Tag Archives: பையா

பையா படப்பிடிப்பில் தமன்னாவை காதலித்தாரா கார்த்தி!.. ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்த லிங்குசாமி!.

தமிழ் சினிமாவிற்கு 20 வயதுகளில் வந்தும் கூட தனக்கென்று ஒரு இடத்தை பிடிக்க நடிகர்கள் தடுமாறி வரும் நிலையில் 27 வயதில் சினிமாவில் நடிக்க வந்து தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் கார்த்தி.

மிக தாமதமாகவே இவர் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். ஆனால் அவரது முதல் படமான பருத்திவீரன் திரைப்படமே எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை பெற்று கொடுத்தது. முக்கியமாக வெளிநாட்டில் இருந்து படித்துவிட்டு வந்த கார்த்தி இப்படியொரு கதாபாத்திரத்தை இவ்வளவு சிறப்பாக நடிப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

அதனை தொடர்ந்து கார்த்தி நடித்த திரைப்படம் பையா. பையா படத்தின் படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருந்தப்போதே கார்த்தியும் தமன்னாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வலம் வந்துக்கொண்டிருந்தன. இந்த நிலையில் இதுக்குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருந்தார் இயக்குனர் லிங்குசாமி.

அவர் கூறும்போது கார்த்தி அப்படிப்பட்ட ஆள் கிடையாது. அப்போதைய சமயத்தில் அவர் எது செய்வதாக இருந்தாலும் அவரது தந்தை சிவக்குமார் கூறுவது போலதான் செய்வார். தனியாக எந்த முடிவையும் எடுக்க மாட்டார். ஆனால் இப்படி பரவலாக கார்த்தியும் தமன்னாவும் காதலிப்பதாக வந்த வதந்திகளை நானும் கேட்டுக்கொண்டுதான் இருந்தேன்.

ஆனால் உண்மையிலேயே அவர்கள் காதலித்தார்களா என்பது அவர்களுக்கும் கடவுளுக்கும் மட்டுமே தெரியும். அந்த படத்தில் நடிக்கும்போது தமன்னாவிற்கு 19 வயதுதான் ஆகியிருந்தது. அப்போதே நான் கூறினேன் இன்னும் 20 வருடங்கள் கழித்தும் நீங்கள் இப்படியேதான் இருப்பீர்கள் என்றேன்.

பையா படத்தின் மறுவெளியீட்டுக்காக நான் தமன்னாவை சந்தித்தப்போது இந்த விஷயத்தை அவர் நினைவுப்படுத்தினார் என்கிறார் லிங்குசாமி.

பிச்சைக்காரன் இயக்குனர் சொன்ன ஒரே வார்த்தை!.. 1.5 கோடி ரூபாய் நஷ்டம்.. லிங்குசாமிக்கு நடந்த சம்பவம்!.

Director Lingusamy : தமிழ் சினிமாவில் நிறைய வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் லிங்குசாமி. அவர் இயக்கி வெளியான ரன் திரைப்படம் மாதவன், மீரா ஜாஸ்மின் மற்றும் லிங்குசாமி மூவருக்குமே முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

இந்த படத்திற்கு பிறகு பையா சண்டைக்கோழி என  பல திரைப்படங்களை இயக்கினார் லிங்குசாமி. இந்த நிலையில் லிங்குசாமி இயக்கிய பையா திரைப்படம் கொஞ்சம் பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாகும். பருத்திவீரனுக்கு அடுத்து கார்த்தி நடித்த இரண்டாவது திரைப்படம் பையா.

முற்றிலுமாக பருத்திவீரனில் இருந்து மாறுப்பட்டு கார்த்தி நடித்திருந்ததால் இந்த படத்திற்கு அதிக வரவேற்பு இருக்கும் என்று நம்பினார் லிங்குசாமி. இந்த நிலையில் படத்தை முடித்த பிறகு அவருக்கு தெரிந்த இயக்குனர்களை அழைத்து அவர்களுக்கு படத்தை போட்டி காட்டியுள்ளார் லிங்குசாமி.

அதில் பிச்சைக்காரன், சொல்லாமலே போன்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சசியும் அதில் இருந்தார். அந்த படத்தை பார்த்த சசி படத்தின் க்ளைமேக்ஸ் நன்றாக இல்லை இன்றும் அதில் இருக்கும் மிஸ்டேக்கையும் கூறினார்.

இதனையடுத்து மற்ற இயக்குனர்களும் அந்த காட்சி சரியில்லை என்று கூறினர். அந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிக்கு மட்டும் 1.5 கோடி செலவு செய்திருந்தார் லிங்குசாமி. இந்த நிலையில் காட்சி நன்றாக இல்லை என்பதால் அந்த க்ளைமேக்ஸை நீக்கிவிட்டு புதிய க்ளைமேக்ஸ் ஒன்றை எடுத்துள்ளார்.

கார்த்திக்கு நடந்த விபத்து!.. முன்பே யூகித்த இயக்குனர்!.. என்னன்னமோ சொல்றாரே!..

 Karthi in paruthi veeran: பருத்திவீரன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. சூர்யாவின் தம்பியான கார்த்தி அமெரிக்காவுக்கு சென்று படித்துவிட்டு இந்தியா திரும்பியவுடன் அவர் நடித்த படம் பருத்திவீரன்.

தனது பெரும் நடிப்பு திறனை காட்டி அந்த படத்தை பெரும் ஹிட் அடிக்க வைத்தார் கார்த்தி. அதற்கு பிறகு அந்த பருத்திவீரன் கதாபாத்திரத்தில் இருந்து முற்றிலுமாக மாறுபட்ட ஒரு கதாபாத்திரமாக அவர் நடித்த திரைப்படம் பையா.

எவ்வளவுக்கு பருத்திவீரன் படத்தில் கிராமத்து ஆளாக இருந்தாரோ அவ்வளவுக்கும் பையா திரைப்படத்தில் மெட்ரோ சிட்டியை சேர்ந்த ஒரு நபராக இருந்தார். இந்த படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கினார். இந்த படம் அனுபவம் குறித்து லிங்குசாமி ஒரு பேட்டியில் கூறும் பொழுது படத்தில் எடுக்க முயற்சித்து எடுக்கப்படாமல் போன ஒரு காட்சியை குறித்து கூறியிருந்தார்.

அந்த காட்சியில் கார்த்தி காலில் ஸ்கேட் போர்டு கட்டிக் கொண்டு சாகசம் செய்வது போன்ற காட்சி ஒன்று படமாக்கப்பட இருந்தது. அந்த காட்சி எடுக்கப்பட இருக்கும் பொழுது லிங்குசாமிக்கு மனது சரியில்லாதது போல் இருந்ததாம். ஏன் இப்படி இருக்கிறது என்று யோசித்த லிங்குசாமி சற்று நான் ஓய்வெடுத்து விட்டு வருகிறேன் என்று கூறி சென்றுள்ளார்.

திரும்ப அவர் வந்து பார்க்கும் பொழுது கார்த்திக்கு சாகசம் செய்வதற்காக கட்டியிருந்த கயிறு அறுந்த காரணத்தினால், அவர் கீழே விழுந்து அவரது கை எலும்பு உடைந்து விட்டது. இது குறித்து பேட்டியில் கூறிய லிங்குசாமி நடக்கும் விஷயங்களை நமக்கு ஏதோ ஒன்று முன்பே உணர்த்தி விடுகிறது நாம் தான் அதை அறியாமல் ரிஸ்க் எடுக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.