Tag Archives: நித்யா மேனன்

100 கோடி படமாக அமையுமா? வசூலில் பட்டையை கிளப்பும் தலைவன் தலைவி திரைப்படம்..!

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை நித்யா மேனன் நடித்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தலைவன் தலைவி.

தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் குடும்ப கதை அம்சத்தை கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து இயக்கி வருகிறார். அப்படி அவர் இயக்கும் திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஆக்ஷன் திரைப்படங்களுக்கு தனிப்பட்ட வரவேற்பு இருந்தாலும் கூட இன்னமும் குடும்ப திரைப்படங்களுக்கு ஒரு வரவேற்பு இருக்கதான் செய்கிறது.

இந்த நிலையில் திரையரங்குகளில் சமீபத்தில் வெளியான தலைவன் தலைவி திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.

கிட்டத்தட்ட இந்த திரைப்படம் இதுவரை 80 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இருக்கிறது. எப்படியும் 100 கோடியை தொட்டு விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடக்கும் பட்சத்தில் விஜய் சேதுபதிக்கு முதல் 100 கோடி படமாக தலைவன் தலைவி இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் ஒரு குடும்ப படத்திற்கு இவ்வளவு வரவேற்பு கிடைத்திருப்பது ஒரு முக்கியமான விஷயமாக சினிமாவில் பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து குடும்ப படங்களுக்கும் அடுத்து வரவேற்பு அதிகமாக இருக்கலாம் என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன.

12 நாளில் பெரிய வசூல்.. தலைவன் தலைவி வசூல் நிலவரம்..!

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை நித்யா மேனன் இணைந்து நடித்த திரைப்படம் தான் தலைவன் தலைவி.பொதுவாக இயக்குனர் பாண்டிராஜ் தமிழ் சினிமாவில் தொடர்ந்து குடும்ப படங்களாகவே எடுக்க கூடியவர்.

அவரது இயக்கத்தில் வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை, கடைக்குட்டி சிங்கம் என பல படங்களும் நல்ல வெற்றியை கொடுத்துள்ளன. பொதுவாக குடும்ப கதைகளங்களை கொண்ட திரைப்படங்களை எடுத்தால் ஓடாது என ஒரு பேச்சு இருந்து வருகிறது.

ஆனால் அப்படியெல்லாம் இல்லை ஆக்‌ஷன் திரைப்படங்களை பார்க்கும் அதே சமயம் மக்கள் குடும்ப கதைகளையும் விரும்புகின்றனர் என்பதை தனது திரைப்படங்களின் வெற்றி மூலம் நிரூபித்துள்ளார் இயக்குனர் பாண்டிராஜ்.

இந்த நிலையில் தற்சமயம் வெளியான திரைப்படம்தான் தலைவன் தலைவி. ஏற்கனவே விஜய் சேதுபதி கருப்பன், சேதுபதி, தர்மதுரை மாதிரியான குடும்ப படங்களில் நடித்திருப்பதால் அவருக்கு இந்த படத்தில் கதாபாத்திரம் நன்றாகவே செட் ஆகிவிட்டது.

நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் இதுவரை 75 கோடிக்கு ஓடி வசூல் சாதனை படைத்துள்ளது. இந்த திரைப்படம் 100 கோடிக்கு ஓடி வெற்றி கொடுக்கும் பட்சத்தில் விஜய் சேதுபதியும் 100 கோடி வசூல் நாயகர்களில் ஒருவராக மாறிவிடுவார்.

37 வயதாகியும் திருமணமாகாமல் இருப்பதற்கு இதுதான் காரணம்.. வெளிப்படையாக கூறிய நித்யா மேனன்..

தமிழ், மலையாளம் என்று இரண்டு மொழிகளிலுமே பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை நித்யா மேனன். ஒரு தனிப்பட்ட நடிப்பு திறனை கொண்டவர் என்று கூறலாம்.

பெரும்பாலும் நடிகைகள் என்றால் உடல் எடையை குறைவாக வைத்துக் கொண்டு இருக்க வேண்டும் என்று ஒரு விதிமுறை உண்டு. ஆனால் அதை எல்லாம் நித்யா மேனன் கடைபிடிப்பது கிடையாது. இருந்தாலும் கூட அவருக்கு பட வாய்ப்புகள் என்பது கிடைத்து கொண்டு தான் இருக்கிறது.

அவர் நடிக்கும் திரைப்படங்கள் தமிழில் குறைவானதாக இருந்தாலும் கூட அவற்றில் அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் காரணத்தினால் மக்கள் மத்தியில் தனித்து தெரிந்து வருகிறார்.

தற்சமயம் அவரது நடிப்பில் தலைவன் தலைவி என்கிற திரைப்படம் கூட வெளியாகியிருந்தது. இந்த நிலையில் 37 வயது ஆகியும் கூட இன்னமும் நித்யா மேனன் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இது குறித்து அவரிடம் ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த நித்யா மேனன் ஒரு பெண் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலே அவரை தோல்வி அடைந்தவராக பார்க்கிறார்கள் எல்லோருமே அவர்களது காதலை தேடிப் பிடித்து எளிதாக திருமணம் செய்து கொள்வதே கிடையாது.

எனக்கு திருமணம் நடந்தால் சந்தோஷம்தான் இல்லை என்றாலும் எனக்கு அதைவிட சந்தோசம்தான் என்று கூறியிருக்கிறார் நித்யா மேனன்.

சிறப்பான கதையா இருக்கே.. வெளியான தலைவன் தலைவி பட ட்ரைலர்..! இதை கவனிச்சீங்களா?

விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் தலைவன் தலைவி. இந்த படத்தின் கதையை முதலில் ஜெயம் ரவிக்கு சொன்னதாகவும் ஆனால் அதற்கு கதை கை மாறி இப்போது விஜய் சேதுபதி நடித்து வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் கதைப்படி விஜய் சேதுபதி ஒரு பரோட்டா மாஸ்டராக இருக்கிறார். அவர் போடும் பரோட்டாவிற்கு அதிக வரவேற்புகள் இருந்து வருகிறது. இந்த நிலையில் அவரை திருமணம் செய்கிறார் நித்யா மேனன். பெண் பார்க்கும் சமயத்திலேயே இருவருக்கும் பிடித்து விடுகிறது.

அதற்கு பிறகு அவர்கள் இருவருக்கும் நடக்கும் விஷயங்களே படத்தின் கதையாக இருக்கிறது. இந்த நிலையில் திருமணத்திற்கு முன்பு என்னதான் காதல் வாழ்க்கை சுமூகமாக இருந்தாலும் அதற்கு பிறகு பெரும் சண்டையாகதான் இருக்கும்.

அப்படியாக இவர்கள் இருவருக்குள்ளும் கூட சண்டையாகவே கதைக்களம் செல்கிறது. அதை முடிந்த அளவில் காமெடியாக செய்துள்ளார் இயக்குனர் பாண்டிராஜ். இந்த நிலையில் இந்த திரைப்படம் வருகிற ஜூலை 25 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதற்கு இப்போது வரவேற்பு அதிகரிக்க துவங்கியுள்ளது.

தனுஷ் செய்த அந்த தப்பு.. வேறு படத்திற்கு நடிக்க சென்ற நித்யா மேனன்.!

நடிகை நித்யா மேனன் தமிழ் மற்றும் மலையாளம் இரண்டு மொழிகளிலும் பிரபலமான நடிகையாக இருக்கிறார். பெரும்பாலும் நித்யா மேனன் நடிக்கும் திரைப்படங்கள் நல்ல வகையிலான வெற்றியை கொடுத்து வருகின்றன.

தமிழில் ஓ.கே கண்மணி, மெர்சல், திருச்சிற்றம்பலம் போன்ற பல படங்களில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கின்றன. சமீபத்தில் கூட நடிகர் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்த காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் நடித்திருந்தார் நித்யா மேனன்.

ஆனால் அந்த படம் சுமாரான வரவேற்பைதான் பெற்று இருந்தது. இந்த நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ் மற்றும் நித்தியா மேனன் காம்போ நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

எனவே தனுஷும் நித்தியா மேனனும் இணைந்து அடுத்து நடித்து வரும் திரைப்படம் இட்லி கடை திரைப்படம். இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டிய நித்தியா மேனன் ஆரம்பத்திலேயே அதற்கு கால் சீட் கொடுத்திருந்தார்.

ஆனால் தனுஷ் படம் இயக்கும்பொழுது நித்தியா மேனனின் கால் சீட்டை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அவருக்கு கொடுக்கப்பட்ட தேதியில் அவருக்கான படைப்பிடிப்பை தனுஷ் நடத்தவில்லை.

இதனால் பொருத்து பார்த்து நித்தியாமேனன் பாதியிலேயே விஜய் சேதுபதியின் திரைப்படத்தில் நடிக்க சென்று விட்டார். விஜய் சேதுபதி இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் அந்த திரைப்படத்தில்  தற்சமயம் நித்யா மேனன் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இதனால் கதாநாயகிக்கான பகுதிகள் எல்லாம் இன்னும் இட்லி கடை திரைப்படத்தில் எடுக்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே பட வெளியீட்டிலும் இதனால் தாமதம் ஏற்படும் என்றும் பேச்சுக்கள் இருக்கின்றன.

நித்யா மேனனிடம் அந்த கேள்வி மட்டும் கேட்க கூடாது.. எல்லோரும் பயப்பட காரணம் இதுதான்.!

வெகு காலங்களாகவே தமிழ் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் நடித்து வருபவர் நடிகை நித்யா மேனன். ஆரம்பத்தில் தமிழில் நித்யா மேனன் நடித்த திரைப்படங்களுக்கு பெரிதாக வரவேற்புகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவருக்கான வரவேற்பு அதிகரித்தது.

தமிழில் நித்யா மேனனை அதிக பிரபலமாக்கியது ஓ காதல் கண்மணி திரைப்படம்தான். இந்த திரைப்படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்கி இருந்தார். பொதுவாகவே மணிரத்தினம் அவரது திரைப்படங்களில் நடிகைகளை மிக அழகாக காட்ட கூடியவர்.

அந்த வகையில்  ஓ.கே கண்மணி படத்தில் மிக அழகாக இருந்த நித்யா மேனனுக்கு தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. மேலும் தமிழ் சினிமாவில் இவரது தனிப்பட்ட நடிப்பும் பாராட்டை பெற்றுள்ளன. இந்த நிலையில் தற்சமயம் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

அடுத்து தனுஷ் நடித்து இயக்கி வரும் இட்லிகடை திரைப்படத்திலும் இவர் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் எப்போதும் நித்யா மேனனுக்கு பிடிக்காத கேள்வி ஒன்று உண்டு. 36 வயதான பிறகும் கூட இன்னமும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருந்து வருகிறார் நித்யா மேனன்.

அவரிடம் யாராவது ஏன் நீங்கள் இன்னும் திருமணம் செய்துக்கொள்ளவில்லை என கேட்டால் நித்யா மேனன் செம கோபமாகிவிடுவாராம். அவரது பெற்றோரே கேட்டாலும் நீங்கள் திருமணம் செய்துக்கொண்டு 100 சதவீதம் சந்தோஷமாக இருக்கிறீர்களா? பிறகு ஏன் என்னை அப்படி கேட்கிறீர்கள் என கூறுவாராம் நித்யா மேனன்.

இதனாலேயே யாருமே அவரிடம் திருமணம் குறித்து மட்டும் கேள்வி கேட்பதே இல்லை.

இதை விட்டா வேற வேலை இல்லையா? சாய் பல்லவிக்கும் நித்யா மேனனுக்கும் இடையே வந்த சண்டை.!

நடிகை நித்யா மேனன் மலையாளத்தில் நடித்து அதன் மூலமாக பிரபலமாகி தமிழிலும் பிரபல நடிகையாக இருந்து வருகிறார். அதேபோலதான் நடிகை சாய் பல்லவியும் நடிகை சாய் பல்லவி தமிழ்நாட்டை சேர்ந்தவர் தான் என்றாலும் கூட ஆரம்பத்தில் அவர் மலையாளத்தில் தான் முதலில் அறிமுகமானார்.

அதன் மூலமாக பிரபலமான பிறகு அவர் தமிழில் நடிக்க தொடங்கினார் பழங்குடியின சமூகத்தில் பிறந்த சாய்பல்லவி தமிழ் சினிமாவில் பெரிய உச்சத்தை தொட்டுள்ளார் என்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கும் ஒரு விஷயமாகும்.

இந்த நிலையில் போன வருடம் தேசிய விருது கொடுத்தபோது சிறந்த நடிப்புக்காக திருச்சிற்றம்பலம் படத்திற்கு விருது கிடைத்தது. அந்த விருதை நித்யா மேனன் வாங்கினார். திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நித்திய மேனன் நடிப்பு சிறப்பாக இருந்ததற்காக அந்த விருது வழங்கப்பட்டது.

ஆனால் அந்த விருது வாங்கிய பிறகு தொடர்ந்து நித்தியா மேனனை பலரும் எதிர்மறையாக விமர்சித்து வந்தனர். ஏனெனில் அதே வருடத்தில்தான் சாய்பல்லவி நடித்த கார்கி என்கிற திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த படமாக இருந்தது.

விருதால் வந்த பிரச்சனை:

சமூகத்திற்கு தேவையான கருத்தை இந்த படம் பேசியிருந்ததாக கூறப்பட்டது இந்த நிலையில் இந்த படத்திற்காக சாய் பல்லவிக்கு தான் சிறந்த நடிகைக்கான விருதை கொடுத்திருக்க வேண்டும் என்பதே மக்களின் பேச்சாக இருந்தது.

இது குறித்து நித்யா மேனன் பதிலளிக்கும் பொழுது இது ஒரு படத்திற்காக கிடைத்த விருது என்று பார்க்காதீர்கள். என்னுடைய இத்தனை வருட சினிமா நடிப்புக்காக கிடைத்த விருதாகதான் இதை நான் பார்க்கிறேன். எல்லா வருடமும் தேசிய விருது கொடுக்க தான் போகிறார்கள்.

ஏதோ இந்த வருடத்தோடு நின்று விடப் போவது கிடையாது அது மட்டுமின்றி நான் ஏதோ தேசிய விருதை தேர்ந்தெடுத்து கொடுப்பது போல பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதை விட்டால் இது குறித்து பேசுபவர்களுக்கு வேறு வேலை இல்லை என்று நினைக்கிறேன் என்று பேசி இருந்தார் நித்யா மேனன் உண்மையில் பார்க்க போனால் நித்யா மேனன் சாய் பல்லவி இருவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர்கள் தான் இதுதான் இப்பொழுது ரசிகர்கள் மத்தியில் பிரச்சனையாக இருக்கிறது.

ஒழுங்கா கதை எழுதலைனா செருப்பால அடிப்பேன்!.. மிஸ்கினுக்கு போன் செய்து மிரட்டிய நடிகை…

தமிழில் திரைப்படம் எடுப்பதில் தங்களுக்கென தனி பாணியை கொண்ட இயக்குனர்கள் சிலர் உண்டு. அவர்களது திரைப்படத்தை பார்த்தாலே இது அவர்கள் இயக்கியதுதான் என தெரிந்துவிடும். அப்படி தனக்கென தனி பாணியை கொண்ட இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் மிஸ்கின்.

பல காட்சிகளில் வெறும் காலை மட்டும் காட்டினால் அது மிஸ்கின் படம் என கூறிவிடலாம். தமிழ் சினிமாவில் புதுமையான விஷயங்களை முயற்சி செய்பவர் மிஸ்கின். ஐட்டம் பாடல்களில் மஞ்சள் புடவை கட்டி ஆட வைத்த முதல் இயக்குனர் மிஸ்கின் தான்.

அஞ்சாதே திரைப்படத்திற்கு பிறகு இவர் வெகுவாக பிரபலமானார். ஒரு பேட்டியில் அவருக்கு பிடித்த நடிகைகள் பற்றி கேட்கும்போது பாவனா, பூர்ணா ஆகிய நடிகைகளின் நடிப்பு பிடிக்கும் என கூறியிருந்தார்.

ஆனால் தற்சமயம் நித்யா மேனனைதான் மிகவும் பிடிக்கும். அவள் நடிப்பதில் பேய் மாதிரி.. சில நாட்கள் எனக்கு போன் செய்து எனக்கு ஒழுங்கா கதை எழுது இல்லைனா செருப்பால அடிப்பேன் என மிரட்டுவாள் என தன் பேட்டியில் மிஸ்கின் பகிர்ந்துள்ளார்.