Tag Archives: ப்ரின்ஸ்

அந்த படத்துல நான் நடிச்சிருக்க கூடாதோன்னு நினைக்கிறேன்!.. மனம் வருந்தி பேசிய சிவகார்த்திகேயன்!..

Sivakarthikeyan: வாரிசுகளின் பிள்ளைகள் தமிழ் சினிமாவை ஆக்கிரமித்து வரும்போது கூட சில நடிகர்கள் தங்கள் திறமைகளை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தி தங்களுக்கான இடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளனர். அப்படியான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

காமெடி நடிகராக தமிழ் சினிமாவிற்கு வந்த சிவகார்த்திகேயன் பிறகு கதாநாயகனாக நடிக்க துவங்கினார். தொடர்ந்து காமெடி கதாநாயகனாக நடித்து வந்த சிவகார்த்திகேயன் தற்சமயம் சீரியஸ் கதாநாயகனாக உருவெடுக்க இருக்கிறார் என கூறப்படுகிறது.

அரசியலுக்கு செல்வதால் தொடர்ந்து படம் நடிக்க போவதில்லை என்று கூறிவிட்டார் நடிகர் விஜய். அதேபோல நடிகர் அஜித்தும் தொடர்ந்து நடிக்க போவதாக தெரியவில்லை. எனவே இந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு திட்டமிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.

sivakarthikeyan

இந்த நிலையில் டான் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படங்களிலேயே பெரிதும் வரவேற்பை பெறாமல் போன திரைப்படம் பிரின்ஸ். இந்த திரைப்படம் குறித்து சிவகார்த்திகேயன் சில விஷயங்களை கூறியுள்ளார்.

அதில் கூறும்போது ப்ரின்ஸ் நான் நடித்திருக்க வேண்டிய திரைப்படம் கிடையாது, அந்த திரைப்படத்தில் புதிதாக அறிமுகமாகி வளர்ந்து வரும் யாராவது கதாநாயகனாக நடித்தால் நன்றாக இருந்திருக்கும். நான் நடிக்கும்போது காமெடி என்பதை தாண்டி மக்கள் எதிர்பார்க்கும் ஏதோ ஒரு விஷயம் படத்தில் இல்லாமல் போய்விட்டதோ என தோன்றுகிறது.

மேலும் இயக்குனருக்கும் எனக்கும் மொழி புரியாததில் இருந்த சிக்கல்கள் அந்த படத்தை பாதித்துவிட்டதோ என யோசிக்கிறேன என கூறியுள்ளார் சிவகார்த்திகேயன்.

சோழ ராஜ்ஜூயத்திடம் தோற்ற ப்ரிட்டிஷ் ப்ரின்ஸ்..!

கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி உலகமெங்கும் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் கார்த்தி, விக்ரம் என பல நடிகர்கள் நடித்திருந்தனர். 

முதல் நாளில் இருந்தே ஹிட் அடித்து வந்த பொன்னியின் செல்வன் கிட்டத்தட்ட 3 வாரங்களுக்கு பிறகும் கூட பல திரையரங்குகளில் ஹவுஸ் புல் நிலையிலேயே ஓடி கொண்டிருந்தது.

இதற்கு நடுவே தீபாவளியை முன்னிட்டு சர்தார் மற்றும் ப்ரின்ஸ் திரைப்படங்கள் வந்ததால் பொன்னியின் செல்வன் 100க்கும் குறைவான திரையரங்குகளில் ஓடியது. சர்தார் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால் ப்ரின்ஸ் திரைப்படம் அந்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இதனால் முக்கால்வாசி திரையரங்குகளில் ப்ரின்ஸ் திரைப்படத்தை எடுத்து விட்டதாக கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இன்னமும் வரவேற்பு இருப்பதால் மீண்டும் அந்த படத்தையே ஓட்டுகின்றனராம் திரையரங்கு உரிமையாளர்கள்.

தற்சமயம் 200க்கும் அதிகமான திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் ஓடுகிறது. 1 கோடிக்கும் அதிகமாக தினமும் வசூலித்து வருகிறது.

சர்தார் படமும் பார்ப்பேன் –  மனம் திறந்த சிவகார்த்திகேயன்

சினிமாவில் நடிகர்களிடையே போட்டி என கூறுவதெல்லாம் ஒரு சினிமா அரசியலாகவே பார்க்கப்படுகிறது. உண்மையில் நடிகர்கள் தங்களுக்குள் போட்டி போட்டுக்கொள்வதாக தெரியவில்லை. 

தீபாவளியை முன்னிட்டு சமீபத்தில் திரையரங்கில் சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் மற்றும் கார்த்தி நடித்த சர்தார் இரண்டு திரைப்படங்களும் வெளியாகின. இதனால் பலரும் சிவகார்த்திகேயனும், கார்த்தியும் போட்டி போட்டுக்கொள்கின்றனர் என கூறி வந்தனர்.

ப்ரின்ஸ் படத்தின் முதல் நாள் ரெஸ்பான்ஸை காண நடிகர் சிவகார்த்திகேயன் ஒவ்வொரு திரையரங்காக சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அவரிடம் சென்ற பத்திரிக்கையாளர்கள் சர்தார் படத்தை பார்ப்பீர்களா? என கேட்டனர்.

கண்டிப்பாக பார்ப்பேன். முதலில் நான் ஒரு சினிமா ரசிகன், பிறகுதான் நான் ஒரு நடிகன், எனவே நான் அனைவரின் படத்தையும் பார்ப்பேன் என கூறியுள்ளார் சிவகார்த்திகேயன்.