Tag Archives: karthi

பெரிய பட்ஜெட்டில் தயாராகும் கைதி 2… இதுதான் காரணம்..! கார்த்தியே எதிர்பார்க்காத சம்பவம்..!

தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் வெற்றி படங்களாக கொடுத்து வரும் காரணத்தினால் அவரது திரைப்படங்களுக்கான பட்ஜெட் என்பதும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

தற்சமயம் நடிகர் ரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி திரைப்படத்தின் பட்ஜெட் கிட்டத்தட்ட 400 கோடி என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படம் கண்டிப்பாக ஆயிரம் கோடி வசூல் கொடுக்கும் என்கிற நம்பிக்கை தென்னிந்தியாவில் பலருக்குமே இருக்கிறது.

ஏனெனில் ரஜினி திரைப்படத்திற்கு என்று தனிப்பட்ட ஒரு மார்க்கெட் இருந்து வருகிறது. இப்பொழுது லோகேஷ் கனகராஜ் திரைப்படங்களுக்கும் ஒரு மார்க்கெட் உருவாகி இருக்கிறது. இது இரண்டுமே சேர்த்து கூலி திரைப்படத்தின் வெற்றியை உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கூலி திரைப்படத்திற்கு பிறகு கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். கைதி படத்தின் இரண்டாம் பாகமானது 300 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

இதற்கு முன்பு நடிகர் கார்த்தி நடித்த எந்த ஒரு திரைப்படமும் பொன்னியின் செல்வனை தவிர இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் உருவாகவில்லை அப்படி இருக்கும்போது இந்த திரைப்படம் மட்டும் எப்படி 300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் என்கிற கேள்வி ஒரு பக்கம் இருக்கிறது.

ஆனால் கைதி திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்த காரணத்தினாலும் லோகேஷ் கனகராஜ் இயக்குவதாலும் கைதி 2 படத்தின் பட்ஜெட் அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது. ஒருவேளை கைதி 2 நல்ல வெற்றியை கொடுக்கும் பட்சத்தில் நடிகர் கார்த்தியின் சம்பளமும் அதிகரிக்கும் என்று பேச்சுக்கள் இருக்கின்றன.

கால்ஷீட்டில் வந்த பிரச்சனை.. கார்த்தி படத்தை முடிக்க முடியாமல் கஷ்டப்படும் இயக்குனர்..!

தமிழில் தொடர்ந்து நிறைய வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் நலன் குமாரசாமி. தற்சமயம் நலன் குமாரசாமி இயக்கி வரும் திரைப்படம் வா வாத்தியார்.

இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக கார்த்தி நடிக்கிறார். கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பே இந்த படத்தின் டிரைலர் வெளியானது.

இந்த படத்தில் கார்த்தி போலீஸ் ஆக நடித்துள்ளார் என தெரிகிறது. இந்த நிலையில் மாறுபட்ட அம்சத்தை கொண்ட ஒரு திரைப்படம் வா வாத்தியார் என்று ஆரம்பத்தில் இருந்தே பேச்சுக்கள் இருந்தன.

vaa vaathiyar

எனவே இந்த படம் குறித்து எதிர்பார்ப்புகளும் அதிகமாக இருந்தது. ஆனாலும் கூட இன்னமும் அந்த படத்தின் படப்பிடிப்பு முடியவில்லை என்று கூறப்படுகிறது நடிகர் கார்த்தி இந்த படத்தில் மட்டுமல்லாமல் சர்தார் 2, கைதி 2 என்று நிறைய திரைப்படங்களில் கமிட் ஆகி இருக்கிறார்.

அதனால் அவரிடம் கால் சீட் வாங்குவது பெரிய கஷ்டம் என்கிற நிலைமை இருக்கிறது. இதற்கு நடுவே இன்னும் 13 நாட்களுக்கான படப்பிடிப்பு பாக்கி இருப்பதால் நலன் குமாரசாமி இதுகுறித்து கார்த்தியிடம் பேசி இருக்கிறார் ஆனால் இந்த வருடம் முழுக்க பிசியாக இருப்பதால் கால் சீட் எதுவும் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டாராம் கார்த்தி.

அடுத்த வருடம் தான் கால் சீட்டை கொடுக்க முடியும் என்று கூறியதால் இப்பொழுது நிலுவையில் நிற்கிறது வா வாத்தியார் திரைப்படம்.

ஹாலிவுட் தரத்தில் உருவாகும் சர்தார்.. அரை டசன் விமானங்களை இறக்கிய படக்குழு..!

கார்த்தி நடிப்பில் இயக்குனர் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சர்தார். கார்த்தி நடித்த இந்த திரைப்படமும் வெளியான பொழுது நல்ல வரவேற்பு பெற்று இருந்தது.

இதனை தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தற்சமயம் இயக்கி வருகிறார். போன திரைப்படத்தில் ஒரு கார்த்தி மட்டும் உளவாளியாக இருப்பதாக கதை இருந்தது.

ஆனால் இந்த பாகத்தில் இரண்டு கார்த்தியும் உளவாளியாக வேலை பார்ப்பதாக கதை இருக்கிறது. ஹாலிவுட் தரத்தில் இதன் கதை அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

சர்தார் 2:

அதாவது உலக அளவில் நடக்கும் ஒரு மோசடியை இவர்கள் இருவரும் கண்டறிவது கதையாக இருக்கும் என்று பேச்சுக்கள் இருக்கின்றன. அதற்கு தகுந்தார் போல படப்பிடிப்புகளும் ரொம்ப பிரம்மாண்டமாக நடந்து வருகிறது.

கிட்டத்தட்ட ஆறு விமானங்களை இந்த படப்பிடிப்பிற்காக பயன்படுத்தி வருவதாக பேச்சுக்கள் இருக்கின்றன. எனவே இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்து இருக்கிறது.

அல்லு அர்ஜுன் வாய்விட்டதால் சிக்கிய நடிகர் கார்த்தி.. வச்சு செய்யும் ரசிகர்கள்.!

தமிழ் மற்றும் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் பிரபல நடிகராக இருந்து வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன். அல்லு அர்ஜுன் ஆரம்பத்தில் தெலுங்கு சினிமாவில் மட்டும்தான் திரைப்படங்களில் நடித்து வந்தார்.

ஆனால் அவரது திரைப்படங்கள் அதிகமாக தமிழில் டப்பிங் ஆகி வெளிவர துவங்கின. அதற்குப்பிறகு தமிழ் சினிமாவிலும் அவருக்கென்று தனி செல்வாக்கு உருவானது.

இப்பொழுது புஷ்பா திரைப்படம் வெளியான பிறகு இந்திய அளவில் பிரபலமான ஒரு நடிகராக மாறி இருக்கிறார் அல்லு அர்ஜுன். அவர் நடித்த புஷ்பா திரைப்படம் வட இந்தியாவில் அதிக வரவேற்பு பெற்றது. தற்சமயம் புஷ்பா திரைப்படத்திற்கும் வரவேற்பு அதிகமாக இருந்து வருகிறது.

அல்லு அர்ஜுன் சொன்ன விஷயம்:

pushpa 2

இந்த நிலையில் புஷ்பா 2 திரைப்படத்திற்கான ப்ரமோஷனுக்காக தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார் அல்லு அர்ஜுன். தமிழ்நாட்டுக்கு வந்த அல்லு அர்ஜுன் மேடையில் ஏறி சகஜமாக தமிழில் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது ரசிகர்கள் சிலர் அவரை தெலுங்கில் பேசுமாறு கேட்டனர்.

ஆனால் அவர் கூறும் பொழுது இது தமிழ் மண்ணுக்கு நான் கொடுக்கும் மரியாதை. எனவே தமிழில்தான் பேசுவேன் என்று விடாப்பிடியாக கூறிவிட்டார். இதனை தொடர்ந்து அல்லு அர்ஜுனுக்கு நிறைய பாராட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன.

அதே சமயம் நடிகர் கார்த்தி மற்றும் ஒரு நடிகை சுஹாசினி இருவரையும் விமர்சித்து வருகின்றனர் ரசிகர்கள். ஏனெனில் கார்த்தி ஒருமுறை தெலுங்கில் ஒரு பேட்டியில் பேசும் பொழுது தமிழ் ரசிகர்களை விட எனக்கு தெலுங்கு ரசிகர்களை தான் பிடிக்கும் என்று கூறி இருந்தார்.

அதேபோல சுஹாசினியும் தமிழர்களை தாழ்வாக பேசி பொன்னியின் செல்வன் ப்ரோமோஷனில் பேசியிருந்தார். இதனால் இவர்கள் இருவரையும் தற்சமயம் விமர்சித்து வரும் ரசிகர்கள் அல்லு அர்ஜுனனை பார்த்து இவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

17 வருட கொள்கையை விட்டுக்கொடுத்த கார்த்தி.. சூர்யாவுக்காக செய்த அந்த செயல்.. காட்சியில் நடந்த கோளாறு.!

நடிகர் கார்த்தி தொடர்ந்து தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதனால்தான் நடிகர் சூர்யாவை விடவுமே கார்த்திக்கு ரசிகர்கள் அதிகமாக இருந்து வருகின்றனர்.

தற்சமயம் கார்த்தி நடித்து வெளியான மெய்யழகன் திரைப்படம் கூட அதிக வரவேற்பு பெற்றது. மெய்யழகன் படத்தில் கார்த்தி நடித்த கதாபாத்திரத்தில் எந்த பெரிய ஹீரோவும் தமிழ் சினிமாவில் நடிக்க முடியாது. ஏனெனில் பெரும்பாலும் இப்பொழுது நடிக்கும் நடிகர்கள் எல்லாம் சண்டை காட்சிகள் கொண்ட கமர்சியல் கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர்.

kathi kanguva

17 வருட விதிமுறை:

ஆனால் கார்த்தியை பொருத்தவரை அவர் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மிக வித்தியாசமானதாகவும் மக்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்துவதாகவும் இருந்து வருகிறது. இந்த நிலையில் சூர்யா நடிக்கும் கங்குவா திரைப்படத்தில் கார்த்தி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன.

நேற்று கங்குவா திரைப்படத்தின் டிரைலர் வெளியானது அதில் கடைசி காட்சியில் சிகரெட் பிடித்துக் கொண்டு வரும் ஒரு நபரை காட்டப்பட்டிருந்தது. ஆனால் அந்த நபரின் முகம் காட்டப்படவில்லை. அது நடிகர் கார்த்திதான் என்று பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

ஏனெனில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சிவகுமாரின் குடும்பத்திற்கு மிகுந்த நண்பர் ஆவார் என்பதால் கார்த்தி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து கொடுத்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் கார்த்தி சினிமாவிற்கு வந்ததிலிருந்து கடந்த 17 வருடங்களாக சிகரெட் அடிப்பது போன்ற காட்சியில் நடிக்க கூடாது என்ற கொள்கையை பின்பற்றி வந்தார். இந்த நிலையில் தனது அண்ணனுக்காக அதை விட்டுக் கொடுத்துள்ளாரா கார்த்தி என்று கேள்விகள் எழுந்து வருகின்றன.

அதை வச்சி ஜோக் பண்ணுனா மரியாதை கெட்டுரும்.. கார்த்திக்கு வார்னிங் கொடுத்த பவண் கல்யாண்..!

ஆந்திர தேசத்தில் திருப்பதி லட்டு குறித்த விவகாரங்கள் அதிக பிரச்சனையை ஏற்படுத்தி வந்து கொண்டிருக்கின்றன. திருப்பதியில் மாட்டின் கொழுப்பு கண்டறியப்பட்டிருக்கிறது.

இது பக்தர்கள் பலருக்கும் அதிர்ச்சியை அளித்து வருகின்றன. பெரும்பாலும் சாதாரண மக்கள்தான் திருப்பதிக்கு பெருமாளை வணங்குவதற்கு அதிகமாக சென்று வருகின்றனர்.

அதனால் லட்டில் அசைவம் சேர்க்கப்பட்டிருப்பது என்பது அவர்களுக்கு கூட பெரிய பிரச்சனையாக இருக்காது. ஆனால் சைவம் மட்டுமே சாப்பிடும் சிலருக்கு இது பெரும் பிரச்சனையாக இருந்துள்ளது. மேலும் பெரும் அதிர்ச்சியையும் அவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

Karthi

கார்த்தி கூறிய பதில்

இதை சரி செய்ய தீட்டை கழிக்கும் விஷயங்களை திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகிறது. இதற்கு நடுவே திருப்பதி லட்டு குறித்து எதிர்மறையான விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் அதிகமாக வலம் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் கார்த்தியிடம் ஒரு விழாவில் திருப்பதி லட்டு வேண்டுமா என்று கேட்டிருக்கின்றனர். அதற்கு பதில் அளித்த கார்த்தி திருப்பதி லட்டும் மிகவும் சென்சிட்டிவான ஒன்று அது எனக்கு வேண்டாம் என்று கூறிவிட்டார். இந்த நிலையில் இதை இந்த பேட்டி குறித்து பதில் அளித்த பவன் கல்யாண் கூறும்போது திருப்பதி லட்டை விளையாட்டாக பேசாதீர்கள்.

இதுதான் உங்களுக்கு கடைசி வார்னிங் இனி எங்கேயும் லட்டை வைத்து எல்லாம் காமெடி செய்யக்கூடாது என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இதற்கு மன்னிப்பு கேட்டு கார்த்தியும் ஒரு பதிலை அளித்து இருக்கிறார்.

தனுஷ் இனிமே நடிக்க கூடாது.. நோட்டீஸ் விட்ட தயாரிப்பாளர் சங்கம்… சப்போர்ட்டுக்கு வந்த நடிகர் கார்த்தி!.

தமிழ் சினிமாவில் வெற்றி படங்களாக கொடுத்துவரும் நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். ஆரம்பத்தில் இவர் அதிகமாக உருவ கேலிக்கு உள்ளானாலும் கூட பிறகு தொடர்ந்து தனது நடிப்பில் மாற்றத்தை கொண்டு வந்து மக்கள் மத்தியில் தன்னை ஒரு பிரபலமான நடிகராக மாற்றிக் கொண்டார் தனுஷ்.

இந்த நிலையில் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் ராயன் திரைப்படம் வெளியானது. ராயன் திரைப்படத்திற்கும் நல்ல வரவேற்பும் கிடைத்திருக்கிறது. ஆனால் இது இல்லாமல் தனுஷ்க்கு ஒரு புது பிரச்சனை தற்சமயம் உருவாகி இருக்கிறது.

தனுஷிற்கு கிடைத்த வரவேற்பு:

தனுஷை பொருத்தவரை அவர் ஒரு திரைப்படத்தின் கதையை கேட்டு அந்த கதை நன்றாக இருக்கிறது என்று தோன்றினால் அதற்கு அட்வான்ஸ் தொகையை வாங்கி விடுவார். ஏனெனில் அப்பொழுதுதான் அந்த கதை வேறு யாரிடமும் செல்லாது.

அதிகபட்சம் தனுஷ் பிடித்த கதைகளை இந்த மாதிரி பிடித்து வைத்துக் கொள்வார். பிறகு நேரம் கிடைக்கும் பொழுது அந்த படங்களில் நடித்து கொடுத்து விடுவார். ஆனால் இதே முறையை நிறைய தயாரிப்பு நிறுவனங்களிடம் அவர் பின்பற்றியதாக கூறப்படுகிறது என்று பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கம் ஒன்றிணைந்து இனிமேல் தனுஷின் படத்தை தயாரிக்க கூடாது என்ற முடிவு செய்திருக்கின்றனர். மேலும் புது தயாரிப்பாளர்கள் யாராவது தனுஷை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்றால் முதலில் அது குறித்து தயாரிப்பாளர் சங்கத்திடம் பேச வேண்டும்.

கார்த்தி கூறிய பதில்:

அதற்கு முன்பு தனுஷ் ஏற்கனவே அட்வான்ஸ் தொகை வாங்கி இருக்கும் படங்களை எல்லாம் முதலில் முடித்து கொடுக்க வேண்டும் என்று அவர்கள் திடீரென்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று இந்த விஷயம் பரபரப்பாகி வந்தது.

இதனை அறிந்த நடிகர் கார்த்தி உடனே செயற்குழு கூட்டத்தை கூட்டி இருக்கிறார், இது குறித்து அவர் பேட்டியில் கூறும் பொழுது தனுஷ் குறித்து எந்த ஒரு பிரச்சனையையும் நடிகர் சங்கத்திடம் வந்து தயாரிப்பாளர் சங்கம் கூறவே இல்லை.

முதலில் ஒரு நடிகர் குறித்து ஒரு முடிவை எடுக்கிறார்கள் என்றால் எங்களிடம் கலந்து ஆலோசித்து பேச வேண்டும். என்ன ஏது என்றே விஷயத்தை கூறாமல் அவர்கள் இஷ்டத்திற்கு முடிவு எடுத்திருக்கிறார்கள் இதை நடிகர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இது குறித்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடந்த பிறகு மீதியை கூறுவோம் என்று கூறியிருக்கிறார் நடிகர் கார்த்தி.

பையா படப்பிடிப்பில் தமன்னாவை காதலித்தாரா கார்த்தி!.. ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்த லிங்குசாமி!.

தமிழ் சினிமாவிற்கு 20 வயதுகளில் வந்தும் கூட தனக்கென்று ஒரு இடத்தை பிடிக்க நடிகர்கள் தடுமாறி வரும் நிலையில் 27 வயதில் சினிமாவில் நடிக்க வந்து தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் கார்த்தி.

மிக தாமதமாகவே இவர் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். ஆனால் அவரது முதல் படமான பருத்திவீரன் திரைப்படமே எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை பெற்று கொடுத்தது. முக்கியமாக வெளிநாட்டில் இருந்து படித்துவிட்டு வந்த கார்த்தி இப்படியொரு கதாபாத்திரத்தை இவ்வளவு சிறப்பாக நடிப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

அதனை தொடர்ந்து கார்த்தி நடித்த திரைப்படம் பையா. பையா படத்தின் படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருந்தப்போதே கார்த்தியும் தமன்னாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வலம் வந்துக்கொண்டிருந்தன. இந்த நிலையில் இதுக்குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருந்தார் இயக்குனர் லிங்குசாமி.

அவர் கூறும்போது கார்த்தி அப்படிப்பட்ட ஆள் கிடையாது. அப்போதைய சமயத்தில் அவர் எது செய்வதாக இருந்தாலும் அவரது தந்தை சிவக்குமார் கூறுவது போலதான் செய்வார். தனியாக எந்த முடிவையும் எடுக்க மாட்டார். ஆனால் இப்படி பரவலாக கார்த்தியும் தமன்னாவும் காதலிப்பதாக வந்த வதந்திகளை நானும் கேட்டுக்கொண்டுதான் இருந்தேன்.

ஆனால் உண்மையிலேயே அவர்கள் காதலித்தார்களா என்பது அவர்களுக்கும் கடவுளுக்கும் மட்டுமே தெரியும். அந்த படத்தில் நடிக்கும்போது தமன்னாவிற்கு 19 வயதுதான் ஆகியிருந்தது. அப்போதே நான் கூறினேன் இன்னும் 20 வருடங்கள் கழித்தும் நீங்கள் இப்படியேதான் இருப்பீர்கள் என்றேன்.

பையா படத்தின் மறுவெளியீட்டுக்காக நான் தமன்னாவை சந்தித்தப்போது இந்த விஷயத்தை அவர் நினைவுப்படுத்தினார் என்கிறார் லிங்குசாமி.

தனுஷ் பண்ணுன வேலையால் கார்த்தியோட பட வாய்ப்பு போயிட்டு!.. பெருசா வந்திருக்கலாம்!.. இயக்குனருக்கு நடந்த சோகம்!.

தமிழில் வெகு காலங்களாகவே நகைச்சுவை திரைப்படங்களை இயக்கி வரும் இயக்குனராக சுந்தர் சி இருந்து வருகிறார். சுந்தர் சியின் ஆரம்பக்காலக்கட்டங்கள் முதலே அவரிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்தவர் இயக்குனர் சுராஜ்.

ஒரு கட்டத்திற்கு மேல் சுராஜ் தனியாக திரைப்படம் இயக்க நினைத்தப்போது சுந்தர் சியே அந்த திரைப்படத்தை தயாரித்தார். அதுதான் தலைநகரம் திரைப்படம். இந்த நிலையில் சுந்தர் சியின் வழியை பின்பற்றி சுராஜும் கூட காமெடி திரைப்படங்களாக இயக்க துவங்கினார்.

ஆனால் இவரது திரைப்படங்கள் சுந்தர் சியின் திரைப்படங்களில் இருந்து மாறுப்பட்டு இருந்தன. இருந்தாலும் இவரது திரைப்படத்தின் காமெடி காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கவே செய்தது. இந்த நிலையில்தான் தனுஷை வைத்து படிக்காதவன் என்கிற திரைப்படத்தை இயக்கினார் சுராஜ்.

dhanush

அந்த திரைப்படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து தனுஷிற்கு அதிகமாக வரவேற்புகள் கிடைக்க துவங்கின. இந்த நிலையில்தான் கார்த்தியை வைத்து சிறுத்தை படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு சுராஜிற்கு கிடைத்துள்ளது.

ஆனால் அப்போது தனுஷ் தன்னை வைத்து மீண்டும் ஒரு படம் இயக்குமாறு கேட்டுக்கொண்ட காரணத்தால் அவரை வைத்து மாப்பிள்ளை திரைப்படத்தை இயக்க சென்றுவிட்டார் சுராஜ். இதனால் சிறுத்தை திரைப்படத்தை இயக்குனர் சிவா இயக்கினார்.

அந்த திரைப்படத்தின் மூலமாக அதற்கு பிறகு சிவா எவ்வளவு பெரிய உச்சத்தை தொட்டார் என்பது பலரும் அறிந்த விஷயமே.

ஏண்டா நாய்க்கு வைக்குற சீனெல்லாம் ஹீரோவுக்கு வைக்கிறீங்க!.. சுந்தர் சி காட்சியால் கடுப்பான கவுண்டமணி!.

தமிழில் காமெடி திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சுந்தர் சி. படம் முழுக்க காமெடி காட்சிகளை மட்டுமே வைத்து சுவாரஸ்யமான ஒரு திரைப்படத்தை அவரால் கொடுக்க முடியும்.

அப்படி அவர் இயக்கிய திரைப்படம்தான் உள்ளத்தை அள்ளித்தா. உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி திரைப்படமாக அமைந்திருந்தது. இதனாலேயே அந்த திரைப்படத்தில் எமோஷனலான காட்சிகளே பெரிதாக இல்லையே என்கிற கேள்விதான் முதலில் சுந்தர் சிக்கு எழுந்தது.

sundar-c

இந்த நிலையில் அந்த படம் வெற்றி பெறுமா என்பதே சுந்தர் சி க்கு சந்தேகமாக இருந்தன. இந்த நிலையில் வெளியான ஒரு வாரத்திற்கு அந்த படம் அவ்வளவாக வெற்றி பெறவில்லை. ஆனால் அடுத்த ஒரு வாரத்தில் பெரும் வெற்றியை கொடுத்தது உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம்.

விமர்சித்த கவுண்டமணி:

இதனை தொடர்ந்து செண்டி மெண்டாக ஒரு படம் இயக்க வேண்டும் என்று சுந்தர் சி இயக்கிய திரைப்படம் கண்ணன் வருவான். அந்த படத்தில் ஒரு காட்சியில் வெளிநாட்டில் இருந்து வந்திருக்கும் கார்த்திக்கு வெளிநாட்டு உணவுகளை வைத்து விருந்து வைத்திருப்பார்கள்.

ஆனால் கார்த்தி அதை உண்ணாமல் அவரது பாட்டி செய்த பால் சோறை உண்பார். இந்த காட்சி படமாக்கப்பட்ட பிறகு அதை பார்த்து கடுப்பான கவுண்டமணி யோவ் உங்களுக்குதான் செண்டிமெண்ட் வராதுல. அப்புறம் எதுக்குய்யா ட்ரை பண்றீங்க.

எங்க ஊர்ல நாய்க்குதான்யா பால் சோறு வைப்பாங்க. ஏதோ காமெடி படமா இருக்கும்னு வந்தா இந்த படம் ஒரே கண்ணீரா இருக்கும் போலயே என கூறியுள்ளார் கவுண்டமணி.

நீங்க அதை பண்ணுனா எங்க பொண்டாட்டிகள் மாறிடுவாங்க!.. ப்ளீஸ் செய்யாதீங்க!.. கார்த்திக்கு ரசிகர்கள் வைத்த கோரிக்கை!.

Actor Karthi: தாமதமாக தமிழ் சினிமாவிற்கு வந்தாலும் கூட தன்னுடைய அண்ணன் அளவிற்கான மார்க்கெட்டை சினிமாவில் பிடித்தவர் நடிகர் கார்த்தி. சூர்யா தன்னுடைய இளமை காலம் முதலே தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

அவருக்கு ஒரு கட்டத்திற்கு மேல் மார்க்கெட் மிக அதிகமாக இருந்தது அப்பொழுது விஜய், அஜித், சூர்யா என்றும் மூன்று நடிகர்களுக்கும் இடையே போட்டி இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு சூர்யாவின் சில படங்கள் தோல்வியை கண்டதால் இந்த போட்டியிலிருந்து சூர்யா விலக்கப்பட்டார்.

இருந்தாலும் வித்தியாசமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஒரு நபராக சூர்யா இருந்து வருகிறார். காக்க காக்க திரைப்படத்தின் போது சூர்யா தன்னுடைய உடலை நன்கு வலுப்படுத்த துவங்கி விட்டார். இதனாலேயே பல பெண்களின் பிடித்த கதாநாயகனாக சூர்யா இருந்து வந்தார்.

actor-karthi

இந்த நிலையில் ஒருமுறை மைதானத்தில் கார்த்தி நடந்து சென்று கொண்டிருந்த பொழுது குழுவாக வந்த சில ஆண்கள் அவரை மரித்தனர் இங்கே என்ன சார் செய்து கொண்டிருக்கிறீர்கள் என அவரிடம் கேட்ட பொழுது உடற்பயிற்சிக்காக வந்தேன் என்று கூறியுள்ளார் கார்த்தி.

அப்பொழுது சூர்யா சிக்ஸ் பேக் வைத்திருக்கும் சில போட்டோக்களை எடுத்து கார்த்தியிடம் நீட்டிய அவர்கள் கூறும் பொழுது எங்களது மனைவிகள் சூர்யாவின் இந்த புகைப்படங்களை எல்லாம் காட்டி சூர்யா எப்படி உடம்பை வைத்திருக்கிறார் நீங்களும் தான் இருக்கிறார்கள் என்று எங்களை திட்டி வருகிறார்.

அப்பொழுதெல்லாம் நாங்கள் உங்களுடைய புகைப்படத்தை அவர்களிடம் காட்டி சூர்யாவின் தம்பி கார்த்தி எப்படி இருக்கிறார் என்று பார் என்று கூறிதான் சமாளித்து வருகிறோம். நீங்களும் இப்படி உடற்பயிற்சி எல்லாம் செய்து உங்களது உடலில் சிக்ஸ் பேக் கொண்டு வந்து விட்டீர்கள் என்றால் பிறகு எங்களுக்கு திண்டாட்டம் ஆகிவிடும் சார். என்று அறிவுரை கூறிவிட்டு சென்று இருக்கிறார்கள் இந்த விஷயத்தை கார்த்தி ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.

சின்ன நடிகைக்காக காம்ப்ரமைஸ் ஆன கார்த்தி, ஜெயம்ரவி!.. இதுதான் காரணமாம்!.

Actor karthik : நடிகர் கார்த்திக்கை பொறுத்தவரை தமிழ் சினிமாவில் தொடர்ந்து நிறைய வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். அவர் நடிக்கும் படங்கள் பெரும்பாலும் வெற்றியைதான் கொடுத்து வருகின்றன. சமீபத்தில் அவர் நடித்த சர்தார், பொன்னியின் செல்வன், விருமன் ஆகிய திரைப்படங்கள் எல்லாமே நல்ல வெற்றியை கொடுத்தன.

அதற்குப் பிறகு வந்த ஜப்பான் திரைப்படம் மட்டும் வெற்றியடையவில்லை இந்த நிலையில் தற்சமயம் கார்த்தி இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியாரே என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தின் கதைப்படி அவரது உடலில் எம்.ஜி.ஆரின் கதாபாத்திரம் இருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம் நடிகர் ஜெயம்ரவி ஜீனி என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதுவும் ஒரு மாயாஜால திரைப்படம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பும் ஒரே இடத்தில் நடைபெறுகிறதாம். இது ஏன் இப்படி நடைபெறுகிறது என பார்க்கும் பொழுது தற்சமயம் தெலுங்கில் பிரபலமாகி வரும் நடிகை கீர்த்தி ஷெட்டியை தான் இந்த இரு திரைப்படங்களுக்கும் கதாநாயகியாக வைத்திருக்கின்றனர்.

ஆனால் இரண்டு திரைப்படங்களும் வெவ்வேறு இடங்களில் நடத்தால் அங்கு சென்று வருவதற்கு கீர்த்தி ஷெட்டிக்கு சிரமமாக இருக்கும். மேலும் அது இந்த படங்களின் படப்பிடிப்பிலும் பிரச்சினையை ஏற்படும் என்பதால் இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பையும் ஒரே பகுதியில் வைத்து எடுத்து வருகின்றனர்.

ஏனெனில் அந்த அளவிற்கு கீர்த்தி ஷெட்டிக்கு தமிழ் சினிமாவில் ரசிக்கப்பட்டாளம் இருக்கிறது. எனவே அவர் தன்னுடைய திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக ஜெயம் ரவியும் கார்த்தியும் காம்ப்ரமைஸ் செய்து கொண்டு ஒரே படத்தில் நடித்து வருகின்றனர்.