Tag Archives: vairamuthu

வைரமுத்துவை அப்படி சொல்லி இருக்க கூடாது.. சின்மயியிடம் நேருக்கு நேர் பேசிய கங்கை அமரன்.!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் அதிக புகழ் பெற்ற ஒரு பாடகியாக இருந்தவர் பாடகி சின்மயி. வைரமுத்து எழுத்துக்களில் பல பாடல்களை சின்மயி பாடி இருக்கிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் திரைப்படத்துறையில் நடக்கும் பாலியல் தொல்லைகள் தொடர்பாக மீ2 என்கிற பிரச்சனை உலக அளவில் இருந்தது. அந்த சமயத்தில் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளிப்படையாக கூறினார் பாடகி சின்மயி.

அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இருந்து அவர் விலக்கி வைக்கப்பட்டார் எந்த ஒரு தமிழ் சினிமா துறையை சேர்ந்தவர்களும் சின்மயிக்கு வாய்ப்பு கொடுக்க கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து சின்மயி இப்பொழுது வரை தமிழில் பாடல்கள் பாடாமல் இருந்து வருகிறார்.

ஆனால் மற்ற மொழிகளில் அவருக்கு பாடுவதற்கான வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் சமீபத்தில் கங்கை அமரன் மற்றும் சின்மயி இருவரும் கலந்து கொள்ளும் பேட்டி ஒன்று நடைபெற்றது.

அதில் பேசிய கங்கை அமரன் கூறும் பொழுது வைரமுத்து ஒரு ஆகச் சிறந்த கவிஞர் அவருடைய பாடல்கள் எல்லாம் சிறப்பானதாக இருக்கும் அந்த அளவிற்கு சிறந்த கவிஞர் என்றாலும் அவர் ஒரு நல்ல மனிதர் கிடையாது.

அவர் ஒரு என்னுடைய நண்பர் என்பதற்காக இந்த விஷயத்தில் அவருக்கு ஆதரவாக என்னால் பேச முடியாது, வைரமுத்துவை இப்படி பேசியிருக்க கூடாது என சின்மயியை கூற முடியாது என்று வெளிப்படையாகவே சின்மயிக்கு ஆதரவாக பேசியிருக்கிறார் கங்கை அமரன்.

ஏற்கனவே இளையராஜாவுக்கும் கங்கை வைரமுத்து விற்கும் இடையே பிரச்சனை இருந்தது என்பதால் கூட கங்கை அமரன் இப்படி பேசியிருக்கலாம் என்று ஒரு பக்கம் கூறப்படுகிறது.

இசைக்கு பாடல் வரிகள் தேவை கிடையாது… வைரமுத்து கேள்விக்கு சாட்டையடி பதில் கொடுத்த இளையராஜா..

சமீபத்தில் வைரமுத்து ஒரு பேட்டியில் பேசும் பொழுது ஒரு பாடலுக்கு இசை முக்கியமா அல்லது பாடல் வரிகள் முக்கியமா என்பது குறித்து ஒரு விளக்கம் கொடுத்து இருந்தார். அது கூட அதிக சர்ச்சையாகி வந்தது. அதில் வைரமுத்து பேசும்பொழுது ஒரு உடல் இன்றி உயிர் மட்டும் செயல்படாதோ அதே மாதிரி பாடல் வரிகள் இன்றி பாடல்கள் ம்ட்டும் செயல்படாது.

ஒரு பாடலை பாட வேண்டும் ஒருவர் என்றால் அதற்கு பாடல் வரிகள் தேவைப்படுகிறது. இசை மட்டும் இருந்தால் அதை யாரும் பாட்டு என்று அழைப்பதில்லை இசையுடன் சேர்ந்து பாடல் வரிகள் இருந்தால் தான் அவற்றை பாடல் என்று அழைக்கிறார்கள் என்று பெரும் விளக்கமே கொடுத்திருந்தார்.

வைரமுத்துவின் பேச்சு:

எனவே இரண்டும் இருந்தால்தான் அதற்கு பெயர் பாடல் என்பது வைரமுத்துவின் கருத்தாக இருந்தது. இதனைக் கேட்ட இயக்குனர் கங்கை அமரனுக்கு பதிலடி கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் பேசும் பொழுது வைரமுத்து தன்னை தூக்கி விட்டவர்களையே மிதிக்க நினைக்கிறார் பலசை எல்லாம் அவர் மறந்துவிட்டார் .

Vairamuthu-1

திரும்ப இந்த மாதிரி பேசிக் கொண்டிருந்தால் அது அவருக்கு சரியாக இருக்காது என்று எச்சரித்து இருந்தார். இந்த நிலையில் இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் முன்பே இளையராஜா ஒரு வீடியோவில் பதில் ஒன்றை கொடுத்திருக்கிறார்.

அந்த வீடியோவில் பாடல் வரிகள் ஒரு பாட்டிற்கு முக்கியமா இசை முக்கியமா என்ற அதே கேள்வியை பார்த்திபன் இளையராஜாவிடம் கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த இளையராஜா வரிகள் இல்லாமல் ஒரு இசை இருக்கும்.

இளையராஜா விளக்கம்:

ஆனால் இசை இல்லாமல் பாடல் வரிகளை மட்டும் வைத்து பாடலை செய்ய முடியாது. உதாரணத்திற்கு நான் ஒரு இசையமைக்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள் அந்த இசை உங்கள் நினைவில் இருக்கும் பாடல் வரிகளை இல்லாத இசையாக இருந்தாலும் அந்த இசை உங்கள் நினைவில் இருக்கும்.

ilayaraja

ஆனால் ஒரு கவிதையை கவிதையாக சொன்னால் அது உணர்வோடு உணர்வுடைய ஒரு விஷயமாக இருக்காது அதை இசையை கலந்து பாடலாக மாற்றும் பொழுதுதான் அதை பாடுகிறார்கள். அது மனதில் இருக்கிறது எனவே வரிகளாக இருந்தாலும் அது வெறும் வரிகளாக இருக்கும் பொழுது அதற்கு பெரிதாக மதிப்பு கிடைப்பதில்லை.

ஆனால் இசையை பொருத்தவரை இசை தனித்து இயங்கினாலும் அதற்கு அதிக மதிப்பு கிடைக்கும் என்று கூறுகிறார் இசையமைப்பாளர் இளையராஜா.

பாலியல் தொல்லைக்கான பலனை அனுபவிப்பார்கள்.. விஜய் சேதுபதி படத்தை பார்க்க மாட்டேன் என்ற பாடகி!..

தமிழ் சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் என்பது அதிகபட்சமாக இருந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனாலும் தொடர்ந்து அதற்கு எதிரான குரல்களும் ஒரு சிலரால் கொடுக்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன.

ஆனால் பெரும்பாலானோர் இது குறித்து வெளியில் வாய் திறப்பதில்லை என்று கூறப்படுகிறது. ஏனெனில் அப்படி அவர்கள் வாய் திறக்கும் பொழுது அவர்களுக்கு திரை துறையில் வாய்ப்புகளே கிடைக்காமல் போய்விடும்.

மேலும் அது அவர்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது இந்த நிலையில் அப்படி வாய் திறந்து அதன் மூலமாக தமிழ் சினிமாவில் அதிக வாய்ப்புகளை இழந்தவர்தான் பாடகி சின்மயி.

சின்மயி:

பாடகி சின்மயி வைரமுத்துவால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக கூறி அந்த தகவலை வெளியிட்ட பிறகு அவருக்கு திரை துறையில் நிறைய வாய்ப்புகள் இல்லாமல் போனது.

இந்த நிலையில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடந்து வரும் பாலியல் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார் சின்மயி. இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படம் வெளியாகி உள்ளது.

மகாராஜா படம் குறித்து பேச்சு:

இந்த திரைப்படம் முழுக்கவே பாலியல் அத்துமீறலுக்கு எதிரான ஒரு திரைப்படமாகதான் இருந்தது. இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கான பாடல் வரிகளை வைரமுத்து எழுதியிருந்தார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட சின்மயி வைரமுத்து இந்த பாடத்திற்கு பாடல் வரிகள் எழுதி இருப்பது எனக்கு தெரியாது.

vijay sethupathi maharaja

அது இப்போதான் தெரியும் எனவே நான் இனி மகாராஜா திரைப்படத்தை எப்போதும் பார்க்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார் சின்மயி. ஏனெனில் பாலியல் குற்றத்திர்கு எதிரான ஒரு திரைப்படத்திற்கு பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு உள்ள ஒரு நபரை பாடல் வரிகளை எழுத வைப்பது எவ்வளவுக்கு சரி என்பதுதான் சின்மயியின் கேள்வியாக இருக்கிறது.

இந்த நிலையில் சின்மயிக்கு ஆதரவு தெரிவித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் கமெண்டுகள் வந்த வண்ணம் உள்ளன.

என்னை வைத்து குளிர்காய நினைக்கிறார்கள்!.. இளையராஜா சர்ச்சை குறித்து பேசிய வைரமுத்து..!

இளையராஜா வைரமுத்து குறித்த சர்ச்சை தான் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் பேசு பொருளாக இருந்து வருகிறது. சமீபத்தில் ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட வைரமுத்து ஒரு பாடலுக்கு இசை முக்கியமா அல்லது மொழி முக்கியமா என்பது குறித்து பேசி இருந்தார்.

அது சமூக வலைதளங்களில் அதிக சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது ஏனெனில் இளையராஜா வெகு காலங்களாக தன்னுடைய இசைக்கான காப்புரிமை தனக்கு வேண்டும் என்று போராடிவரும் நிலையில் காப்புரிமை என்பது இசையமைப்பாளருக்கு மட்டுமே கிடையாது என்னும் வகையில் வைரமுத்து பேசியிருக்கிறார்.

கங்கை அமரன் பேச்சு:

இந்த நிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில் கங்கை அமரன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் வைரமுத்து நன்றி மறந்து பேசுவதாக இருந்தது அவரது உரையாடல்.

இதற்கு நடுவே புது சிம்பொனியை உருவாக்கிய இளையராஜா அது குறித்து வீடியோ வெளியிடும் பொழுது இணையத்தில் வெளியாகும் விஷயங்களை எல்லாம் நான் கவனிப்பதில்லை என்னுடைய இசை பயணத்தில்தான் கவனம் செலுத்தி வருகிறேன் என்று பேசியிருந்தார்.

ilayaraja

இதனை அடுத்து தற்சமயம் வைரமுத்து ஒரு செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பொழுது அவரிடம் இளையராஜா குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அப்பொழுது இளையராஜா குறித்து என்னிடம் எந்த ஒரு கேள்வியும் கேட்காதீர்கள் என்று நேரடியாகவே கூறிவிட்டார் வைரமுத்து.

வைரமுத்து பதில்:

இருந்தாலும் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து இளையராஜா குறித்து சர்ச்சை கேள்விகளை கேட்டதால் கடுப்பான வைரமுத்து நான் சர்ச்சைக்கு பிறந்தவன் இல்லை. என்னை வைத்து நீங்கள் சர்ச்சை செய்திகளை உருவாக்க பார்க்கிறீர்கள். ஆனால் அதில் எனக்கு விருப்பமில்லை என்னை வைத்து குளிர்காய நினைக்கிறார்கள் நான் அவற்றை விட்டு தள்ளி நிற்கவே ஆசைப்படுகிறேன் என்று வெளிப்படையாக கூறி இருக்கிறார் வைரமுத்து.

முப்பத்தி அஞ்சே நாளில் சாதிச்சுட்டேன்? வீடியோ வெளியிட்ட இளையராஜா!..

தமிழில் முக்கியமான இசையமைப்பாளர்களில் இளையராஜாவிற்கு எப்போதுமே தனித்த இடம் ஒன்று இருக்கும். அந்த அளவிற்கு தமிழ் சினிமாவின் இசை வளர்ச்சியில் இளையராஜாவிற்கும் பெரிய பங்கு உண்டு.

கடந்த சில நாட்களாக இளையராஜா குறித்த சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்துக்கொண்டிருந்தன. கவிஞர் வைரமுத்துதான் அதை துவங்கி வைத்திருந்தார். ஒரு பட விழாவில் கலந்துக்கொண்ட வைரமுத்து ஒரு பாடலில் இசை எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு பாடல் வரிகளும் முக்கியம் என பேசியிருந்தார்.

ilayaraja-1

இந்த நிலையில் இதற்கு பதிலளித்து பேசியிருந்த கங்கை அமரன் ஏறி வந்த படிக்கட்டுகள் மீதே அவதூறு பரப்புகிறார் வைரமுத்து. நிழல்கள் திரைப்படத்தில் வைரமுத்துவிற்கு இளையராஜா வாய்ப்பு கொடுத்ததால்தான் அவர் இப்போது கவிஞராக இருக்கிறார் என பேசியிருந்தார். ஆனால் இளையராஜா அதற்கு எதிர்வினையும் காட்டாமல் இருந்தார்.

இன்னும் பல பிரபலங்கள் இதுக்குறித்து கருத்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இன்று இதுக்குறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் இளையராஜா. அதில் அவர் கூறும்போது இத்தனை நாட்களாக பலரும் என்னை பற்றி பேசிக்கொண்டிருந்தீர்கள் என கேள்விப்பட்டேன்.

ஆனால் அந்த சமயங்களில் நான் ஒரு புது சிம்பனியை உருவாக்கும் வேலையில் இருந்தேன். 35 நாட்களில் ஒரு சிம்பனியை உருவாக்கியுள்ளேன். படத்திற்கு இசையமைப்பது வேறு, பிண்ணனி இசை வேறு அந்த மாதிரி சிம்பனி என்பது வேறு.

இந்த படங்களில் அமைத்த இசை ஏதாவது அதில் வந்துவிட்டால் அது சிம்பனியாக இருக்காது என கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.

கிண்டல் பண்றாரா புகழ்ராறான்னு தெரியலையே!.. இளையராஜா வைரமுத்து குறித்து கருத்து தெரிவித்த சீனு ராமசாமி!..

தமிழ் சினிமாவில் சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை திரைப்படமாக காட்டக்கூடியவர் இயக்குனர் சீனு ராமசாமி. இவர் விஜய் சேதுபதியை வைத்து அதிக படங்கள் இயக்கியுள்ளார். தற்சமயம் நடந்து வரும் இளையராஜா வைரமுத்து பிரச்சனை குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் சீனு ராமசாமி.

இளையராஜா அவர் இசையமைத்த பாடல்களுக்கான உரிமத்தை அவருக்கே தர வேண்டும் என கூறி வெகு காலமாக அதற்காக போராடி வருகிறார். ஆனால் ஒரு பாடல் என்பது அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு சொந்தமா இல்லை இசையமைப்பாளருக்கு சொந்தமா என்பதே இங்கு பெரும் கேள்வியாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் பாடல் வரிகள் எல்லாம் ஒரு பாடல் எப்படி முழுமை பெறும் என்று தனது கருத்தை முன் வைத்தார் வைரமுத்து. அதில் அவர் கூறும்போது பாடல் வரிகளும் இசையும் சேர்ந்தால்தான் பாடல். ஏதேனும் ஒன்று மட்டும் இருந்தால் அது எப்படி பாடலாகும் என கூறியிருந்தார்.

ilayaraja-1

இளையராஜாவின் தம்பியான கங்கை அமரன் இதற்கு பதிலளிக்கும்போது வைரமுத்துவை வளர்த்து விட்டதே இளையராஜாதான். இல்லை என்றால் இப்போது உள்ள வாழ்க்கை வைரமுத்துவிற்கு இருக்காது. ஆனால் இப்போது வைரமுத்து இளையராஜாவையே விமர்சித்து பேசுவது சரி கிடையாது என தனது கருத்தை முன் வைத்தார் .

https://twitter.com/seenuramasamy/status/1786531027390812484

இதற்கு பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் சீனு ராமசாமி எக்ஸ் தளத்தில் ”உண்மையில் வைரமுத்து அவர்களை வளர்த்தது இளையராஜா அவர்கள்தான். வைரமுத்து அவர்கள் மீதான கோபத்தில்  யாரையும் கவித்துவமாக எழுத விடாமல் 20 வருடம் தான் போட்ட நல்ல டியுன்களுக்கு நிறைய  டம்மி லிரிக்ஸ் ஓகே பண்ணி  அய்யா வைரமுத்துவை மேலும் ஜொலிக்க விட்டவர்  இளையராஜா அவர்கள்” என்று பதிவிட்டுள்ளார் சீனுராமசாமி.

பாட்டுக்கு தேவை இசையா? மொழியா!.. இளையராஜா வைரமுத்து பிரச்சனை குறித்து பேசிய ஜேம்ஸ் வசந்தன்!..

பழைய தமிழ் சினிமாவில் கல்வியா? செல்வமா? வீரமா எது பெரிது என கடவுள்களுக்குள் சண்டை வருவது போல காட்சி இருக்கும். அதே மாதிரி தற்சமயம் ஒரு பாடலுக்கு முக்கியம் இசையா? பாடல் வரிகளா என்கிற சண்டை இளையராஜாவிற்கும் வைரமுத்துவிற்கும் இடையே வந்துள்ளது.

தான் இசையமைத்த பாடல்கள் எல்லாமே தனக்கு சொந்தமானவை எனவே அதற்கான காப்புரிமை தனக்கு வேண்டும் என்று வெகு காலங்களுக்கு முன்பே இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த நிலையில் இதுக்குறித்து மறைமுகமாக பேசிய வைரமுத்து ஒரு இசை மட்டுமே பாடல் ஆகிவிட முடியாது. பாடலுக்கு வரிகள்தான் பெயர் போன்றவை எப்படி இசை இல்லாமல் ஒரு பாடல் கிடையாதோ அதே போல பாடல் வரிகள் இல்லாமலும் ஒரு பாடல் கிடையாது.

எனவே பாடலுக்கு இசை முக்கியமா? மொழி முக்கியமா என கேட்டால் ரெண்டுமே முக்கியம் என பேசியிருந்தார் வைரமுத்து. இந்த நிலையில் இதற்கு கருத்து தெரிவித்த கங்கை அமரன் என் அண்ணன் நிழல்கள் திரைப்படத்தில் வாய்ப்பு தரவில்லை என்றால் வைரமுத்துவிற்கு இந்த வாழ்க்கை கிடையாது.

ஆனால் அவர் நன்றி மறந்து பேசுகிறார். உட்கார்ந்த நாற்காலியையே எட்டி உதைக்கிறார் என கருத்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழில் பிரபல இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் இதுக்குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறும்போது ஒரு பாடலுக்கு இசை முக்கியமா பாடல் வரிகள் முக்கியமா என்றால் இரண்டுமே முக்கியம்தான். அப்படி பார்த்தால் எம்.ஜி.ஆர் காலக்கட்டத்தில் அவருக்காகவே பாடல்கள் ஓடின. சிவாஜியின் பாடல்களும் அப்படிதான். அதற்காக கதாநாயகர்கள் முக்கியம் என கூற முடியுமா. நான் சுப்பிரமணியப்புரம் திரைப்படத்திற்கு இசையமைத்தப்போது அதில் வரும் கண்கள் இரண்டால் பாடல் ஹிட்டானது.

அதில் நடித்தவர்களோ அல்லது இசையமைத்தோ நானோ அப்போது பிரபலம் கிடையாது. அதே போல அதில் இசையால் ஹிட்டானதா அல்லது மொழியால் ஹிட்டானதா என எப்படி கூற முடியும் என கூறியுள்ளார் ஜேம்ஸ் வசந்த்.

மக்கள் பேச தொடங்கிவிட்டால் – கங்கை அமரனுக்கு பதிலடி பதிவிட்ட வைரமுத்து!..

கடந்த சில தினங்களாகவே வைரமுத்து இளையராஜா இடையிலான பிரச்சனைதான் சமூக வலைத்தளங்களில் பேசுப்பொருளாக இருந்து வருகிறது. இளையராஜா அவர் இசையமைத்த பாடல்களுக்கான உரிமத்தை அவருக்கு வழங்க வேண்டும் என வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். இதை தொடர்ந்து இன்னமும் அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் யாஷிகா ஆனந்த் நடித்து வரும் படிக்காத பக்கங்கள் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு வந்த வைரமுத்து ஒரு இசைக்கு பெயர் வைப்பது பாடல் வரிகள்தான். இசையும் பாடல் வரிகளும் சேர்ந்ததுதான் ஒரு பாடலே தவிர வெறும் இசை மட்டும் பாடலாகிவிட முடியாது.

Vairamuthu-1

இசையை விட மொழி பெரியதா அல்லது இசை பெரியதா என கேட்டால் இரண்டும் சமமானது. சில பாடல்களில் மொழி பெரியதாகவும் சில பாடல்களில் இசை பெரியதாகவும் இருக்கலாம். இதை அறிந்து கொள்பவன் ஞானி. அறியாதவன் அஞ்ஞானி என கூறியிருந்தார் வைரமுத்து.

கங்கை அமரன் கொடுத்த பதில்:

இந்த நிலையில் இதற்கு பதிலளித்த கங்கை அமரன் கூறும்போது வைரமுத்து நன்றிக்கெட்ட தனமாக நடந்துக்கொள்கிறார். இளையராஜா மட்டும் நிழல்கள் திரைப்படத்தில் வாய்ப்பளிக்கவில்லை என்றால் வைரமுத்து சினிமாவிற்கு வந்திருக்க முடியுமா? இனி இளையராஜா குறித்து அவர் பேசினால் வேறு மாதிரி நடவடிக்கை எடுப்போம் என கூறியிருந்தார்.

வைரமுத்து பதிலடி:

இதற்கு பதிலளிக்கும் விதமாக தனது எக்ஸ்  பக்கத்தில் பதிவிட்ட வைரமுத்து ‘குயில் கூவத் தொடங்கிவிட்டால் காடு தன் உரையாடலை நிறுத்திக்கொள்ள வேண்டும் புயல் வீசத் தொடங்கிவிட்டால் ஜன்னல் தன் வாயை மூடிக்கொள்ள வேண்டும்.

வெள்ளம் படையெடுக்கத் தொடங்கிவிட்டால் மூடிக்கொள்ள நதிக்கரையில் தலைசாய்த்துக்கொள்ள வேண்டும் மக்கள் தனக்காகப் பேசத் தொடங்கிவிட்டால் கவிஞன் தன் குரலைத் தணித்துக்கொள்ள வேண்டும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது என்றொரு பதிவை இட்டுள்ளார்.

நாங்க கொடுத்த பிச்சைதான் வைரமுத்துவோட வாழ்க்கை!.. இப்படியெல்லாம் பேசுனா அவ்வளவுதான்!.. பொங்கி எழுந்த கங்கை அமரன்.

திரைத்துறையில் இளையராஜா இசையமைக்க துவங்கிய காலக்கட்டம் முதலே கங்கை அமரனும் அவருடன் சேர்ந்து பணியாற்றி வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு தான் இசையமைத்த பாடல்களுக்கான காப்புரிமையை தனக்கு வழங்க வேண்டும் என இளையராஜா கேட்டிருந்தார்.

அதன் மூலம் யாரெல்லாம் இளையராஜா பாடல்களை பயன்படுத்துகிறார்களோ அவர்கள் எல்லாம் இளையராஜாவுக்கு காப்பு தொகை தர வேண்டும் என கூறப்பட்டது. இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து இதற்கு எதிரான தனது வாதத்தை முன் வைத்திருந்தார்.

பாடல் வரிகளும், இசையும் சேர்ந்தால்தான் பாடல் முழுமைப்பெறுமே தவிர இசை மட்டுமே பாடலை முழுமை செய்யாது. ஒரு பாடலில் இசை பெரியதா, மொழி பெரியதா என கேட்டால் இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று நிகரானது என்றுதான் கூறவேண்டும் என்கிறார் வைரமுத்து.

Vairamuthu-1

எனவே பாடல் இசையமைப்பாளருக்கு மட்டுமே சொந்தமானது கிடையாது என்கிறார் வைரமுத்து. இதனால் கடுப்பான கங்கை அமரன் தனது பேட்டியில் பேசும்போது நாங்கள் இல்லாமல் வைரமுத்து இவ்வளவு உயர்ந்திருக்க முடியாது.

வைரமுத்து ஒரு நல்ல பாடலாசிரியராக இருக்கலாம். ஆனால் அவர் ஒரு நல்ல மனிதர் கிடையாது. கொஞ்சமாவது நன்றியுணர்வு இருந்திருந்தால் இப்படி இளையராஜாவை தவறாக பேசியிருக்க மாட்டார். ஒரு பொன் மாலை பொழுது பாடலில் இளையராஜா மட்டும் வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் இந்நேரம் வைரமுத்துவின் நிலை என்னவாக இருக்கும் என்று பேசியிருக்கிறார் கங்கை அமரன்.

தொழில்நுட்பம்தான் தமிழ் சினிமா வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்!.. கடுப்பான வைரமுத்து!..

தொழில்நுட்ப வளர்ச்சி என்பது சில சமயங்களில் சாதகமான அம்சமாக இருந்தாலும் பல சமயங்களில் அதனால் பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. ஆனால் சினிமா தொழில்நுட்பத்தை பொறுத்தவரை உலக அளவில் வந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் இன்னமும் தொழில்நுட்ப வளர்ச்சி இன்னமும் வரவில்லை என்றே கூறலாம்.

ஆனால் கவிஞர் வைரமுத்து சமீபத்தில் கொடுத்த பேட்டியில் தொழில்நுட்ப வளர்ச்சிதான் தமிழ் சினிமாவை சீரழித்துவிட்டது என்கிறார். அந்த பேட்டியில் அவர் பேசும்போது திரையரங்குகள் திரைப்படங்களை ஒளிப்பரப்புவதிலேயே பிரச்சனைகள் உண்டாகியுள்ளது.

இப்படிதான் ஒரு திரைப்படத்திற்கு 5 நபர்கள் வந்துவிட்டனர். ஆனால் 11 நபர்கள் வந்தால்தான் அந்த ஷோவை போட முடியும் என கூறிவிட்டனர் திரையரங்க அலுவலர்கள். இதனால் காத்திருந்தனர் அந்த நபர்கள். எதனால் இது நடக்கிறது.

Vairamuthu-1

11 நபர்கள் வந்தால்தான் அந்த திரையரங்கால் அந்த காட்சிக்கான மின்சார கட்டணத்தையே எடுக்க முடியும். தொழில்நுட்ப வளர்ச்சிதான் இந்த சீர்க்கேட்டுக்கு காரணம். தொழில்நுட்ப வளர்ச்சியால் பாதி பேர் செல் போனில் படத்தை பார்க்கின்றனர், பாதி பேர் கணினியில் பார்க்கின்றனர். இன்னும் பலர் ஓ.டி.டியில் பார்க்கின்றனர்.

இந்த நிலை மாற வேண்டும் அப்போதுதான் திரையரங்குகளுக்கு மக்கள் வருவார்கள் என கூறியுள்ளார் வைரமுத்து.

யாஷிகா ஆனந்தின் சரக்கு பாடலுக்கு வைரமுத்து போட்ட பதிவு!.. நாட்டுக்கு அவசியமான பதிவு!..

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களிலேயே மக்கள் மத்தியில் பிரபலமான நடிகைகளில் முக்கியமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். பொதுவாகவே இவர் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாகதான் அறியப்படுகிறார். பொதுவாகவே தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக கால் ஊன்றும் நடிகைகளுக்கு அதிக நாட்கள் மார்க்கெட் இருந்தது கிடையாது.

இங்கு கவர்ச்சியை விடவும் நடிப்புக்கே அதிக முக்கியத்துவம் இருக்கிறது. இந்த நிலையில் நடிகை யாஷிகா ஆனந்தும் சினிமாவில் வாய்ப்பை இழந்தார். இந்த நிலையில் அரிதாகவே அவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் தற்சமயம் படிக்காத பக்கங்கள் என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார் யாஷிகா ஆனந்த். இந்த படம் ஒரு காமெடி திரைப்படம் என கூறப்படுகிறது. இந்த படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் கதாநாயகனாக பிரஜின் நடித்துள்ளார்.

இதில் மதுவுக்கு எதிராக பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது. சமீபத்தில் அந்த பாடல் வெளியான நிலையில் அந்த பாடல் மதுவுக்கு எதிராக எழுதியது என்பதை உணர்த்தும் வகையில் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார் கவிஞர் வைரமுத்து.

”மரணத்திற்கு முன்பே
மனிதனைப் புதைத்துவிடுகிறது
மது

ஒவ்வொரு மணி நேரத்திற்கும்
16 மதுச் சாவுகள் நிகழ்கின்றன

44 முதல் 67 விழுக்காடு
சாலை விபத்துகள்
மதுவால் நேர்கின்றன

20மில்லி ரத்தத்தில் கலந்தாலே
பார்வையைப் பாதிக்கிறது மது

30மில்லி கலந்தால்
தசை தன் கட்டுப்பாட்டை
இழந்துவிடுகிறது

ஒருநாட்டின் மனிதவளம்
தவணைமுறையில் சாகிறது

ஒழுக்கக்கோடுகள் அழிந்து
ஒழுக்கக்கேடுகள் நுழைகின்றன வாழ்வியலில்

மதுவுக்கு எதிராக
நான் எழுதிய ஒருபாடலை
இன்று மாலை வெளியிடுகிறோம்

இப்போதே உங்கள்
கண்களுக்கும் காதுகளுக்கும்” என்பதே அந்த கவிதையாகும்

அந்த ஒரு பாட்டுக்கு இவ்வளவு பஞ்சாயத்தா!.. வைரமுத்து ஏ.ஆர் ரகுமான் பிரச்சனையில் சிக்கிய ஹரிஹரன்!..

Vairamuthu and AR Rahman : பாடல்களை இசையமைப்பதை பொருத்தவரை அதில் இசையமைப்பாளருக்குதான் எப்போதுமே பெரும் பங்கு உண்டு. ஒரு பாடல் என்ன ராகத்தில் இருக்க வேண்டும் என்பதெல்லாம் ஒரு இசை அமைப்பாளர் முடிவு செய்ததுதான் அமையும்.

பாடல் வரிகளைதான் பாடலாசிரியர்கள் எழுதுவார்கள். அதன் பிறகு அது ஒரு பாடலகர்களால் பாடப்படும். ஆனால் முக்கியமான ஆள் இதில் இசையமைப்பாளர்தான் அதனால்தான் ஒரு பாட்டு யாருக்கு சொந்தம் என்று கேட்டால் அது இசையமைப்பாளருக்கு தான் சொந்தம் என கூறப்படுகிறது.

வைரமுத்துவும் ஏ.ஆர் ரகுமானும் ஒன்றாக சேர்ந்து பல படங்களில் பணிபுரிந்து இருக்கின்றனர். வைரமுத்துவிற்கு இளையராஜா உடன் பிரச்சனையை ஏற்பட்ட பிறகு அவர் தொடர்ந்து ஏ.ஆர். ரகுமானின் திரைப்படங்களுக்கு பாடல் வரிகளை எழுத தொடங்கினார்.

இந்த நிலையில் ரட்சகன் திரைப்படத்திற்கும் அவர்கள் இருவரும் இணைந்துதான் பணிபுரிந்தனர். அதில் சந்திரனை தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா என்கிற ஒரு பாடலுக்கு வரிகளை வைரமுத்து எழுதிய போது அது ஏ.ஆர் ரகுமானிற்கு பிடிக்கவில்லை.

இந்த ஆம்ஸ்ட்ராங்கா என்பதை எடுத்துவிட்டு வேறு ஏதாவது போட முடியுமா என்று பாருங்களேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் வைரமுத்துவிற்கு இந்த பாடல் வரிகள் சரியாக இருப்பதாக தோன்றியது. அது குறித்து ஏ.ஆர் ரகுமான் கூறும் பொழுது பாடுபவருக்கு இந்த பாடல் ஆம்ஸ்ட்ராங் எனும் வார்த்தை கொஞ்சம் கடுமையானதாக இருக்கும் என்றார்.

அதை பாடகர் இடமே நாம் கேட்டு விடுவோம் என்று கூறியிருக்கிறார் வைரமுத்து. இந்த நிலையில் அந்த பாடலை பாடகர் ஹரிஹரன் தான் பாடுவதாக இருந்தது. அவர் வரிகளை கேட்ட உடனேயே சிறப்பான பாடல் வரிகள் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் அதை மிக எளிமையாக பாடியும் காட்டி இருந்தார் கடைசியாக ஹரிஹரன் வந்த பிறகு தான் அந்த சண்டையும் முடிந்தது.