படம் நல்லா இருந்துச்சா இல்லையானு மட்டும் சொல்லு!.. ஞானவேல் ராஜா பிரச்சனையில் சிக்கிய சூர்யா பட இயக்குனர்!..

Producer Gnanavel Issue : கடந்த சில நாட்களாக ஞானவேல்ராஜா மற்றும் அமீருக்கு இடையேயான மோதல்தான் சமூக வலைத்தளங்களில் பெரும் பேச்சு பொருளாகி வருகிறது. அமீர் பருத்துவீரனை எடுப்பதற்கு தேவையான குறித்த தொகையை தாண்டி அதிக தொகைக்கு படம் எடுத்ததாகவும் அவரது படங்கள் சிறப்பாக இல்லை எனவும் இஷ்டத்துக்கு பேசியிருந்தார் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா.

இந்த நிலையில் இயக்குனர் அமீருக்கு சினிமா பக்கத்தில் இருந்து ஆதரவுகள் குவிந்து வருகின்றன. பருத்திவீரன் திரைப்படத்திற்கு முழு தயாரிப்பு செலவையும் ஞானவேல்ராஜா ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் பாதியிலேயே கை கழுவிவிட்டார். அதன் பிறகு பலரிடமும் கடனை வாங்கி அந்த படத்தை முடித்துள்ளார் அமீர்.

இதில் அவருக்கு இயக்குனர் சசிக்குமாரும் உதவியுள்ளார். அதை சசிக்குமாரே கூறியுள்ளார். இந்த நிலையில் இயக்குனர் சமுத்திரக்கனியும் அமீருக்கு ஆதரவாக பதிவிட்டிருந்தார். ஆனால ஞானவேல் ராஜா ஒரு பேட்டியில் பேசும்போது ராம் திரைப்படத்தை இயக்குனர் சுதா கொங்காரா பார்த்துவிட்டு நன்றாக இல்லை என கூறியதாக கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக சுதா கொங்காரா தனது டிவிட்டர் பக்கத்தில் கூறும்போது “இறுதி சுற்றில் வந்த மதி மற்றும் சூரரை போற்று திரைப்படத்தில் வந்த பொம்மி இரண்டு கதாபாத்திரங்களுமே பருத்திவீரன் திரைப்படத்தில் வந்த முத்தழகு கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டு வந்த கதாபாத்திரங்கள்தான்.

ஒரு ஆணின் எழுத்துக்களில் ஒரு பெண் கதாப்பாத்திரம் இவ்வளவு முழுமையாக எழுதப்பட்டது அதுவே முதல் முறை என்றும் அவரிடம் சொன்னேன். நான் என் படத்தில் மதி மற்றும் பொம்மி கதாபாத்திரங்களில் நடித்த நடிகைகளிடம் பருத்தி வீரன் படத்தை பார்த்துவிட்டு வருமாரு தான் சொல்லி அனுப்பினேன். அதுதான் தமிழ் சினிமாவில்  தடம் பதித்த மிகச்சிறந்த ஓர் இயக்குனருக்கு நான் செய்யும் மரியாதை… இதுதான்  நான் சொல்ல விரும்பும் விஷயம்.. நன்றி… என கூறியிருந்தார்.

ஆனால் இந்த பதிவிற்கு கமெண்ட் செய்த ரசிகர்கள் ராம் படம் நல்லா இல்லைனு உண்மையிலேயே சொன்னீங்களா அதை மட்டும் சொல்லுங்க எதுக்கு சுத்தி வளைச்சு பேசுறீங்க என கேள்வி எழுப்பி வருகின்றனர்.