Tag Archives: தமிழ் திரைப்படம்

சிறப்பான கதையா இருக்கே.. வெளியான தலைவன் தலைவி பட ட்ரைலர்..! இதை கவனிச்சீங்களா?

விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் தலைவன் தலைவி. இந்த படத்தின் கதையை முதலில் ஜெயம் ரவிக்கு சொன்னதாகவும் ஆனால் அதற்கு கதை கை மாறி இப்போது விஜய் சேதுபதி நடித்து வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் கதைப்படி விஜய் சேதுபதி ஒரு பரோட்டா மாஸ்டராக இருக்கிறார். அவர் போடும் பரோட்டாவிற்கு அதிக வரவேற்புகள் இருந்து வருகிறது. இந்த நிலையில் அவரை திருமணம் செய்கிறார் நித்யா மேனன். பெண் பார்க்கும் சமயத்திலேயே இருவருக்கும் பிடித்து விடுகிறது.

அதற்கு பிறகு அவர்கள் இருவருக்கும் நடக்கும் விஷயங்களே படத்தின் கதையாக இருக்கிறது. இந்த நிலையில் திருமணத்திற்கு முன்பு என்னதான் காதல் வாழ்க்கை சுமூகமாக இருந்தாலும் அதற்கு பிறகு பெரும் சண்டையாகதான் இருக்கும்.

அப்படியாக இவர்கள் இருவருக்குள்ளும் கூட சண்டையாகவே கதைக்களம் செல்கிறது. அதை முடிந்த அளவில் காமெடியாக செய்துள்ளார் இயக்குனர் பாண்டிராஜ். இந்த நிலையில் இந்த திரைப்படம் வருகிற ஜூலை 25 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதற்கு இப்போது வரவேற்பு அதிகரிக்க துவங்கியுள்ளது.

சூரி நடித்த மாமன் படம் 5 நாள் வசூல் நிலவரம்.!

காமெடி நடிகராக நடித்து தற்சமயம் கதாநாயகனாக நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்த வருகிறார் சூரி. அந்த வகையில் சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் மாமன்.

மாமன் திரைப்படத்தைப் பொறுத்தவரை இந்த படத்தின் கதையை சூரிதான் எழுதினார். பிரசாந்த் பாண்டியராஜ் என்பவர் இந்த திரைப்படத்தை இயக்கினார். குடும்பங்கள் கொண்டாடும் ஒரு திரைப்படமாக இந்த திரைப்படம் அமைந்திருக்கிறது.

தற்சமயம் வரை பாக்ஸ் ஆபிஸிலும் இந்த படம் நல்ல வெற்றியை கொடுத்திருக்கிறது. இந்த படம் ஐந்து நாட்கள் முடிவில் மொத்தமாக 17 கோடி வசூல் செய்து இருக்கிறது. படத்தின் பட்ஜெட்டோடு பார்க்கும் பொழுது இது நல்லபடியான வசூல் என்று கூறப்படுகிறது.

சித்தா படத்துக்கு சின்ன பிள்ளைகளை கூட்டிட்டு போகலாமா? சித்தார்த்திற்கு அதிர்ச்சி கொடுத்த கமல்!..

தமிழ் சினிமா நடிகர்களில் ஒரு படத்திற்கு கமல்ஹாசன் கொடுக்கும் விமர்சனம் என்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில் தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து துறைகளிலும் வேலை பார்த்தவர் கமல்ஹாசன். அவரது சிறுவயதிலேயே நீரும் நெருப்பும் திரைப்படத்தில் உதவியாளராக வேலை பார்த்தவர் கமல்ஹாசன்.

அதே போல பாடல் பாடுவது, இசையமைப்பது, படங்களை இயக்குவது என அனைத்து துறைகளிலும் வேலை பார்த்தவர் என்பதால் சினிமா குறித்து ஒரு நல்ல அறிவு கொண்டவர் கமல்ஹாசன். தற்சமயம் சித்தார்த் நடித்து வெளியான சித்தா திரைப்படத்தை கமல்ஹாசன் பார்த்திருந்தார்.

இந்த திரைப்படம் குறித்து ஏற்கனவே நல்லவிதமான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இந்த படம் குறித்து பேசிய கமல் இந்த படம் சிறப்பான ஒரு திரைப்படம், குழந்தைகளுக்கு கெட்ட விஷயங்களை நேரடியாக சொல்ல முடியாது ஆனால் அது எப்படியாவது நாம் சொல்லித்தான் ஆக வேண்டும் அதற்கு இந்த படம் ஒரு உதவியாக இருக்கும்.

மோசமான காட்சிகளை நேரடியாக காட்டாமல் காட்டி இருக்கிறார் இயக்குனர், உதாரணத்திற்கு ஒரு கொலை காட்சியை அந்த கொலையை கண்ணில் காட்டாமல் படத்தில் பேச்சுக்கள் மூலமாக மட்டுமே காட்டி இருந்தார் இயக்குனர். அது சிறப்பாக இருந்தது.

மேலும் இந்த திரைப்படம் குழந்தைகள் போய் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம், கண்டிப்பாக உங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். சித்தார்த் கமல்ஹாசனின் மிகப்பெரும் ரசிகன் என்பதால் அவர் கொடுத்த இந்த விமர்சனம் சித்தார்த்துக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.