Tag Archives: karthi

இந்த படத்தை வேற ஹீரோவை வச்சி சக்ஸஸ் பண்ணி காட்டுறேன் பாக்குறீங்களா!.. கார்த்திக்கு ஓப்பன் சேலஞ் வைத்த இயக்குனர்!.

Actor Karthik and Vikraman : 90களில் தமிழில் பிரபலமாக இருந்த இயக்குனர்களில் மிகவும் முக்கியமானவர் இயக்குனர் விக்ரமன். பெரும்பாலும் விக்ரமன் இயக்கும் திரைப்படங்கள் எல்லாம் குடும்பக் கதையாகவே இருக்கும். மிகவும் சிம்பிளான கதைகளை எடுத்துக் கொண்டு அதனை சிறப்பாக திரைக்கதை அமைத்து மக்கள் பார்க்கும் வகையில் சுவாரசியமாக திரைப்படமாக மாற்றுவதில் விக்ரமன் கெட்டிக்காரர் என்று கூறலாம்.

இந்த நிலையில் அப்போது இருந்த பெரும் நடிகர்கள் பலரும் விக்ரமன் திரைப்படத்தில் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்து வந்த நிலையில் ஒவ்வொரு ஹீரோவை வைத்தும் ஒரு திரைப்படமாவது இயக்கி வந்தார் விக்ரமன். அப்படி அவர் கார்த்திக்கை வைத்து இயக்கிய திரைப்படம்தான் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்.

இதில் இவருக்கு ஜோடியாக நடிகை ரோஜா நடித்திருப்பார். திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி பாதி படப்பிடிப்புகள் முடிந்த பிறகு நடிகர் கார்த்திக்கு இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு விருப்பம் இல்லாமல் போனது. ஏன் அவர் நடிக்க விரும்பவில்லை என்று விக்ரமன் சென்று கேட்டபொழுது இதற்கு முன்பு நந்தவனத் தெரு என்ற ஒரு திரைப்படத்தில் நடித்தேன்.

நடிக்க மறுத்த கார்த்திக்:

அந்த திரைப்படத்திலும் கதாநாயகியை பாடகியாக்குவதுதான் கதையாக இருந்தது. இந்த படமும் அதே கதையை கொண்டிருப்பதால் இது ஓடுமா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார் கார்த்திக்.

அதனை கேட்ட விக்ரமனிற்கு கோபம் வந்துவிட்டது. உடனே அவர் இது அந்த படத்தில் இருந்து இது கொஞ்சம் மாறுப்பட்ட கதைதான். இந்த திரைப்படத்தில் உங்களுக்கு நடிக்க விருப்பம் இல்லை என்றால் பிரச்சனை இல்லை.

இந்த தயாரிப்பாளரின் வேறு திரைப்படத்தில் நீங்கள் நடித்துக் கொள்ளுங்கள். ஆனால் நான் இதே திரைப்படத்தை வேறு ஒரு கதாநாயகனை வைத்து வெற்றி படமாக்கி காட்டுகிறேன் பார்க்கிறீர்களா? என்று கூறியிருக்கிறார் விக்ரமன்.

அதனை கேட்ட கார்த்திக் நீங்கள் இவ்வளவு உறுதியாக இந்த கதையை நம்புகிறீர்கள் என்றால் நான் இதில் நடிக்கிறேன் சார் என்று கூறியிருக்கிறார் அதேபோல உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் திரைப்படம் நந்தவனத் தெரு  திரைப்படத்தை விடவும் நல்ல வெற்றியை கொடுத்தது.

தயாரிப்பாளர், நயன்தாரா ரெண்டு பேருமே கை விட்டுட்டாங்களா!.. வாய்ப்பை இழந்த அருண்ராஜா காமராஜ்!..

Director Arunraja Kamaraj: தமிழ் சினிமாவில் நல்ல படங்கள் எடுத்த பிறகும் கூட சில இயக்குனர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகும் சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படியாக தமிழில் கனா என்ற சிறப்பான திரைப்படத்தை எடுத்த இயக்குனர் அருண் ராஜா காமராஜ் ஒரு தயாரிப்பாளரின் சதியால் பல நாட்களாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்திருக்கிறார்.

அவரது முதல் திரைப்படமான கனா திரைப்படம் எதிர்பார்த்ததை விட நல்லா வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அருண் ராஜா காமராஜுக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனமான பிரின்ஸ் பிக்சர்ஸ் அருண் ராஜா காமராஜுக்கு வாய்ப்பு கொடுத்தது.

நடிகர் கார்த்தியை வைத்து ஒரு படம் எடுக்க இருப்பதாகவும் அதற்கு கதை எழுதுமாறு அன்புராஜா காமராஜிடம் கூறியிருக்கிறது பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம். ஆனால் ஒரு வருட காலமாகியும் கூட கார்த்தியை கண்ணில் கூட காட்டாமல் இருந்திருக்கின்றனர்.

அதற்குப் பிறகு கார்த்திக் மிகவும் பிசியாக இருக்கிறார் என்றும் எனவே தனுஷிற்கு ஒரு கதையை எழுதும்படியும் கூறி இருக்கின்றனர். அதற்கு கதை எழுதி வந்த நிலையில் தனுஷும் நடிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை எனவே அடுத்து நயன்தாராவிற்கு கதை எழுதுங்கள் என்று அவரை தொந்தரவு செய்து இருக்கின்றனர்.

இந்த நிலையில் நயன்தாராவிற்கு ஒரு ஆறு கதையை கூறியிருக்கிறார் இயக்குனர். அந்த ஆறு கதையுமே நன்றாக இருக்கிறது என்று நயன்தாரா கூறவும் அதில் மிகவும் குறைந்த பட்ஜெட்டாக இருக்க கூடிய ஒரு படத்தை படமாக்குவதற்கு பிரின்ஸ் பிக்சர்ஸ் முடிவு செய்திருக்கிறது.

இதற்கு அன்னபூரணி படத்தின் தோல்வியும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த நயன்தாரா அதிகபட்ஜெட்டில் தன்னை வைத்து படம் எடுத்தால் நடிக்கிறேன் இல்லை என்றால் நடிக்க முடியாது என கூறியுள்ளார்.

இந்த பிரச்சனைகளுக்கு நடுவே அருண் ராஜா காமராஜ் தற்சமயம் பிரின்ஸ்பெக்டர் நிறுவனத்திடம் இருந்து விலகி இருக்கிறார் வேறு ஏதோ ஒரு தயார்ப்பாளரை பிடித்து அதன் மூலமாக படம் எடுக்க திட்டமிட்டுள்ளாராம்.

Actor Karthi : சமயத்தில் காப்பாற்றிய சிவன் பாடல்!.. நடிகர் கார்த்திக்கு நடந்த சம்பவம்!..

Actor Karthi : தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் கார்த்தி. தொடர்ந்து வெற்றி படங்களாக நடித்து வந்த கார்த்திக்கு தற்சமயம் வந்த ஜப்பான் திரைப்படம் மட்டும் கொஞ்சம் தொய்வை ஏற்படுத்தியது என்று கூறலாம்.

அதற்கு முன்பு வந்த சர்தார், விருமன், பொன்னியின் செல்வன் என வரிசையாக அனைத்தும் வெற்றி திரைப்படங்களாகவே அமைந்தன. இந்த ஜப்பான் திரைப்படம் கார்த்தியின் 25வது திரைப்படம் ஆகும். இன்னும் பல படங்களில் அவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கார்த்தி அவரது வாழ்வில் நடந்த ஒரு விஷயத்தை கூறியிருந்தார் நடிகர் ஸ்ரீமன் சிவனுடைய மிகப்பெரிய பக்தராக இருந்தார். எப்போதும் திருவண்ணாமலை சென்று வருவதை அவர்கள் ஒரு பழக்கமாகக் கொண்டிருந்தார். இந்த நிலையில் கார்த்திக்கும் சிவன் மீது கொஞ்சம் ஆர்வம் வந்தது.

kaithi

எனவே சிவன் குறித்து தினமும் சொல்வதற்கான மந்திரம் ஒன்று இருந்தால் சொல்லவும் என்று ஸ்டீமனிடம் கேட்டுள்ளார் கார்த்தி. இதை கேள்விப்பட்டதும் ஸ்ரீமன் அவருக்கு ஒரு மந்திரத்தை சொல்லி தந்துள்ளார் பெற்ற தாய் தன்னை மக மறந்தாலும் என துவங்கும் அந்த மந்திரம் ராமலிங்க அடிகளார் எழுதிய திருவருட்பா என்னும் நூலில் வரும் மந்திரம் ஆகும்.

அது கார்த்திக்கும் மிகப் பிடித்திருந்தது. அதனால் அதை அவர் மனப்பாடம் செய்து வைத்திருந்தார். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி திரைப்படத்தில் நடிக்கும் பொழுது தன்னை ஒரு சிவ பக்தனாகத்தான் வெளிப்படுத்து இருப்பார் கார்த்தி.

அப்படி நடிக்கும் போது ஒரு இடத்தில் சிவனின் மந்திரத்தை கார்த்தி சொல்வது  போன்ற காட்சியை எழுதியிருந்தார் லோகேஷ் கனகராஜ். அந்த இடத்தில் என்ன மந்திரம் சொல்வது என கேட்ட பொழுது உங்களுக்கு ஏதும் மந்திரம் தெரிந்தால் அதையே சொல்லுங்கள் என்று கூறினார் லோகேஷ் கனகராஜ்.

இந்த நிலையில் தனக்கு ஏற்கனவே தெரிந்த அந்த திருவருட்பா மந்திரத்தை கூறி இருக்கிறார் கார்த்தி. அந்த காட்சிக்கு அப்பொழுதே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

சார் ரொம்ப கஷ்டத்தில் இருக்கேன் சார்… ப்ளீஸ் உதவுங்க சார்!. இயக்குனரிடம் கெஞ்சி வாய்ப்பை பெற்ற சரவணன்!..

Paruthi veeran Movie : பருத்திவீரன் திரைப்படம் மூலமாக பல நடிகர்களுக்கும் வாழ்க்கை கொடுத்துள்ளார் இயக்குனர் அமீர். அமீர் இயக்கத்தில் பருத்திவீரன் திரைப்படம் உருவான பொழுது அது இத்தனை பெரும் வரவேற்பு பெரும் என்று யாருமே நினைக்கவில்லை.

இத்தனைக்கும் அந்த திரைப்படம் எதிர்மறையான முடிவைக் கொண்ட ஒரு திரைப்படம் ஆகும். அமீருக்கு அப்படியான ஒரு திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாக இருந்தது. அதனை தொடர்ந்து அவர் பருத்திவீரன் திரைப்படத்தை இயக்கினார்.

நடிகர் கார்த்தி, நடிகர் சரவணன் ,கஞ்சா கருப்பு, அமீர், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இவர்கள் அனைவருக்குமே இந்த திரைப்படம் முக்கியமான திரைப்படமாக அமைந்தது.  முக்கியமாக நடிகர் சரவணனுக்கு இது மிகவும் முக்கியமான படம் எனலாம்.

ஏனெனில் ஒரு காலத்தில் கதாநாயகனாக நடித்து வந்த சரவணன் பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை இழந்தார். இந்த நிலையில் பருத்தி வீரன் திரைப்படத்தில் அவருக்கு கிடைத்த சித்தப்பா கதாபாத்திரம் அப்போது மிகப் பிரபலமானது.

அதனை தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகளும் வரத் துவங்கின ஆனால் குடும்ப கஷ்டத்தின் காரணமாகவே அந்த திரைப்படத்தில் நடிக்க வந்தார் சரவணன். முதலில் அந்த கதாபாத்திரத்தில் நடிகர் பசுபதியை தான் நடிக்க வைக்க இருந்தார் அமீர். அந்த சமயத்தில் அவரை சந்தித்த சரவணன் நான் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறேன் ஏதாவது ஒரு வாய்ப்பு கொடுங்கள் என கேட்டதற்கு இணங்க அவருக்கு அந்த சித்தப்பா கதாபாத்திரத்தை கொடுத்து இருக்கிறார்.

அதன் பிறகு படப்பிடிப்பு துவங்கும் பொழுது முதலில் கார்த்தியின் சிறுவயது கதைகளை படமாக்கி கொண்டிருந்தனர். அதில் சரவணனுக்கு பெரிதாக காட்சிகளே கிடையாது. எனவே தன்னை நடிக்க வைக்கிறேன் எனக் கூறிவிட்டு சின்ன கதாபாத்திரம் கொடுத்து விட்டார் போல என்று நினைத்த சரவணன் அது குறித்து அமீருடன் பேசி அழுதுள்ளார்.

பிறகு கூறிய அமீர் இது பிளாஷ்பேக் கதை நிகழ்கால கதையை எடுக்கும் போது உங்களுக்கு அதிக காட்சிகள் இருக்கும் என்று கூறினார். அதன்படியே படத்தில் இரண்டாவது முக்கிய கதாபாத்திரமாக சரவணன் இருந்தார்.

கமல் தனுஷ் ரெண்டு பேரையும் கழட்டி விட்ட ஹெச்.வினோத்.. அடுத்த கூட்டணி கார்த்தி கூட!.. என்னப்பா இப்படி ஆயிடுச்சு!..

Director H Vinoth : துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து பட வாய்ப்புகள் கேட்டு ஒவ்வொரு நடிகரிடமும் ஏமாந்து வருகிறார் இயக்குனர் ஹெச்.வினோத். பொதுவாகவே நிஜமாக நடக்கும் ஊழல்கள், திருட்டுகளை அடிப்படையாக கொண்டுதான் ஹெச்.வினோத் படம் எடுப்பது வழக்கம்!..

அந்த வகையில் அவர் ஏற்கனவே எடுத்த சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, துணிவு ஆகிய படங்கள் எல்லாமே சமூக பிரச்சனைகளையும், குற்றங்களையும் பேசும் வகையில் இருந்தது. இந்த நிலையில் துணிவு திரைப்படத்திற்கு பிறகு அடுத்து கமல்ஹாசனை வைத்து ஒரு திரைப்படத்தை எடுக்கவிருந்தார் ஹெச்.வினோத்.

அதற்கான கதை வேலைகள் எல்லாம் முடிந்த நிலையில் கமல்ஹாசன் மணிரத்தினம் திரைப்படத்தில் கமிட் ஆகி விட்டார். இதனால் ஹெச்.வினோத்திற்கு வாய்ப்பு தள்ளி போனது. இதனையடுத்து நடிகர் தனுஷ் தனக்கு ஒரு கதை எழுதும்படி கேட்டுக்கொண்டார்.

ஆனால் தற்சமயம் இவர்கள் இருவரையும் வைத்து படம் எடுக்க வேண்டாம், மீண்டும் சின்ன கதாநாயகர்களை வைத்தே படம் எடுப்போம். அப்போதுதான் நம் இஷ்டத்துக்கு படம் பண்ண முடியும் என நடிகர் கார்த்தியை நாடியுள்ளார் ஹெச்.வினோத்.

தீரன் திரைப்படம் அவருக்கு பெரும் வரவேற்பை பெற்று கொடுத்த படம் என்பதால் அதன் இரண்டாம் பாகமான தீரன் அதிகாரம் 2 படத்தை எடுக்க முடிவு செய்துள்ளார் ஹெச்.வினோத். ஜப்பான் படம் பெரிதாக வரவேற்பை பெறாத காரணத்தால் கார்த்திக்கும் அடுத்து ஒரு வெற்றிபடம் தேவைப்படுகிறது. எனவே அடுத்து இதன் பட வேளைகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புயல் பாதிப்பிற்கு உதவிக்கரம் நீட்ட களம் இறங்கிய சூர்யா கார்த்தி!.. எப்போதுமே முதல் கை இவங்க கைதான் போல!..

Actor Surya and Karthi: நேற்று டிசம்பர் 4 ஆம் தேதி சென்னையில் புயல் காரணமாக தீவிர மழை பெய்ய துவங்கியது. சென்னையை பொறுத்தவரை மழை என வந்துவிட்டால் அந்த மழை நீர் செல்வதற்கு இடமில்லாமல் போய்விடும். இதனால் அங்காங்கே நீர் தேங்கி அதன் மட்டம் உயர்ந்து சென்னையே வெள்ளக்காடாகி விடும்.

இந்த நிலையில் நேற்று நிற்காமல் பெய்த கடும் மழையால் சென்னை மாநகரம் முழுவதுமாக பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து புயல் கரையை கடந்த நிலையில் இன்று மீட்பு பணிகள் மற்றும் பேரிடர் பணிகள் துவங்கின.

chennai-flood

சென்னையில் பழுதான இடங்களை எல்லாம் சரி செய்து சில பகுதிகளில் மின்சாரமும் வழங்கி வருகின்றனர். சேரி மக்களால் இதனால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் சூர்யாவும் கார்த்தியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளனர்.

செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களும் மழை வெள்ளத்தில் அதிகமாக பாதிக்கப்பட்டத்தை அடுத்து அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் நிவாரண நிதியாக அரசுக்கு ரூபாய் 10 லட்சத்தை வழங்கியுள்ளனர் சூர்யாவும், கார்த்தியும்,

இதனை தொடர்ந்து அடுத்து சினிமா பிரபலங்கள் பலரும் நிதி வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவாஜி கணேசனுக்கு அப்புறம் அப்படி ஒரு அம்சம் கார்த்திக்குதான் அமைஞ்சது!.. விளக்கம் கொடுத்த பேரரசு!..

Sivaji Ganesan and Actor Karthi : கோலிவுட் சினிமாவில் நடிப்பில் சிறந்தவர் என்றால் அது சிவாஜி கணேசன்தான். தமிழில் 200க்கும் அதிகமான திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார் சிவாஜி கணேசன் அந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான கதை அமைப்பையும் சிக்கலான கதாபாத்திரங்களையும் கொண்டவை ஆகும்.

நாட்டுக்கு நல்லது செய்யும் சண்டை போடும் கதாநாயகன் தமிழ் சினிமாவில் அதிகம் உண்டு. ஆனால் சிவாஜி கணேசன் போல வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் கதாநாயகர்கள் சினிமாவில் குறைவுதான்.

முதல் படத்தில் அறிமுகமாகும் பொழுது அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளானவர் நடிகர் சிவாஜி கணேசன். அவரது முதல் படமான பராசக்தி திரைப்படத்தில் அவரை கதாநாயகனாக போடுவதற்கே ஏவிஎம் நிறுவனம் ஒப்புக்கொள்ளவில்லை. அவரால் நன்றாக நடிக்க முடியாது என்று அவர்கள் நினைத்தனர்.

ஆனால் அவர் நடித்து வெளியான பிறகு பராசக்தி (Parasakthi Movie) பெரும் வெற்றியை கொடுத்தது. இந்த நிலையில் தற்சமயம் நடந்து வரும் அமீர் ஞானவேல் ராஜா பிரச்சனை குறித்து இயக்குனர் பேரரசு ஒரு பேட்டியில் பேசும்பொழுது சிவாஜியை கார்த்தியுடன் இணைத்து பேசியிருந்தார்.

அதாவது தமிழ் சினிமாவிலேயே சிவாஜிக்கு பிறகு முதல் படத்திலேயே பெரிய ஹிட் கொடுத்த நடிகர் என்றால் அது கார்த்தி தான் அப்படி ஒரு வெற்றியை அவருக்கு அளித்தது இயக்குனர் அமீர் தான் எனவே அமீரை ஞானவேல் ராஜா தவறாக பேசுவது எந்த விதத்திலும் சரி கிடையாது என்று பேசியுள்ளார் பேரரசு. இது குறித்து பதிலளித்து வரும் நெட்டிசன்கள் எப்படி இருந்தாலும் கார்த்தியை சிவாஜி கணேசன் உடன் ஒப்பீடு செய்வது என்பது கொஞ்சம் அதிகமாக இருக்கிறது என்று பேசி வருகின்றனர்.

படம் நல்லா இருந்துச்சா இல்லையானு மட்டும் சொல்லு!.. ஞானவேல் ராஜா பிரச்சனையில் சிக்கிய சூர்யா பட இயக்குனர்!..

Producer Gnanavel Issue : கடந்த சில நாட்களாக ஞானவேல்ராஜா மற்றும் அமீருக்கு இடையேயான மோதல்தான் சமூக வலைத்தளங்களில் பெரும் பேச்சு பொருளாகி வருகிறது. அமீர் பருத்துவீரனை எடுப்பதற்கு தேவையான குறித்த தொகையை தாண்டி அதிக தொகைக்கு படம் எடுத்ததாகவும் அவரது படங்கள் சிறப்பாக இல்லை எனவும் இஷ்டத்துக்கு பேசியிருந்தார் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா.

இந்த நிலையில் இயக்குனர் அமீருக்கு சினிமா பக்கத்தில் இருந்து ஆதரவுகள் குவிந்து வருகின்றன. பருத்திவீரன் திரைப்படத்திற்கு முழு தயாரிப்பு செலவையும் ஞானவேல்ராஜா ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் பாதியிலேயே கை கழுவிவிட்டார். அதன் பிறகு பலரிடமும் கடனை வாங்கி அந்த படத்தை முடித்துள்ளார் அமீர்.

இதில் அவருக்கு இயக்குனர் சசிக்குமாரும் உதவியுள்ளார். அதை சசிக்குமாரே கூறியுள்ளார். இந்த நிலையில் இயக்குனர் சமுத்திரக்கனியும் அமீருக்கு ஆதரவாக பதிவிட்டிருந்தார். ஆனால ஞானவேல் ராஜா ஒரு பேட்டியில் பேசும்போது ராம் திரைப்படத்தை இயக்குனர் சுதா கொங்காரா பார்த்துவிட்டு நன்றாக இல்லை என கூறியதாக கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக சுதா கொங்காரா தனது டிவிட்டர் பக்கத்தில் கூறும்போது “இறுதி சுற்றில் வந்த மதி மற்றும் சூரரை போற்று திரைப்படத்தில் வந்த பொம்மி இரண்டு கதாபாத்திரங்களுமே பருத்திவீரன் திரைப்படத்தில் வந்த முத்தழகு கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டு வந்த கதாபாத்திரங்கள்தான்.

ஒரு ஆணின் எழுத்துக்களில் ஒரு பெண் கதாப்பாத்திரம் இவ்வளவு முழுமையாக எழுதப்பட்டது அதுவே முதல் முறை என்றும் அவரிடம் சொன்னேன். நான் என் படத்தில் மதி மற்றும் பொம்மி கதாபாத்திரங்களில் நடித்த நடிகைகளிடம் பருத்தி வீரன் படத்தை பார்த்துவிட்டு வருமாரு தான் சொல்லி அனுப்பினேன். அதுதான் தமிழ் சினிமாவில்  தடம் பதித்த மிகச்சிறந்த ஓர் இயக்குனருக்கு நான் செய்யும் மரியாதை… இதுதான்  நான் சொல்ல விரும்பும் விஷயம்.. நன்றி… என கூறியிருந்தார்.

ஆனால் இந்த பதிவிற்கு கமெண்ட் செய்த ரசிகர்கள் ராம் படம் நல்லா இல்லைனு உண்மையிலேயே சொன்னீங்களா அதை மட்டும் சொல்லுங்க எதுக்கு சுத்தி வளைச்சு பேசுறீங்க என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தாத்தா காலத்து வெற்றியை இன்னமும் சொல்லிட்டு இருக்க முடியுமா!.. அமீரை ஓப்பனாக நக்கல் செய்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா..

Director Ameer : இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்து சினிமாவில் இயக்குனராக உயர்ந்தவர் அமீர். அமீர் படங்களுக்கு ஆரம்பத்தில் அதிக வரவேற்பு இருந்து வந்தது. அவர் இயக்கிய மௌனம் பேசியதே, பருத்தி வீரன், ராம் மாதிரியான திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து தமிழின் முக்கியமான இயக்குனராக அமீர் மாறினார். தற்சமயம் சில படங்களில் நடித்து வருகிறார். வட சென்னை படத்தில் இவர் நடித்த ராஜன் கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதனை தொடர்ந்து தற்சமயம் மாயவலை திரைப்படத்திலும் நடித்துள்ளார். கடந்த சில காலங்களாக கார்த்தி மற்றும் அமீருக்கு இடையே இருக்கும் மோதல் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. பருத்தி வீரன் திரைப்படத்தின் போதுதான் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக பேச்சுக்கள் இருந்தன.

இந்த நிலையில் இதுக்குறித்து அந்த படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறும்போது இன்னமும் பருத்திவீரன் திரைப்படம் மூலமாக கார்த்திக்கு ஹிட் கொடுத்ததையே அமீர் பேசிக்கொண்டிருக்கிறார். பருத்திவீரன் வந்து எத்தனையோ வருடங்களாகிவிட்டன.

முதல் படம் ஹிட் கொடுத்து இரண்டாவது படம் ஓடவில்லை என்றாலே மக்கள் கண்டுக்கொள்வதில்லை. இதில் எப்போதோ எடுத்த படத்தை இன்னமும் அவர் பேசி கொண்டிருப்பது எப்படி நியாயமாகும் என கேள்வி எழுப்பியுள்ளார் ஞானவேல் ராஜா.

சிவக்குமாருக்கு பெரும் துரோகத்தை செஞ்சிட்டார் அமீர்!.. கார்த்தி அமீர் சண்டை குறித்து கூறிய பயில்வான் ரங்கநாதன்!.

Tamil Actor Karthi :மௌனம் பேசியதே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் அமீர். அமீர் இயக்கும் திரைப்படங்களுக்கு பெரும்பாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

பருத்திவீரன், ராம் மாதிரியான திரைப்படங்கள் அவரின் முக்கியமான வெற்றி திரைப்படங்கள் ஆகும். சிவக்குமாருக்கும் இயக்குனர் அமீருக்கும் இடையே நல்ல நட்பு இருந்து வந்தது. அதற்கு மௌனம் பேசியதே திரைப்படம் முக்கிய காரணமாக இருந்தது.

அதற்கு முன்பு வரை சூர்யாவின் நடிப்பு அதிக விமர்சனத்துக்குள்ளானது. சூர்யாவிற்கு ஒழுங்காக நடிக்க வரவில்லை. ஒழுங்காக நடனமாட வரவில்லை என்றெல்லாம் கூறி வந்தனர். ஆனால் அமீர் இயக்குனர் பாலாவை போலவே நன்றாக நடிப்பை வாங்க கூடியவராக இருந்தார்.

அவர் மௌனம் பேசியதே திரைப்படத்தில் சூர்யாவை அதிக வேலை வாங்கினாலும் அவரிடமிருந்து ஒரு புது நடிப்பை வரவழைத்தார் அமீர். இதனால் சிவக்குமாருக்கு அமீரின் மீது பாசம் ஏற்பட்டது. இந்த நிலையில்தான் வெளிநாட்டில் சென்று படித்துவிட்டு வந்து இயக்குனர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்தார் நடிகர் கார்த்தி.

அவரை வைத்து பருத்திவீரன் திரைப்படத்தை எடுக்க நினைத்தார் அமீர். ஆனால் சிவக்குமார் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இந்த கதாபாத்திரம் கார்த்திக்கு சரி வராது என அவர் கூறினார். ஆனால் அதை கேட்காத அமீர் அவரை வைத்து பருத்திவீரன் திரைப்படத்தை இயக்கினார்.

அந்த படத்தில் கதாபாத்திரம் கருப்பாக இருக்க வேண்டும். ஆனால் கார்த்தி நன்றாக வெள்ளையாக இருந்தார். எனவே அவரை அதிகமாக வெயிலில் அமர வைத்து அவரை கருப்பாக்கினார் அமீர். பிறகு கார்த்தியை கருப்பாக கண்ட சிவக்குமார் அதை பார்த்து கண் கலங்கினார். அதன் பிறகு மீண்டும் கார்த்தி வெள்ளை நிறமடைய வெகு நாட்கள் ஆகிவிட்டதாம்.

இதனால் கோபமடைந்தார் சிவக்குமார். தனது மகனின் சினிமா வாழ்க்கையே அமீரால் கேள்விக்குறியாகி இருக்கும் என்று நினைத்த சிவக்குமார் அதிலிருந்து அமீருடன் இடைவெளியை உருவாக்கி கொண்டாராம்.

இந்த நிகழ்வை பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

அமீர் பண்ணுன சம்பவத்தால்தான் கார்த்தி அவரை மதிக்கலை … ஓப்பன் டாக் கொடுத்த ஞானவேல் ராஜா.

தமிழ் சினிமாவில் மிகவும் தாமதமாக வந்து சீக்கிரமே கதாநாயகன் ஆனவர் நடிகர் கார்த்தி. விஜய் அஜித் சூர்யா மாதிரியான நடிகர்கள் 20களின் ஆரம்பங்களிலேயே தமிழ் சினிமாவில் கதாநாயகர்களாக நடிக்க துவங்கினர்.

ஆனால் கார்த்தி தனது 27வது வயதில்தான் முதல் படமான பருத்திவீரன் திரைப்படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவரை சினிமாவில் நாயகனாக அறிமுகம் செய்தவர் இயக்குனர் அமீர்தான்.

ஆனால் சில காரணங்களால் அமீருக்கும் கார்த்திக்கும் பேச்சு வார்த்தை இல்லாமல் போனது. இந்த நிலையில் கார்த்தி 25 திரைப்படங்களில் நடித்ததை கொண்டாடும் விதமாக கார்த்தி 25 எனும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை கார்த்தியோடு பணிப்புரிந்த பலரும் கலந்துக்கொண்டனர்.

ஆனால் இயக்குனர் அமீர் மட்டும் அதில் இல்லை. இருந்தாலும் தன்னை அறிமுகப்படுத்தியதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்திருந்தார் கார்த்தி. இந்த நிலையில் ஒரு பேட்டியில் பேசிய அமீர் கார்த்தி தன்னை அழைக்கவே இல்லை. அதனால்தான் அந்த விழாவிற்கு செல்லவில்லை என கூறினார்.

இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக பருத்திவீரன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் பேட்டி ஒன்றில் பேசியிருந்தார், உண்மையில் கார்த்தி அமீரை அழைப்பதற்கு ஆள் அனுப்பியிருக்கிறார். ஆனால் இவ்வளவு நாள் என்னை கண்டுக்கொள்ளாமல் இப்போது மட்டும் நீங்கள் அழைத்ததும் நான் வரவேண்டுமா என சத்தமிட்டுள்ளார்.

மேலும் அந்த விழாவிற்கு வரமுடியாது என கூறினார். எனவேதான் அவரை மீண்டும் அவரை அழைக்கவில்லை என விளக்கமளித்துள்ளார் ஞானவேல் ராஜா.

பிச்சைக்காரன் இயக்குனர் சொன்ன ஒரே வார்த்தை!.. 1.5 கோடி ரூபாய் நஷ்டம்.. லிங்குசாமிக்கு நடந்த சம்பவம்!.

Director Lingusamy : தமிழ் சினிமாவில் நிறைய வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் லிங்குசாமி. அவர் இயக்கி வெளியான ரன் திரைப்படம் மாதவன், மீரா ஜாஸ்மின் மற்றும் லிங்குசாமி மூவருக்குமே முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

இந்த படத்திற்கு பிறகு பையா சண்டைக்கோழி என  பல திரைப்படங்களை இயக்கினார் லிங்குசாமி. இந்த நிலையில் லிங்குசாமி இயக்கிய பையா திரைப்படம் கொஞ்சம் பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாகும். பருத்திவீரனுக்கு அடுத்து கார்த்தி நடித்த இரண்டாவது திரைப்படம் பையா.

முற்றிலுமாக பருத்திவீரனில் இருந்து மாறுப்பட்டு கார்த்தி நடித்திருந்ததால் இந்த படத்திற்கு அதிக வரவேற்பு இருக்கும் என்று நம்பினார் லிங்குசாமி. இந்த நிலையில் படத்தை முடித்த பிறகு அவருக்கு தெரிந்த இயக்குனர்களை அழைத்து அவர்களுக்கு படத்தை போட்டி காட்டியுள்ளார் லிங்குசாமி.

அதில் பிச்சைக்காரன், சொல்லாமலே போன்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சசியும் அதில் இருந்தார். அந்த படத்தை பார்த்த சசி படத்தின் க்ளைமேக்ஸ் நன்றாக இல்லை இன்றும் அதில் இருக்கும் மிஸ்டேக்கையும் கூறினார்.

இதனையடுத்து மற்ற இயக்குனர்களும் அந்த காட்சி சரியில்லை என்று கூறினர். அந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிக்கு மட்டும் 1.5 கோடி செலவு செய்திருந்தார் லிங்குசாமி. இந்த நிலையில் காட்சி நன்றாக இல்லை என்பதால் அந்த க்ளைமேக்ஸை நீக்கிவிட்டு புதிய க்ளைமேக்ஸ் ஒன்றை எடுத்துள்ளார்.