Tag Archives: thammana

தமன்னாவை கண்ணீர் விட்டு அழ வைத்த படம்..! வெளிப்படையாக கூறிய தமன்னா…

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை தமன்னா. பெரும்பாலும் தமன்னா நடிக்கும் திரைப்படங்கள் அதிக வரவேற்பை பெறுவதாக இருக்கின்றன. இதனாலேயே இப்போதும் மார்க்கெட் குறையாத ஒரு நடிகையாக தமன்னா இருந்து வருகிறார்.

தமன்னா தமிழில் கேடி, கல்லூரி மாதிரியான திரைப்படங்கள் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழில் தமன்னாவிற்கு அதிக வரவேற்புகள் கிடைத்தன.

தொடர்ந்து தமிழில் சூர்யா, தனுஷ்,அஜித் என பெரிய நடிகர்களுடன் நடிக்க துவங்கினார் தமன்னா. தமன்னாவுக்கான மார்க்கெட் என்பது வெகு காலங்கள் தமிழில் இருந்து வந்தது. ஆனால் இப்போது அவருக்கு வயதாகி விட்டதால் கதாநாயகியாக அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நடிகை தமன்னா தொடர்ந்து ஐட்டம் பாடல்களில் நடிக்க துவங்கினார். அதற்கு பிறகு தமன்னாவிற்கு சினிமாவில் அது ஒரு ரீ எண்ட்ரியாக அமைந்தது. இந்த நிலையில் ஹிந்தியிலும் அவருக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன.

தற்சமயம் அவருக்கு நடந்த விஷயம் ஒன்றை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார் தமன்னா. அதில் அவர் கூறும்போது ஒரு படத்தில் நடிக்கும்போது நான் கேரவனிலேயே அழுதுவிட்டேன். அப்போது நான் மஸ்காரா போட்டிருந்ததால் கண்ணீர் வராமல் பார்த்துக்கொண்டேன் என கூறிய தமன்னா அது என்ன படம் என கூறவில்லை.

இந்த நிலையில் இதுக்குறித்து நெட்டிசன்கள் மத்தியில் ஒரு பேச்சு இருந்து வருகிறது. அதாவது ஒரு திரைப்படத்தில் தமன்னாவை நடிகையாக நடிக்க வைப்பதாக கூறி அவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர். ஆனால் அவருக்கு படத்தில் ஒரு சில காட்சிகளையும் ஒரு ஐட்டம் பாடல்களையும் மட்டுமே வைத்துள்ளனர்.

அந்த படத்தில்தான் தமன்னா இப்படி அழுதுள்ளார் என கூறுகின்றனர் நெட்டிசன்கள்.

அந்த மூன்று பேர் செய்த காரியம்.. தன்னுடைய காதலர்கள் குறித்து வெளிப்படையாக கூறிய தமன்னா.!

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாக பிரபலமாக இருந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை தமன்னா.

தமிழ் சினிமாவில் எப்போதுமே பிரபலமாக மக்களால் பார்க்கப்படும் நடிகையாக இருப்பவர் நடிகை தமன்னா. பெரும்பாலும் நடிகை தமன்னா நடிக்கிறார் என்றாலே அந்த படத்திற்கு ஒரு வரவேற்பு கிடைத்து விடுகிறது.

உதாரணத்திற்கு ஜெயிலர் திரைப்படத்தில் அவர் ஒரு பாடலில் நடனமாடிய காரணத்தால் அந்த படத்திற்கே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து நடிகை தமன்னா தனது சம்பளத்தை அதிகரித்துள்ளார்.

அதற்கு பிறகு அவருக்கு ஸ்திரீ 2 என்கிற பாலிவுட் திரைப்படத்திலும் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தது. அந்த அளவிற்கு நடிகை தமன்னா முக்கியமானவராக மாறினார்.

thammana

இந்த நிலையில் எல்லா காலங்களிலும் தமன்னா குறித்த கிசு கிசுக்கள் என்பது தமிழ் சினிமாவில் இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் அவரது காதல் குறித்து அவரே ஒரு பேட்டியில் கூறியிள்ளார்.

அதில் தமன்னா கூறும்போது பொதுவாக நான் எனது முன்னாள் காதலர்களை வெறுப்பதில்லை. அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். ஆனால் என் வாழ்க்கையில் நான் வெறுக்கும் மூன்று நபர்கள் உண்டு.

நாம் கஷ்டப்படுவோம் என்று தெரியாமல் ஒரு விஷயத்தை செய்பவர்களை நாம் மன்னிக்கலாம். அவர்களை வெறுக்க மாட்டோம். ஆனால் நாம் கஷ்டப்படுவோம் என தெரிந்தே அந்த விஷயத்தை செய்பவர்களை நமக்கு எப்படி பிடிக்கும். என கூறியுள்ளார் தமன்னா.

ஆனால் யார் அந்த நபர்கள் என அவர் கூறவில்லை.

ரஜினிகாந்தையே காக்க வைத்த தமன்னா.. இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல..!

ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் அடுத்த பாகமான ஜெயிலர் 2 இருந்து வருகிறது. இந்த திரைப்படத்தை இயக்குவதற்கான வேலைகள் சென்று கொண்டிருக்கின்றன.

தற்சமயம் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். எனவே மார்ச் மாதம்தான் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று கூறப்படுகிறது.

அடுத்த வருடம் டிசம்பர் 12 அன்று ரஜினிகாந்தின் பிறந்தநாளுக்கு அந்த படத்தை வெளியிடலாம் என்று திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் படப்பிடிப்புக்கு அதிக நாட்கள் எடுத்துக் கொள்ளும் என்பதால் 2025 இல் ஜெயிலர் 2வை எதிர்பார்க்க முடியாது என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் போன பாகத்தில் நடிகை தமன்னாவின் பாடல் ஜெயலர் படத்திற்கு முக்கிய அம்சமாக இருந்தது. அதே மாதிரி இந்த படத்திலும் பாடல் இருக்குமா என்கிற கேள்வி இருந்து வந்தது.

ஆனால் போன படத்தில் நடித்த நடிகை தமன்னா பட குழுவை காக்க வைத்து விட்டார் என்று கூறப்படுகிறது. அவருடைய கால்ஷீட் கிடைப்பதில் சிரமம் இருந்தது. இதனால் ரஜினியே தமன்னாவின் வருகைக்காக காத்திருந்ததாக கூறப்படுகிறது. எனவே தமன்னாவிற்கு பதிலாக வேறு நடிகை இந்த படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு உள்ளது. என்றும் கூறப்படுகிறது.

படுக்கை காட்சியில் நடிகர்களோடு அந்த உணர்வு… வாய் தவறி கூறிய தமன்னா..!

நடிகை தமன்னா எப்போதும் தமிழ் சினிமாவில் மார்க்கெட் குறையாத ஒரு நடிகையாக இருந்து வருகிறார். கேடி, கல்லூரி மாதிரியான திரைப்படங்கள் வழியாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் நடிகை தமன்னா.

அதற்கு பிறகு தெலுங்கு சினிமாவிலும் அவருக்கு வரவேற்பு கிடைத்தது. ஏனெனில் அவர் எடுத்த உடனெயே கவர்ச்சியாக நடிப்பதற்கு தயாராக இருந்தார். அதனால்தான் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தது.

இந்த நிலையில் தெலுங்கு சினிமாவிலும் கூட பிரபலமான நடிகையாக மாறினார் தமன்னா, அதற்கு பிறகு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலுமே அவருக்கு எக்கச்சக்கமான வரவேற்புகள் கிடைக்க துவங்கியது.

இந்த நிலையில் ஒரு கட்டத்திற்கு பிறகு அவருக்கும் வாய்ப்புகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. நடிகைகளை பொறுத்தவரை அவர்களுக்கு வயது அதிகமாக துவங்கியவுடன் சினிமாவில் வாய்ப்புகள் குறைய துவங்கிவிடும்.

அப்படியாக நடிகை தமன்னாவிற்கும் வாய்ப்புகள் குறைய துவங்கியது. அதனை தொடர்ந்து தமன்னா இன்னமும் உச்சக்கட்ட கவர்ச்சியில் இறங்கினார். அது அவருக்கு மீண்டும் மார்க்கெட்டை அதிகரித்தது. மேலும் பாலிவுட்டில் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 என்கிற படத்தில் இவர் நடித்தார்.

அதில் அவர் நடித்த படுக்கையறை காட்சிகள் அதிக பிரபலமடைந்தன. இந்த நிலையில் படுக்கையறை காட்சிகள் குறித்து தமன்னா சமீபத்தில் கூறியுள்ளார்.

அதில் அவர் கூறும்போது படுக்கையறை காட்சிகளை நடிகர்கள் அவ்வளவாக விரும்புவதில்லை. நடிகையை விட அவர்கள்தான் மிகவும் பதட்டமாக இருப்பார்கள். இந்த காட்சியில் நெருக்கத்தில் நடிக்கும்போது நடிகைகள் என்ன நினைப்பார்கள் என்கிற நினைப்பு நடிகர்களுக்கு இருக்கும்.

அதனால் அவர்களுக்குதான் அது அதிக சங்கடமாக இருக்கும் என கூறியுள்ளார் தமன்னா.

அந்த ஹீரோவுக்கு எல்லையில்லாமல் முத்தம் கொடுக்க ரெடி.. ஓப்பனாக கூறிய தமன்னா..!

தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்ற நடிகைகளில் முக்கியமானவர் நடிகை தமன்னா. சினிமாவில் பல வருடங்களாகவே தனக்கென தனி இடத்தை பிடித்து நடித்து வருகிறார் தமன்னா.

ஆரம்பத்தில் கல்லூரி கேடி மாதிரியான படங்களில் பெரிதாக கவர்ச்சி இல்லாமல்தான் நடித்து வந்தார். அதற்கு பிறகு அவரது படங்களில் எல்லையில்லாத கவர்ச்சியை பார்க்க முடிந்தது.

அதிலும் இப்போது அவரது கவர்ச்சியின் அளவு இன்னமுமே அதிகரித்துள்ளது என்று கூறலாம். அந்த அளவிற்கு மோசமான கவர்ச்சியில் இறங்கி ரசிகர்கள் மத்தியில் அவர் வரவேற்பை பெற்று வருகிறார். சமீபத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் அவருக்கு கிடைத்த வரவேற்பே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

தமன்னாவின் விருப்பம்:

thamanna lover

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துக்கொண்டார் தமன்னா. அதில் அவரிடம் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கெல்லாம் தமன்னாவும் பதிலளித்து வந்தார்.

அப்படி பதிலளித்து வரும்போது அவரிடம் பிரபாஸ், ஹிருத்திக் ரோஷன், விஜய் தேவரக்கொண்டா இவர்கள் மூன்று பேரில் யாரோடு நடித்தால் லிப்லாக் காட்சியில் நடிப்பீர்கள் என கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த தமன்னா, பிரபாஸ், ஹிருத்திக் ரோஷன் இருவருமே அனுபவம் வாய்ந்த நடிகர்கள். எனவே முத்தம் தர வேண்டும் என்றால் விஜய் தேவரக்கொண்டாவுக்குதான் தருவேன் என கூறியுள்ளார் தமன்னா.

துணியே இல்லாமல் காட்சி.. பட வாய்ப்புக்காக ஒப்புக்கொண்ட தமன்னா..!

சினிமாவிற்கு வந்த காலகட்டத்தில் இருந்து அதிகமாக கவர்ச்சியாக நடித்து வரும் நடிகையாக நடிகை தமன்னா இருந்து வருகிறார். ஆரம்பத்தில் இருந்து அவரது திரைப்படங்களில் கவர்ச்சி இருப்பதை பார்க்க முடியும்.

அதனால்தான் அவருக்கு எளிதாக தெலுங்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்தது. ஆனாலும் கூட குறைந்த அளவில்தான் கவர்ச்சி காட்டி வந்தார் தமன்னா. பிறகு அவருக்கு ஒரு கட்டத்திற்கு மேல் சினிமாவில் வாய்ப்புகள் என்பது குறைய தொடங்கியது.

இந்த நிலையில் அதிக கவர்ச்சி காட்டினால்தான் வாய்ப்பு கிடைக்கும் என்கிற நிலை ஏற்பட்டது எனவே தொடர்ந்து அதிக கவர்ச்சியாக நடிக்க தொடங்கினார் தமன்னா. அதனை தொடர்ந்து இப்பொழுது பாலிவுட்டில் இருந்து தமிழ் சினிமா வரை ஐட்டம் பாடல்களுக்கு நிறைய தமன்னாவிற்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

ஒப்புக்கொண்ட தமன்னா:

thammana

அதே மாதிரி தமன்னா நடிக்கும் பாடல்களும் பெரிய வெற்றியை பெற்றுக் கொடுக்கின்றன. முன்பை விட இப்பொழுது தமன்னாவிற்கு ரசிகர்கள் அதிகரித்திருக்கின்றனர் என்றுதான் கூற வேண்டும். ஹிந்தி சினிமாவில் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 என்கிற திரைப்படத்தில் படுக்கையறை காட்சிகளில் நடித்தார். அதன் மூலமாக அங்கு அதிக பிரபலம் அடைந்தார் தமன்னா.

மேலும் தொடர்ந்து பாலிவுட்டிலும் அவருக்கு வாய்ப்புகள் வர துவங்கியிருக்கின்றன. தமிழ் சினிமாவோடு ஒப்பிடும்பொழுது பாலிவுட் சினிமாவில் சம்பளம் அவருக்கு அதிகமாக கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில் எந்த ஆடையும் போடாமல் ஒட்டு துணி கூட இல்லாமல் ஒரு காட்சியில் நடிக்க வேண்டும் என்று ஒரு திரைப்படத்திற்கு பாலிவுட்டில் தமன்னாவிடம் கேட்டிருக்கின்றனர்.

தமன்னாவும் அதற்கு ஒப்பு கொண்டிருக்கிறார் இது பலருக்கு ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது.

குஷ்பு, தமன்னா எல்லாம் செஞ்ச அட்ஜெஸ்ட்மெண்ட்?.. சிக்கிய நடிகை கஸ்தூரி..!

Actress Kasthuri was a popular actress in Tamil cinema at one time. Now she has acted as the heroine along with many famous actors.

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருந்தவர் நடிகை கஸ்தூரி. இப்போது பிரபல நடிகர்களாக இருந்த பலருடனும் சேர்ந்து கதாநாயகியாக இவர் நடித்திருக்கிறார்.

ஆனால் இப்பொழுது கஸ்தூரி பேசி வரும் விஷயங்கள் பலவும் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது. அரசியலில் ஈடுபட்டு வரும் கஸ்தூரி தொடர்ந்து சினிமா குறித்தும் மக்கள் குறித்தும் நிறைய விஷயங்களை பேசுகிறார்.

kasthuri

அவையெல்லாம் அதிக சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது சமீபத்தில் அமரன் திரைப்படம் வெளியான போது கூட முகுந்த் வரதராஜன் எந்த சாதியைச் சேர்ந்தவர் என்பதை ஏன் படத்தில் காட்டவில்லை. அவர் பிராமண சமூகத்தை சேர்ந்தவர் என்பதை படத்தில் காட்டி இருக்க வேண்டும் என்று அவர் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார்.

கஸ்தூரி கிளப்பிய சர்ச்சை:

அதற்கு இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியும் பதிலளித்து இருந்தார். இந்த நிலையில் நடிகை கஸ்தூரி பேசிய இன்னொரு விஷயம் இப்பொழுது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

thammana

ஒரு பேட்டியில் பேசிய அவர் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொண்டு சினிமாவில் பெரிய நடிகை ஆக வேண்டும் என்றால் தமன்னா, குஷ்பூ, ஐஸ்வர்யாராய் மாதிரி நானும் பெரிய நடிகையாக மாறி இருப்பேன் என்று கூறியிருக்கிறார்.

இதனை கேட்ட ரசிகர்கள் அப்படி என்றால் தமன்னா குஷ்பு எல்லாம் அட்ஜஸ்ட்மென்ட் செய்துதான் பெரிய நடிகையானார்கள் என்று கஸ்தூரி கூறுகிறாரா? என்று கேள்வி எழுப்பத் துவங்கி இருக்கின்றனர் இந்த நிலையில் கஸ்தூரி பேசிய அந்த பேட்டி இப்போது பிரபலம் அடைய துவங்கி இருக்கிறது.

சைலண்டாக சம்பவம் செய்த அரண்மனை திரைப்படம்..! இந்த வருடத்தின் பெரும் வசூல் சாதனை..!

தமிழில் காமெடி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் சுந்தர் சி. ஆனால் அவ்வப்போது அவர் சில சீரியஸான கான்செப்ட்களிலும் திரைப்படங்கள் இயக்குவதுண்டு. அப்படி தற்சமயம் அவர் இயக்கி வெளிவந்த அரண்மனை 4 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் பேய் படங்களுக்கு என்று இடையில் ஒரு சீசன் வந்தது. தில்லுக்கு துட்டு, பீட்சா, முனி என வரிசையாக பேய் படங்களாக வந்துக்கொண்டிருந்தப்போது இயக்குனர் சுந்தர் சியும் பேய் படங்கள் இயக்குவதில் களம் இறங்கினார்.

முனி மாதிரியான பேய் படங்களில் கெட்டவர்களால் கொலை செய்யப்பட்ட பேய் அவர்களை பழிவாங்குவதற்காக திரும்ப வருவதாக கதை இருக்கும். அவை பழிவாங்க கதாநாயகனே உதவுவதாக கதை இருக்கும். ஆனால் சுந்தர் சி இயக்கும் அரண்மனை படங்களில் கதாநாயகன் பேய்களிடம் இருந்து மனிதர்களை காப்பாற்றுவதாக கதை இருக்கும்.

முதல் பாகம் முதலே அரண்மனை படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அரண்மனைகளில் நடக்கும் கௌரவ கொலைகளை அடிப்படையாக கொண்டுதான் அரண்மனை படங்களின் கதை இருக்கும். அதே வகையில் வந்த அரண்மனை 4 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தற்சமயம் இந்த படம் உலக அளவில் 100 கோடிக்கு ஓடி வசூல் சாதனை செய்துள்ளது. இந்த வருடம் வெளியான திரைப்படங்களில் முதலில் 100 கோடி ஹிட் அடிக்கும் திரைப்படம் அரண்மனை 4 என கூறப்படுகிறது.

பையா படப்பிடிப்பில் தமன்னாவை காதலித்தாரா கார்த்தி!.. ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்த லிங்குசாமி!.

தமிழ் சினிமாவிற்கு 20 வயதுகளில் வந்தும் கூட தனக்கென்று ஒரு இடத்தை பிடிக்க நடிகர்கள் தடுமாறி வரும் நிலையில் 27 வயதில் சினிமாவில் நடிக்க வந்து தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் கார்த்தி.

மிக தாமதமாகவே இவர் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். ஆனால் அவரது முதல் படமான பருத்திவீரன் திரைப்படமே எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை பெற்று கொடுத்தது. முக்கியமாக வெளிநாட்டில் இருந்து படித்துவிட்டு வந்த கார்த்தி இப்படியொரு கதாபாத்திரத்தை இவ்வளவு சிறப்பாக நடிப்பார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

அதனை தொடர்ந்து கார்த்தி நடித்த திரைப்படம் பையா. பையா படத்தின் படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருந்தப்போதே கார்த்தியும் தமன்னாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வலம் வந்துக்கொண்டிருந்தன. இந்த நிலையில் இதுக்குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியிருந்தார் இயக்குனர் லிங்குசாமி.

அவர் கூறும்போது கார்த்தி அப்படிப்பட்ட ஆள் கிடையாது. அப்போதைய சமயத்தில் அவர் எது செய்வதாக இருந்தாலும் அவரது தந்தை சிவக்குமார் கூறுவது போலதான் செய்வார். தனியாக எந்த முடிவையும் எடுக்க மாட்டார். ஆனால் இப்படி பரவலாக கார்த்தியும் தமன்னாவும் காதலிப்பதாக வந்த வதந்திகளை நானும் கேட்டுக்கொண்டுதான் இருந்தேன்.

ஆனால் உண்மையிலேயே அவர்கள் காதலித்தார்களா என்பது அவர்களுக்கும் கடவுளுக்கும் மட்டுமே தெரியும். அந்த படத்தில் நடிக்கும்போது தமன்னாவிற்கு 19 வயதுதான் ஆகியிருந்தது. அப்போதே நான் கூறினேன் இன்னும் 20 வருடங்கள் கழித்தும் நீங்கள் இப்படியேதான் இருப்பீர்கள் என்றேன்.

பையா படத்தின் மறுவெளியீட்டுக்காக நான் தமன்னாவை சந்தித்தப்போது இந்த விஷயத்தை அவர் நினைவுப்படுத்தினார் என்கிறார் லிங்குசாமி.

எந்தா சாரே நியாயமா இது!.. வில்லனை விட தமன்னாவுக்கு அதிக சம்பளம்.. ஜெயிலரில் ஏமாற்றிய இயக்குனர்..

Jailer: தமிழ் சினிமாவில் தற்சமயம் வெளிவந்த திரைப்படங்களில் பெரும் வசூல் சாதனை செய்த திரைப்படம் ஜெயிலர். ஜெயிலர் படத்தின் வெற்றி மொத்த இந்திய அளவிலும் அதிகமாக பேசப்பட்டது. படத்தில் வில்லனாக நடித்த நடிகர் விநாயகன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

நடிகர் விநாயகன் இயக்குனர் நெல்சனுடன் ஏற்கனவே பழக்கத்தில் இருந்தார். எனவே இந்த படத்தில் வாய்ப்பு என்றதுமே நடிக்க வந்துவிட்டார். படத்தில் அவரது அசாத்திய நடிப்பும் படத்தின் வெற்றிக்கு பக்க பலமாக இருந்தது.

ஆனால் சம்பள அளவில் பார்க்கும்போது விநாயகனுக்கு குறைவான சம்பளமே கொடுக்கப்பட்டுள்ளது. மலையாள நடிகர்களை பொறுத்தவரை அவர்களுக்கு எப்போதும் சம்பளம் குறைவாகதான் இருக்கும். ஆனால் தமிழ் சினிமாவில் அவர்கள் நடிக்கும்போது அதற்கு ஏற்ற அளவில் சம்பளம் தர வேண்டும்.

நடிகர் விநாயகனுக்கு ரூபாய் 25 லட்சம் சம்பளமாக கொடுத்துள்ளனர். ஆனால் ஒரு பாடலுக்கு மட்டும் வந்த தமன்னாவிற்கு 4 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்துள்ளனராம். இது தவறு என கருத்து தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

சூப்பர் ஸ்டாருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் தமன்னா – லீக் ஆன தகவல்

தமிழ் சினிமாவில் மிகப்பெரும் நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். உள்ள நடிகர்களிலேயே அதிக சம்பளம் வாங்கும் ஒரு நடிகராக ரஜினிகாந்த் இருக்கிறார். இவருக்கும் இருக்கும் ரசிகர்கள் காரணமாகவே ரஜினிகாந்த் நடிக்கும் எந்த ஒரு படமும் மாஸ் ஹிட் கொடுக்கும் என கூறப்படுகிறது.

தற்சமயம் இவர் இயக்குனர் நெல்சனுடன் இணைந்து ஜெயிலர் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் சினிமா ரசிகர்களிடையே எதிர்மறையான விமர்சனத்தை பெற்றது. இதனால் நெல்சன் இயக்குவது குறித்து சிலருக்கு தயக்கம் இருந்தது. இதனால் ரஜினிகாந்தும் கூட திரைக்கதையில் கே.எஸ் ரவிக்குமாரை இணைத்தார்.

ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் துவங்கியிருக்கிறது. இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிகை தமன்னா ஒரு கதாபாத்திரம் நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. அந்த கதாபாத்திரம் கண்டிப்பாக கதாநாயகி கதாபாத்திரமாக இருக்காது என பேசப்படுகிறது. ஆனால் கதையில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக அது இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.