Tag Archives: tamil movie

OTT Watch: திரும்ப வரும் காணாமல் போன பையன்.. பிரித்திவிராஜ் நடித்த Sarzameen Movie Review

சலார் திரைப்படத்திற்கு பிறகு பிரித்விராஜ் தேர்ந்தெடுக்கும் கதை களங்களில் நிறைய மாறுபாடுகள் ஏற்பட்டு இருக்கின்றன. இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவான சலார் திரைப்படம் இந்திய அளவில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதன் மூலம் பிரித்விராஜுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே அவர் கதைக்களங்களை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகத்திலும் பிரித்திவிராஜுக்கு இருந்த கதாபாத்திரம் சிறப்பானதாக இருந்தது.

இந்த நிலையில் பிரித்திவிராஜ் நடித்து தற்சமயம் ஓடிடியில் வெளியான திரைப்படம் Sarzameen. Sarzameenதிரைப்படத்தைப் பொறுத்தவரை இது ஒரு க்ரைம் திரில்லர் திரைப்படமாக இருக்கிறது.

படத்தின் கதைப்படி ராணுவ வீரராக இருக்கிறார் நடிகர் பிரித்திவிராஜ். ஒரு கட்டத்தில் தீவிரவாதிகள் பிரித்விராஜின் மகனை கடத்தி செல்கின்றனர் அவர்கள் கேட்கும் விஷயத்தை பிரித்விராஜ் செய்யாததால் அவரது மகனை கொன்று விடுகின்றனர்.

ஆனால் எட்டு வருடம் கழித்து இறந்த மகன் திரும்ப வருகிறான் அவன் எதற்காக வந்துள்ளான் ஒரு வேலை தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்திருப்பானா என்று பிரித்விராஜ்க்கு பல கேள்விகள் மனதிற்குள் ஓடுகின்றது. இதற்கு நடுவே இவர்கள் இருவருக்கும் இடையே என்னவெல்லாம் நடக்கப்போகிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தின் கதைகளம் செல்கிறது.

இதுதான் கூலி திரைப்படத்தின் கதை..! லீக் ஆன படக்கதை!..

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் திரைப்படங்கள் என்றாலே அது குறித்து மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகள் என்பது இருந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார் எனும் பொழுது அந்த செய்தி வந்தது முதலே மக்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரிக்க தொடங்கிவிட்டது.

இந்த நிலையில் அடுத்த மாதம் கூலி திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த திரைப்படத்தின் கதைகளம் எப்படி இருக்கும் என்பது குறித்து பலருக்கும் கேள்விகள் இருந்து வந்தது. ஆனால் வழக்கமாக லோகேஷ் கனகராஜ் திரைப்படங்களில் இருப்பது போன்ற போதை பொருள் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் செல்லாது என்று கூறப்படுகிறது.

முற்றிலுமாக லோகேஷ் கனகராஜ் திரைப்படங்களிலிருந்து மாறுபட்டதாகதான் கூலி இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் கதை குறித்து சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அவர் கூறும் பொழுது படத்தை பொறுத்தவரை முதல் பாதி என்பது பயங்கர எமோஷனலாக போகும்.

அதில் ஆக்சன் காட்சிகள் அவ்வளவாக இருக்காது இடைவேளைக்குப் பிறகு ஒரு டிரான்ஸ்பர் மெஷின் நடக்கும் அதற்குப் பிறகு படம் முழுக்க ஆக்சன் காட்சிகள் எல்லாம் இருக்கும் என்று கூறியிருக்கிறார். இதனால் இந்த படம் கிட்டத்தட்ட பாட்ஷா மாதிரியான கதை அமைப்பைக் கொண்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூரி நடித்த மாமன் படம் 5 நாள் வசூல் நிலவரம்.!

காமெடி நடிகராக நடித்து தற்சமயம் கதாநாயகனாக நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்த வருகிறார் சூரி. அந்த வகையில் சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் மாமன்.

மாமன் திரைப்படத்தைப் பொறுத்தவரை இந்த படத்தின் கதையை சூரிதான் எழுதினார். பிரசாந்த் பாண்டியராஜ் என்பவர் இந்த திரைப்படத்தை இயக்கினார். குடும்பங்கள் கொண்டாடும் ஒரு திரைப்படமாக இந்த திரைப்படம் அமைந்திருக்கிறது.

தற்சமயம் வரை பாக்ஸ் ஆபிஸிலும் இந்த படம் நல்ல வெற்றியை கொடுத்திருக்கிறது. இந்த படம் ஐந்து நாட்கள் முடிவில் மொத்தமாக 17 கோடி வசூல் செய்து இருக்கிறது. படத்தின் பட்ஜெட்டோடு பார்க்கும் பொழுது இது நல்லபடியான வசூல் என்று கூறப்படுகிறது.

ஒரு படத்தில் நடிச்சு அந்த கஷ்டப்பட்டுட்டேன்.. உடம்பே மாறி போயிடுச்சு.. ஓப்பன் டாக் கொடுத்த அட்டக்கத்தி தினேஷ்

தமிழில் பிரபலமான நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் அட்டக்கத்தி தினேஷ் இருந்து வருகிறார். அட்டக்கத்தி திரைப்படத்தில் இவர் நடித்தப்போது இவர் பெரிதாக பிரபலமாகவில்லை. ஆனால் அதற்கு பிறகு அவர் நடித்த திரைப்படங்கள் அவருக்கு வரவேற்பை பெற்று கொடுத்தன.

இந்த நிலையில் வித்தியாசமான கதை அமைப்பில் அட்டக்கத்தி தினேஷ் நடித்த திரைப்படம் குக்கூ. அந்த திரைப்படத்தில் கண் தெரியாத கதாபாத்திரமாக அவர் நடித்திருப்பார். அதற்காக அவரது விழிகளை மாறு கண் போல வைத்து கொண்டு நடித்தார்.

பிறகு அது அவருக்கே பிரச்சனையாக முடிந்தது, அதுக்குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர் கூறும்போது குக்கூவில் நடிக்கும் போது கண் தெரியாத நபர்களின் ஆசிரமத்திற்கு சென்று வந்தோம். அந்த சமயத்தில் கண் தெரியாதவர்கள் குறித்து நிறைய விஷயங்களை கற்று கொண்டேன்.

குக்கூவில் ஆரம்பத்தில் நடிக்கும்போது கண்ணை சரியாக வைத்துதான் நடித்தேன். ஒரு நாள் நடிக்கும்போது கண்களை மாறு கண் போல வைத்தேன். அது நன்றாக உள்ளது அப்படியே வைத்துக்கொள்ளுங்கள் என இயக்குனர் கூறிவிட்டார்.

அதற்கு பிறகு படப்பிடிப்பு 2 வருடம் நடந்தது. அந்த தப்பை நான் அப்போது செய்திருக்க கூடாது. அதற்கு பிறகு எனக்கு எக்கச்சக்க பிரச்சனைகள் வந்தன. அதிலிருந்து சரியாக எனக்கு பல வருடங்கள் ஆனது என்கிறார் அட்டக்கத்தி தினேஷ்.

நானி கே.ஜி.எஃப் நாயகி கூட்டணியில் ரத்தம் தெறிக்க தெறிக்க வெளியான ஹிட் 3 ட்ரைலர்..!

தெலுங்கு சினிமாவில் நடிக்க தெரிந்த சில நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் நானி. தெலுங்கு சினிமாவில் மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் கூட பிரபலமான நடிகராக நானி இருந்து வருகிறார். தமிழில் அவர் நடித்த நான் ஈ, சாம் சிங்கா ராய், நானிஸ் கேங்க் லீடர் ஆகிய படங்கள் தமிழில் கொஞ்சம் பிரபலமானவை.

சமீபத்தில் அவர் நடித்த தசரா திரைப்படம் கூட எதிர்பார்த்த வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து தற்சமயம் நானி தமிழ் ரசிகர்களையும் கவரும் வகையில் கதை களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படியாக சமீபத்தில் அவர் நடித்த திரைப்படம்தான் ஹிட் 3

ஹிட் திரைப்படமானது தெலுங்கில் ஏற்கனவே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. அதனாலேயே இரண்டு பாகங்கள் வரை வந்து அந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்சமயம் ஹிட் 3 திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படத்தில் கே.ஜி.எஃப் புகழ் நடிகை ஸ்ரீ நிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க  இரத்த களரியான காட்சிகளை கொண்டுள்ளது. மிக அரிதாகதான் நானி இந்த மாதிரியான ரத்தகளரியான திரைப்படங்களை தேர்ந்தெடுப்பார்.

ஒருவேளை கதைக்களம் நன்றாக இருந்தால் அவர் இந்த மாதிரியான கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதுண்டு. அந்த வகையில் இந்த படத்திற்கு டீசரிலேயே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த படம் வருகிற மே 1 அன்று திரைக்கு வர இருக்கிறது.

சூப்பர் டூப்பர் படமா இருந்தாலும் என் விதிமுறைகளுக்குள்ள இல்லன்னா நடிக்க மாட்டேன்!. ஜெயம் ரவிக்கு இருக்கும் ரூல்ஸ் என்ன தெரியுமா?

Jayam Ravi: சமீபத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் திரைப்படங்கள் எல்லாம் பெரிதாக வெற்றியை அடையவில்லை. அவர் நடித்த திரைப்படங்களில் பொன்னியின் செல்வன் திரைப்படம் மட்டுமே ஓரளவு பேசப்படும் திரைப்படமாக இருந்தது.

அதற்கு முன்பு நடித்த பூமி, இறைவன், அகிலன் தற்சமயம் நடித்த சைரன் என எந்த ஒரு திரைப்படமும் வெற்றி பெறவில்லை. ஜெயம் ரவி கதைகளை தேர்ந்தெடுப்பதில் பெரிதாக கவனம் செலுத்தாதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இத்தனைக்கும் இதற்கு முன்பு சந்தோஷ் சுப்ரமணியம், சம்திங் சம்திங், தில்லாலங்கடி என்று வரிசையாக வெற்றி படங்களாக நடித்தவர் நடிகர் ஜெயம் ரவி. அப்படி இருந்தும் கூட இப்பொழுது அவருக்கு ஏன் வாய்ப்புகள் வருவதில்லை என கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் படம் தேர்ந்தெடுப்பது குறித்து ஜெயம் ரவி ஒரு பேட்டியில் கூறும் பொழுது சில விஷயங்களை பகிர்ந்து இருந்தார். அதில் அவர் கூறும் பொழுது ஒரு திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும் என்று தெரியாமல் நீங்கள் தவறவிட்ட கதைகள் எத்தனை என்று கேட்ட பொழுது தெரிந்தே நான் தவறவிட்ட கதைகளே உண்டு.

ஜெயம் ரவியின் விதிமுறை:

ஏனெனில் திரைப்படங்களை தேர்ந்தெடுப்பதில் எனக்கு சில விதிமுறைகள் உண்டு என்று கூறுகிறார் ஜெயம் ரவி. அதன்படி ஏற்கனவே ஒரு கதாநாயகர்களிடம் சொன்ன கதை என்னிடம் திரும்ப வந்தால் அதை தேர்ந்தெடுக்க மாட்டேன்.

அப்படியே என்னிடம் ஒரு கதை வந்தது. அந்த கதையை கேட்ட பொழுது எனக்கு தெரிந்து விட்டது அது மிகப்பெரும் வெற்றியை கொடுக்கக்கூடிய கதை என்று. ஆனால் ஏன் அந்த இயக்குனர் வேறு கதாநாயகனை விட்டு என்னிடம் இந்த கதையை கூறுகிறார் என்று கேட்ட பொழுது.

jayam-ravi

அந்த கதையை அவர் முன்பே ஒரு கதாநாயகனிடம் கூறியதும் பிறகு அவருக்கும் கதாநாயகனுக்கு ஈகோ பிரச்சனை ஆனதும் பிறகுதான் ஜெயம் ரவிக்கு தெரிந்துள்ளது. எனவே திரும்ப அந்த கதாநாயகனிடமே பேசி அவர் நடிப்பதுதான் சரி என்று கூறியிருக்கிறார் ஜெயம் ரவி.

எனவே அந்த படத்தின் வாய்ப்பை நானாகவே விட்டுக் கொடுத்து விட்டேன் என்று கூறுகிறார் ஜெயம் ரவி. எனவே எவ்வளவு பெரிய வெற்றி படமாக இருந்தாலும் வேறு கதாநாயகனிடம் கூறிவிட்டு என்னிடம் கொண்டு வந்தால் தகுந்த காரணம் இல்லாத பட்சத்தில் அதில் நான் நடிக்க மாட்டேன் என்று கூறுகிறார் ஜெயம் ரவி.

தயாரித்த படத்தை வெளியிடுவதில் வந்த சிக்கல்!.. உதயநிதியோடு சேர்ந்து விஜய் ஆண்டனி எடுத்த முடிவு!..

Vijay Antony : தமிழ் சினிமாவில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய் ஆண்டனி. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி தொடர்ந்து நிறைய ஹிட் பாடல்களை கொடுத்து இருக்கிறார்.

ஆரம்பம் முதலே அவரது பாடல்களுக்கு என்று தனி வரவேற்பு இருந்து வந்தது. இருந்தாலும் விஜய் ஆண்டனி நடிப்பின் மீது ஆர்வம் கொண்டிருந்த காரணத்தினால் தொடர்ந்து நடிக்கவும் ஆரம்பித்தார். அவரது முதல் திரைப்படமான நான் திரைப்படமே எதிர்பார்த்ததை விடவும் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

அதனை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடித்த திரைப்படங்கள் எல்லாமே வித்தியாசமான கதை அமைப்பை கொண்டிருந்ததால் விஜய் ஆண்டனி திரைப்படம் என்றாலே பார்க்கலாம் என்கிற மனநிலை மக்கள் மத்தியில் உருவாகிவிட்டது. அதனை தொடர்ந்து தற்சமயம் வளர்ந்து வரும் கதாநாயகர்களில் முக்கியமானவராக விஜய் ஆண்டனி இருக்கிறார்.

தற்சமயம் விஜய் ஆண்டனி நான்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இன்னும் அவருக்கு அதிகமான வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கின்றன. இது இல்லாமல் அவர் தயாரிப்பு நிறுவனமும் வைத்திருக்கிறார். ஏற்கனவே அவர் நடித்த மூன்று திரைப்படங்கள் சில காரணங்களால் வெளியாகமல் இருக்கின்றது.

இந்த நிலையில் விஜய் ஆண்டனி தயாரிப்பில் ரோமியோ என்கிற திரைப்படத்தை அவரே நடித்துள்ளார். அந்த திரைப்படத்தை வெளியிடலாம் என யோசிக்கும் பொழுது ஏற்கனவே எடுக்கப்பட்ட மூன்று திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் இதனால் பிரச்சனை செய்வார்களோ என்று யோசித்த விஜய் ஆண்டனி தற்சமயம் அந்த திரைப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனத்திடம் கொடுத்திருக்கிறார்.

அவர்களிடம் இந்த திரைப்படத்தை வெளியிட்டு தருமாறு கேட்டு இருக்கிறார் இன்னும் சில மாதங்களில் அந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. 

கண் கலங்கும் ரசிகர்கள்.. சித்தா படம் எப்படி இருக்கு!..

தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சித்தார்த். பாய்ஸ் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான சித்தார்த் தொடர்ந்து பல படங்களில் நடிக்க துவங்கினார்.

தற்சமயம் இவர் நடித்த சித்தா என்கிற திரைப்படம் வெளியாகி உள்ளது சித்தா திரைப்படம் குறித்து ஏற்கனவே பல பேச்சுக்கள் இருந்தன. இந்த திரைப்படத்தில் ஒரு சிறுமியின் சித்தப்பா கதாபாத்திரத்தில் சித்தார்த் நடித்திருக்கிறார்.

இந்த படத்தின் முதல் காட்சிகள் முடிந்த நிலையில் படம் குறித்து நேர்மறையான விமர்சனங்கள் வந்துள்ளன. படத்தைப் பார்த்த பலரும் படம் குறித்து நல்ல வகையான கருத்துக்களை தெரிவிக்கின்றனர். இந்த படம் சிறுமிகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகளை பேசும் விதமாக இருக்கின்றது என்று கூறப்படுகிறது. காணாமல் போகும் தனது அண்ணன் மகளை சித்தார்த் கண்டறிவது படத்தின் கதையாக உள்ளது.

படத்தைப் பார்த்த பலரும் கூறும் பொழுது இந்த படத்தில் சித்தார்த் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார், பொதுவாக காமெடி திரைப்படங்கள், காதல் திரைப்படங்கள் என்று நடிக்கும் சித்தார்த் இந்த திரைப்படத்தில் கொஞ்சம் மாறுதலாக நடித்துள்ளார் என்று கூறியுள்ளனர். கண் கலங்க வைக்கும் காட்சிகள் திரைப்படத்தில் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே சித்தா திரைப்படத்திற்கு வெற்றி அடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதை பார்க்க முடிகிறது.