Tag Archives: mani ratnam

உருளை கிழங்கால் பொன்னியில் செல்வன் படப்பிடிப்பில் நடந்த சண்டை… சுவாரஸ்யமா இருக்கே?

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக கனவாக இருந்த ஒரு திரைப்படத்தை நினைவாக்கியுள்ளார் மணிரத்தினம். தற்சமயம் வெளியாகி மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்படும் பொன்னியின் செல்வன் திரைப்படம் தான் அந்த கனவு.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மணிரத்தினத்தை தவிர வேறு எந்த இயக்குனர் எடுத்திருந்தாலும் இவ்வளவு சிறப்பாக வந்திருக்காது என்கிற பேச்சு சினிமா ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. அதேபோல இந்த படத்திற்கு சில எதிர்மறையான விமர்சனங்களும் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.

ஆனால் அதையெல்லாம் தாண்டி இந்த திரைப்படம் ஆயிரம் ஆண்டுகள் பழைய கதை எனும் போது, அதற்காக மணிரத்தினம் செய்த ஆய்வுகள் வேலைகள் மிகவும் சிறப்பானவை என கூறப்படுகின்றன. முக்கியமாக அந்த காலகட்டங்களில் பெண்கள் ஜாக்கெட் என்கிற ஆடையை அணிய மாட்டார்கள், அதை மிகவும் நுட்பமாக கையாண்டிருப்பார் மணிரத்தினம்.

 இதற்கு முன்பு வந்த ராஜா காலத்து படங்கள் அனைத்திலும் பெண்கள் ஜாக்கெட் போன்ற உடையை அணிந்திருப்பதை பார்க்க முடியும், ஆனால் இந்த படத்தில் த்ரிஷாவோ அல்லது மற்ற பெண்களோ அந்த மாதிரியான ஆடை இல்லாமலே நடித்து இருப்பதை பார்க்க முடியும்.

ஆனால் அதையெல்லாம் தாண்டி உணவு விஷயத்தில் கூட மிகவும் நுட்பமாக கையாண்டு உள்ளார் மணிரத்தினம். இது குறித்து ஜெயம் ரவி ஒரு பேட்டியில் கூறும்போது ஒரு காட்சியில் அவர்கள் சாப்பிடும் உணவில் உருளைக்கிழங்கு வைக்கப்பட்டிருந்தது. அதை பார்த்த மணிரத்னம் கோபமாகியுள்ளார்.

 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு உருளைக்கிழங்கு தமிழ்நாட்டில் இல்லவே இல்லை. பிறகு அதை எப்படி நீங்கள் சாப்பாட்டில் வைக்கலாம் இது பெரிய பிரச்சனையாக ஆகாதா? எனக் கூறி சண்டையிட்டுள்ளார் அதன் பிறகு உருளைக்கிழங்கு இல்லாமல் சாப்பாடு சமைக்கப்பட்டுள்ளது.

அதாவது ராஜராஜ சோழன் சாப்பிடும் சாப்பாடு கூட ஆயிரம் வருடம் முன்பு எந்த உணவுகள் இருந்ததோ அதை வைத்து செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் என்கிற வரை நுட்பமாக கவனித்துள்ளார் இயக்குனர் மணிரத்தினம்.

ரஜினிக்கு போட்ட பாட்டு! பிடிக்கலைனு மணி சார்ட்ட கொடுத்துட்டேன்! – நல்ல பாட்டை தவறவிட்ட ரஜினி பட இயக்குனர்!

தமிழ் சினிமாவில் நல்ல நல்ல பாடல்களை இயக்குனர்கள் தவறால் இழக்கும் சம்பவங்கள் பல நடந்திருக்கின்றன. ஒவ்வொரு படத்திற்கும் படத்திற்கான மொத்த இசையை இசையமைப்பாளர்கள்தான் இசைப்பார்கள். அப்போது அவர்களுக்கு பிடித்த மாதிரி சில இசைகளையும் அதில் அவர்கள் சேர்ப்பார்கள்.

ஆனால் இயக்குனர்களுக்கு அது பிடிக்கவில்லை எனில் அதை இசையமைப்பாளர்கள் மாற்ற வேண்டி இருக்கும். அந்த மாதிரி இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானுக்கும் கூட ஒரு சம்பவம் நடந்தது. 2014 ஆம் ஆண்டு இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து லிங்கா படம் வெளியானது.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். அந்த படத்தில் காதல் காட்சிகளுக்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கும்போது அவருக்கு பிடித்த வகையிலான பாடல் ஒன்றை இசையமைத்திருந்தார். ரஜினியின் ப்ளாஷ்பாக் கதையில் இந்த இசை பயன்படுத்த இருந்தது.

ஆனால் இந்த இசை கே.எஸ் ரவிக்குமாருக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. இதற்கு மாற்றாக வேறு எதேனும் இசையை போட்டு தாருங்கள் என வேறு இசையை வாங்கி சென்றார். அதற்கு பிறகு மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி திரைப்படத்திற்கு இசையமைப்பதற்கான வாய்ப்பு ஏ.ஆர் ரகுமானுக்கு வந்தது.

இந்த சமயத்தை பயன்படுத்திக்கொண்ட ஏ.ஆர் ரகுமான் அவரிடம் இந்த இசையை போட்டுக்காட்டியுள்ளார். அந்த இசை கேட்ட உடனே மணிரத்னத்திற்கு பிடித்துவிட்டது. உடனே அந்த படத்தில் அது சின்னஞ்சிறு ரகசியமே என்னும் பாடலாக அதை மாற்றி அமைத்தனர். ஓ.கே கண்மணி படம் வெளியான பிறகு அந்த இசை மிகவும் பிரபலமானது.