்தான் போட்டியே!

விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் லியோ. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்பதாலேயே இந்த படத்திற்கு வரவேற்பு அதிகரித்துவிட்டது. மேலும் இந்த படம் கமல் நடித்த விக்ரம் திரைப்படத்தோடு கனெக்ட் ஆகும் என கூறப்படுகிறது.

இந்த வருடம் அக்டோபர் மாதம் இந்த படம் திரைக்கு வரவிருக்கிறது. இந்த நிலையில் இதற்கு போட்டியாக மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளிவந்த நிலையில் அதன் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் பலரும் எதிர்பார்ப்போடு காத்துக்கொண்டுள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தை விஜய் நடிக்கும் லியோவோடு வெளியிட்டால் அது லியோவின் வசூலை பாதிக்கும்.

எனவே லியோ படத்தோடு பொன்னியின் செல்வனை வெளியிடுவது சரியாக இருக்காது என தளபதி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வருடம் ஏப்ரல் மாதமே வெளியாக இருந்த பொன்னியின் செல்வன் திடீரென அக்டோபர் மாதத்திற்கு தள்ளி சென்றிருப்பதும் புரியாத விஷயமாகவே உள்ளது.

வர வர அழகு கூடுது? – ஐஸ்வர்யா லெட்சுமியின் அழகிய புகைப்படங்கள்

மலையாள சினிமாவில் முதன் முதலாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி. செகண்ட் ஹேண்ட் லவ்வர் என்கிற திரைப்படத்தில் 2015 ஆம் ஆண்டு கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன் பிறகு தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வந்தவர் 2019 ஆம் ஆண்டு ஆக்‌ஷன் திரைப்படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பதிவாகவில்லை.

ஆனால் பிறகு 2021 ஆம் ஆண்டு வந்த ஜகமே தந்திரம் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் தமிழ் சினிமாவில் இவர் வளர்வதற்கு முக்கிய படமாக அமைந்தது.

அதன் பிறகு பல படங்களுக்கு பிறகு போன வருடம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பூங்குழலி கதாபாத்திரம் மக்கள் மத்தியில் வெகுவாக பேசப்பட்டதை அடுத்து ஐஸ்வர்யா லெட்சுமி பிரபலமாக பேசப்பட்டார்.

அதற்கு பிறகு தற்சமயம் திரையில் சக்கை போடு போட்ட கட்டா குஸ்தி திரைப்படம் அவரது வாழ்க்கையின் முக்கிய படம் என கூறலாம். அதை தொடர்ந்து பல பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் ஐஸ்வர்யா.

இந்த நிலையில் சில அழகிய புகைப்படங்களை இவர் வெளியிட்டுள்ளார்.

பொன்னியின் செல்வன் அடுத்த பாகம் அப்டேட்! – சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு!

ரசிகர்களால் வெகு காலமாக எதிர்பார்க்கப்பட்டு தமிழின் பெரும் பெரும் இயக்குனர்களே இயக்க நினைத்தும் வெகு காலமாக படமாக்கப்படாமல் ஆசையாகவே இருந்த படம் பொன்னியின் செல்வன்.

வெகு காலத்திற்கு பிறகு இந்த ஆண்டு அதன் முதல் பாகம் வெளியானது. கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம்,ஐஸ்வர்யா ராய், த்ரிஷா போன்ற பெரும் பிரபலங்கள் பலரும் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

இயக்குனர் மணிரத்னம் இந்த படத்தை இயக்கியிருந்தார். படப்பிடிப்பு நடக்கும்போதே இரண்டு படங்களையும் சேர்த்து எடுத்துவிட்டார் மணிரத்னம். முதல் பாகம் இந்த வருடம் வந்த நிலையில் அடுத்த பாகம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரலில் வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் படத்திற்கான டப்பிங் மற்றும் கிராபிக் வேலைகள் இன்னும் முடியவில்லை. இந்த நிலையில் படத்திற்கான அடுத்த அப்டேட் குறித்த போஸ்டரை லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதாவது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான அப்டேட் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் என நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இன்று அடுத்த பாகத்தின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது. அதன்படி படத்தின் வெளியீட்டு தேதியும் அதில் வெளியாகியுள்ளது. 28.ஏப்ரல் 2023 அன்று பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வருவதாக கூறப்பட்டுள்ளது.

டீசர் வீடியோவை காண இங்கு க்ளிக் செய்யவும்

பொன்னியின் செல்வன் வெற்றி பார்ட்டியில் அடிதடி – முக்கிய பிரபலங்கள் இருக்கும்போது சங்கடம்!

சமீபத்தில் தமிழில் வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்த படம் பொன்னியின் செல்வன். 500 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்தது பொன்னியின் செல்வன்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து படத்தில் பணிப்புரிந்த பல நடிகர்களுக்கு பார்ட்டி ஒன்று ஒன்று வைக்கப்பட்டது. லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ்கரன், மணிரத்னம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ரஜினிகாந்த் இன்னும் பல நட்சத்திரங்கள் இந்த பார்ட்டியில் கலந்துக்கொண்டனர்.

விடிய விடிய பார்ட்டி நடந்தது. அப்போது லைக்காவை சேர்ந்த ஊழியர் ஒருவர் மணிரத்னத்திடன் உதவி இயக்குனராக பணிபுரியும் பெண்ணிடம் தவறாக நடந்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த பார்ட்டியில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. எனவே இதுக்குறித்து வருத்தம் தெரிவித்துளாராம்.

சோழ ராஜ்ஜூயத்திடம் தோற்ற ப்ரிட்டிஷ் ப்ரின்ஸ்..!

கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி உலகமெங்கும் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் கார்த்தி, விக்ரம் என பல நடிகர்கள் நடித்திருந்தனர். 

முதல் நாளில் இருந்தே ஹிட் அடித்து வந்த பொன்னியின் செல்வன் கிட்டத்தட்ட 3 வாரங்களுக்கு பிறகும் கூட பல திரையரங்குகளில் ஹவுஸ் புல் நிலையிலேயே ஓடி கொண்டிருந்தது.

இதற்கு நடுவே தீபாவளியை முன்னிட்டு சர்தார் மற்றும் ப்ரின்ஸ் திரைப்படங்கள் வந்ததால் பொன்னியின் செல்வன் 100க்கும் குறைவான திரையரங்குகளில் ஓடியது. சர்தார் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால் ப்ரின்ஸ் திரைப்படம் அந்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இதனால் முக்கால்வாசி திரையரங்குகளில் ப்ரின்ஸ் திரைப்படத்தை எடுத்து விட்டதாக கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இன்னமும் வரவேற்பு இருப்பதால் மீண்டும் அந்த படத்தையே ஓட்டுகின்றனராம் திரையரங்கு உரிமையாளர்கள்.

தற்சமயம் 200க்கும் அதிகமான திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் ஓடுகிறது. 1 கோடிக்கும் அதிகமாக தினமும் வசூலித்து வருகிறது.

விக்ரம் வசூலை முறியடித்த பொன்னியின் செல்வன் –  மொத்தமாக ஒரு மாத வசூல் எவ்வளவு தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் உருவான திரைப்படம் விக்ரம். கடந்த ஜூன் 3 அன்று வெளியான விக்ரம் 400 கோடிக்கும் அதிகமாக ஓடி வசூல் சாதனை செய்தது.

வெகுநாள் கழித்து கமல் நடித்த படம் என்றாலும் நினைத்ததை விடவும் அதிக வெற்றியை தந்தது. அந்த நேரத்தில் வேறு எந்த பெரிய படங்களும் வெளியாகவில்லை என்பதும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் வெளியானது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஜெயம்ரவி இன்னும் பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

கிட்டத்தட்ட ஒரு மாதக்காலம் ஆகியிருக்கும் நிலையில் 500 கோடியை வசூலித்து விக்ரம் வசூலை முறியடித்துள்ளது பொன்னியின் செல்வன். இருந்தாலும் படம் ஆயிரம் கோடியை தொடும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு 500 கோடிக்கு ஓடியிருப்பது ஏமாற்றமாக இருக்கிறதாம். 

ஏனெனில் எந்த தமிழ் படமும் இதுவரை ஆயிரம் கோடி வசூலிக்கவில்லை என கூறப்படுகிறது.