அந்த மூன்று பேர் செய்த காரியம்.. தன்னுடைய காதலர்கள் குறித்து வெளிப்படையாக கூறிய தமன்னா.! - Cinepettai

அந்த மூன்று பேர் செய்த காரியம்.. தன்னுடைய காதலர்கள் குறித்து வெளிப்படையாக கூறிய தமன்னா.!

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாக பிரபலமாக இருந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை தமன்னா.

தமிழ் சினிமாவில் எப்போதுமே பிரபலமாக மக்களால் பார்க்கப்படும் நடிகையாக இருப்பவர் நடிகை தமன்னா. பெரும்பாலும் நடிகை தமன்னா நடிக்கிறார் என்றாலே அந்த படத்திற்கு ஒரு வரவேற்பு கிடைத்து விடுகிறது.

உதாரணத்திற்கு ஜெயிலர் திரைப்படத்தில் அவர் ஒரு பாடலில் நடனமாடிய காரணத்தால் அந்த படத்திற்கே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து நடிகை தமன்னா தனது சம்பளத்தை அதிகரித்துள்ளார்.

அதற்கு பிறகு அவருக்கு ஸ்திரீ 2 என்கிற பாலிவுட் திரைப்படத்திலும் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தது. அந்த அளவிற்கு நடிகை தமன்னா முக்கியமானவராக மாறினார்.

thammana
thammana

இந்த நிலையில் எல்லா காலங்களிலும் தமன்னா குறித்த கிசு கிசுக்கள் என்பது தமிழ் சினிமாவில் இருந்துக்கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் அவரது காதல் குறித்து அவரே ஒரு பேட்டியில் கூறியிள்ளார்.

அதில் தமன்னா கூறும்போது பொதுவாக நான் எனது முன்னாள் காதலர்களை வெறுப்பதில்லை. அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். ஆனால் என் வாழ்க்கையில் நான் வெறுக்கும் மூன்று நபர்கள் உண்டு.

நாம் கஷ்டப்படுவோம் என்று தெரியாமல் ஒரு விஷயத்தை செய்பவர்களை நாம் மன்னிக்கலாம். அவர்களை வெறுக்க மாட்டோம். ஆனால் நாம் கஷ்டப்படுவோம் என தெரிந்தே அந்த விஷயத்தை செய்பவர்களை நமக்கு எப்படி பிடிக்கும். என கூறியுள்ளார் தமன்னா.

ஆனால் யார் அந்த நபர்கள் என அவர் கூறவில்லை.

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.

Exit mobile version